Monday, November 15, 2010

தமிழ் மொழியில் பாரதம் -கண்ணன் தூது - துரியோதனன் சதி

சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
தாத்தா:  மன்னருக்கு அழகு தூது அனுப்பிக் கருத்தை அறிதல்.  எனவே யாதவகுலதிலகம் கண்ணன் துரியோதனனுக்குத் தூது அனுப்புவது நல்லது என்று தனது கருத்தைக் கூறினார்.  உடன் இருந்த கண்ணனின் அண்ணன் பலராமனோ பதிமூன்று ஆண்டுகளாக துரியோதனன் ஆளும் ஒரு நாட்டை திரும்பக் கேட்பது அழகல்ல - நாட்டை மீட்டல் கொடிது என்று தனது கருத்தைச் சொன்னான்.  உடன் இருந்த மற்றொரு பங்காளியான சாத்தகி என்பவன் உடனே பலராமனை பழித்தும் இழித்தும் கூறினான்.
சூர்யா: யார் இந்த சாத்தகி தாத்தா?
தாத்தா: வசுதேவனின் பங்காயியான சத்தியகனது மகன் இவன்.  வயதில் கண்ணனுக்கு இளையவன்.  ஒன்றாகவே வளருகிறார்கள்.  இவன் விசயனிடம் வில்வித்தை கற்றவன்.  எனவே பாண்டவர்கள் சார்பாகவே பேசுவான்.  கண்ணன் பால் மட்டற்ற மரியாதை கொண்டவன் இவன்.  சரி கதைக்கு வருவோம்.  உலூகன் என்னும் அந்தணனைத் தூது அனுப்புவது என இறுதியில் முடிவு எடுக்கப்பட்டது.  கண்ணனும் தன் குடும்பத்துடன் துவாரகைக்குத் திரும்பினான்.  உலூகன் திருதராட்டிரன் அவைக்குச் செல்கிறான்.  துரியோதனன் தக்க வரவேற்பு அளிக்கிறான்.  பின்னர் உலூகன் தான் தூது வந்த வரலாற்றைக் கூறுகிறான்.  உடனே துரியோதனன் போரில் ஆண்மை கண்டறியலாம் எனத் தன் முடிவைச் சொல்கிறான்.  ஆனால் துரோணர், விதுரன் முத-யோர் அவனுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.  வீடுமனும் திருதராட்டிரனிடம் நாளை போர் என்று வந்தால் விசயனுக்கு எதிராக யார் வில் வளைக்க முடியும் என்று விசயனின் பலத்தை எடுத்துக் கூறுகிறார்.  உடனே கன்னன் வெகுண்டு பேசுகிறான்.  போரிட்டு வெல்லலாம் என்று வீரம் பேசுகிறான்.  உடனே வீடுமன் வெகுண்டு "ஏற்கனவே திரௌபதித் திருமணத்திற்காக நடந்த திறனாய்வில் கன்னன் தோற்றதையும் - கந்தருவர் ஏற்கனவே துரியோதனனை கடத்திச் சென்ற போது மீட்டுக் கொடுக்கவில்லை - விசயன் கானகத்தில் இருந்தாலும் மீட்டான் - விராடன் நாட்டில் நடந்த போரில் தலைதெறிக்க ஓடிவந்தோம்.  இனி எந்த போரில் நீ வெல்வாய்?'' என்று கேட்கிறார்.  " தூம வெங் கனல் தோன்றிய தோகை அம் தொடையல்  சூட்டிய நாளில்,  நாம வெஞ் சிலை நாண் எடுத்தனை, அடர் நரனொடும் போர் செய்தாய்!  தாம வெண் குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்  வீமன் வெஞ் சிறை மீட்ட நாளினும், திறல் வினை புரி   முனை வென்றாய்!   ஒரு நல் மா நெடுந் தேரினை அறிவுறா உத்தரன்   விரைந்து ஊர,  நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை,                                 நெடும் போது!  மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட, மலையும்                                 நாள், வய வாளி  வெருநர்மேல் விடா விசயனை நீ அலால், வெல்ல                                 வல்லவர் உண்டோ? ''. உடனே கன்னனுக்காகத் துரியோதனன் பரிந்து பேசி உலூகனிடம் போர் தான் இறுதி முடிவு எனத் தெரிவிக்கிறான்.  உலூகன் ஐவரிடம் இத்தகவலைத் தெரிவித்து பின்னர் கண்ணனிடமும் தெரிவிக்கிறான்.  உடனே கண்ணன் விசயனைத் தன்னிடம் வரும்படி செய்தி சொல்- அனுப்புகிறார்.  அத்தினாபுரியில் துரியோதனன் மந்திரிகளுடன் கலந்தாலோசித்து எல்லா மன்னர்களுக்கும் செய்தி அனுப்பி தனக்குத் துணை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான்.  கண்ணனைத் துணை சேர்க்கக் கருதி துரியோதனன் துவாரகைக்குச் செல்கிறான்.  துரியோதனன் துவாரகைக்கு வருவதை அறிந்தவுடனேயே கண்ணன்,"துரியோதனன் வந்தால் என்னைக் கேட்க வேண்டாம்.  உள்ளே அனுப்புங்கள்'' என்று கூறிவிட்டு மாயத்துயில் கொள்ளப் போய்விட்டான்.  துரியோதனன் வருகிறான்.  கண்ணன் துயின்று கொண்டிருப்பதைக் கண்டான்.  உடனே கண்ணன் தலைமாட்டில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.  பின்னாலேயே விசயனும் வந்து விடுகிறான்.  அவன் கண்ணன் காலடியில் சென்று நிற்கிறான். துயில் கலைந்ததும் முத-ல் கண்ணன் விசயனைப் பார்க்கிறான்.  நலம் விசாரித்து வந்த காரியத்தைக் கேட்கிறான்.  ஆனால் விசயனோ எனக்கு முன்னமே துரியோதனன் வந்து உன் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறான் எனத் தகவல் தருகிறான்.  எனவே துரியோதனனிடம் வந்த காரியத்தைக் கேட்கிறான் கண்ணன்.  இருவரும் போர்த்துணை கேட்க வந்தது அறிந்து நான் ஏற்கனவே தருமரிடம் துணை புரிவதாக வாக்களித்துள்ளேன்.  எனவே வாக்கு தவற முடியாது என்று கூறி தன் படைபலம் முழுவதையும் துரியோதனன் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். "உதிட்டிரன்தனக்கு முன்னே சொற்றனம், ஆங்கண்; இங்கும், துயில் உணர் பொழுதத்து, இன்று, வில்-திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான்' என்று, பற்று அறத் துணிந்து சொன்னான்-பாண்டவர் சகாயன் ஆனான்.''   இப்போது துரியோதனன் கண்ணன் ஆயுதத்தைப் பிரயோகிக்கக் கூடாது என வேண்டுதல் ஒன்று விடுக்கிறான்.  உடனே கண்ணன் விசயனைப் பார்த்து அப்படியென்றால் நான் என்ன பணி செய்ய முடியும்? என்று கேட்கிறார்.  உடனே விசயன், "கண்ணா - நீ எனக்குத் தேர் ஓட்டினால் இந்த உலகத்தில் எவர் என்னை எதிர்த்தாலும் நான் வெற்றி பெறுவேன்'' என்று கூறுகிறான்.  கண்ணனும் ஒத்துக்கொண்டு ஆயுதம் ஏந்துவதில்லை என உத்தரவாதம் வழங்குகிறான்.  துரியோதனன் பலராமனிடம் தகவலைக் கூறி அத்தினாபுரி திரும்புகிறான்.  பின்னர் கண்ணனும் விசயனும் உபப்பிலாவியத்தை அடைகிறார்கள்.  திருதராட்டிரன் துரியோதனனிடம் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு ஐவருக்கும் நாடு தராமலும்  போரைத் தவிர்க்கவும் எண்ணம் கொண்டு சஞ்சயன் என்பவரைத் தூது அனுப்பி அறத்தை எடுத்துச் சொல்லும்படி பணிக்கிறார்.  சஞ்சயனும் ஐவர் இருந்த இடத்திற்குப் போனார்.  பாண்டவர்கள் அவரை வரவேற்று தக்க ஆசனம் கொடுத்து வந்த காரியம் குறித்து வினவுகிறார்கள்.  அவரோ, " நீங்கள் இந்த புடவி (நிலவுலகத்தை) ஆள்வதை விட்டு விட்டு அடவி(காடு) ஆளவும் வல்லவர்கள் ஆகிவிட்டீர்கள்.  இது நன்மையான காரியமே.  நிலையற்ற செல்வத்தைப் பெறுவதை விட வனத்தில் தவம் புரிந்து நிலையான  செல்வத்தைப் பெறத் தகுதி படைத்து வீட்டீர்கள்.  எழுவகைப் பிறப்பில் மீண்டும் வந்து உழலாமல் இருக்கும் வழிவகையைப் புரிந்து கொண்டீர்கள்.  தத்துவஞானிகள் ஆகிவிட்டீர்கள்.  இந்த மானிடப் பிறப்பு மூலம் இம்மை - மறுமை - வீடுபேறு மூன்றில் எதையும் அடையலாம்.  மற்ற பிறப்புகளில் அவ்வாறு நினைத்ததை அடைய முடியாது.  அப்படிப்பட்ட பிறவிப்பயன் என்ன என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள்.  நீங்கள் நிலையில்லாத அரசாட்சியை விரும்பி ஆளக் கருதினாலும் துரியோதனன் விட்டுத் தரமாட்டான்.  செருக்கு கொண்ட அவன் உங்களுடன் கூடி வாழ உடன்படமாட்டான்.  பராசரன் என்னும் பரமமுனிவன் குலத்திலே வந்திருந்தாலும் நல்ல எண்ணங்கள் துரியோதனனிடம் இல்லை. எனவே நீங்கள் போரைத் தவித்து நிலையான வீடுபேற்றை அடையவேண்டும்.  நீங்களும் வியாசமுனிவர் பரம்பரையில் வந்தவர்கள் தாம்.  எனவே வியாசமுனிவரின் மகன் சுகன் போல உலகப்பற்றை ஒழித்து உயர்பதம் பெறவேண்டும்.  அதுவே நல்லது.  மண் - பெண் - பொன் மீதுள்ள பற்றை ஒழித்துவிடுங்கள்.
பாரிலாசையுநின்னிராசபதத்திலாசையுமன்னுவெம் போரிலாசையுநேயமங்கையர்போகமன்பொடுபுதிதுணுஞ் சீரிலாசையும்விட்டுநன்னெறிசேரவுன்னுதிநீயெனத் தூரிலாசையறத்துறந்தருள்சுருதிமாமுனிசொல்லவே.
என்றெல்லாம் கூறி அவர்கள் நாடாளுவதற்குப் பதிலாக காடாண்டு வீடுபேற்றினை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சூர்யா:  தாத்தா நானும் ஒரு திரைப்படத்திலே கேட்டுள்ளேன். "அரியது கேட்கின் வரிவடிவேலோய - அரிது அரிது மானிடர் ஆதல் அரிது - மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது - பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது - ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்  தான் செயல் அரிது - தானமும் தவமும் தான் செய்வாராயின் - வானவர் நாடு வழி திறந்திடுமே என்று அந்தத் திரைப்படத்தில் ஔவையார் பாடுவார் தாத்தா.  அதைத் தான் இந்த சஞ்சயர் சொல்கிறாரா?
தாத்தா:  ஆமாம்டா. பற்றை விடச் சொல்- பல பெரியோர்கள் கூறி உள்ளார்கள்.  அற்றது பற்று எனில் உற்றது வீடு என்பார் ஒருவர். "பற்றற்றகண்ணே பிறப்பறுக்கும்'' "அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை'' என்றும் கூறுவார்கள்.  யார் கேட்கிறார்கள். தருமரும் கேட்டார்.  அவர் அறக்கடவுளின் மகன்.  அவருக்கு அறம் பற்றித் தெரியாதா?  குறுநகை புரிகிறார் சஞ்சயரின் பேச்சுகளைக் கேட்டு.  "நான் ஒரு அரச குலத்தில் வந்தவன்.  அரசகுலத்திற்கென ஒரு நீதி உள்ளது.  அதைத் தான் நான் பின்பற்ற வேண்டும்.  போர்புரிய நான் அஞ்சக்கூடாது.  போரில் இருந்தாலும் புகழ்.  இறந்தாலும் புகழ்.  போரில் நான் எதிரிகளை வென்றாலும் அவர்கள் வீரசுவர்கம் புகுவார்கள்.  நான் வெல்லப்பட்டாலும் நானும் வீரசுவர்கம் புகுவேன்.  போரின் மூலம் சுவர்கம் என்பது உறுதி.  எனவே ஏழ்நரகு கிடைக்கும் என்று அச்சுறுத்தினாலும் போரில் வெற்றி பெற்று நல்லாட்சி நடத்துவதைத் தான் நான் விரும்புகிறேன்.
சூர்யா: ஏழ்நரகு என்றால் என்னங்க தாத்தா?
தாத்தா: சிலர் அள்ளல், ரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி என்று சொல்லுவார்கள்.  ஒன்றும் விளங்காது.  சிலர் தமப்பிரபை, இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை, அழற்பிரபை என்று கூறுவார்கள்.  ஆனால் நல்ல தமிழில் இருள், குளிர், புகை, மணல், துயிலாமை, குருதி, தீ என்று கூறுவார்கள்.  இப்படி ஏழு வகை இடங்களில் தவறு செய்தவர்கள் இறப்பின் பின்னால் வருந்தவேண்டி வரும் என்று சொல்கிறார்கள்.  கதைக்கு வருவோம். வீமனும் போரே தனகு உரிய தவம் என்று உரைக்கிறான்.  கண்ணன் இடைமறித்து இவர்கள் இந்த நிலவுலகத்தை ஆளுதலும் அவர்கள் அமரர் உலகம் ஏறுதலும் நடக்கப் போகிற செயல் என்று முன்கூட்டியே தெரிவிக்கிறார்.  சஞ்சயன் திரும்ப வந்து திருதராட்டிரனிடம் நடந்ததை உரைக்கிறான்.  இதன்பின் தருமர் கண்ணனைத் துரியோதனிடம் தூது அனுப்ப வேண்டும் எனத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார்.  உடனே கண்ணன் பிறர் கருத்தையும் கேட்கிறார்.  வீமன் உடனே "பாஞ்சா- துரியோதனன் சபையில் அவமானப்படுத்தப்பட்ட போது அமைதியாக இருக்கச் சொன்னீர்கள்.  உங்கள் பேச்சைக் கேட்டு அமைதி காத்து - நம் மரபுக்கே தீராத களங்கத்தை உண்டாக்கி விட்டோம்.  பின்னர் காட்டுக்குப் போனோம் - மறைந்திருந்து ஓர் ஆண்டும் கழித்தோம்.  இன்னும் பகையை ஒடுக்க நீங்கள் எண்ண மாட்டேன் என்கிறீர்களே? அண்ணனே துரியோதனன் கொடுமையில் உன் செயல் பெருங்கொடுமை.  உன் அருளைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம்'' என்றான்.
விரி குழல் பைந்தொடி நாணி வேத்தவையில் முறையிடுநாள், 'வெகுளேல்!' என்று, 
மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ள அளவும், தீராத வசையே கண்டாய்! 
எரி தழல் கானகம் அகன்றும், இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய்! 
அரவு உயர்த்தோன் கொடுமையினும், முரசு உயர்த்தோய்! உனது அருளுக்கு அஞ்சினேனே!
விசயனும் சமாதானம் தேவையில்லை என்று கூறி ,"கற்புடைய செழுந்திருவை அரசவையில் துகில் உரிந்தபோது செயல் ஒன்றும் இன்றி நாம் அமர்ந்திருந்தோம்.  அவள் இறுதியில் "நீண்டானே - கரியானே - நிமலா - அச்சுதா - கோவிந்தா - கண்ணா' என்று முறையிட்டாள்.  அந்த அவையில் நாம் மாண்டார் போல நின்றோம்.  அந்த மாசு தீரவேண்டும் என்றால் போர் தான் வழி'' என்று முடித்தான்.  நகுலனும்  உவர்நிலத்தில் நல்விதையை நட்டால் முளைக்காது அதுபோல துரியோதனனிடம் நீதி கிடைக்காது எனவே போர் தான் சிறந்தது எனத் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.  இப்போது தான் நாம் ஒரு அதிசயத்தை - மகாபாரதக் கதையின் மையக் கருத்தைப் பார்க்கப் போகிறோம்.  இறுதியில் சகாதேவனிடம் கருத்தைக் கேட்டார் கண்ணன்.  சகாதேவன் சிரித்துக் கொண்டே, " அரசு வழங்குவானா துரியோதனன்?- யாருக்கும் தெரியாது.  பாஞ்சா- குழல் முடிப்பாளா? - யாருக்கும் தெரியாது.  ஆனால் கண்ணா உனக்கு எல்லாம் தெரியும்.  ஆதிமூர்த்தியே-துளபமுடியானே - சிறுவயதில் பல திருவிளையாடல்கள் புரிந்த உனக்கு எல்லாம் தெரியும்.  உன் கருத்து என்னவோ அது தான் என் கருத்து'' என்று சொன்னான்.  அதை வில்-யால் சொல்-லே பார்ப்போம் இப்போது. "முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று அலகை முலைப்பால் உண்டு,  மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,   பொதுவர் மனை வளர்ந்த மாலே!  ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்   அறிவேன், உண்மையாக;  திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!''  என்றான், தெய்வம் அன்னான்.''  அதிர்ந்தான் கண்ணன்.  தனியாக அழைத்துப் போனான் சகாதேவனை.  போரைத் தடுக்கும் வழியைச் சொல் சகாதேவா என்றார்.  அவனோ மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான். "நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,  பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!  கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,  மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?'' என்றான். " உன்னைக் கட்டிப்போட்டு விட்டால் இந்தப் போரை நிறுத்தலாம்'' எனத் தன் கருத்தைச் சகாதேவன் சொல்ல கண்ணன் "என்னைக் கட்டிப்போட உன்னால் இயலுமா?'' என்று கண்ணன்  கேட்கிறார்."உன் வடிவு காட்டின் இயலும்!' என்றான் சகாதேவன்.  கண்ணன் பல வடிவு கொண்டான்.  ஆனால் சகாதேவன் கருத்துடன் கண்ணனின் மூலவடிவை முடிவு செய்து பிணித்துவிடுகிறான்.  உடனே கண்ணன், " என் பாதப் பிணிப்பை விடுக'' என்று முறையிடுகிறான்.  அப்போது சகாதேவன், "நடக்கப் போகும் போரில் நாங்கள் ஐவரும் இறக்கக் கூடாது.   எங்களை நீ தான் காக்க வேண்டும் கண்ணா.  உன்னால் தான் எங்கள் ஐவரையும் காக்க முடியும்.  பூமியின் பாரத்தை நீக்க நீ அவதாரம் எடுத்து வந்துள்ளாய்.  ஆனால் எங்களையும் பூமிபாரத்தில் இணைத்து விடாதே.  நாங்கள் ஐவரும் உயிருடன் இருக்க நீ உத்தரவாதம் வழங்கவேண்டும்'' என்றான்.  சரி என்று உடன்பட்டார் கண்ணன்.  கால்கட்டை அகற்றினான் சகாதேவன்.  தனியிடத்தி-ருந்து வந்த கண்ணன் "சந்து செய்தல் இனிது' என்று முடிவைச் சொல்கிறார்.  சந்து என்றால் சமாதானம். உடனே பாஞ்சா- ஓடோடி வந்து கண்ணனிடம் முறையிட்டு போர் நடந்தே தீரவேண்டும்.  பழிவாங்கப்பட வேண்டும் என்று முறையிடுகிறாள்.
"கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன் 
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்; 
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி, 
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?''
உடனே கண்ணன் "நானே உன் குழல் முடித்து வைப்பேன்'' என்று உறுதி கூறி பாஞ்சா-யைச் சமாதானப்படுத்துகிறான்.  இதி-ருந்து என்ன தெரிகிறது.  போர் நடக்கும் என்பது கண்ணனின் வாக்கி-ருந்து தெரிகிறது.  வெற்றி பெறப் போவது ஐவர் என்பதும் நமக்குப் புரிகிறது.  எல்லாம் இந்தக் கண்ணனின் திருவிளையாடல் தான். வில்-யார் கூறும் போது - அதைச் செந்தமிழில் படிக்கும் போது புல்லரிக்கும். "தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது போய் மீண்டதற்பின், நல்லாய்! உன் பைங் கூந்தல் நானே முடிக்கின்றேன்; எல்லாரும் காண'' என்றான் கண்ணன்.  கண்ணன் தூதனாக அத்தினாபுரி நோக்கிப் பயணமாகிறான்.  நாளை  தொடருவோமா?

==================================================================================================================================


தாத்தா: கண்ணன் தூதுவனாக ஏகி அத்தினாபுரி அடைந்தான். நகரின் தென்பாலுள்ள ஒரு சோலையில் கண்ணன் சிறிது நேரம் அமர்கிறார்.  காவலர்கள் துரியோதனிடம் போய் கண்ணன் நகர் எல்லையில் உள்ள செய்தியைக் கூறுகிறார்கள். துரியோதனன் உடனே எதிர்கொள்ளப் புறப்படுகிறான்.  சகுனி உடனே தடுத்து நிறுத்துகிறான்.  வீடுமர் முத-யோர் சென்று எதிர்கொள்கிறார்கள்.  கண்ணன் விதுரன் இல்லத்திற்குச் சென்று தங்குகிறார்.  விதுரன் கண்ணனைக் கண்டதும் மிக்க மகிழ்கிறான்.
உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து 
துள்ளினான்; விழுந்து, இணை அடி சூடினான்; துயரைத் 
தள்ளினான்; மலர்த் தடக் கையால் தத்துவ அமுதை 
அள்ளினான் எனக் கண்களால் அருந்தினான்-அளியோன்.

கண்ணனும் ஏனையோரும் விதுரன் மனையில் விருந்துண்டு மகிழ்ச்சியோடு அமர்கிறார்கள்.  விதுரன் கண்ணன் வந்த காரணத்தை வினவுகிறான்.  தான் ஐவருக்காகத் தூதுவனாக வந்துள்ளதாகத் தெரிவிக்கிறான் கண்ணன்.  துரியோதனன் அரசு கொடான் என்கிறார் விதுரர்.   கொடாவிடின் பாண்டவர் பொருது பெறுவர் என்று நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கிறான் கண்ணன்.  மறுநாள் கண்ணன் அரசவை நோக்கிப் போகிறார். அவை புகுந்து ஆசனத்தில் அமர்கிறார்.  "நேற்நே இந்நகர் வந்தும் எங்கள் அரண்மணைக்கு ஏன் வரவில்லை? விதுரன் வீட்டில் ஏன் தங்கினீர்கள்?'' என்று கேட்டான் துரியோதனன்.  கண்ணன், "பஞ்சவருக்காக நான் தூதுவனாக வந்துள்ளேன்.  ஒருவர் மனையில் தங்கி - இன் அடிசில் உண்டு - பின்னர் அவரை வெறுக்க எண்ண முடியுமா? அது நீதியா?'' என்று கூறி அதனால் தான் அரண்மனைக்கு வரவில்லை என்று கூறுகிறார கண்ணன்.  பொருதல் உறுதி என்பது அவரது பதி-ல் வெளியாகிறது.
"என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை; இது என் இல்; 
                நின் இல் அது; என்னினும்; 
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் 
                வந்து எதிர் விளம்பினான்; 
உன்னில், இன்னம் உளது ஒன்று; பஞ்சவர் உரைக்க 
                வந்த ஒரு தூதன் யான்; 
நின் இல் இன் அடிசில் உண்டு, நின்னுடன் வெறுக்க 
                எண்ணுவது நீதியோ? 
ஒருவர் வாழ் மனையில் உண்டு, பின்னும், அவருடன் 
                அழன்று பொர உன்னினும், 
இரவி உள்ளளவும், மதியம் உள்ளளவும், இவர்களே 
                நரகில் எய்துவார்.''
தூதனாக வந்த காரியத்தை விளம்பும்படி துரியோதனன் கேட்க, ஐவருக்கும் உரிய நாட்டைக் கொடுக்கும்படி கேட்கிறான் கண்ணன்.  "ஈ இருக்கும் இடம் கூட தரமுடியாது' என்று இரக்கமில்லாமல் பதில் சொல்கிறான் துரியோதனன்.  "ஐந்து ஊர்களையாவது கொடு' என்கிறார் கண்ணன். மறுக்கிறான் துரியோதனன்.  "உன் முன்னவன் தந்தை ஒரு பெண்ணை காத-க்கிறார் என்பதற்காக தனக்கு அரசாளும் உரிமையே வேண்டாம் என்று கூறினார்.  அவ்வளவு பெருந்தன்மை அவருக்கு இருந்தது. (ஆம் வீடுமர் தான் அவர்)  நீயோ முறை உள்ளவனுக்கு ஐந்து மாநகரங்களைக் கூட கொடுக்க மறுக்கிறாயே.'' என்றார் கண்ணன். துரியோதனன் சுடுமொழி பேசுகிறான்.  கண்ணன் போர் தான் இறுதி முடிவு என எச்சரிக்கிறார்.  சரி என்கிறான் துரியோதனன்.  அப்படியானால் போருக்கு ஒப்புக்கொண்டதாகச் சத்தியம் செய் என்கிறார் கண்ணன். "வெஞ் சமர் விளைக்கவே கை வழங்குக!' என, துரியோதனன் சினந்து தகாத வார்த்தைகள் கூறி கண்ணனைப் பழிக்கிறான்.  பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் அரசு தருவதாக ஒப்புக் கொண்டு இப்போது மறுப்பதால் போர் நடத்த ஒப்புக்கொண்டதை சத்தியம் செய்து கூறும்படி கண்ணன் கூறுகிறான்.  துரியோதனன் வெகுண்டு கூறிய வார்த்தை கேட்டு கண்ணன் அமைதியாக அவையை விட்டு வெளியேறினான்.  விதுரன் கண்ணனுக்கு விருந்து வழங்கியதைக் குத்திக் காட்டி தகாத வார்த்தைகளால் விதுரனின் தாயை பொதுமடந்தை எனக் கூறி அவமதிக்கிறான் துரியோதனன்.  விதுரன் சினந்து மறுமொழி கூறியதோடு நில்லாமல் தன் வில்லை முறித்து இனி போர் செய்ய மாட்டேன் வெங்கணை தொடுக்க மாட்டேன் என்ற சபதத்தோடு வெளியேறுகிறான்.  வீடுமன் விதுரனுடைய வில்வித்தையின் பெருமையைக் கூறி இவன் இல்லாமல் எப்படி விசயனை எதிர்க்க முடியும்.  விதுரனின் வில் சிறப்பு மிக்கது.  அரன் வில்லைப் போல - அரியின் வில்லைப் போல சிறப்பான வில் அது.  வில்வித்தையில் விதுரன் மிகச் சிறப்பானவன்.  அவனை இழந்து விசயனை எப்படி வெல்லப் போகிறோம் என்று தன் கவலையை வீடுமன் தெரிவிக்க வெகுண்டு எழுகிறான் கன்னன். "விசயன் வந்து அமரில் முடுகினால், எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி, இனி!'' என்பது வில்-யாரின் வாக்கு.  உடனே துரியோதனன் கன்னன் இருக்க பயமேன் என்று பதிலுரைக்கிறான்."உதார சீலன், உயர் அங்கர் கோன், வரி வில் ஒன்றுமே அமையும், உற்று எழும் பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட,  பரணி பாடவே.''.  கன்னனும் உடன் எழுந்து தன் வீரப்பிரதாபத்தை எடுத்துரைக்கிறான்.  ஏற்கனவே தோற்ற கதைகளை வீடுமன் எடுத்துரைத்து வீண்வார்த்தை வேண்டாம் என்று எச்சரிக்கிறார் கன்னனை.  கன்னனோ "இப்போது என்னிடம் நாகக்கணை உள்ளது.  நச்சென்று அடித்து வீழ்த்துவேன் அந்த விசயனை.  நாகக் கணையி-ருந்து விசயனால் தப்ப முடியாது.  விசயனை வீழ்த்தவே நாகக்கணை'' என்று கொக்கரிக்கிறான்.  விதுரன் வீடு திரும்பியதும் அங்கே அமர்ந்திருந்த கண்ணன் ஏன் சிறப்பு மிக்க தங்கள்வில்-னை ஒடித்தீர்கள் என்று கேட்கிறார். அப்போது விதுரன் "என்ன நடக்கும் என்ப்து யோசிக்கத் தெரியவில்லை துரியோதனனுக்கு.  அமைச்சர்கள் சொன்னாலும் கேட்பதில்லை.  அவர்களை மதிப்பதில்லை.  நாவடக்கமும் இல்லை.  இப்படிப்பட்டவனுக்காக போர் புரிந்து அதில் மாள்வது மடத்தனம்'' என்று முத்தாய்ப்பு வைக்கிறான் விதுரன்.  இதற்காகத் தானே கண்ணன் இவனது வீட்டில் வந்து தங்கி திருவிளையாடலை நடத்தி முடித்துள்ளார். "ஆவது கருதான் ஆகில், அமைச்சர் சொல் கேளான் ஆகில், வீவது குறியான் ஆகில், விளைவதும் உணரான் ஆகில், நாவது காவான் ஆகில், அவனுக்கா நடந்து போரில் சாவது, பழுது!' என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார்? செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்; சொல்வன அறிந்து, சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்; வெல்வதே நினைவது அல்லால், 'வெம் பகை வலிது" என்று எண்ணார்; வல் வினை விளைவும் ஓரார்'' என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறான் விதுரன்.  பின்னர் அங்கிருந்து குந்தி தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற கண்ணன் குந்தியின் முதல் மைந்தனைப் பற்றித் தனக்குத் தெரியும் என்று தகவல் தருகிறார்.  மிரள்கிறாள் குந்திதேவி.  பின்னர் நடந்த கதை முழுவதையும் கூறிய கண்ணன், "காதல் நின் புதல்வன்தன்னைக் கண் இலா அரசன்  பொன்-தேர்ச் சூதன் வந்து எடுத்துக்கொண்டு, சுதன் என வளர்த்த காலை, 
ஆதபன், 'இவனை யாரும் கன்னன் என்று  அழைக்க' என்றான்; தாதையும், 'விசும்பில் சொன்ன நாமமே  தக்கது'  எனக் கூறி தேர்ப்பாகன் கன்னனைக் கண்டெடுத்து வளர்த்து வரும் கதையை விபரமாகக் கூறுகிறான் கண்ணன்.  தான் வந்துள்ள காரணத்தை விளக்கி விட்டு தூது வந்ததால் பயனில்லை எனவும் போர் உறுதி எனவும் சொல்- "எப்படியாவது கன்னனை ஐவருடன் கூட்ட வேண்டும் - ஒருவேளை கன்னன் மறுத்தால் அவனிடம் நாகக் கணையை ஒரு முறைக்கு மேல் மறுமுறை தொடுக்கக்கூடாது என உத்தரவாதம் பெற வேண்டும்'' என்று புகலுகிறான்.
இதற்குள் துரியோதனன் ஒரு திட்டம் தீட்டுகிறான்.  தனியாக வந்த கண்ணனைப் பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறான் துரியோதனன்.  அவன் தந்தை திருதராட்டிரனோ கண்ணனைக் கொல்லவேண்டும் என்று வழிகாட்டுகிறார்.  இதைக் கேட்ட நூற்றுவரில் ஒருவனான விகருணன் தூதனைக் கொல்வது பாவம் என்கிறான்.  கொல்லத்தகாதோர் யார் யார் என்று பட்டிய-டுகிறான்.
"மூத்தவர் - இளையோர் - வேதமுனிவரர் - பிணியின் மிக்கோர்
தோத்திரம் மொழிவோர் - மாதர் - தூதர் என்று இவரைக் கொல்-ற்
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனின் இல்லை''
அப்படி கொன்றால் நரகம் நிச்சயம் என்றும் எச்சரிக்கிறான் விகருணன்.  துச்சாதனன் விகருணன் புகன்றதைக் கேட்டு வெகுண்டு விகருணனை போருக்கு அழைக்கிறான்.  கன்னனோ அம்பால் கொன்று விடுவேன் என்று அச்சுறுத்துகிறான்.  சகுனியோ சூழ்ச்சியால் கண்ணனை சிறைப்படுத்தலாம் என்று தன் உபாயத்தைக் கூறுகிறான்.  சகுனியின் பேச்சைத் தட்டமாட்டானே துரியோதனன்.  இதற்கு ஒப்புதல் வழங்குகிறான். உடனே ஒரு நிலவறை அமைக்கப்படுகிறது.  அதில் அரக்கர் முத-யோரை மறைத்து வைக்கின்றனர்.  அதன் மேல் ஒரு இருக்கையைப் பொருத்தி அதில் கண்ணனை அமர வைப்பது எனத் திட்டமிடுகின்றனர்.  தூதன் மூலம் கண்ணனுக்குத் தகவல் அனுப்பி போர் குறித்துப் பேச அழைப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.  உடனே கண்ணனும் அரசவைக்குச் செல்கிறார்.  இருக்கையில் அமரச் சொல்கின்றனர்.  சிரித்துக் கொண்டே அமர்கிறார்.  உடனே இருக்கை நிலவறை நோக்கி வீழ்கிறது.  உள்ளே அரக்கர்கள்.  வீரர்கள்.  கண்ணனைச் சூழ்ந்து கொல்லப் பார்க்கிறார்கள்.  உடனே பேருருவம் எடுக்கிறார் கண்ணன்.  வெகுண்டு எழுகிறார். அனைவரையும் மாய்க்கிறார்.  கண்இமைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு பதறுகிறார் வீடுமன், துரோணர், கிருபன் ஆகியோர்.  கண்ணனின் பெருவடிவு கண்டு மகிழ்ந்து கண்ணனைத் துதிக்கின்றனர்.  தங்களை அறியாமல் இது நடந்தது எனக் கூறுகின்றனர்.  தேவரும் மலர் தூவி போற்றுகின்றனர்.  பெருவடிவின் வெப்பத்தால் தகித்த தேவர்கள் வடிவைச் சுருக்கிக் கொள்ளும்படி வேண்டுகின்றனர்.  கண்ணனும் தன் வடிவைச் சுருக்கிக் கொள்கிறார்.
ஆரணனே, அரனே, 
புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்  காரணனே, 
கருணாகரனே, கமலாசனி காதலனே,  
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே,  
நாரணனே! முனியேல், முனியேல்!' என, நாகர் பணிந்தனரே

மாதவனே, முனியேல்! 
எமை ஆளுடை வானவனே, முனியேல்!  
யாதவனே, முனியேல்! 
இதயத்தில் இருப்பவனே, முனியேல்!  
ஆதவனே, முனியேல்! 
மதி வெங் கனல் ஆனவனே, முனியேல்!  
நீதவனே, முனியேல்! முனியேல்!' என நின்று பணிந்தனரே.  

 "கண்ண, பொறுத்தருள்! 
வெண்ணெய் அருந்திய கள்வ, பொறுத்தருள்! 
கார்வண்ண, பொறுத்தருள்! 
வாம, பொறுத்தருள்! 
வரத, பொறுத்தருள், நீ!-  
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை' 
என்று அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்து, துதித்தனரே.  

திருமேனி ஒடுங்கிய பின் துரியோதனை நோக்கி, "வீமன் சபதம் காரணமாக இப்போது நீ என் கையால் இறக்கவில்லை.'' என்று கூறி உடன் வந்த மன்னர்களிடம் கன்னனின் பிறப்பு வரலாற்றை உணர்த்தி அவனை ஐவருடன் சேர இணங்க வைக்கும்படி கூறுகிறார்.  ஆனால் கன்னனோ ஐவரை இன்று அடுப்பின் - அது நெய்ந்நன்றி கொன்றதாகும் என்று மறுக்கிறான்.  பின்னர் அசுவத்தாமனால் ஏற்படப் போகும் ஆபத்துகளை முன்கூட்டி உணர்ந்து துரியோதனன் வேண்டினாலும் நீ சேனாதிபதி ஆகக்கூடாது எனக்கூறி தன் மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறார்.  அவன் அதை எடுக்கும் போது சூரியனைச் சுற்றி வளையம் இருப்பதாகக் கூற அசுவத்தாமனும் சூரியனை நோக்குகிறான்.  இதை நூற்றுவர் தவறாகப் புரிந்து கொண்டு அசுவத்தாமன் கண்ணன் பக்கம் சாய்ந்துவிட்டான் எனவும் இனி அசுவத்தாமனை நம்பக்கூடாது எனவும் முடிவெடுக்கின்றனர்.  அவனைப் போரில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுக்கின்றனர்.  கண்ணன் விரைவாகக் காய்களை நகர்த்துகிறான்.  இந்திரனை அழைக்கிறான்.  கன்னனிடம் சென்று கவச குண்டலங்களைப் பெற்றால் தான் விசயனைக் காக்க முடியும் என்ற உண்மையைக் கூறி கவச குண்டலங்களை யாசகமாகப் பெற்று வருமாறு அனுப்புகிறான்.  இந்திரன் சிறிது யோசித்தபோது,
"வல்லார் வல்ல கலைஞருக்கும், மறை நூலவர்க்கும், 
               கடவுளர்க்கும், 
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தோர்தமக்கும், 
               துறந்தவர்க்கும், 
சொல்லாதவர்க்கும், சொல்பவர்க்கும், சூழும் 
               சமயாதிபர்களுக்கும், 
அல்லாதவர்க்கும், இரவி மகன் அரிய தானம் 
               அளிக்கின்றான்.

அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்' என்றால், 
               அவன் ஒன்றும் 
இந்தப் புவியில் மறுத்து அறியான்; உயிரே எனினும், 
               ஈந்திடுவான்!'' 
என்று கூறி இந்திரனை அனுப்புகிறான்.  இந்திரன் கிழவடிவம் தாங்கி தானம் கேட்கும் போது ஓர் அசரீரி மாயவன் கண்ணன் இவனை ஏவிஉள்ளான். வழங்காதே எனத் தடுத்தது.  ஆனால் சிந்தையில் ஓர் கலக்கமற்று கவசகுண்டலங்களை தானமாகக் கொடுத்தான் கன்னன்.  இதைக் கண்டு அதிசயம் கொண்ட இந்திரன் தன் உண்மை வடிவை வெளிக்காட்டி கன்னனுக்கு வேல் ஒன்று பரிசாகக் கொடுத்தான்.  எந்தக் கணைக்கும் மாயாத கடோற்கசன் இதனால் மாய்வான் எனக் கூறி அதற்கான மறையையும் சொல்- மறைகிறான்.  கன்னன் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கிறான்.  இந்திரன் நடந்த விபரத்தை கண்ணனிடம் கூறி அமராவதி திரும்புகிறான்.  கண்ணன் பின்னர் குந்தியைக் கண்டு கன்னனிடம் சென்று பேசி வரும்படி அனுப்புகிறான்.     கன்னனிடம் வந்து குந்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது கன்னன் ஒரு துகிலைக் கொடுத்து அதை உடுத்திக் காட்டும்படி கொடுக்கிறான். "படாமது என் கையில் தருக!' என, வருதலும், பயந்திலேன்எனில் எனை முனி' என்று, எடா, விரித்து, அலைத்து, உடல் படப் போர்த்து, எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள். குந்தி வந்து தான் தாய் என்பதை மெய்ப்பிக்கிறாள். மனம் கசிகிறார்கள் இருவரும்.  "நான் அன்றே உனை வளர்த்து எடுக்கப் பாக்கியம் செய்திலேன்'' என்று மனம் வருந்திக் கூறுகிறாள் கண்ணன்.  பின்னர் இளைஞர் ஐவருடன் சேர்ந்து அரசாளும்படி வேண்டுகிறான்.  மறுக்கிறான் கன்னன்.  "எனக்கு அரசு கிடைத்தால் உடனே துரியோதனனுக்குத் தந்து விடுவேன்.  என்னை ஆதரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவன் அவனே. எனவே நான் ஐவருடன் வருவது அவர்களுக்கும் நல்லதல்ல - எனக்கும் நல்லதல்ல'' என்று கூறுகிறான் கன்னன்.  குந்தி பின்னர் இரண்டு வரங்கள் கேட்கிறாள்.  நாகக் கணையை ஒரு தடவைக்கு மேல் தொடுக்கக் கூடாது எனவும் விசயன் தவிர மற்ற நால்வரையும் எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது என்றும்  வரம் கேட்கிறாள்.  அவனும் மனமுவந்து வழங்குகிறான்.  கொடுத்துச் சிவந்த கையாயிற்றே கன்னனின் கை. "தெறு கணை ஒன்று தொடுக்கவும், முனைந்து செருச் செய்வோன் சென்னியோடு இருந்தால் - மறு கணை தொடுப்பது ஆண்மையோ' வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ - உறு கணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் -ஒழிந்துளோர் உய்வர்'' என்று உரைத்தான்.  பின்னர் கன்னனும் குந்தியிடம் இரண்டு வரம் கேட்கிறான். விசயனால் வெல்லப்பட்டு வீழ்ந்தால் உலகறிய மகனே என்று போர்க்களத்தில் வந்து கதறி முலைப்பால் அளிக்க வேண்டும் என்று ஒரு வரமும் - போர் முடியும் வரை ஐவரிடமும் உண்மையைக் கூறக்கூடாது என்றும் ஒரு வரமும் வேண்டினான்.  குந்தியும் ஒப்புதல் அளித்தாள்.  பின்னர் குந்தி வந்து கண்ணனிடம் நடந்ததை அப்படியே கூறினாள்.  கண்ணனும் மகிழ்ந்து பாண்டவர் இருப்பிடம் சென்று நடந்த அனைத்தையும் தெரிவித்தான்.  மீதிக் கதையை நாளை பார்ப்போமா?

Thursday, November 11, 2010

MAHABHARATH STORY - PANDAVAS HIDE IN VIRAT KINGDOM

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


தாத்தா:  நேற்று அறக்கடவுள் ஐவருக்கும் நடத்திய சோதனையைக் கண்டோம்.  எப்படி ஐவரையும் ஒழிக்கவென்றே துரியோதனனால் வேள்வி மூலம் படைக்கப்பட்ட பூதத்தினிடமிருந்து ஐவரும் தப்பினார்கள் என்பதையும் கேட்டோம்.  இன்று அதன்பிறகு நடைபெற்ற கதையைப் பார்ப்போம்.  துர்வாச முனிவர் என்று முற்காலத்தில் ஒரு முனிவர் இருந்தார்.  இந்த முனிவர் முனிந்து கொள்வதையே தொழிலாகக் கொள்வார்.  சினந்து கொள்வதில் சிறந்தவர்.  இவர் சினந்தால் உடனே சாபம் கொடுத்து விடுவார்.  ஏற்கனவே நான் சொல்- இருக்கிறேன்.  திருமா-ன் வாயிற்காப்போர்களான சயனையும் விசயனையும் இவர் சபித்ததால் தான் அவர்கள் இரண்யன்-இரண்யாட்சகன், இராவணன்-கும்பகன்னன், கமசன்-சிசுபாலன் என்று அவதாரம் எடுத்தார்கள் என்று சிசுபாலன் கதை வந்த போது கூறியிருக்கிறேன்.  அந்த முனிவர் தான் துர்வாசர்.  துரியோதனனுக்கு வேள்வியில் இருந்து வந்த பூதத்திடமிருந்தும் ஐவர் தப்பிவிட்டனர் என்ற தகவல் வருகிறது.  உடனே அடுத்த திட்டத்தைத் தீட்டுகிறார்கள் துரியோதனன்-கன்னன்- சகுனி ஆகியோர்.  இந்த நேரத்தில் அங்கே வருகிறார் துர்வாசர்.  அவரை நன்றாக மகிழ்விக்கிறான் துரியோதன்.  மகிழ்ச்சி அடைந்த துர்வாசர் "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் தருகிறேன்'' என்று சொல்கிறார். தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்ததைவிட பாண்டவர்கள் கெட்டுப்போக வேண்டும் என்று அல்லும் பகலும் அனவரதமும் எண்ணிக் கொண்டிருப்பவன் இந்த துரியோதனன்.  எனவே இங்கிருந்து நீங்கள் நேரடியாக பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று விருந்துண்ண வேண்டும்.  அதுவே என் விருப்பம் என்றார்.  அவன் நினைப்பு என்னவென்றால் இந்த துர்வாச முனிவர் ஒரு முனிவர் குழாமோடு தான் எல்லா இடத்திற்கும் செல்வார்.  இப்படி அந்தக் குழுவுடன் சென்றால் பாண்டவர்கள் காட்டில் வசிப்பதால் இவர்களுக்கு முறையாக உணவு படைக்க முடியாது.  அதனால் இவரது சாபத்தைப் பெற்று அழிந்து விடுவார்கள் என்று எண்ணினான்.  அதனால் முனிவர் வரம் தருவதாகக் கூறியவுடன் உடனே இந்த வேண்டுகோளை விடுத்தான்.   வில்-யார் இவரை இந்த நேரத்தில் அறிமுகம் செய்யும் போதே " வளரும் தவத்தாலும்,
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன்'' என்று அறிமுகம் செய்கிறார். அவரும் ஒப்புக் கொண்டார்.  அவர் வந்தவுடனேயே தருமர் அவருக்கு உரிய மரியாதையைச் செய்து அருகிலுள்ள நதிக்குச் சென்று நீராடி வரும்படியும் வந்தவுடன் விருந்துண்ணலாம் என்றும் வேண்டினார்.  தருமருக்கு தன்னிடம் உள்ள வற்றாத உணவு வழ்ங்கும் பாத்திரம் உதவும் என்ற நம்பிக்கை.  முனிவரை அனுப்பி விட்டு திரௌபதியிடம் இந்த விடயத்தைக் கூறினார்.  அப்போது தான் அட்சய பாத்திரத்தில் உள்ள குறை ஒன்று தெரிந்தது.  வீட்டில் உள்ளோர் அனைவரும் உண்டு முடித்து பாத்திரத்தைக் கழுவிவிட்டால் பிறகு அது அடுத்த உணவு வேளையின் போது தான் உணவு வழங்கும் என்ற விபரம் தருமருக்குத் தெரிந்தது.  எல்லோரும் கூடி விவாதித்தார்கள்.  பீமன், "எப்படியும் வந்து சாபம் கொடுத்து நாம் அழியப் போகிறோம். அதற்குள் எதிரிகளை ஒழித்துவிட்டு வந்து விடுகிறேன்.'' என்றான்.  நகுலசகாதேவர்கள் தருமரிடம் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள்.  கண்ணனை அழைத்தால் இதற்கு நல்ல வழிகாட்டுவார் என்று அவர்கள் கூறினார்கள்.  கண்ணனை அழைத்தால் கவலை நீங்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.  தருமரும் இதற்கு இசைகிறார்.  திரௌபதியோ பயந்து நடுங்குகிறாள்.  தருமர் கண்ணனை நினைத்தார்.  உடனே வந்தார் கண்ணன்.  நெஞ்சுருக நினைத்தால் உடனே வருவான் கண்ணன்.  விபரத்தை அவரிடம் கூறினார்கள்.  "அட்சயபாத்திரத்தில் ஏதாவது ஒட்டிக்கிடக்கிறதா?  சரியாகக் கழுவி இருக்கமாட்டாய் திரௌபதி அந்த பாத்திரத்தை.  ஒரு தடவை பார்த்துவிட்டு ஏதாவது இருந்தால் உடனே கொண்டுவா'' என்றார்.  உடனே திரௌபதி விரைந்தாள்.  பாத்திரத்தைப் பாத்தால் கண்ணன் சொன்னது போல் ஒரு பருக்கை ஒட்டிக்கிடந்தது.  ஒரு கீரையின் பகுதியும் இருந்தது.  உடனே கொண்டு வந்தாள்.  அதை எடுத்துக் கண்ணன் உண்டார்.  இவர் உணவருந்தினால் உலகமே உண்ட மாதிரிதான்.  உடனே குளித்துக் கொண்டிருந்த துர்வாசருக்கும் அவருடன் வந்திருந்த அனைவருக்கும் உணவு அருந்திய உணர்வு பொங்கியது.  ஏப்பமும் விட்டார்கள்.  அதனால் தான் நாம் எப்போது உணவு அருந்த அமர்ந்தாலும் " நான் உண்ணும் இந்த உணவு உனக்குப் படைக்கப்பட்டதே'' என்று கூறி உணவு அருந்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.  அவ்வாறு மனதார நினைத்துப் படைத்தால் - நமது வேண்டுகோள் ஒருவேளை கண்ணன் செவிக்கு எட்டினால் - உலகத்தினர் அனைவருக்கும் நாம் உணவு அளித்தது போல் ஆகிவிடும்.  முனிவர் திரும்பி வருகிறார்.  வந்த காரணத்தை உரைக்கிறார்.  உண்மையை மறைக்கவில்லை அந்த முனிவர்."அறத்தின் மகனே - உன்னை அரசு என்று ஏற்றுக் கொண்டோர் அல்லால் எதிர்ந்தவர் யாராவது வாழமுடியுமா இந்தக் குவலயத்தில்.  கேதனன் தன் நிலையத்தில் விருந்து ஒன்று கொடுத்து ஒரே ஒரு வேண்டுகோள் தான் விடுத்தான்." எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இக- வனம் புகுந்தோர்தம் இல் சென்று நாளை நுகர்.  இதுவே எனக்குத் தரும் வரம்'' என்று வேண்டினான்.  எனவே தான் நான் வந்தேன்.  அறம் வென்றது.  வாய்மை வென்றே விட்டது என்று பாராட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.
அடுத்து திரௌபதியின் ஆசையின் காரணமாக மீண்டும் ஒரு ஆபத்தை காட்டில் சந்திக்கிறார்கள் ஐவர்.  ஏற்கனவே பூ ஒன்று வேண்டும் என்று கேட்டு வீமனை அனுப்பி இறைஅருளால் அவன் திரும்பிய கதை நமக்குத் தெரியும்.  இப்போது காட்டில் ஒரு நெல்-க்கனியைக் கண்டாள்.  அது அமித்திர முனிவனின் குடி-ல் இருந்தது.  அமித்திர முனிவன் அந்த நெல்-க்கனியை உண்டு தான் தவம் செய்து கொண்டிருந்தான்.  இதை அறியாமல் அந்தக் கனி வேண்டும் என்று கேட்டாள் திரௌபதிகேட்டவுடன் விசயன் கணை கொண்டு அந்தக் கனியை வீழ்த்தினான்.  அந்த கானகத்தில் இருந்தோர் அந்த நெல்-க் கனியின் மகத்துவத்தைக் கூறுகிறார்கள்.  ஆண்டுக்கு ஒரு முறை அந்த மரத்தில் இந்த கனி காய்க்கும் என்றும் இதை மட்டுமே அந்த முனிவர் உண்டு தன் பசியைப் போக்கிக் கொண்டு இறைவனை நோக்கி மீண்டும் தவம் புரிவார் என்றும் கூறுகிறார்கள்.  "முனிவன் வந்தால் என்ன நடக்குமோ - தெரியவில்லை'' என்று பதறுகிறார்கள் மற்ற தவயோகிகள்.  உடனே விசயன் நடந்ததை தன் அண்ணன் தருமரிடம் சென்று உரைக்கிறான்.  உபாயத்தைப் பற்றி யோசிக்கையில் விசயன், "முனிவர் சபித்தால் என்னைத் தான் சபிப்பார்.  எனவே நீங்கள் அச்சப்பட வேண்டாம்'' என்று கூறினான். தருமரோ, "உனக்கு இடர் வர, நாங்கள் உன்னை நீங்கிப் போய் பிழைக்கக் கருதுவோமோ.  இது நடக்காத செயல்'' என்று கூறுகிறார்.  மீண்டும் உதவிக்கு வருகிறார்கள் நகுலசகாதேவர்கள்.  கண்ணனை அழைப்போம் அவர் வழிகாட்டுவார் என்கிறார்கள் இருவரும்.  துரௌபதியோ இந்தத் துன்பத்திற்குத் தான் காரணமாகி விட்டதை நினைத்து வருந்துகிறாள்.  நகுலன் கூறியபடி தருமர் கண்ணனைச் சிந்திக்க  அவர் வந்து உபாயம் ஒன்றைக் கூறுகிறார்.  "இப்போது நீங்கள் என்ன கருதினீர்களோ அதை ஒளிக்காமல் உள்ளது உள்ளபடி சொன்னால் இந்தக் கனி மீண்டும் அந்த மரத்தில் போய் சேர்ந்துவிடும்'' என்கிறார் கண்ணன்.  இந்தக் காட்சி மூலம் ஐவரும் எப்படிப்பட்டவர்கள் - அவர்களின் குணநலன் என்ன? - திரௌபதியின் எண்ணம் என்ன? என்பதெல்லாம் நமக்குப் புலப்படும்.  தருமன், "அறம் வெல்ல வேண்டும். மெய்ம்மை வெல்ல வேண்டும்.  பொய்ம்மொழி மற்றும் கோபம் என்பவை பாவம் ஆகும்.'' என்று எண்ணியதாகக் கூறுகிறார். வீமனோ ," பிறர் மனைவியை அன்னை என்று நினைக்க வேண்டும்.  பிறர் பொருளை எட்டி என்று எண்ண வேண்டும்.  பிறரை வசைபாடுதலை பெருமை என்று நினைக்கக் கூடாது.  பிறர் துயரை என் துயர் போல் நினைக்க வேண்டும்.  இறுதிவரை இந்த எண்ணம் மாறாமல் இருக்க வேண்டும்'' என்று நினைத்ததாகக் கூறினான்.  மானத்தை எப்படியேனும் காக்க வேண்டும் என்று எண்ணினேன் என்றான் விசயன். நகுலசகாதேவர்கள் தருமரின் வழியில் நடக்க வேண்டும் எனவும் கண்ணன் காட்டும் வழியே சிறந்த வழி என்று நினைத்ததாகவும் கூறினார்கள்.  இறுதியில் திரௌபதியின் முறை வருகிறது. "ஐம்புலன்கள் போல் ஐந்து பதிகள் உள்ளார்கள்.  அப்படி இருந்து ஆறாவதாக இன்னொரு கணவன் அமையமாட்டானா என என் மனம் விரும்பும்.'' என்றாள் திரௌபதி.  அறுவரும் பொய் சொல்லாமல் நினைத்ததை அப்படியே சொன்ன காரணத்தினால் அந்தக் கனி பண்டு போல மரத்தில் போய் உடனே பொருந்திற்று.  இப்படியாக அனைவரும் அமித்திர முனிவரின் கோபத்தில் இருந்து தப்பினார்கள்.  பின்னர் எப்படி கரந்துறைவது என்று ஐவரும் ஆலோசித்தார்கள்.  கரந்து உறைவதற்கு உரிய இடம் எது என்று யோசித்த போது விசயன் விராடன் நகரமே இதற்குச் சரியான இடம் என்று தனது கருத்தை வ-யுறுத்தினான்.   பின்னர் தருமர் தன்னுடன் வந்திருந்த அரசர்களையும் முனிவர்களையும் வணங்கி அவரவர் இடத்திற்குச் செல்லும்படியும் தாங்கள் கரந்து உறைய வேண்டிய தருணம் என்பதால் யாரும் உடன் இருக்கக் கூடாது என்று கூறினார்.

சூரியா: கரந்து உறைதல் என்றால் என்ன தாத்தா?  கறத்தல் என்றால் பால் கறத்தல் என்று எனக்குத் தெரியும்.  இந்த கரத்தல் என்ன தாத்தா?

தாத்தா: கரந்து உறைதல் என்றால் மறைந்து வாழ்தல் என்று பொருள்.  அஞ்ஞாதவாசம் என்று வடமொழிக்காரர்கள் கூறுவார்கள்.  இது நல்ல தமிழ்ச் சொல்.

சூர்யா: தாத்தா நீங்க சொல்ற இந்த வில்-பாரதத்திலே பல வடமொழிச் சொற்கள் அருமையாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.  இதை நாம் படிக்காமல் பீஷ்மர், கிருஷ்ணன், திருதராஷ்டிரன், பீமன், நகுஷன் இன்னும் இது போல பல பெயர்களை நாம் தமிழில் சேர்த்து நல்ல தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  தமிழ்ச் சொல் எவ்வளவு உள்ளன இந்த காவியத்தில்.  இதையெல்லாம் படிக்கவும் - கேட்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் தாத்தா.  ஒரே சொல்லுக்கு எவ்வளவு இணைச் சொற்களை அடுக்குகிறார் இந்த வில்-புத்தூரார்.  மிக நன்றாக உள்ளது தாத்தா.

தாத்தா: புரிஞ்சா சரி.  வடமொழிச் சொற்களை உபயோகித்தால் பொருள் அறிந்து உபயோகிக்க வேண்டும்.  நமக்கு வடமொழியும் சரியாகத் தெரியாது.  தமிழும் சரியாகத் தெரியாது.  ஆங்கிலமும் சரியாகத் தெரியாது.  எல்லாவற்றையும் கலந்து பேசக் கற்றுக் கொண்டோம்.  இறுதியில் அனைத்து மொழிகளையும் கொலை செய்த பாவம் நமக்கு வரும் தெரியுமா?  உதாரணமாக ஆறு என்று தமிழ் சொல்லைப் பயன்படுத்தினால் அதற்குப் பொருள் செல்லும் வழி என்பதாகும்.  எனவே வைகையாறு என்று சொல்கிறோம் - காவிரியாறு என்று சொல்கிறோம்.  ஆனால் காவிரி நதி என்று சொன்னால் நதியின் கதை நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  நதி என்றால் கிழக்கில் பாயும் ஆறு.  வேறு திசையில் பாய்ந்தால் அதற்கு நதம் என்று பெயர்.  ஆனால் நாம் எல்லா ஆறுகளையும் நதி என்று பொத்தாம்பொதுவாகக் கூறுவோம். வடமொழிச் எழுத்துக்களை வேறுவழி இல்லாமல் தமிழ் மொழியில் பயன்படுத்த நேர்ந்தால் எப்படி மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று இலக்கணத்தில் விதி உள்ளது.  அதை அறிந்து பயன்படுத்த வேண்டும்.  இந்த காவியத்தின் ஆசிரியர் வடமொழி மற்றும் தமிழ்மொழி இரண்டிலுமே வல்லவர்.  அதனால் தான் முறையாகப் பெயர்களை மொழிமாற்றம் செய்துள்ளார்.  சில கருத்துகளையே அவர் ஏற்பதில்லை.  வடமொழி வியாச மகாபாரதத்தில் உள்ள பல கருத்துகளோடு இவர் ஒத்துப்போகவில்லை.  ஏற்றுக் கொள்ளவில்லை.  அதனால் தான் பிராமணன் யார் போன்ற இனப்பிரிவுகள் குறித்து வந்த கேள்விகளைத் தவிர்த்து விட்டார்.  நாம் நச்சுப்பொய்கைக் கதையில் பார்த்தோமே.  பல கேள்விகள் வடமொழிக் காவியத்தில் உள்ளன.  ஆனால் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வில்-புத்தூரார் விரும்பவில்லை.  காரணம் தமிழ்க் கலாசாரம் அவருக்குத் தெரியும்.  வடபுலக் கலாசாரத்தை இங்கு திணித்து சீரழிக்க விரும்பவில்லை அவர். அதனால் தமிழ் இலக்கியங்களை-இலக்கணத்தை முறையாகக் கற்று - நல்ல தமிழ்ப் பாடல்கள், கவிதைகள், காவியங்கள் ஆகியவற்றைப் படித்தால் பல தமிழ் சொற்கள் நமக்குத் தெரிய வரும்.  அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.  ஒருசில தமிழ் சொற்கள் தெரிந்ததோடு நிற்கக் கூடாது.  பல புதுச் சொற்களை அறிந்து கொள்ள வேண்டும்.  அது நமக்கும் நல்லது மொழிக்கும் நல்லது.  தமிங்கிலுசு எழுதுவதை - பேசுவதை புறக்கணிக்க வேண்டும். சரி நாம் பாரதக் கதைக்கு வருவோம்.
விராட நகருக்குச் சென்று கரந்து உறைவது என்று முடிவெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொருவராக அங்கு பல்வேறு பணிகளில் சேர்வது என முடிவெடுக்கிறார்கள்.  விராட நகர் அடைந்ததும் எல்லையில் இருந்த மயான பூமியில் இருந்த ஒரு காளி கோயி-ன் முன்னே உள்ள வன்னி மரத்திலே தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்து காளி அன்னையைத் துதித்துச் செல்கிறார்கள்.  தருமர் கங்கன் என்னும் பெயருடைய துறவியாய் செல்கிறார்.  வீமன் பலாயனன் என்னும் பெயரில் விராடனது தலைமை மடையனாய்ப் பணியில் சேருகிறான்.  மடை என்றால் சமையல் கூடம்.  திருக்கோவில்களில் மடைப்பள்ளி என்று இருக்கும்.  இறைவனுக்குப் படைக்கப்படும் உணவுகளைச் சமைக்கும் கூடத்திற்குத் தான் மடைப்பள்ளி என்று பெயர்.  உருப்பசி மூலம் தனக்குக் கிடைத்த சாபத்தைப் பயன்படுத்தி விசயன் ஒரு பேடியாக மாறி பிருகந்நளை என்ற பெயருடன் வந்து அரசகுமாரி உத்தரையின் பாங்கியாகச் சேர்தல்.  நகுலன் தாமக்கிரந்தி என்னும் பெயரில் விராட மன்னனின் குதிரைகளைப் பராமரிக்கும் பணியில் அமர்கிறான். சகாதேவன் தந்திரிபாலன் என்னும் பெயரோடு ஒரு இடையனாக வந்து விராடனின் ஆநிரை காப்போருக்கு அதிபதியாக அமர்கிறான்.  இறுதியில் திரௌபதி விரதசாரிணி என்னும் பெயருடன் விராட அரசியின் வண்ண மகளாகப் பணியில் சேருகிறாள்.

சூர்யா: அது என்னங்க தாத்தா வண்ணமகள்?  நான் கேள்விப்பட்டதே இல்லையே?  அப்படி என்றால் என்ன வேலை செய்யணும்?

தாத்தா:  அரசிக்கு ஒப்பனை புனைதல் பணி.  அலங்காரம் செய்தல் என்றும் கூறலாம்.

சூர்யா: ப்யூட்டி பார்லர் வேலை மாதிரியா தாத்தா?

தாத்தா: ஆமாம்டா ஆமாம்.  ஆங்கிலத்தில் சொல்லாதே என்றால் கேட்க மாட்டேன் என்கிறாயே.  ஏன் அழகுபடும் வேலை என்று சொல்ல வேண்டியது தானே?

சூர்யா: சரிங்க தாத்தா.

தாத்தா: பாண்டவர்கள் மறைந்து உறைந்த காரணத்தால் விராட நகரம் எப்போதும் இல்லாத வகையில் செழிக்கத் துவங்கியது.  நாடு செழித்த காரணத்தால் வீர விளையாட்டுகள் சிறப்படைந்தன.  இந்த நேரத்தில் வாசவன் என்று ஒரு மற்போர் வீரன் பல மல்லர் சூழ விராட நாட்டுக்கு வந்து தன்னுடைய பெருமையைக் கூறுகிறான்.  விராடனும் தனது மல்லர் குழுவை நோக்க அவர்கள் ஒவ்வொருவராக வந்து வாசவனுடன் வந்து மோதுகிறார்கள்.  அனைவரும் தோற்கிறார்கள்.  அவனுக்குச் சிறப்பு செய்கிறார் மன்னர்.  அப்போது கங்கர் விராட மன்னரிடம் "நின் மடையர் தலைவன் பலாயனன் நல்ல மல்லன்.  அவனை இந்த வாசவனோடு மோதச் சொல்.  அவன் இவனை வென்றுவிடுவான்'' என்று கூறுகிறார்.  அவரும் தலைமை மடையனை வரச்செய்து விடயத்தைக் கூறுகிறார்.  அவனும் வாசவனோடு மோதி வென்றுவிடுகிறான்.  மன்னர் அவனைப் பாராட்டி பரிசுகள் பல வழங்குகிறார்.  சிறிது நாள் கழித்து விராட அரசனின் உடன்பிறப்புகள் முன்னவன் கீசகனோடு அங்கு வருகிறார்கள்.  தங்கள் தமக்கையைக் கண்டு அளவளாவுகிறார்கள்.  அவர்கள் மொத்தம் 105 பேர்.  விராட மன்னனின் மனைவி பெயர் சுதேட்டிணை.  அரசியைக் கண்டு திரும்பும் போது கீசகன் விரதசாரிணியைக் கண்டு காமம் கொள்கிறான்.  விரதசாரிணி அவனை பழித்துப் பேசி பயமுறுத்திப் பேசுகிறாள்.  அறிவுரை சொல்கிறாள்.  அவன் கேட்பதாயில்லை.  விரதசாரிணி அரசி சுதேட்டிணையிடம் விபரத்தைச் சொல்கிறாள்.  அவள் தனது தம்பியை அழைத்துக் கடிந்து இனி அந்தப்புரத்திற்கு வரக்கூடாது என ஆணையிடுகிறாள்.  ஆனால் கீசகன் விரகதாபத்தில் துடிக்கிறான்.  சேடியர் மூலம் செய்தியைக் கேட்ட அரசி ஒரு பூமாலையைக் கொடுத்து அதை அவனிடம் சேர்ப்பிக்கும்படி விரதசாரிணியிடம் கூறுகிறாள்.  அங்கு சென்ற அவளை அடைய கீசகன் திட்டமிடுகிறான்.  உடனே சூரியக் கடவுளிடம் முறையிடுகிறாள் விரதசாரிணி.  கீசகனுக்கோ விரதசாரிணியைக் கண்டவுடன் கொண்டாட்டம். வந்தனள், என்னுடை மா தவப் பயன்!                       வந்தனள், என்னுடை வழிபடும் தெய்வம்!                        வந்தனள், என்னுடை ஆவி! வாழ்வுற,                         வந்தனள், என்னுடை வண்ண மங்கையே!  என்று சொல்-க் கொண்டு கீசகன் பற்றுவதற்கு ஓடி வந்தவுடன் விரதசாரிணி அரசவைக்கு ஓடி வருகிறாள்.  அங்கும் வந்து அவள் கையைத் தீண்ட நினைக்கவே சூரியன் ஏவலால் ஒரு கிங்கரன் வந்து அவனை புறத்தே எடுத்து வீசுகிறான்.  ஆனால் விராடன் கீசகன் செயலைக் கண்டியாது வாளாவிருந்தான்.  மாறுவேடத்தில் இருந்த வீமனான பலாயனனுக்குக் கடுங்கோபம். வெகுண்டான்.  கங்கர் வேடத்தில் இருந்த தருமர் தடுத்தார்.  அன்று இரவே கீசகனைக் கொல்வது என பலாயனன் முடிவெடுக்கிறான்.  அப்போது பாஞ்சா- நாம் மறைந்து வாழ்கிறோம்.  மறைந்து வாழும் காலம் முடிவடைய சில தினங்களே உள்ளன.  எனவே மேலும் இரு நாட்கள் பொறுக்க வேண்டும்.  அதற்குள் நான் அவனைச் சந்தித்து ஒப்புக்கொள்வது போலப் பேசி ஒரு மறைவிடத்திற்கு இரண்டு நாள் கழித்து வரச் சொல்கிறேன்.  அங்கு வைத்து அவனை வதைக்கலாம் என்று கூறுகிறாள்.  பலாயனனும் சம்மதிக்கிறான்.  அதேபோல மறைவிடத்திற்கு வருகிறான் கீசகன் மிக்க மகிழ்ச்சியுடன்.  அங்கு காத்திருந்த வீமன் அவனோடு போரிட்டுக் கொல்கிறான்.  சண்டை ஒ- கீசகனின் உடன்பிறப்புகளுக்குக் கேட்டு அவர்களும் ஓடி வருகிறார்கள்.  அவர்களையும் மாய்க்கிறான் பலாலயன்.  பின்னர் அவர்கள் தத்தம் இடத்திற்குத் திரும்புகிறார்கள்.  விடிகிறது.  கீசகனும் அவனது தம்பியரும் மாண்ட செய்தி காட்டுத்தீ என பரவுகிறது.  இந்தச் செய்தி துரியோதனனுக்கும் எட்டுகிறது.  கீசகனை வெல்ல எல்லோராலும் முடியாது.  ஒருவேளை ஐவரும் இந்த நகரில் பதுங்கி இருக்கலாம் என்று கருதுகிறான் கன்னன்.  எனவே திரிகர்த்தன் என்னும் மன்னனின் தலைமையில் படையை அனுப்பி அந்நாட்டு நிரையைக் கவர்ந்து செல்கிறார்கள். தகவல் அறிந்த விராடன் தடுத்துப் போரிடுகிறான்.  ஆனால் படைபலத்துடன் வந்த திரிகர்த்தன் விராடனின் படையை ஓடஓட விரட்டி விராடனைத் தன் தேரில் கட்டுகிறான்.  கங்கர் பலாலயனுக்குத் தகவல் கொடுத்து ஆணையிட அவன் வந்து விராடனை மீட்டு அனைவரையும் விரட்டுகிறான்.  தாகக்கிரந்தி (நகுலன்) பகைவர்களின் குதிரைகளைக் கவர்ந்து வருகிறான்.  தந்திரிபாலன் (சகாதேவன்) ஆநிரைகளை மீட்டு வருகிறான்.  பலாயனன் திரிகர்த்தனை தேரில் கட்டிப் போடுகிறான்.  கங்கர் வந்து அவனை விடுவிக்கும்படியும் அப்போது தான் இவன் வந்த பின்னணி தெரியும் என்றும் கூறுகிறார்.  திரிகர்த்தன் ஓடிப்போய் துரியோதனனிடம் நடந்ததைத் தெரிவிக்கிறான்.  உடனே படைகளுடன் துரோணர், வீடுமர், துரியோதனன், கன்னன், அசுவத்தாமன் ஆகியோர் வீராட நகரை முற்றுகையிடுகிறார்கள்.  இவர்கள் வரும் செய்தி ஆயர்கள் மூலம் அரசிக்குத் தெரிகிறது.  அரசரோ ஏற்கனவே படைகளுடன் சென்று உள்ளார்.  தகவல் எதுவும் இல்லை.  என்ன செய்வது என்று யோசித்து "நகர் காமின்'' என்று மகளிருக்கு உத்தரவிடுகிறாள் அரசி சுதேட்டிணை. உத்தரன் தன் தாயை வணங்கி தன் தேருக்குச் தேரோட்டி ஒருவன் இருந்தால் தான் நகரத்தைக் காப்பதாகக் கூறுகிறான்.  வண்ணமகள் உடனே அரசியிடம் பேடிக்குத் தேர் ஓட்டத் தெரியும்.  எனவே அந்த பேடியை உத்தரனுடன் அனுப்பலாம் என்று கூறுகிறாள்.  அரசியின் கட்டளையை பேடியும் ஒப்புக்கொள்கிறாள்.  தேரோட்டிச் செல்கிறார்கள்.  ஆனால் சேனையைக் கண்டதும் உத்தரன் நடுங்கிச் சோர பேடி பிருகந்நளை அவனைத் தேற்றி ஆறுதல் கூறுகிறாள்.  ஆனால் உத்தரன் மீள வேண்டும் என வம்பு செய்கிறான்.  ஆனால் பேடியோ "நான் அவர்களுடன் பொருது பகையை வெல்வேன் அஞ்சற்க''என்று  சொல்லுகிறாள்.  உத்தரன் ஓடப் பார்க்க அவனை தேரில் கட்டிப்போட்டுவிட்டு தான் காளி கோவில் அருகில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு விரைகிறான் விசயன்.  ஆனால் அந்த படைக்கலங்களைக் கண்டவுடனேயே அவற்றை விசயனுடைய படைக்கலங்கள் என்பதை அறிகிறான் உத்தரன்.  விசயனைப் பற்றி உத்தரன் கேட்க விசயன் வந்து போரிடுவான் என்று பதில் வருகிறது பேடியிடமிருந்து.  தைரியம் வருகிறது உத்தரனுக்கு.  தேர் ஓட்டு எனக் கட்டளை இட்டு ஆயுதங்களுடன் நிற்கிறான் பேடி.  தேரில் நிற்கும் பேடியைப் பார்த்தவுடன் துரோணர் ஐயப்படுகிறார்.  வில்பிடித்து நிற்கும் தோரணை விசயனைப் போல் உள்ளதே என ஐயுறுகிறார்.  விசயன் அம்பு எய்து பலரையும் அழிக்கிறான்.  விதுரன் இவனை நம் நிலம் பக்கம் அழைத்துப் போய் போர் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுகிறார்.  வீடுமனும் அதுவே சரியான கருத்து என்று உரைக்கிறார்.  கன்னன் எல்லோரையும் பார்த்து எள்ளி நகையாடுகிறான்.  இருப்பது ஒரு தேர்.  அதிலும் நிற்பவன் ஒரு பேடி.  நாம் அச்சப்படுவதா என்று கொக்கரிக்கிறான்."தேரும் அங்கு ஒரு தேர்; தனித் தேரின்மேல் நின்று, வீர வெஞ் சிலை வளைத்த கை வீரனும் பேடி; யாரும் நெஞ்சு அழிந்து அஞ்சுவது என்கொல்?'' என்று இசைத்தான்- சூரன் மா மகன் ஆகிய சூரரில் சூரன்.  - இப்படித்தான் நம்மிடம் கூறுகிறார் வில்-யார்.  நிரைகளை கொண்டு போகும்படி தம்பியரிடம் உத்தரவிடுகிறான் துரியோதனன்.  தானும் பேடியை எதிர்க்கத் துணிகிறான்.  விசயன் அரசர்களையும் துரியோதனின் தம்பியரையும் தடுத்து ஆநிரையை மீட்கிறான்.  துரியோதனனுடன் வந்த இடையர்கள் துவள்கிறார்கள். விராட நாட்டு இடையர்கள் குதூகலத்துடன் ஆரவாரமிடுகிறார்கள்.  மறைந்து உறையும் நேரம் முடிவடைகிறது.  உடனே தன்னுருவம் மீள வேண்டுமென விசயன் நினைக்கிறான்.  உடன் காட்சி மாறுகிறது.  தேரில் விசயன் . கையில் காண்டீபம் - தேரில் விசயன் கொடி பறக்கிறது.  வேற்று உரு ஒழித்த விசயன் நாணை இழுத்து ஓசையை எழுப்புகிறான்.  பகைவர் நடுங்குகின்றனர். நாணொ- கேட்டு உத்தரன் மயக்கமடைகிறான்.  அவனைத் தேற்றி தேரை விடச் சொல்கிறான் விசயன்.  துரியோதனனை நெருங்கி விசயன் போரிடுகிறான். தப்பியோடப் பார்க்கிறான் துரியோதனன்.  அவனை இகழ்கிறான் விசயன். இதற்குள் துரோணர் வருகிறார் விசயனுடன் போரிட.  கன்னனும் வருகிறான்.  போருக்கு அழைக்கிறான்.  கன்னனும் விசயனும் இப்போது போரிடுகிறார்கள். மும்முறை தோற்று ஓடுகிறான் கண்ணன்.  அசுவத்தாமன் கன்னனை இகழ்கிறான். இருப்பது ஒரு தேர் நிற்பது ஒரு பேடி அஞ்ச வேண்டாம் என்று வீரம் பேசினாயே - ஏன் ஓடுகிறாய்.?  சொல்வது அனைவருக்கும் எளிது.  ஆனால் சாதிப்பது கடினம்.  விசயன் சாதிக்கிறான் பார்.  பல யானைகள் கூடினாலும் ஒரு சிங்கத்தை வெல்ல முடியுமா?'' என்றான்.   துரோணரும் வீடுமரும் வந்தவுடன் துரோணரைத் தொழுது, "அந்தணர் அரசே, உன்தன் அருளினால் அடவி நீங்கி வந்தனம் - உன்னோடு போர் புரிதல் தகாது'' எனக் கூறினான் விசயன்.  "மன்னொடு சூழ நின்ற மாசுணம் உயர்த்த கோவை  மின்னொடும் உரும்ஏறு என்ன வெகுண்டு அமர் புரிவது அல்லால்,  நின்னொடும், கிருபனோடும், நின் மகனோடும், முந்தை-  தன்னொடும், புரியேன், வெம் போர்; தக்கதோ? சரதம் பாவம்!'' துரோணரோ செஞ்சோற்றுக் கடனுக்காகப் போர் புரிவதாகவும் எனவே முறை நோக்கத் தேவையில்லை என்றும் கூறிப் போரிடுகிறார்.  விசயன் இப்போது கணை தொடுக்கும் திறமையைக் கண்டு "கானகம் போன பன்னிரண்டு ஆண்டுகளில் ஏராளமாகக் கற்றிருப்பான் போ-ருக்கிறது - இவன் பெய்யும் கணைமழையைப் பார்த்தால் இவனிடம் நான் பாடம் கற்க வேண்டும் போ-ருக்கிறது'' என்று பெருமைப்பட்டார்.  ஆரியத் துரோணன் புறமுதுகிட்டான்.  அடுத்து அசுவத்தாமன் பொருது அவனும் தோற்கிறான்.  கிருபன் முத-யோர் வந்து பொருது அவர்களும் தோற்கிறார்கள்.  வீடுமன், விதுரன் ஆகியோர் நாற்புறமும் சூழ்ந்து அனைத்துப் பக்கங்களி-ருந்தும் விசயனைத் தாக்குகிறார்கள்.  நேருக்கு நேர் போர் புரியாமல் அனைத்துப் பக்கங்களி-ருந்தும் தாக்கத் தொடங்கியவுடன் விசயன் மோகனக் கணையை விடுகிறான்.  அனைவரும் மயக்கமடைகிறார்கள்.  திரொளபதியின் துகிலை உரித்த போது வேடிக்கை பார்த்தவர்கள் தானே அனைவரும் என்று கருதி மற்றொரு கணை தொடுத்து அனைவரின் துகிலையும் பறிக்கிறான் விசயன்.  துரியோதனின் மகுடத்தைப் பறித்துக் கொள்கிறான் விசயன்.  வெற்றியுடன் திரும்புகிறான்.  மயக்கம் தெளிந்த அனைவரும் வெட்கமடைந்து திரும்புகிறார்கள்.  துரியோதன் பாட்டன் வீடுமனிடம் "விசயன் உரிய காலத்திற்கு முன்னர் வெளிப்பட்டான்.  இவனை மீண்டும் காடு புகச் சொல்லுங்கள்'' என்று கட்டளையிட்டான்.  அவரோ குறித்த காலம் முடிந்த பிறகே விசயன் வெளிப்பட்டான் என்பதைக் கூறினார்கள். அங்கே அரண்மனையில் விராடன் தன் மகன் தனியாக போர்ககளத்திற்குச் சென்றது கேட்டவுடனேயே மயக்கமடைகிறார்.  கங்கர் அவனைத் தேற்றி உடன் பேடி சென்றிருப்பதால் உத்தரனுக்கு ஒன்றும் நேராது என்று தேற்றுகிறார்.  இதற்குள் வெற்றிச் செய்தி எட்டுகிறது மன்னனுக்கு.  வரவேற்பு கொடுக்க ஆவன செய்யுங்கள் எனக் கூறி வரும்வரை சூதாடுவோம் என கங்கரை அழைக்கிறார்.  சூதாடும் போது மன்னர் தன் மகன் வெற்றி பற்றி பேச - கங்கர் அது பேடியின் வெற்றியே எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.  சினம் கொள்கிறார் விராட மன்னர்.  கையில் இருந்த சொக்கட்டானை தர்மரை நோக்கி எறிகிறார்.  கங்கரின் நெற்றியில் அடிபட்டு குருதி கொட்டுகிறது. இக்காட்சியைக் கண்ட விரதசாரிணி திடுக்கிட்டு தன் ஆடையால் இரத்தம் கீழே சிந்தாமல் துடைக்கிறாள்.  இதற்குள் உத்தரன் வந்து தனியிடத்தில் வைத்து நடந்த விபரங்களைக் கூறுகிறான்.  மாளிகைக்குள் பணி செய்யும் அறுவர் பாண்டவரும் திரௌபதியும் எனக் கூறியவுடன் ஓடோடி வருகிறார் மன்னர்.  கங்கரிடம் மன்னிப்பு கேட்கிறார்.  வீமனும் விசயனும் வந்து அண்ணன் நெற்றியில் உள்ள காயம் பற்றி அறிகிறார்கள்.  விராட மன்னனைக் கொல்ல கையை ஓங்குகிறார்கள்.  தடுக்கிறார் தருமர்.  அருமையான புத்திமதியைச் சொல்கிறார்."ஒன்று உதவி செய்யினும், அவ் உதவி மறவாமல்,  பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர், பெரியோர்;  நன்றி பல ஆக ஒரு நவை புரிவரேனும்,  கன்றிடுவது அன்றி, முது கயவர் நினையாரே.'' என்று கூறுகிறார். விராடன் திறைப் பொருட்களை வைத்து பாண்டவரை வணங்குகிறான்.  அவனைத் தழுவிக் கொண்ட தருமர் எதிர்வரும் போரில் தங்களுக்கு படைஉதவி புரிந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.  உத்தரனோ ஒரு படி மேலே போய் " எங்கள் படையும் நினதே உத்தரையும் விசயனுக்கு உரியவளே'' என்று திடீர் அறிவிப்பு செய்கிறான்.  விசயன் இக்கருத்தை மறுத்து "உத்தரை எனது மகன் அபிமனுக்கே உரியவள் ஆதல் வேண்டும்'' எனக் கூறுகிறான்.  தாங்கள் வெளிப்பட்ட தகவலை உறவினருக்கும் பிற மன்னருக்கும் தருமர் தூதர்கள் மூலம் தெரிவிக்கிறார்.  உடனே அபிமன் மற்றும் கண்ணன் வருகிறார்கள்.  அப்போது கண்ணனுடன் சிவேதன் என்பவன் வருகிறான்.  சிவேதன் என்பவன் விராடனின் மகன் தான்.  முன்னொரு காலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது ஒரு சாபத்தால் மயிலாகிவிடுகிறான். அவன் தன் தந்தையிடம் வந்த போது அவர் அடையாளம் தெரியாததால் துரத்தி விடுகிறார்.  பின்னர் அவன் பறந்து போய் சிவபிரானை நினைத்து தவம் புரிகிறான்.  அதனால் சாபவிடை பெற்று சிவபெருமானிடம் ஆயுதங்களும் கவசங்களுடம் பெறுகிறான்.  இதைக் கேட்ட விராடன் மிக்க மகிழ்கிறான். இச்சமயம் சல்-யன் அங்கு வந்து துரியோதனன் தன்னை வஞ்சனையால் ஏமாற்றி அவனுடைய துணைவனாகி ஆக்கியது குறித்துக் கூறுகிறான்.  இந்த சல்-யன் யார் என்றால் நகுலசகாதேவர்களின் மாமன்.  பின்னர் விராடன் உத்தரையை அபிமனுக்குத் திருமணம் செய்விக்கிறான்.  திருமணம் முடிந்த பிறகு பாண்டவர்கள் காளிக்குப் ப- கொடுத்து வன்னி மரத்தில் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை மீட்டுக் கொள்ளுகிறார்கள்.  பின்னர் விராடனின் தலைநகரை ஒட்டி இருந்த உபப்பிலாவிய நகரம் சென்று அங்கு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர்.  இன்றைய கதையை இத்துடன் முடித்துக் கொள்வோமா?  சூர்யா: மகாபாரதம் கதை இவ்வளவு பெரிய கதையா தாத்தா?  தாத்தா: ஆமாம்டா.  நான் தலைப்புச் செய்தியைத் தான் உன்னிடம் சொல்-க் கொண்டிருக்கிறேன்.  ஆமாம் வில்-பாரதம் காவியத்தில் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளவைகளைத் தொகுத்தே உனக்கு இவ்வளவு பெரிய கதையை என்னால் கொடுக்க முடிந்து விட்டது. முழு கதையையும் நீ வில்-பாரதம் நூல் வாங்கிப் படிக்க வேண்டும்.  இன்னும் பல கதைகளையும் பல தமிழ் சொற்களையும் நீ தெரிந்து கொள்ளலாம்.  சரியா.  நாளைக்குப் பார்க்கலாம்.

Tuesday, November 9, 2010

YATCHAP PRASNA - MAHABARATHA STORY IN TAMIL

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


தாத்தா:  விசயன் பாசுபதக் கணையை பெற்ற விபரத்தையும் வரம் பல பெற்ற அரக்கர்கள் பலரை - தனி ஒருவனாக நின்று விசயன் வெற்றி பெற்ற விவரத்தையும் உரோமச முனிவர் மூலம் கேட்ட தருமர் மிக்க உவகை கொண்டார்.  தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று மகிழ்ச்சி கொண்டார்.  பின்னர் காமியம் என்னும் மலையில் தங்கியிருந்த தருமர் உரோமச முனிவர் வழிகாட்டுத-ன்படி காந்தர்ப்பமலைச் சாரலை அடைந்தார்.  இமய மலையில் நதிகளைப் பற்றிக் கேட்க வேண்டுமா?  போகும் வழியில் எல்லாம் நதிகள்.  தருமர் எல்லாவற்றிலும் நீராடினார்.  இங்கு தான் விசயன் தவம் இயற்றினான் என்று கூறியவுடன் உளமகிழ்ந்து விசயனைக் கண்டது போல கூத்தாடினார்.  பின்னர் தசாங்கன் என்னும் முனிவர் தவம் புரியும் தபோவனத்தை அடைந்தார்.  விசயன் வானுலகி-ருந்து இறங்கப் போகும் இடம் இது தான் என்பதை அறிந்து கொண்டார் தருமர்.  இது தான் சிவபெருமான் வதியும் இடம் என்பதையும் அறிந்தார். "'இந்த வனம்தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர்-ஐம்பது யோசனை '' என்றும் " கந்தன் என எக் கலையும் வல்ல ஞானக் கடவுள் முனி விசாலயன் ஆலயமும்'' முருகனின் இருப்பிடத்தையும் கண்டார் தருமர்.  உரோமச முனிவர் இந்தக் காட்டில் ஓர் ஆண்டு இருக்கும்படி வேண்டினார்.  அப்படி அங்கு தங்கி இருக்கும் போது பொற்றாமரை மலர் ஒன்று திரௌபதியின் முன் வீழ்ந்தது.  அதைப்பார்த்து அதன் அழகில் சிந்தனையைப் பறிகொடுத்தாள் பாஞ்சா-.  அதை வீமனுக்குக் காட்டி இப்படிப்பட்ட மலர் ஒன்று தனக்கு வேண்டும் என்றும் சொன்னாள்.  இந்த மலர் குறித்து உரோமச முனிவரிடம் வீமன் தகவலைக் கேட்டான். அது இயக்கர்பதியான குபேரனின் தோட்டத்தில் உள்ளது என அந்த முனிவர் சொன்னார்.
சூர்யா:  அது என்ன பூ தாத்தா? குஷ்பூவா?
தாத்தா: வடமொழியில் குஷ்பூ என்றால் வாசனை மிக்க பூ என்று பொருள்.  அப்படிப்பட்ட அருமையான பூ தான் இது.  இதற்கு ஒரு கதை உள்ளது.  சொல்கிறேன்.  ஒரு தடவை கண்ணன் நரகாசுரனை அழித்த போது நரகாசுரனால் கவரப்பட்டட இந்திரனின் தாயான அதிதி தேவியின் குண்டலங்களைக் கண்டார்.  அதை இந்திரனிடம் கொடுக்கக் கருதி கண்ண பெருமான் கருடனின் மீது அமர்ந்து அமராவதிக்கு சத்தியபாமையுடன் சென்றார்.  இந்திராணி சகல உபசாரங்களைச் செய்த போதும் அவள் சூட்டியிருந்த அருமையான பூ போல தனக்குப் பூ ஒன்று தரவில்லையே என்று சத்தியபாமைக்கு ஒரே ஏக்கம்.  இந்திராணி சூடியிருந்தது பாரிசாதப்பூ.  இப்படிப்பட்ட பூவைத் தான் துவாரகைக்குக் கொண்டு போய் ஆகவேண்டும் என்று சத்தியபாமை விருப்பப்பட்டாள்.  உடனே கண்ணன் அங்கிருந்த பாரிசாதத் தருவை அப்படியே வேரோடு பிடுங்கினார்.  கருடன் மேல் அமர்ந்து புறப்பட்டார்.  இந்திராணி வெகுண்டு இந்திரனை உசுப்பிவிட்டாள்.  உடனே இந்திரன் அத்தனை தேவர்களுடனும் வந்து கண்ணனைத் தடுத்து போர் புரிந்தான்.  விடுவாரா கண்ணன்?  சங்கை எடுத்தார்.  ஊதினார் அவரது சங்கை.  அந்த ஒ-யில் அரண்டு தோற்றனர் அனைத்துத் தேவர்களும்.  அந்த பாரிசாதப் பூ அவ்வளவு சாமானியமாக யாரிடமும் கிடைக்காது என்று கூறினார் முனிவர்.  கதையை முனிவர் மூலம் கேட்ட வீமன் கண்ணனைப் போல் தானும் கொண்டுவர எண்ணி அளகை நகர் நோக்கிப் புறப்பட்டான்.  அளகை மன்னன் தான் வடதிசைக் காவலன்.  வழியில் காஞ்சன வனம்.  அதைக் கடந்தான் வீமன். பின்னர் ஒரு கத- வனம்.  அங்கிருந்த காவலர் எதிர்த்தனர்.  வீமன் சிங்கநாதம் செய்தான்.  அந்த காவலன் ஆவி பிறிந்தது.  அந்தப் பகுதியில் தான் அனுமன் இராமநாமம் சொல்-க் கொண்டு தவமிருந்தான்.  அவன் இந்த ஓசையைக் கேட்டான்.  வீமன் செல்லும் வழியில் அனுமன் போய் அமர்ந்தான்.  அங்கு போன வீமன் அனுமனைப் பார்த்து "யார் நீ'' என்று கேட்டான்.  அவரும் திருப்பி இதே கேள்வியைக் கேட்டார்.  வீமன் ஒரு குரங்குக்குப் போய் பதில் சொல்வதா என்று அனுமனின் வாலைக் கடந்து செல்ல எண்ணினான். அவன் எண்ணம் அனுமனுக்குப் புரிந்தது.  முடிந்தால் என் வாலைத் தாண்டிப் போயேன் என்று கூறினார்." வல்லையேல் என் வாலைக் கடந்து போ' என அனுமன் கூற,'அனுமன் வால் அன்றி, ஒரு குரங்கின் வாலைக் கடப்பது அரிதோ?'' என்றான் வீமன்.  ஒரு மனிதனைச் சுமந்து சென்று அவனுக்கு ஏவல் புரிந்தவன் தானே அனுமன் என்று அனுமன் தன்மைத் தானே தாழ்த்திச் சொன்னான்.  கோபம் வந்தது வீமனுக்கு.  "ஏய் குரங்கே - அனுமாரின் அருமை பெருமை உனக்குத் தெரியுமா?'' என்று கூறி அனுமனின் கதையைக் கூறி அப்படிப்பட்ட அனுமனின் தம்பி நான்.  நானும் வாயு குமாரன் அவரும் வாயு குமாரன் என்று தங்களுக்குள்ள உறவைக் கூறினான் வீமன்.  இவ்வாறு கூறியவுடன் அனுமன் தன்னைப் பற்றிய உண்மையை வெளியிட்டார்.  உடனே வீமன் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி தன்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டினான்.  அவனது வரவின் காரணத்தை அறிந்த அனுமன்,"கூறும் வாசகம் பொய்ப்பவர், கூர் தவம் முயலும்  பேறு இலாதவர், பேர் அருள் இலாதவர், பிறிதும்  ஆறு இலாதவர் தமக்கும்,-அங்கு அணுகுதல் '' அரிது என்பதை விளக்கி வீமனுக்கு அதை அடைய அனைத்துத் தகுதியும் உள்ளது என்று கூறினார்.  வில்-யாரின் சொல்-லே இதைக் கேட்க வேண்டும்."அறிவும், வாய்மையும், தூய்மையும், அன்பும், இன் அருளும்,  பொறையும், ஞானமும், கல்வியும், புரி பெருந் தவமும்,  நெறியும், மானமும், வீரமும், நின்ன; ஆதலினால்  பெற, உனக்கு அரிது ஆயது ஏது?''' .   "உனக்குக் கிடைக்கும் போ.  வெற்றியுடன் திரும்பிவா'' என அனுமன் வாழ்த்தினார்.'வேண்டும் வரம் கேள்' என்ற அனுமனிடம், 'பாரதப்போரில் விசயனது தேர்க் கொடியில் நீர் உவந்து ஆடவேண்டும்' என வீமன் வேண்டினார்.  வரமளித்தார் அனுமார். பின்னர் அனுமன் இலங்கையில் எடுத்த பெருஉருவைக் காட்டும்படி வீமன் வேண்ட அனுமார் பெருஉரு எடுத்தார்.  வீமனால் காண முடியவில்லை.  வடிவைச் சுருக்கிக்கொள்ளும்படி வேண்டினான் வீமன்." அந்தர வானும் அகண்டமும் ஒன்றா உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா! '' என்பார் வில்-யார்.  பின்னர் வீமனிடம் வழியைக் கேட்டுக் கொண்டு புறப்பாட்டான் வீமன்.  பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சக்கரமலை கடந்தான்.  திவாகர மலை கடந்தான்.  அப்போது புண்டரீகன் என்னும் அரக்கன் வந்து வீமனை எதிர்த்தான். அப்போது வானொ- ஒன்று வந்தது. " தோள்மிசை தோமரம் ஏவி, கொன்றிடுவாய், வாயு குமாரா!'' என்றது அசரீரி.
சூர்யா:  அசரீரி என்றால் என்ன தாத்தா?
தாத்தா: சரீரம் என்றால் உடல்.  சரீரம் இல்லாதது அசரீரி.  உடல் தெரியாது.  ஆனால் குரல் கேட்கும்.  இதைத் தான் நான் வானொ- என்று கூறினேன்.  சரியா? வானொ- கூறியவாறு அவன் தோள் மீது தன் கதையால் அடித்தான் வீமன்.  அரக்கன் மாண்டான்.  பின்னர் அளகாபுரியை அடைந்தான்.  ஆயிரக்கணக்கான அரக்கர் சூழ்ந்தனர் வீமனை.  வீமன் அனைவரையும் அடித்துத் துவைத்தான்.  காவலாளிகள் ஓடினார்கள் குபேரனிடம்.  குபேரன் தன் தளபதி சங்கோடனை அழைத்து கட்டி இழுத்துவரும்படி ஆணையிட்டான்.  சங்கோடணன் சேனைகளுடன் வந்து தோற்றான்.  பின்னர் சங்கோடணன் குபேரனிடம் சென்று சமாதானம் செய்து கொள்ளும்படி கூறினான்.  வீமனின் விருப்பத்தை அறிய குபேரன் தன் மகன் உருத்திரசேனனை அனுப்பி வைத்தான்.  குபேரனின் மகன் வீமனுடன் பேசி வீமனின் வருகைக் காரணத்தை அறிந்து கொண்டு வீமனிடம் பூவினைக் கொடுத்து வெகுமதிகளோடு அனுப்பினான்.  இதற்குள் தருமர் வீமனைக் காணாமல் தவித்தார்.  அப்போது திரௌபதி பூ பற்றிய விபரத்தைக் கூறி அதைக் கொண்டுவர வீமன் போயிருக்கிறார் என்றும் கூறினாள்.  ஆபத்து நிறைந்த இடத்திற்கு தனியாகப் போய்விட்டானே வீமன் என்று வருந்தினார் தருமர்.  உடனே வீமனின் மகன் கடோற்கசனை மனதால் எண்ணினார். எண்ணிய மறுகணம் வந்து நின்றான் கடோற்கசன்.  விபரத்தைக் கூறியவுடன் தன் தோளில் அமரும்படி தருமரிடம் கூறி கடோற்கசன் புறப்பட்டான் வடதிசை நோக்கி.  நாலு நாழிகைக்குள் கடோற்கசன் வீமன் இருந்த இடத்தை அடைந்தான்.  வீமன் உடனே தருமரின் அடிகளில் வீழ்ந்து வணங்கி தான் பூ கொண்டு வந்த விபரத்தைக் கூறினான்.  மிகவும் சினந்தார் தருமார்.  பின்னர் சினம் தணிந்தபின் தம்பியர் இருக்கும் இடம் வந்தனர்.  கடோற்கசனுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.  உரோமச முனிவரிடம் தான் சென்று வந்த விபரத்தை வீமன் கூறினான்.  அவரும் மகிழ்ந்தார்.  பின்னர் அந்தப் பூவை தீயில் வந்த பூவையான திரௌபதியிடம் தந்தான் வீமன்.  பாஞ்சா-யும் மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.  மீதிக் கதையை நாளை கூறுகிறேன் சூர்யா.

தாத்தா: இன்று சடாசுரன் மரணமடைந்த கதையைச் சொல்கிறேன்.  காட்டில் தவம் புரிந்த முடினவர்கள் ஒரு நாள் தருமரைச் சந்தித்து அந்த கானகத்தில் சடாசுரன் என்று ஒரு கொடிய அரக்கன் உள்ளதாகவும் அவன் முனிவர்களின் தவத்தைக் குலைப்பதாகவும் இடையூறுகளையும் இன்னல்களையும் விளைவிப்பதாகவும் முறையிட்டனர்.  அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கும்படி தருமர் வீமனுக்குக் கட்டளையிட்டார்.  காட்டில் இருந்தாலும் அவர் ஒர் அரசர் தானே.  வீமன் முனிவர்களுடன் சென்றான். அவரது கடமை மக்களைக் காப்பது தானே.  வீமன் சென்றபிறகு  வஞ்சனை எண்ணம் கொண்ட சடாசுரன் அங்கு தோன்றி திரௌபதியைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்தான்.  திகைத்தார் தருமர்.  ஆனால் நகுல சகாதேவர்கள் உடனே வில்லை எடுத்தனர்.  கணையைத் தொடுத்தனர்.  அரக்கனைத் தொடர்ந்தனர்.  இவர்கள் கணையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அந்த அரக்கன் நகுலசகாதேவருடன் போர் புரிய ஆயத்தமானான்.  அப்போது அங்கு வீமனும் வந்து சேர்ந்தான்.  அவன் அந்த அரக்கனுடன் அடர்த்தான்.  அழன்ற அசுரன் திரௌபதியை விடுத்தான்.  வீமனுடன் பொருதினான்.  வீமன் அரக்கனுடன் பொருது அவனை அழித்தான்.  அதை இந்த காவியத்தில் வரும் பாடல் மிக அழகாக எடுத்துச் சொல்லும்.  " அரக்கனை அகலத்து அமுக்கியிட்டு, அவன்தன் அவயவம் யாவையும் ஒன்றாச் சுருக்கி, அந்தரத்தில் சுழற்றினன், எறிந்தான்-தொடு கழல் இராகவன் தம்பி குரக்கு நாயகன்முன் விரலினால் தெறித்த குன்று எனச் சிந்தி வீழ்ந்திடவே.'' .  பின்னர் திரௌபதியையும் தம்பியரையும் அழைத்துக் கொண்டு வீமன் தருமர் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.  பின்னர் அனைவரும் சேர்ந்து பதரிகாச்சிரமத்தை அடைகிறார்கள்.  அங்கு எண்கோண முனிவர் ஒருவரைக் கண்டு அவன் தாளிணையில் பணிந்து தொழுகிறார்கள்.
சூர்யா: எண்கோண முனிவர் என்றால் யார் தாத்தா?
தாத்தா: அது தனிக் கதை.  பின்னால் சொல்கிறான்.  இப்போதைக்கு வடமொழியில் இவரை அட்டகோண மகா முனிவர் என்று அழைப்பார்கள் என்பதையும் இவர் திருமா-ன் அவதாரங்களில் ஒருவர் என்பதையும் தெரிந்து கொள்.  ஒவ்வொரு பிரம கற்பத்துக்கு ஒவ்வொரு உறுப்புக் கொணல் நிமிருமாறு நீண்ட வாழ்நாள் உடையவர் இவர்.  இதற்குள் விசயனும் விண்ணி-ருந்து வந்து சேருகிறான்.  அத்தினாபுரியில் இருந்த நூற்றுவர் தலைவனுக்கு பாண்டவர்களை எப்படியும் காட்டிலேயே ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணம்.  தொடர்ந்து தோல்வி தான்.  அசுரர்களை அனுப்பினாலும் பீமன் கொல்கிறான்.  என்ன செய்வது என்று தெரியவில்லை.  இப்போது கன்னன் மற்றும் மாமன் சகுனியுடன் ஆலோசனை நடத்துகிறான்.  அப்போது சகுனி ஒரு யாகம் செய்து ஒரு பூதத்தை அனுப்பினால் அது உறுதியாக ஐவரையும் கொல்லும் என்றும் ஆனால் அந்த யாகத்தைச் செய்ய காளமாமுனி என்பவரால் தான் முடியும் என்றும் சொல்கிறான்.  உடனே துரியோதனன் ஒரு முனிவரை அனுப்பி காளமாமுனிவரை அழைத்துவரச் சொல்கிறான்.  அவர் வந்தவுடன் அவருடைய தாளிணையில் பணிந்து வணங்குகிறான்.  அவர் தன்னை அழைத்த காரணத்தை வினவுகிறார்.  உடனே பாண்டவர்கள் அழிய வேள்வி ஒன்று நடத்தி பூதத்தை அனுப்ப வேண்டும் என வேண்டுகிறார்.  காளமாமுனிவர், " ஐவருடன் கண்ணன் உள்ளான்.  நான் என்ன முயற்சி செய்தாலும் அவன் காப்பாற்றுவான்.  எனவே உங்கள் முயற்சி ப-க்காது.  மாயக் கண்ணன் உங்களை மட்டுமல்ல - நான் அனுப்பும் பூதத்தையும் ஏமாற்றுவான்.  பூதம் போகும் போது அவர்கள் காணவில்லை என்றால் - இறந்து பட்டார்கள் என்றால் அதன் பசிக்கு அது என்னை வந்து உண்ணும்.  எனவே நன்றாக யோசனை செய்யுங்கள். உங்கள் முடிவை மாற்றுங்கள்'' என்று அறிவுறுத்தினார்.  ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் அல்லவா.  இவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  எனவே முனிவர் வேள்வியைத் தொடங்கினார்.
சூர்யா: என்னங்க தாத்தா? ஐவரும் ப- தானா?
தாத்தா: கதையைக் கேளு.  இந்த பூதத்தைத் திசை திருப்ப அறக்கடவுள் திருவுளம் கொண்டார்.  அறக்கடவுள் ஒரு அந்தணச் சிறுவன் வடிவம் எடுத்து வந்து தன் அரணைக் கட்டையை ஒரு மான் எடுத்துக் கொண்டு ஓடுவதாகவும் உடனே மீட்டுத் தரும்படியும் வேண்டினான் அந்தணச் சிறுவன்.  மாயமானைத் தொடர்ந்தனர் ஐவரும்.  ஓடியது - ஓடியது - ஓடிக்கொண்டே இருந்தது.  வீமனின் கதைக்கோ விசயனின் கணைக்கோ அது இலக்காகவில்லை.  இறுதியில் தருமர் அது ஒரு மாய மான் என்பதைப் புரிந்து கொண்டார்..  அறக்கடவுள் ஒரு நச்சுப்பொய்கை உருவம் கொண்டு அமர்ந்தார். அவர் எண்ணத்தின்படி ஐவரும் இருந்த காட்டில் திடீர் என குடிநீர் இல்லாமல் போனது.  ஐவருக்கும் கடுமையான தாகம் உண்டானது.  உடனே தருமர் சகாதேவனை நோக்கி மரத்தில் ஏறி எங்காவது தண்ணீர் உள்ளதா என்று நோக்கும்படி ஆணையிட்டார்.  சகோதேவனும் மரமேறி பத்து திசையிலும் பார்த்தான்.  தூரத்தில் ஒரு குளம் இருப்பதைக் கண்டான்.  அண்ணனிடம் கூறினான்.  சென்று அனைவருக்கும் நீர் கொண்டுவரும்படி ஆணையிட்டார் தருமர்.  குளத்தருகே சென்றான் சகாதேவன்.  ஒரு மாயக்குரல் தடுத்து நிறுத்தியது.  "நான் கேட்கும் கேள்விக்குப் பதில் கூறி பின் நீர் அருந்து.  இல்லையேல் மரணமடைவாய்.  இது உறுதி'' என்றது.  கேட்கவில்லை சகாதேவன்  தாகம் அந்த அளவுக்கு அவனுக்கு இருந்தது.  அவசரப்பட்டு நீர் அருந்தினான்.  மாண்டான் உடனே.  சென்றவன் திரும்பவரவில்லை என்பதால் நகுலனை அனுப்பினார் தருமர்.  அவனும் வந்தான். மாண்டான்.  பின்னர் விசயனை அனுப்பினார் தருமர்.  விசயன் வந்தவுடன் மாயக்குரல் எச்சரிக்கை செய்தது.  வெகுண்டான் விசயன்.  குரல் வந்தால் கணை விட்டு மாய்க்கும் வித்தை அறிந்தவன் விசயன்.  எனவே கணை தொடுத்தான்.  வானெங்கும் கணைகள் பறந்தன.  கணைப்பந்தல் அமைத்தான்.  பின்னர் நீர் அருந்தினான்.  விசயனும் மாண்டான்.  எல்லோரும் தாமதம் செய்கிறார்கள் என்று கருதி தானே செல்லத் துணிந்தார் தருமர்.   தடுத்து நிறுத்தினான் வீமன்.  நான் சென்று வருகிறறேன் என்று கூறி புறப்பட்டுச் சென்றான்.  மூவரும் வீழ்ந்து கிடந்தது கண்டான்.  இவனையும் எச்சரித்தது மாயக்குரல்.  சரி இதில் ஏதோ மர்மம் உள்ளது என்பதைப் புரிந்து கொண்டான்.  உடனே நடந்ததை அங்கே மண-ல் எழுதினான்.  பின்னர் நீர் அருந்தினான். மாண்டான் வீமன்.  போன வீமனும் வரவில்லையே.  ஏதோ நடந்திருக்கிறது.  விசயனும் வீமனும் சென்று ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் ஏதோ விபரீதம் உள்ளது என்று உள்ளுணர்வு கூறியது தருமருக்கு.  அவர் சிறிது தூரம் நடந்தார்.  தாகத்தால் மயக்கம் வந்தது.  அவரும் விழுந்தார்.  இந்த நேரம் நூற்றுவர் வேள்வி நடத்தி அதி-ருந்து வந்த பூதம் அங்கு வந்து சேர்ந்தது. .  நால்வரும் நச்சுப் பொய்கைக் கரையில் மாண்டு கிடப்பதைக் கண்டது.  இறந்து விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்டது.  சிறிது தூரத்தில் தருமரும் கிடந்தார்.  எனவே அவரும் இறந்து விட்டார் என்று நினைத்தது. எல்லோரும் தான் வரும் முன்னரே மாண்டு விட்டனர் என்று அது கருதியது.  சினமடைந்தது அந்தப் பூதம்.  உடனே திரும்பிச் சென்றது.  வேள்வி நடத்திய காளமாமுனியைத் தின்று தன் பசியை  ஆற்றிக் கொண்டது.  பூதம் திரும்பிச் சென்ற சிறிது நேரத்தில் தருமர் மயக்கம் தெளிந்தார்.  குளக்கரைக்கு வந்தார் தருமர்.  எல்லோரும் மாண்டு கிடப்பதைப் பார்த்தார்.  துக்கம் தொண்டையை அடைத்தது.  அரக்கர்களை - தேவர்களை வென்ற விசயனும் வீமனும் மாண்டார்களே - இனி நமக்கு விடிவுகாலம் இல்லை என்பதை உணர்ந்தார்.  ஏதோ அபூர்வ சக்தி ஒன்று தான் இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டார்.  தாகம் காரணமாக குளக்கரைக்குச் சென்றார்.  மாயக்குரல் இப்போதும் தடுத்தது.  யார் நீ என்று தருமர் கேட்க.  இந்தக் குளத்தைக் காவல் காக்கும் கொக்கு நான் என்றது அந்தக் குரல்.  கேள்வியைக் கேள் என்றார் தருமர்.  அறக்கடவுள் கேள்வியைக் கேட்டார்.  தருமர் பதில் கூறினார்.
சூர்யா: கேள்விகள் என்ன?  பதில் என்ன?
தாத்தா: இந்தப் பகுதியில் வில்-பாரதத்தில் வரும் கேள்விகளையும் - வியாசபாரதத்தில் வரும் யட்சப்பிரச்னா என்ற பகுதியில் உள்ள சில கேள்வி பதில்களையும் சொல்கிறேன்.  இவை எல்லாம் வேதத்தின் கருத்துகள்.  நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.  அதனால் தான் மகாபாரதத்தையும் வேதமாக மதிக்கிறார்கள்.  மகாபாரதத்தில் இப்படி பல வேதக் கருத்துகள் உள்ளன.  வீடுமர் கூறுபவை - கண்ணன் உரை எல்லாம் வேதத்திற்குப் பொருள் சொல்வது போல் அமைந்தவை.  நன்றாகக் கேள் சூர்யா.
கேள்வி: சாத்திரங்களில் பெரியது எது?
தருமர்: அரிய மெய்ச் சுருதி.  மெய்ம்மைப் பொருளை நமக்கு உணர்த்தும் வேதமே சாத்திரங்களில் சிறந்தது.
கேள்வி: இல்லறத்திற்கு இன்றியமையாதது எது?
தருமர்: நற்குணங்கள் நிரம்பிய மனைவியே இல்லறத்திற்கு இன்றியமையாதவள்.
கேள்வி: சிறந்த பெரிய தவம் எது?
தருமர்: தம் குலத்திற்குரிய நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதே பெரிய தவம் ஆகும்.
கேள்வி: உலகப் பற்றைத் துறந்த முனிவர் குலம் தொழும் இறைவன் யார்?
தருமர்: துழாய் மாலை அணிந்த முகுந்தனே முனிவர் குலம் போற்றும் இறைவன்.
கேள்வி: மகளிருக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் என்ன?
தருமர்: நாணம் தான் இன்றியமையாத குணம்.
கேள்வி: செல்வம் மிக்கவருக்குப் பாதுகாவல் எது?
தருமர்: ஈகை தான் பாதுகாவல். தகுதி பொருந்திய தானமே பாதுகாவல்.
கேள்வி: செவிக்கு இனிமையைத் தரும் சொல் எது?
தருமர்: குழந்தைகளின் மழலைச் சொல்.
கேள்வி: நிலைத்து நிற்பது எது?
தருமர்: நீடு இசை என்னும் புகழ் தான் நிலைத்து நிற்கும்
கேள்வி: எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?
தருமர்: கசடறக் கற்பதே கல்வி.  எது கற்றாலும் கசடறக் கற்க வேண்டும்.
கேள்வி: அற்பம் - சிறுமை என்பது எது?
தருமர்: ஏற்பது இகழ்ச்சி.  பிறரிடமிருந்து பெற்றுக் கொண்டால் அது தான் அற்பம். சிறுமை.
கேள்வி: பூமியை விட பொறுப்பவர் உண்டோ?
தருமர்: தாய் பூமியை விட மேலானவள்.  தன்னை வெறுக்கும் மகனையும் விரும்புவாள்.
கேள்வி: சுவர்க்கத்தை விட மேலானது எது?
தருமர்: தந்தை என்பவர் சுவர்க்கத்தை விட மேலானவர்.
கேள்வி: காற்றை விட வேகமானது எது?
தருமர்: மனம் காற்றை விட வேகமானது.
கேள்வி: புல்லை விட அளவற்றது எது?
தருமர்: நமது எண்ணங்கள் உலகத்தில் உள்ள புற்களை விட அளவற்றவை.
கேள்வி: அறிவு என்பது எது?
தருமர்: இறைவனைப் பற்றி அறிவதே உண்மையான அறிவு.
கேள்வி: அமைதி எப்போது வரும்?
தருமர்: மனம் திருப்தி அடைந்தால் அமைதி தானாகவே வரும்.
கேள்வி: ஐயம் என்பது என்ன&
தருமர்: ஒன்றை மற்றொன்றாகக் கற்பனை செய்வதே ஐயம்.
கேள்வி: சூரியனை உதிக்கச் செய்வது யார்?
தருமர்: பிரம்மா
கேள்வி: சூரியனை மறையச் செய்வது யார்?
தருமர்: தருமதேவதை மறைக்கச் செய்கிறது.
கேள்வி: சூரியனுடன் யார் உள்ளார்கள்?
தருமர்: கடவுள்
கேள்வி: பிராமணனுக்குச் சிறப்பு எப்படிக் கிடைக்கிறது?
தருமர்: அவன் கற்கும் வேதமும் அவனது இறை நம்பிக்கையுமே அவனுக்குச் சிறப்பை உண்டாக்குகின்றன.
கேள்வி: சத்திரியனுக்கு சிறப்பு என்ன&
தருமர்: ஆயுதங்கள் மற்றும் ஆயுதப் பயிற்சியில் சிறப்பு பெற்றிருந்தால் சத்திரியனுக்குப் பெருமை.  வேள்விகள் நடத்த வேண்டும் அவன்.  அதன் மூலம் சிறப்பு பெறலாம்.  குடிகளைக் காக்க வேண்டும்.  அடைக்கலம் என்று வந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
கேள்வி: உழவுக்கு இன்றையமையாதவை எவை?
தருமர்: நிலம் - மழை.
கேள்வி: உறக்கத்திலும் கண் மூடாதது எது?
தருமர்: மீன்.
கேள்வி: புவியில் பிறந்த பின்னும் அசையாதது எது?
தருமர்: முட்டை
கேள்வி: இதயமில்லாதது எது?
தருமர்: கல்லுக்கு இதயமில்லை
கேள்வி: நாட்டை விட்டு வெளியேறுபவனுக்குத் துணை யார்?
தருமர்: நண்பர்கள்.
கேள்வி: வீட்டில் துணை யார்?
தருமர்: இûணாக உள்ள மனைவி
கேள்வி: நோயுள்ளவனுக்குத் துணை யார்?
தருமர்: மருத்துவர்
கேள்வி: மனிதனுக்கு மரணத் தருவாயில் துணை எது?
தருமன்: அவன் செய்த தான தருமம் அவனுக்குத் துணை.
கேள்வி: எல்லா உயிரினங்களுக்கும் விருந்தினன் யார்?
தருமர்: நெருப்பு
கேள்வி: மீண்டும் மீண்டும் பிறப்பது எது?
தருமர்: சந்திரன்
கேள்வி: குளிரைப் போக்குவது எது?
தருமர்: வெப்பம்
கேள்வி: மானுடனின் உற்ற துணை யார்?
தருமர்: அவனது மனைவி.
கேள்வி: போற்றத் தக்கது எது?
தருமர்:  திறமை போற்றப்பட வேண்டும்
கேள்வி: அடைய வேண்டியது என்ன?
தருமர்: அறிவு
கேள்வி: சிறந்த செல்வம் எது?
தருமர்: நோயற்ற வாழ்வு சிறந்த செல்வம்
கேள்வி: வாழ்க்கை எப்போது மகிழ்ச்சியாக இருக்கும்?
தருமர்: தற்பெருமை இல்லாமல் இருத்தல் - அழுக்காறு அவா அகற்றுதல் - வெகுளியை நீக்குதல் - பிறரை இகழாமை இவையெல்லாம் இருந்தால் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியாக இருக்கும்
கேள்வி: உலகைச் சூழ்ந்திருப்பது எது?
தருமர்: இருள்
கேள்வி: ஒரு பொருளை அறிய விடாமல் தடுப்பது எது?
தருமர்: புற இருளும் அக இருளும் ஒரு பொருடை அறிய அனுமதிக்காது
கேள்வி: நண்பர்களை எப்போது இழக்கிறோம்?
தருமர்: பேராசை நம்மை ஆட்கொள்ளும் போது நண்பனை இழக்கிறோம்
கேள்வி: சொர்க்கத்துக்குப் போவதை எது தடை செய்கிறது?
தருமர்: இந்த உலகத்தின் மீது உள்ள பற்று.  இந்த உலகத்தில் உள்ள பொருட்களின் மீது உள்ள பற்று.
கேள்வி: இறந்ததாக எதைக் கருதலாம்?
தருமர்: பணம் இல்லையேல் ஒரு மனிதன் பிணம். அரசன் இல்லாத அரசு இறந்து விட்டதாகக் கருதலாம். கற்றறியாத பூசாரியால் நடத்தப்படும் இறைத் தொழுகை இறந்து விடும். பயனற்றது.  அந்தணனுக்கு பரிசுகள் இல்லாமல் முடிக்கப்படும் வேள்வி இறந்ததாகக் கருதப்படும்.
கேள்வி: பகைமையைக் குறைப்பது எது?
தருமர்: மன்னிப்பு
கேள்வி: ஆத்திகம் என்பது என்ன?
தருமர்: தான் பற்றி இருக்கும் நம்பிக்கையை விடாமல் இருப்பது ஆத்திகம்
கேள்வி: மறைந்திருக்கும் பகை எது?
தருமர்: ஒருவனது கோபம்
கேள்வி: தீராத நோய் எது?
தருமர்: பேராசை
கேள்வி: அறிவீனம் என்பது என்ன?
தருமர்: தனது கடமையை அறியாமல் இருப்பதே அறிவீனம்
கேள்வி: சோம்பேறி என்பவன் யார்?
தருமர்: தனது கடமையைச் செய்யாமல் இருப்பவனே சோம்பேறி
கேள்வி: எது துயரத்தைத் தரும்?
தருமர்: மடமை துயரத்தைத் தரும்
கேள்வி: தூய்மை என்பது என்ன?
தருமர்: சிந்தனை செம்மையாக  இருந்தால் அது தான் தூய்மை. சிந்தனையில் அழுக்கு இல்லையேல் எவனுக்கும் இழுக்கு வராது.
கேள்வி: கருணை என்பது என்ன?
தருமர்: உயிரினங்களைப் பாதுகாத்தல்
கேள்வி: கற்றவன் என்பவன் யார்?
தருமர்: தனது கடமையை அறிந்து அதைச் செய்பவன் கற்றவன்.  கடமையைச் செய்யாதவன் கல்லாதவன்.
கேள்வி: நாத்திகன் யார்?
தருமர்: நாத்திகன் என்பவன் மடையன்.
கேள்வி: ஆசை என்பது எது?
தருமர்: எதையும் தான் பெற வேண்டும் என்பதே ஆசை.
கேள்வி: நற்குணம் - இலாபம் - ஆசை இவை ஒன்றுக்கொன்று முரணானவை.  அவை ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளதா?
தருமர்: ஒரு மனைவி நற்குணமுடையவளாக இருந்தால் இவை எல்லாம் ஒன்று சேரும். நற்குணமுள்ள மனைவி அமைந்தால் அவள் மீது ஆசை வரும்.  ஆசை வந்தாலே குழந்தைச் செல்வம் என்னும் இலாபம் கூடவே வருமே.
கேள்வி: மீளாத நரகத்திற்கு எவன் செல்வான்?
தருமர்: பரிசுகள் தருகிறேன் என்று அந்தணனை வரவழைத்து யாகம் செய்து முடித்தபின் ஒன்றும் இல்லையே என்று சொன்னால் - ஒரு வேலையை வாங்கி அதற்குரிய கூ-யைத் தராமல் விட்டால் -வேதம் கற்றவன் அதன் பிரகாரம் நடந்து கொள்ளாவிட்டால் - வேதத்தைக் கற்று அதன்படி நிற்காவிடில் -முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள் அதாவது பித்ருக்களை வழிபடாதவர்கள் - பணம் படைத்தும் பிறருக்கு ஈயாதவர்கள் இவர்கள் அனைவரும் மீளாநரகத்தில் அழுந்துவார்கள்.
கேள்வி: பிராமணன் என்னும் சிறப்பு பிறப்பால் வருகிறதா - நடத்தையால் வருகிறதா - படிப்பால் வருகிறதா?
தருமர்: பிறப்பாலோ படிப்பாலோ பிராமணன் என்னும் சிறப்பை அடைவதில்லை.  தன் நடத்தையால் மட்டுமே அந்த சிறப்பினை எய்தமுடியும்.  நடத்தை நன்றாக இல்லை என்றால் அந்த தகுதியை அவன் இழக்கிறான்.  வேதத்தைக் கற்று தீயவழியில் சென்றால் அவன் பிராமணன் அல்ல.  எரியோம்பி நல்ல நடத்தையுடன் நடப்பவன் எவனோ அவனே பிராமணன்.
கேள்வி: யார் யாருக்கு எவற்றால் என்னென்ன சிறப்பு கிடைக்கும்?
தருமர்: எல்லோரும் மகிழப் பேசுபவனுக்கு மக்களிடம் மதிப்பு கிடைக்கும்.  நீதியைப் பேசி அதன்படி நடப்பவனுக்கு அவன் நினைத்தது கிடைக்கும்.  நல்ல நண்பர்களை உடையவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.  வாய்மையைக் கடைப்பிடிப்பவனுக்கு சொர்க்கம் கிடைக்கும். 
இப்படி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உடனுக்குடன் பதில் கிடைத்தவுடன் கொக்கு வடிவில் இருந்த யட்சன் மகிழ்ந்தான்.  ஒரு மறையைக் கூறி அதைக் கூறினால் ஒருவனை உயிரெழுப்பலாம் என்றான் அந்த யட்சன். உடனே தருமர் அந்த மறையை (மந்திரத்தை) கூறி சகாதேவனை உயிர் எழுப்பினார்.  உடனே அந்த யட்சன் நிகரற்ற வீரர்கள் வீமனும் விசயனும்.  அவர்களை எழுப்பாமல் சகாதேவக்கு உயிர் அளித்துள்ளாயே ஏன் என்று வினவியது.  அதற்குத் தருமர் என்னுடைய தாயான குந்தியின் மூன்று மகன்களில் நான் உயிரோடு உள்ளேன்.  என் சிறிய தாயாரின் மகன்களில் - அதாவது நகுல சகாதேவர்களில் ஒருவருக்கு உயிர் கொடுப்பது தான் முறை.  அப்போது தான் என்னுடைய தாயார் என்னுடைய சித்திக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் என்றார்.  மகிழ்ந்த அந்த யட்சன் தான் யார் என்பதை பின்னர் தெரிவித்தான்.  அறக்கடவுளே மாறு வேடங்கள் போட்டு இவ்வளவு செயல்களையும் நடத்தி உள்ளது இப்போது தருமனுக்குத் தெரிகிறது.  துரியோதன் செய்த வேள்வியின் பலனாக ஐவரும் மரணமடையக்கூடாது என்பதற்காகத் தான் இந்த நாடகம் அரங்கேறியது என்பதும் அவருக்குப் புலப்படுகிறது.  பின்னர் அறக்கடவுள் கானில் பன்னிராண்டு வாழ்நாள் கழிந்து விட்டது.  இனி ஒருவரும் அறியாவண்ணம் மறைந்து ஓர் ஆண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்தது.  பின்னர் ஐவரும் திரும்பி வந்து பாஞ்சா-யிடம் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார்கள்.
சூர்யா: கானகத்தில் வீமனைப் பாம்பு பிடித்துக் கொள்ளும் என்று ஒருதடவை நீங்கள் கூறினீர்கள்.  அது எப்போது தாத்தா?
தாத்தா: அது விசயன் தவம் செய்யப் போனபிறகு நடக்கும் கதை.  அது வியாசபாரதத்தில் வரும் கதை.  பீமனை ஒரு பாம்பு பிடித்துக் கொள்ளும்.  பலமுள்ள வீமனால் அந்த பாம்பிடமிருந்து தப்பிக்க முடியாது.  குரல் கொடுத்து கூவுகிறான்.  உடனே தருமர் வருவார் அங்கே.  அந்த பாம்பிடம் வேறு இரை தருகிறேன் விட்டுவிடு என் தம்பியை என்று கெஞ்சுவார்.  அந்த பாம்பு ஒப்புக்கொள்ளாது.  அந்த பாம்பு யார் என்றால் நகுடன் என்று இந்த குருவம்சத்தின் முன்னோர்களில் ஒருவர்.  இந்திரனுக்கு நிகரான வ-மை உடையவராக இருந்தார்.  இந்திராணி மீது மோகம் கொண்டு பல்லக்கை சுமந்த அகத்தியரை அடித்து நகுட நகுட என்று கூறினார்.  அதனால் பாம்பாக அதாவது நகுடனாக மாறும்படி அகத்தியர் சாபமிட்டார்.  அந்தப் பாம்பு தான் இது.  அந்த பாம்பு பேசியது.  கேள்விக்குச் சரியான பதில் கொடுத்தால் விட்டுவிடுவதாகக் கூறியது. அந்த கேள்வியையும் பதிலையும் நான் படித்ததை அப்படியே கொடுக்கிறேன்.

"ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?
யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.
ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!
யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.
சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.
ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.
யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.
யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.''
சரி சூர்யா நான் மீதிக் கதையை நாளை கூறுகிறேன்.  இன்று அதிக நேரம் ஆகிவிட்டது. நாளை பார்க்கலாம்.

Friday, November 5, 2010

ARJUNA FIGHTS FOR INDIRA - MAHABHARATH STORY

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


தாத்தா: விசயன் நேற்று பாசுபதம் பெற்றதைக் கேட்டு மகிழ்ந்தோம்.  அடுத்து என்ன நடக்கிறது என்பதை இன்று பார்ப்போம்.  விசயனின் தந்தை இந்திரன் பெருமகிழ்ச்சி கொள்கிறார்.  பாசுபதம் கிடைத்து விட்டதால் இனி அசுரர்களை வெல்ல விசயனைப் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு.  எனவே தன்னுடன் இந்திரலோகத்திற்கு விசயனை அழைத்துச் செல்கிறார்.  அங்கே தன்னுடன் தேவமண்டபத்தில் சரிசமமாக அமர வைக்கிறார்.  அப்போது இந்திராணி அங்கே வருகிறார்கள்.  அவர்களைப் பார்த்ததும் விசயன் எழுந்து வணக்கம் தெரிவிக்கிறான்.  அவர்களோ அகந்தையோடு "இவன் மானிடன் தானே - இவனுக்கு இவ்வளவு மரியாதை என்ன வேண்டிக் கிடக்கிறது'' என்று அதிகார தோரணையில் கேட்கிறாள்.  அதிகாரத்தில் இருந்தால் அகங்காரம் உடனே தொற்றிக்கொள்ளுமே.  அலட்சியப்படுத்திச் செல்கிறாள்.  ஆனால் இந்திரன் விசயனின் பெருமையை அவளுக்கு எடுத்துச் சொல்கிறான்.  நாராயணனுக்கு இவன் உடன்பிறந்தவன்.  நரநாராயணர் என இருவரும் ஒள்றாகவே செல்கிறார்கள்.  இப்போது நாராயணன் பூவுலகில் கண்ணனாக அவதாரம் எடுத்துள்ளார்.  எனவே என் மகனாக இவன் அவதாரம் எடுத்துள்ளான்.  வில்வித்தை என்றால் விசயனுக்கு ஈடாக யாரும் இருக்க முடியாது.  இப்பொழுது சிவனுடன் பொருது அவர் பாராட்டையும் பாசுபதம் என்கிற ஒப்பற்ற கணையையும் பெற்றுள்ளான் என்றெல்லாம் கூறுகிறார்.  பின்னர் ஊர்வசியின் நடனம் நடக்கிறது.  விசயன் நடனத்தை இரசிக்கிறான்.  பாராட்டுகிறான்.  இந்திரன் இந்த பாராட்டைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து அன்று இரவு உருப்பசியை அனுப்புகிறான் விசயனுடன் மகிழ்ச்சியாக இருக்கும்படி ஆணையிட்டு.
சூர்யா: உருப்பசி என்றால் ஊர்வசி தானே தாத்தா?
தாத்தா: ஆமாம்டா.  உருப்பசியும் விசயன் தங்கியிருக்கும் இடத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு செல்கிறாள்.  ஆனால் விசயன் அவளை வணங்குகிறான். நாராயண முனிவரின் தொடையி-ருந்து - உருவி-ருந்து வந்ததால் தானே இவள் உருப்பசி.  எனவே இவள் வணங்கத்தக்கவள் என்பது விசயனின் முடிவு.  ஆனால் அவளுக்குக் கோபம் வருகிறது.  "பேடியாகப் போ' என்று சாபம் கொடுத்துவிடுகிறாள்.
சூர்யா: அய்யய்யோ - அப்புறம் நம்ம விசயன் பேடி ஆயிடுவானா?
தாத்தா: உடனே இந்திரனுக்கு இந்த தகவல் போகிறது.  தேவமாந்தர் சாபம் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது.  ஆனால் மாற்றலாம்.  சில நிபந்தனைகளைப் போடலாம்.  அவவ்வளவு செல்வாக்கு அந்த சொல்லுக்கு.  எனவே இந்திரன் விசயனை நேரில் அழைத்துக் கொண்டு உருப்பசியின் மாளிகைக்குப் போகிறான்.  இந்திரனைப் பார்த்ததும் பதைபதைப்புடன் எழுகிறாள் உருப்பசி.  விடயத்தைக் கேள்விப்பட்டதும் சாபத்தை மாற்றி வேண்டும் போது பேடியாக மாறலாம் என்று சாபவிடை கொடுக்கிறாள்.  பின்னர் இந்திரன் சுதன்மையில் விசயனின் பிரதாபங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்கிறான்.
சூர்யா: சுதன்மை என்றால் என்ன தாத்தா?
தாத்தா: நாம் சட்டசபை - நாடாளுமன்றம் என்கிறோமே அதுபோல இந்திரன் நடத்தும் சபையின் பெயர் தான் சுதன்மை.  தீக்கடவுளுக்கு உதவி செய்து காணடவ வனத்தை எரித்த கதையைச் சொல்- . தீக்கடவுள் அப்போது விசயனுக்கு தேர், காண்டீபம் என்னும் வில், வற்றாத அம்பறாத்துணி, வெற்றியை வழங்கும் குரங்குக் கொடி ஆகியவற்றை வழ்ங்கி உள்ளதைத் தெரிவிக்கிறான்.  பின்னரர் இந்திரன் நிவாதகவசர் என்னும் அரக்கர் மிகவும் அட்டகாசம் புரிவதாகவும் அவைனை அடக்கி உதவ வேண்டும் என்றும் விசயனை இந்திராணி முன்னிலையில் வேண்டுகிறார்.  அதற்கு விசயன் "உங்களால் முடியாதது மானிடனாகிய என்னால் எப்படி முடியும்?' என்று கேட்கிறான்.  உடனே இந்திரன் "உன்னால் தான் முடியும் தம்பி.  நீ உதவி செய்தே ஆகவேண்டும்' என்று வற்புறுத்துகிறான்.  விசயனும் உள மகிழ்ச்சியோடு ஒத்துக் கொள்கிறான். 'தவாத போர் வலியின் மிக்க தவத்தினர்; சாபம் வல்லோர்;  சுவாதமே வீசி, எல்லா உலகையும் துளக்குகிற்போர்;  விவாதமே விளைக்கும் சொல்லர்; வெகுளியே  விளையும் நெஞ்சர்;- நிவாத கவசத்தர் என்னும் பெயருடையக் கொடிய நீசர். செற்றிட, நின்னை அன்றி, செகத்தினில் சிலர் வேறு உண்டோ?17 வெற்றி வெஞ் சிலை கொள் வீர! இவ் வரம் வேண்டிற்று' என்றான்  இந்திரன்.  உடனே இந்திரன் தன்னுடைய தேரை விசயனுக்குக் கொடுத்து தேர்ப்பாகன் மாதயையும் உடன் அனுப்புகிறான்.  விசயன் போர்க்கோலம் பூண்டு உடனே செல்கிறான்.  போகும் வழியில் அந்த அசுரர்களின் பலம் என்ன? - பலவீனம் என்ன என்பதை தேர்ப்பபாகன் மாத-யிடம் தெரிந்து கொள்கிறான்.  இப்போது தான் நாம் இன்று வங்காள விரிகுடா என்று அழைக்கிறோமே அந்தக் கட-ன் வரலாற்றைத் தெரிவிக்கிறார் இந்திரன்.  நாம் ஏற்கனவே இதைப் பற்றி அறிவோம்.  ஆனால் இந்த இடத்தில் அந்தக் கதையைச் சொல்லாமல் போனால் கதையின் தொடர்ச்சி சரியாக அமையாது.  எனவே மீண்டும் ஒருமுறை சுருக்கமாகப் பார்ப்போம்.  சூரியகுலத்தில் சகரன் என்று ஒரு அரசன் இருந்தான்.  அவனுக்கு இரண்டு மகன்கள்.  மூத்த மனைவியின் மகன் அசமஞ்சன்.  மிகுந்த கெட்ட குணமுடையவன்.  எனவே அவனைத் துரத்தி விட்டு அவன் மகனாகிய அம்சுமான் என்பவனோடும் இளையமனைவியின் மைந்தர்கள் அறுபதினாயிரம் பேரோடும் அரசாண்டு வருகிறான்.  அப்போது அசுவமேதயாகம் ஒன்று நடத்துகிறான் சகரன்.  அதன் பொருட்டு பூமிவலம் வரும் பொருட்டு ஒரு குதிரையை அனுப்புகிறான்.  அந்த குதிரையை இந்திரன் மாயையால் கவர்ந்து செல்கிறான்.  அப்போது பாதாள லோகத்தில் கபில முனி தவம் செய்து கொண்டு இருக்கிறார்.  அவர் அருகில் அந்தக் குதிரையை ஒளித்து வைக்கிறான் இந்திரன்.  குதிரையைத் தேடி சகரகுமாரர்கள் அறுபதினாயிரம் பேரும் செல்கிறார்கள்.  மண்ணுலகிலும் விண்ணுலகிலும் தேடுகிறார்கள்.  கிடைக்கவில்லை.  கலங்குகிறார்கள்.  வடகிழக்குத் திசையில் நூறு யோசனை அகலம் தமது கை நகங்களால் தோண்டிப் பள்ளம் ஆக்குகிறார்கள்.  அந்த வழியாக பாதாள உலகம் செல்கிறார்கள்.  அங்கே கபிலமுனிவர் தவம் செய்து கொண்டிருக்கிறார்.  அவர் குடி-ன் அருகில் குதிரை இருக்கிறது.  அவரைச் சீண்டுகிறார்கள்.  அவர் கண்ணைத் திறந்ததும் அனைவரும் சாம்பலாகிறார்கள்.  போன மகன்களைக் காணவில்லையே என வருந்தி பேரனை அனுப்புகிறார்.  அவன் வந்து பார்க்கிறான்.  அறுபதாயில் சாம்பல் மலைகள் உள்ளதைக் காண்கிறான்.  நடந்ததை அறிந்து வருந்துகிறான்.  இவர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் வானுலகத்தி-ருந்து கங்கை வர வேண்டும் என்றும் தெரிந்து கொள்கிறன்.  ஆனால்  அவனால் இயலவில்லை.  அவனுக்குப்பின் வந்த பகீரதன் கடும் தவம் புரிந்து கங்கையை பூவுலகுக்குக் கொண்டு வருகிறான்.  இதற்காக அவன் பிரம்மனை நோக்கித் தவம் இயற்றுகிறான்.  பின்னர் திருமாலை நோக்கித் தவம் இருக்கிறான்.  பின்னர் சிவனை நோக்கித் தவம் இருக்கிறான்.  இப்படி வரும் தடைகளை எல்லாம் படிக்கற்களாக மாற்றி இறுதியில் கங்கை இந்தியப் பெருநாட்டில் பாய்கிறது.  அது வங்காள விரிகுடாவில் கல்கத்தா நகரம் அருகில் கங்காசாகர் என்ற இடத்தில் கடலுடன் கலக்கிறது.  கங்கையின் வேகம் - ஏற்கனவே அறுபதனாயிரம் சகரர்கள் தோண்டிய பள்ளம் இவைகள் தான் இன்றைய வங்காள விரிகுடாவிற்குக் காரணம்.  அதனால் தான் நமது வில்-யார் தொடுகடல் என்ற சொல்லால் இந்த கடலை வர்ணனை செய்கிறார்.   இப்படிப்பட்ட இந்த பாதாள உலகத்தில் தோய்ந்துள்ள ஒரு நகரம் தான் தோயமாபுரம்.  நீரிடையே உள்ள நகரம் - எனவே தான் தோயமாபுரம் - இதிலே அரசாட்சி புரிபவன் தான் நிவாதகவசன்.  அரக்கர் கதையை அறிந்தவுடன் இந்திர உலகில் தனக்கு இசை பயிற்றுவித்த சித்திரசேனன் என்னும் ஆசிரியரை தூது அனுப்புகிறான் விசயன்.    மாத- அந்த அரக்கரின் வீரத்தைப் புகழும் போது பிரம்ம தேவனின் ஆயுளை விட இவனுக்கு அதிகம் ஆயுள் என்ற விவரத்தையும் சொல்லுகிறார்.     அவனிடம் ஏதி (வாள்), சூலம், எழு (இரும்புத் தூண்), மழு, ஈட்டியின் சாதிகள் (பேரீட்டி, சிற்றீட்டி, எறியீட்டி) போன்ற ஆயுத வகைகள் ஏராளம் என்றும் அவன் படை எப்படி இருக்கும் என்பதையும் மாத- விளக்குகிறான்.'மூன்று கோடி அசுரர்; முகில் எனத் தோன்றும் மேனியர்; தோம் அறும் ஆற்றலர்; ஏன்று போர் பொரின், எவ் எவ் உலகையும் கீன்று, சேரக் கிழிக்கும் எயிற்றினார்; என்று கூறி இந்திரனிடம் இருந்து இந்த தோயமாபுரம் என்னும் நகரைக் கைப்பற்றி இப்போது ஆண்டு கொண்டிக்கிறார்கள் என்றும் தெரிவித்தான்.  சித்திரசேனன் தூது போனதும் வெகுண்டு எழுகிறான் அரக்கன்.  அசுரர்கள் ஆயுதங்களுடன் திரண்டு வருகிறார்கள்.  அவர்கள் சுடுசரம் தூவுகிறார்கள்.  விசயனும் கணைகள் பலவற்றை விடுகிறான். இறுதியில் விசயன் பிரமாத்திரம் தொடுக்கிறான். "கட்டு ஆர் முது கார்முக வீரனும், முன்  கிட்டா, உலகோர் புகழ் கேழ் கிளர் சீர்  முள் தாமரைமேல் முனிவன் படையைத்  தொட்டான், அசுரேசர் தொலைந்து உகவே.'' என்கிறார் வில்-யார்.  அந்தக் கணை காற்றாய் - கனலாய் - அவுணர் கூற்றாய் விரைந்தது.  அவர்கள் ஆவியைக் குடித்தது.  ஒரு கோடி அசுரர் மாண்டனர்.  ஆனால் அவர்கள் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.   அப்போது வானி-ருந்து ஒரு ஒ- எழுந்தது.  "வெம்படைக்கு இவர் மாளமாட்டார்.  இவர்கள் தலையைக் கொய்தாலும் மீண்டும் கூடுவர்.'' என்றது அந்த வானொ-.  விசயன் சிவபெருமான் வழங்கிய பாசுபதக் கணையை எடுத்தான். விடுத்தான் அந்தக் கணையை.  அனைவரையும் கொன்றது அந்த அற்புதப் படை.  அதை வில்-யாரின் வார்த்தையில் கேட்டால் தான் புரியும்.  " அண்டம் உடைந்திட, உடன்று பொங்கிச் சிரித்தது; தனுசர் மெய்யும் சிந்தையும் சேரப் பற்றி, எரித்தது; தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து, தரித்தது, மீண்டும்;-அந்தச் சங்கரன் செங் கை வாளி.''.  வெற்றியோடு இந்திரனின் உலகம் நோக்கி தேரைச் செலுத்தச் சொன்னான் விசயன்.  வழியில் அந்தரத்தில் ஒரு ஒப்பற்ற உலகத்தைக் கண்டான் விசயன்.  மாத-யிடம் இந்த உலகம் யாருடையது என்று கேட்டான்.  அந்த உலகத்தின் பெயர் இரணியபுரம் என்றும் அங்கு வாழும் காலகேயன் பற்றி மாத- விரிவாகத் தெரிவித்தான்.  காலகை மற்றும் புலோகை ஆகியோர் பிரமனைத் துதித்து வரம் பல பெற்றார்கள் எனவும் -தங்கள் மக்கள் தேவர்களால் அழிக்கப்படக்கூடாது என வரம் பெற்றார்கள் எனவும் அவர்களின் பெயர் காலகேயர் எனவும் -முப்புரம் போல பறந்து செல்லும் வல்லமை உடைய உலகம் ஒன்றைப் பெற்றார்கள் எனவும்  அந்த உலகம் என்றும் விவரிக்க முடியாத அளவு வரங்களைப் பெற்றவர்கள் அவர்கள் என்றும் கூறினான் மாத-.  விசயன் இவ்வளவு தூரம் வந்தோம் இவர்களையும் ஒருகை பார்ப்போம் என்று முடிவெடுத்து, "இவரையும் முடித்த பின்பே அமராவதி செல்வேன்; தேரை  அங்குச் செலுத்து'' என்றான்.   இவர்களையும் வென்ற பிறகே அமராவதி செல்வது எனக் கூறி "இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி, பின்னர்  அன்றே, இனி நான் அமராவதி செல்வது!'' என்று கூறினான். ஒரு மானுடன் வந்து எங்களை எதிர்ப்பதா என்று சினந்து காலகேயர் போர் தொடுத்தனர்.  சரிமாரியாக அம்பு தொடுத்தனர் அந்த அரக்கர்கள்.  அதை வில்-யார் சொல்-லே கேட்டால் தான் நல்லது.  " கூளி கோடி உய்ப்ப, குஞ்சரங்கள் கோடி உய்ப்ப, பேர்  ஆளி கோடி உய்ப்ப, வாயு கதிகொடு அந்தரத்தின்மேல்  வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப, வாவு தேர்  ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி, முந்தினார்.''   விசயனும் கணைமழை பொழிந்தான்.  "'ஒன்று காலம் வந்தது, இங்கு உருத்து, நான் உடன்று, உமைக்  கொன்று, காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே.'' என்று கூறினான்.  காலகேயரின் படைகள் நடுங்கின. இவர்கள் போரினால் விண் சுழன்றது - திசைகள் சுழன்றன - கடல் சுழன்றது - மண் சுழன்றது - மலை சுழன்றது - வானவர் சுழன்றனர்.  யாவருடைய கண்ணும் சுழன்றது. விசயன் திறமையைக் கண்டு வியந்தனர் அரக்கர்கள்.  பின்னர் அவர்கள் விண்ணில் மறைந்து மாயப் போர் புரிந்தனர்.  இறுதியில் சிவபிரான் வழங்கிய பாசுபதக் கணையை விடுத்தான் விசயன்.  வில்-யார் அந்த கணை பற்றிக் கூறும் சொல்வித்தையை நாம் பார்க்க வேண்டும். "முச் சிரம் உடையது, மூ-இரு திரள் தோள்  அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண்  நச்சு அரவு அனையது, நகம் இறும் முனைவாய்  வச்சிரம் அனையது''  அந்த கணையால் காலகேயரும் அவனது படை முழுவதும் மாண்டனர்.வந்து சேர்ந்தான் விசயன்.  இப்படியாக பசுபதி அருளிய பகழி கொண்டு வென்றான் விசயன். தேவர்கள் மகிழ்ந்தார்கள். இவனது வெற்றியைக் கொண்டாடினார்கள் தேவர்கள்.  அவர்களால் முடியாததை முடித்த வீரன் அல்லவா இவன். தேர்ப்பாகன் - மாத- என்னும் தேர்ச் சூதன் - விசயனது அடியிணையைத் தொழுதான். துள்ளினர் இமையவர். அந்த மாய உலகமான இரணியபுரமும் மறைந்தது.  சித்திரசேனன் முன்னதாக ஓடிப்போய் இந்திரனிடம் வெற்றிச் செய்தியைக் கூறினான்.  இந்திரலோகம் - அமராவதி அமர்க்களப்பட்டது.  அலங்காரம் செய்தார்கள் அந்த அமராவதியை.  இந்திரன் நேரில் வந்து எதிர்கொண்டான் விசயனை.  இன்னிசை முழங்கியது.  முனிவர்கள் வந்து வாழ்த்தினர். "'மனிதன்' என்று, இவ் அருச்சுனன்தன்னை,  இன்னே,  நீதியால், அமரர் யாரும் நெஞ்சினில் இகழல்' என்று,  மாதர்கள் வீதிதோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த,'' விசயனை தனது சபையில் தக்க மரியாதைகள் செய்தான் இந்திரன்.  பின்னர் விசயன் தன் நாடு திரும்ப அனுமதி கேட்டான்.  சில நாட்கள் தங்கிச் செல்லும்படி கெஞ்சினான் இந்திரன்.  விசயனும் ஒப்புக் கொண்டான்.  பின்னர் இந்திரன் உரோமச முனிவரிடம் தருமரிடம் சென்று பாசுபதக் கணையை விசயன் பெற்ற விபரத்தையும் காலகேயர் மற்றும் பிற அவுணரை விசயன் வெற்றி கொண்டதையும் கூறும்படி வேண்டினான்."வரி சிலை விசயன் வந்து, வான் தவம் புரிந்தவாறும்,  அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும்,  இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும்,  தருமனுக்கு உரைத்தி'' என்று கூறியதன் பேரில் உரோமச முனிவர் தருமனைக் காணப் புறப்பட்டுச் சென்றார்.  இத்துடன் இன்று கதையை முடித்துக் கொள்வோம்.  நாளை வீமனும் அனுமனும் சந்திக்கப் போகிறார்கள்.  மிகச் சுவையான கதை.  சரியா.

Tuesday, November 2, 2010

PASUPATHA ARROW - ARUJUNA RECEIVES FROM SHIVJI

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


சூர்யா:  சூதாடித் தோற்று காட்டுக்குப் போகிறார்கள் ஐவரும்.  காட்டிலே என்னென்ன சாகசங்கள் புரிந்தார்கள் தாத்தா?  நிறைய கதை இருக்குமே - சொல்லுங்க.
தாத்தா: ஆமாம்.  கெட்டதிலும் நல்லது நடக்கும்.  நடக்கும் நல்லதையே நாம் ஏற்றுக் கொண்டு அதற்காகத் தான் கெடுதல் வந்தது என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.  அதில் வல்லவர் தான் இந்த தருமர்.  அதனால் தான் கானகத்திற்குப் போகும் போதும் அமைதியாகவே இருக்கிறார்.  வருத்தப்படவில்லை.  சரி, இன்றைய கதைக்கு வருவோம்.  இம்முறை தருமர் முனிவர் குழாம் சூழ காமிய வனம் என்னும் காட்டிற்கு வருகிறார்.  இந்தக் காமியவனம் சரசுவதி நதிதீரத்தில் இருந்தது என்று சொல்லுவார்கள்.  இங்கே தான் தௌமிய முனிவர் வழிகாட்டுத-ன்படி தருமர் சூரிய பகவானைத் துதித்து வற்றாத உணவு வழங்கும் பாத்திரத்தைப் பெறுகிறார்.  அதன் உதவியால் உடன் இருக்கும் முனிவர்களுக்கு எல்லாம் உணவு வழங்க தருமரால் முடிகிறது. துருபதன், கண்ணன் மற்றும் பிற உறவினர் அனைவரும் - நண்பர்கள் - பிற நாட்டு அரசர்கள் எல்லாம் இந்த காட்டுக்கு வந்து விசாரிக்கிறார்கள்.  துரியோதனன் மீது படையெடுக்க அனுமதி கேட்கிறார்கள்.'மரபின் வல்லியை மன்அவை ஏற்றிய குருகுலேசனை, கொற்ற வெஞ் சேனையோடு இரிய, எற்றுதும் இப்பொழுதே!' என்கிறார்கள்.  கண்ணன் வேந்தர்களின் சினத்தைத் தணிக்கிறான்.  கெடுவான் கேடு நினைத்திருக்கிறான்.  நீதி வெல்லும் என்று கண்ணன் கூறுகிறான்."வடு மனம்கொடு வஞ்சகம் செய்பவர் கெடுவர்" என்பது கேட்டு அறியீர்கொலோ? என்கிறார் கண்ணபெருமான்.  பின்னர் அன்னை, புதல்வர் முத-யோரை உறவினர் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் மட்டும் கானகத்தில் உறையுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.  அதன்படியே தருமரும் நடந்து கொள்கிறார்.  அனைவரும் தத்தம் நாடு திரும்புகிறார்கள்.  பின்னர் வியாதமுனிவர் இந்த கானகத்திற்கு வந்து பாண்டவர்களைப் பார்க்கிறார்.  ஐவரும் நடந்ததை அவரிடம் கூறி முறையிடுகின்றனர்.  அவர் அவர்களைத் தேற்றி இனி வரும் பகையை எல்லாம் வெல்ல பார்த்தன் பாசுபதம் பெறல் வேண்டும் என்று தன் கருத்தைக் கூறி நடந்ததைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார். "பாசுபதக்  கணை வாங்கின் அல்லால்,ஆர்த்த பைங் கழலாய்! எய்தாது, அரும் பகை முடித்தல்'' "சூதாடியதைப் பற்றி எண்ண வேண்டாம்.  இப்படி ஒரு வாழ்வு மன்னருக்கு வந்ததே என்று கவலைப்பட வேண்டாம்.  ஏற்கனவே  நளன் புட்கரனோடு சூதாடித் தன் மனைவியோடு காட்டிற்குப் போன வரலாறு உள்ளது.  க-யின் கொடுமையால் மனைவிûயும் காட்டில் பிரிந்து க- நீங்கியபின் மீண்டும் இழந்த அரசைப் பெற்றான்'' என்றெல்லாம் எடுத்துக் கூறுகிறார்.
சூர்யா: அது என்ன நளன் கதை தாத்தா?
தாத்தா: அது தனிக் கதை.  தனியாகவே சொல்ல வேண்டும்.  அருமையான கதை.  மகாபாரதத்தை முடித்து விட்டு நள-தமயந்தி கதையை உனக்குத் தனியாகக் கூறுகிறேன்.  இப்போது நாம் கதைக்கு வருவோம்.  வியாதமுனிவரின் அறிவுரைப்படி அருச்சுனன் தவம்புரிய காட்டிற்குப் போகிறான்.  வடதிசை நோக்கிச் சென்ற விசயன் கைலை மலை சென்று சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொள்கிறான்.  பலநாள் தவத்தால் கரையானே புற்று கட்டுகிறது விசயனைச் சுற்றி.  தீக்கடவுள் பார்க்கிறார்.  இவன் நமக்கு ஏற்கனவே காண்டவவனத்தை எரித்த போது உதவி புரிந்திருக்கிறான்.  எனவே இவனைக் காப்பது தன் கடமை என்று கருதி விசயன் இருந்த இடத்தைச் சுற்றி தீவளையத்தை ஏற்படுத்தி குளிரில் இருந்தும் விலங்குகளிடமிருந்தும் காக்கிறான்.  விசயனின் தவநிலையைக் கேள்விப்படுகிறான் இந்திரன்.  மகனே என்றாலும் கடுமையான தவம் புரிந்தால் இந்திரனுக்குப் பிடிக்காது.  தன்னுடைய குருவுடன் ஆலோசித்து இவனது மனத்திண்மையைச் சோதிக்க முடிவெடுக்கிறான்.  எப்போதும் போல முதல் தேர்வு மகளிரை அனுப்பி தவத்தைக் கலைத்தல் தான்.  எனவே உருப்பசி மற்றும் பிற வானுலகப் பெண்களை அனுப்புகிறான்.  மன்மதனையும் உடன் அனுப்புகிறான். வானுலக் பெண்களின் சேட்டையும் மன்மதனின் ஐங்கணையும் விசயனின் தவத்தைக் கலைக்க முடியவில்லை.  இதற்குள் உமையம்மை தன் தோழியரிடமிருந்து கைலை மலையில் விசயனின் கடுமையான தவம் குறித்து அறிந்து ஈசனிடம் தகவலைத் தருகிறாள்.  ஈசன் தனக்கு ஏற்கனவே இந்த விடயம் தெரியும் என்று கூறி ஆடி ஆனனன் தன் மதலையர் ஆநூற்றுவர்  - மூகாசுரன் என்று ஒரு அரக்கனை ஏவி தவநிலையில் உள்ள விசயனைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்ற தகவலையும் தருகிறார்.  உடனே சிவகணங்களை வேடர்களாக உடன்வரும் படி கட்டளையிட்டு தானும் ஒரு கிராதன் போல வேடமணிந்து உமையம்மையுடன் புறப்படுகிறார்.  கணங்களோடு இறைவன் வந்து ஏனத்தின் சுவடு நோக்குகிறார்.  ஏனம் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டு அம்பை எய்கிறார்.  இதற்குள் தவம் கலைந்த விசயன் ஒரு பன்றி தன்னைக் கொல்ல வருவதைக் கண்டு அம்பு எய்கிறான். வேடர்களாக வடிவம் கொண்டுள்ள சிவகணங்கள் விசயனுடன் பூச-டுகின்றனர்.  அப்போது சிவபெருமான் "தவம்புரியும் நீ பன்றியைக் கொன்றது தகுமோ?' என்று வினவுகிறார்.  விசயனிடம் அவனது தவத்தின் நோக்கம் என்ன என்று கேட்கிறார்.  விசயனும் பதில் கூறாமல் அவர்களுடன் வாதிடுகிறான்.  உடனே வேடர் தலைவனான சிவன், "நீ ஏற்கனவே எங்கள் குல இளைஞன் வில்வித்தை பழகியதைப் பொறுக்காமல் உன் குருநாதர் துரோணரை வைத்து கட்டைவிரலைக் குரு தக்கணையாகப் பெற்று அவன் வித்தையைக் குறைத்துவிட்டாய்.  அன்று ஒரு நாள் ஒரு முனிவன் வந்து உங்கள் அரண்மனை வாயி-ல் வேடர்கள் பசுக்களை அழைத்துச் செல்கிறார்கள் என்று கூறியவுடன் வேடர்களுடன் போரிட்டு அவர்களை வீழ்த்தினாய்.  நீ சிறுவனாக இருக்கும் போதி-ருந்தே உன்னை விட மிக்கவர் இருக்கக் கூடாது என்ற செருக்குடன் உள்ளவன்.  நீ வேட்டுவ இனத்தினருக்கு பல தவறுகளை இழைத்துள்ளாய்.'' எனக் கூறி போருக்கு அழைக்கிறார்.  இருவரும் போரிடுகிறார்கள்.  விசயனது கணையால் இறைவன் அடியுண்ண - அண்டசராசரமே அடி வாங்குகிறது.  விசயன் உட்பட..  அப்போதே விசயனுக்குச் சந்தேகம்.   நம்மை எதிர்த்து ஒரு சாதாரண வேடன் போரிட முடியுமா? நாம் அம்பால் அடித்து அவர் அடிபட்டால் எனக்குமல்லவா வ-க்கிறது. என்ன என்று புரியவில்லையே என்று திகைக்கிறான்.  பின்னர் மற்போர் புரிகிறார்கள்.  சிவபெருமான் விசயனை ஆகாயத்தில் விட்டெறிகிறார்.  கீழே விழுவதற்குள் பிடித்து நிறுத்தி பின்னர் காட்சி வழங்குகிறார்.  விசயன் சிவனின் காட்சியைக் கண்டவுடன் ஆடுகிறான்.  ஓடுகிறான். துதிக்கிறான்.  வில்-யாருக்கு துதி பாட ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் அழகான துதியை நமக்காக தமிழில் தருகிறார்.  அவர் கொடுத்தபடியே பார்ப்போம்.
ஆடினன், களித்தனன், அயர்ந்து நின்றனன்;
ஓடினன், குதித்தனன், உருகி மாழ்கினன்;
பாடினன், பதைத்தனன்; பவள மேனியை
நாடினன், நடுங்கினன்;-நயந்த சிந்தையான்.
'ஆதியே! அண்டமும் அனைத்துமாய் ஒளிர்
சோதியே! கொன்றைஅம் தொங்கல் மௌலியாய்!
வாதியே! மரகத வல்லியாள் ஒரு
பாதியே! பவளமாம் பரம ரூபியே!
'பை அரா அணி மணிப் பவள மேனியாய்!
செய்ய வாய் மரகதச் செல்வி பாகனே!
ஐயனே! சேவடி அடைந்தவர்க்கு எலாம்
மெய்யனே! எங்குமாய் விளங்கும் சோதியே!
'முக்கணும், நிலவு எழ முகிழ்த்த மூரலும்,
சக்கர வதனமும், தயங்கு வேணியும்,
மைக் கயல் மரகத வல்லி வாழ்வுறு
செக்கர் மெய் வடிவமும், சிறந்து வாழியே!
பின்னர் சிவபெருமான் அவன் தவத்தின் காரணத்தைக் கேட்கிறார்.  அர்ச்சுனன் பாசுபதம் வேண்டுகிறான்.  உடன் அவனுக்கு அந்தக் கணையை வழங்கி கயிலைக்கு மீளுகிறார் சிவபெருமான்.  பின்னர் இந்திரன் வந்து விசயனைத் தழுவி தன்னுடன் வானுலக்கு அழைத்துச் செல்கிறார்.  நாளைக்குத் தொடரலாம்.

Monday, November 1, 2010

MAHABHARATH - DARMAR PLAYS DICE

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE


தாத்தா: இன்றைக்கு தர்மர் சூதாடிய கதையைப் பார்ப்போம்.
சூர்யா: சூதாடுதல் தப்பு இல்லையா தாத்தா.  காம்ப்ளிங் கூடாது என்று எல்லோரும் சொல்லுவார்களே.  கிரிக்கட்லே கூட இப்போ காம்ப்ளிங் இருக்கு தாத்தா.
தாத்தா: திருவள்ளுவரே இதை மிகவும் கண்டித்து பல குறள்களைச் சொல்-யுள்ளார்.  தருமருக்கும் இது தெரியும். மட்டைப்பந்து விளையாட்டில் சூதாடினாலும் அது கேவலம் தான். புரியுதா?  சரி கதைக்கு வருவோம்.  இந்திரப்பிரத்தம் வந்த நூற்றுவர்களும் அந்த புதிய மண்டபம் . தருமர் நடத்திய மகாமகம்  அதாவது பெருவேள்வி - எல்லா அரசர்களும் வந்து அதை சிறப்பித்தமை கண்டு மனம் குமுறினார்கள்.  ஊர் திரும்பியதும் துரியோதனன் தன் மந்திராலோசனையை நடத்த ஆரம்பித்தான். கெடுவான் கேடு நினைப்பான்.  மாமா சகுனி, நண்பன் வள்ளல் கன்னன் ஆகியோர் பங்கு பெற்றனர்.
சூர்யா: கர்ணன் மட்டும் தானா அந்தக் காலத்தில் புகழ் பெற்ற வள்ளல்?
தாத்தா: அந்த காலத்திலேயே ஏழு வள்ளல்கள் என்று சிறப்பு பெற்றவர்கள் கன்னன் தவிர அக்குரூரன், அந்திமான், அரிச்சந்திரன், சந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியோர். 'இனி, அவன், சில் நாள் செல்லின், எம்மனோர்                           வாழ்வும் கொள்ளும்;  துனை வரும் புரவித் திண் தேர்த் துணைவரும் சூரர் ஆனார்;  முனை வரு கூர் முள் வேலை முளையிலே களையின் அல்லால்,  நனி வர வயிர்த்தபோது நவியமும் மடியும் அன்றே'.  ஐவரின் புகழை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று துரியோதனன் தனது கருத்தைச் சொன்னான்.  அதை அவன் தம்பி துச்சாதனன் வ-யுறுத்தினான். "நந்தகோபன் மகனுக்குத் தானே முதல் மரியாதை செய்தார்கள் இந்த ஐவர் குழுவினர்.  அரசர்கள் எல்லாம் வாய் திறக்காமல் நிற்க எதிர்த்துக் கேள்வி கேட்ட சிசுபாலனையும் கொன்று ஒழித்தார்களே?". 'தன் புய வலியும், நான்கு தம்பியர் வலியும், மாயன்
வன் புய வலியும், கொண்டே, மண் எலாம் கவர எண்ணி,
இன் புயச் சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி,
மின் புயல் அனையான் மேன்மை விளைக்கவே, வேள்வி செய்தான்.' இந்த தருமன் என்று பொறாமைப்பட்டார்கள் நூற்றுவர் தலைவர்கள்.  உடனே துரியோதன் இந்த ஐவர் எழுச்சியை நாம் வஞ்சனை கொண்டே அடக்க வேண்டும் என்று கூறி தக்க உபாயங்கள் கூறுமாறு அûவியல் இருந்தவர்களைக் கேட்டான்.  ஆனால் கன்னனோ போர் வழியே யன்றி வஞ்சனை வழி ஆகாது என மறுத்து உரைத்தான்.  ஆனால் சகுனியோ மாயச் சூதினாலே ஐவரை அடக்கி ஒடுக்க வேண்டும் எனத் தன் எண்ணத்தைச் சொன்னான்.  வீரத்தால் வெல்ல முடியாது என்பதை விளக்கிய சகுனி ஏற்கனவே பாஞ்சா- திருமணத்தின் போது கன்னன் தோற்றதை நினைவூட்டினார். 'இப் பிறப்பு ஒழிய, இன்னும் ஏழ் எழு பிறப்பினாலும்,
மெய்ப்பு இறப்பு அற்ற நீதித் தருமனை வெல்ல மாட்டோம்;
ஒப்பு அறப் பணைத்த தோளாய்! உபாயம் எங்கேனும் ஒன்றால்,
தப்பு அறச் சூது கொண்டு சதிப்பதே கருமம்' என்றான்  சகுனி.  துச்சாதனன் சகுனியின் சூது உபாயத்திற்கு உடனே உடன்படுகிறான்.  போரிட ஐவர் அஞ்சார்.  எனவே சூதிலே வெல்வோம் என்று தம்பி துச்சாதனனும் வழிமொழிந்தான்.  உடனே வஞ்சக சகுனி தன் திட்டத்தை விரிவாகச் சொன்னான்.  அவர்கள் மண்டபம் கட்டியதைப் போல் துரியோதனனும் ஒரு மண்டபத்தைக் கட்டி ஐவரை அதைப் பார்க்க வரும்படி அழைக்க வேண்டும் எனவும் அப்போது சூதாட அழைத்து அவர்களைத் தோற்கடிக்கலாம் என்றும் திட்டத்தை வெளியிட்டான் சகுனி.   ஆனால் சிற்றப்பன் விதுரன் இந்த திட்டத்தை எதிர்த்தான்.  " உங்களுக்கு அந்த அரசு வேண்டும் என்றால் உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள்.  உங்கள் தந்தை கட்டளையிட்டால் உடனே அவர்கள் அரசை உங்களுக்கு ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்றார் அவர். 
வையமும் அரசும் வாழ்வும் வாங்குகை கருத்தே ஆயின்,
பொய் அடர் சூதுகொண்டு, புன்மையின் கவர வேண்டா;
ஐய! நின் தந்தை ஓலை ஐவருக்கு எழுதி விட்டால்,
மெய்யுற மறுத்துச் சொல்லார்; வேண்டின தருவர் அன்றே.
'தீதினால் வரித்து, நெஞ்சம் தீயவர் ஆடும் மாயச்
சூதினால் வென்று கொள்கை தோற்றமும் புகழும் அன்று;
போதில் நான்முகனும், மாலும், புரி சடையவனும், கேள்வி
ஆதி நான்மறையும், உள்ள அளவும், இவ் வசை அறாதே!'
உலகம் உள்ளவரை இந்த பழி நீங்காது எனத் தன் கருத்தை வெளியிட்ட விதுரனின் பேச்சை கேட்கவில்லை துரியோதனன்.  மாறாகச் சினம் கொண்டான். "நீங்களும் உங்கள் குடும்பமும் உணவு உண்ணுவது எங்கள் வீட்டில்.  ஆனால் ஐவர் பக்கம் சார்ந்தே எப்போதும் பேசுகிறார்கள் என்றான். உனக்கும் உன் கிளைக்கும், நாளும், உண்டியும் வாழ்வும் இங்கே; மனக் கருத்து அங்கே'  என்று குத்திக் காட்டிôன்.  விதுரனும் தனது நீதியை எடுத்துச் சொன்னான்.  ஐவரும் நூற்றுவரும் ஒன்றுபட்டால் உலகில் யாரும் அவர்களை எதிர்க்க முடியாது என்றும் தங்களுக்குள் சண்டையிட்டால் குருகுலம் அழியும் என்பதை முன்கூட்டியே தெரிவித்தவர் இந்த விதுரரே., மண்டபம் ஒன்று அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்ட உடன் தந்தையிடம் சென்று மண்டபத் திறப்பு விழாவிற்கு ஐவரை அழைக்கும்படி கூறினான் துரியோதனன்.  திருதராட்டிரன் விதுரனையே போய் அழைத்து வரும்படி கூறுகிறார்.  விதுரருக்குத் தான் தெரியுமே இவர்கள் திட்டம் என்ன என்று.  ஆனால் அண்ணனின் ஆணையை ஏற்றுச் சென்றார்.  தருமரிடம் விடயத்தைக் கூறினார் விதுரர். திருதராட்டிரனின் திருமுகச் செய்தியைப் படித்ததும் தம்பிகளின் கருத்தைக் கேட்டார் தருமர்.  வீமன் அழுத்தம்திருத்தமாகச் சொன்னான். "அண்ணா - இவர்கள் முதலில் கங்கை நீரில் வேல் நட்டு என்னைக் கொல்லப் பார்த்தார்கள்.  தப்பித்தேன்.  அடுத்து உணவிலே நஞ்சு கலந்து என்னை கங்கையில் வீசினான்.  பிழைத்தேன்.  பின்னர் காசியில் அரக்கு மாளிகை கட்டி நம்மை அங்கு வைத்து உயிரோடு கொழுத்தப் பார்த்தான்.  நாம் அனைவரும் ஒருவழியாகத் தப்பித்தோம்.  அப்போது இந்த விதுரர் நமக்குத் துணை புரிந்தார்.  இப்போதும் இவர் செய்தி கொண்டு வந்தாரே தவிர போகலாம் என்று சம்மதத்தைத் தரவில்லை.  எனவே நாம் போக வேண்டாம்'' என்று தன் கருத்தைச் சொன்னான்.  வில்லவனும் நகுலனும் சகாதேவனும் இதேகருத்தை வழிமொழிந்தார்கள்.  ஆனால் விதியின் விளையாட்டு நிற்குமா?  விதி நகைத்தது.  தருமர் போய் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார்.  ஐவரும் திரௌபதியும் அத்தினாபுரி நோக்கி படைகளுடன் சென்றனர்.  அத்தினாபுரி சென்ற ஐவரும் திருதராட்டிரன், வீடுமன், காந்தாரி, விதுரன் ஆகியோரை வணங்கி விதுரன் இல்லத்திலேயே தங்கினர்.  மறுநாள் காலையில் துரௌபதியை காந்தாரியின் அரண்மனையில் விட்டுவிட்டு அரசவைக்குச் சென்றனர் ஐவர்.  அங்கே துரியோதனன் தருமனைச் சூதாடத் தூண்டுகிறான்.  மறுக்கிறான் தருமன்.  சகுனி ஆசை வார்த்தைகள் சொல்- தருமனைத் திசை திருப்புகிறான்.  மவுனம் சாதிக்கிறான் தருமன்.  மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதைப் புரிந்து கொண்ட சகுனி மகிழ்ச்சியடைகிறான்.  கன்னனும் வீரம் பேசி சூதாடுமாறு கூறுகிறான்.  விசயன் வெகுண்டு எழுகிறான்.  தருமன் விசயனை அடக்குகிறான்.  பின்னர் தருமன் சூதாட ஒப்புக் கொள்கிறான்.  தருமனும் சகுனியும் சூதாடுகிறார்கள்.  பணயத் தொகையை திருதராட்டிரன் தருகிறான்.  தருமன் எல்லா செல்வத்தையும் இழக்கிறான். பாண்டிவர்களையே பணயமாக வைத்து விளையாடத் தூண்டுகிறான் துரியோதனன்.  இதிலும் தோற்கிறான் தருமன்.  பின்னர் சகுனி திரௌபதியைப் பணையமாக வைக்கத் தூண்டுகிறான்.  இப்போது இடைமறிக்கிறான் விதுரன்.  திருதராட்டிரனை நோக்கி, "அண்ணா - இதை நீங்கள் தடுக்க வேண்டும்.  இல்லாவிடில் விளைவுகள் விபரீதமாகும்.  நாங்கள் உங்களை நம்பி இருப்பது அறிவிலாமை போல உள்ளது'' என்று முறையிடுகிறான். 
'திருகு நெஞ்சின் வஞ்சர் ஆகி, இளைஞர் தீமை செய்தகால்
உருகுகின்ற தாதை நீ உடன்படுத்து இருப்பதோ?
மிருகம் அன்று; பறவை அன்று; இரக்கம் இன்றி மேவு நின்
அருகு வந்து அணைந்தது, எங்கள் அறிவிலாமை ஆகுமே!
இவ்வளவு நடந்தும் தருமர் கலங்கவில்லை.  எப்போதும் போல் அமைதியாக இருந்தார். நன்மையையும் தீமையையும் ஒன்று போல் ஏற்றுக் கொள்ள ஆன்ம பக்குவம் அவரிடம் இருந்தது. "நெஞ்சு அசைந்திலான், அசஞ்சலன்.''  என்கிறார் வில்-யார்.  அவையோர் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு புலம்புகிறார்கள்.  மாமன் சகுனி மருமகன்கள் நூற்றுவரைக் கொல்ல அல்லவோ வழிகாட்டுகிறான் என்று கருதுகிறார்கள்.'மருமகன் உயிருக்கு இந்த மாமனோ மறலி!' என்பார்.  மற- என்றால் எமன் என்று பொருள். 'தருமன் இத்தனை நாள் செய்த தருமமும்  பொய்யோ?' என்று மனம் புழுங்கினர்.'அழியுமே இவனால், மைந்தர் அரும் பெருஞ்  செல்வம்' என்பார்; 'வழிவழியாக  நிற்கும்  வசை,  இவன்  புரிந்தது!'.  இடைமறித்து அறிவுரை கூறிய வீடுமனை நோக்கி தகாத வார்த்தைகளைக் கூறினான் துரியோதனன்.  வீடுமனுக்கு நடக்கப்போவது தெரியும்.  எனவே அதற்கு மேல் அவர் வற்புறுத்தவில்லை.  விதுரனிடம் தருமனது அனைத்துச் செல்வத்தையும் கவர்ந்து தன்னிடம் ஒப்படைக்கும்படியும் அவர்களின் துகிலைக் களைந்துவிடும்படியும் கட்டளையிட்டான் துரியோதனன். "தொல்லை மா நகரும், நாடும், தோரணம் நாட்டச் சொற்றி;  எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்கச் சொற்றி;  நல் எழில் மடவார் தம்மை நம் பதி எய்தச் சொற்றி;  சொல்லிய இளைஞர் தாமும் தொண்டினராகச் சொற்றி'' என்று கட்டளையிடுகிறான் துரியோதனன்.  விதுரன் தடுத்து தனது நீதிமொழிகளைக் கூறுகிறான்.
சூர்யா: இந்த விதுரர் எப்போதும் நீதிமொழி சொல்-க்கொண்டே இருக்கிறாரே தாத்தா&
தாத்தா: விதுரநீதி என்று ஒரு நூலே உள்ளது.  மிகத் தெளிவாக நாம் வாழ வேண்டிய முறைகளை நமக்கு எடுத்துச் சொல்லும் நூல் அது.  நேரம் கிடைக்கும் போது பின்னால் உனக்கு நான் அதைச் சொல்கிறேன்.  இப்பொழுது கதைக்கு வருவோம். "திறம் தரு செல்வம் யாவும் தீமையின் கவர்தல் உற்றாய்; மறம் தரு வலியும் அன்று; மணம் தரு வாழ்வும் அன்று; நிறம் தரு புகழும் அன்று; நெறி தரு மதியும் அன்றே.'' என்று கூறி கண்ணன் அவதாரம் எடுத்து இந்த மண்ணுலகம் வந்த காரணத்தை எடுத்துரைக்கிறான்.  பூமியின் பாரத்தை நீக்கவே கண்ணன் அவதாரம் எடுத்திருக்கிறான்.  நீங்கள் உங்களுக்குள் சண்டையிட்டால் ஒரு போர் மூழும்.  அதனால் பலபேர் மடிய நேரிடும்.  பூமிபாரம் நீங்கள் வழிவகுக்கிறீர்கள் என்று சொல்கிறான்.  விதி முந்துறும்.  விதுரன் மொழி எடுபடுமா? விதுரனைத் துரியோதனன் நகையாடி அவமதிக்கிறான்.  அருகில் நின்ற பிராதிகாமி என்பவனை அழைத்து திரௌபதியை அழைத்துவரப் பணிக்கிறான்.  அவனோ திரௌபதியிடம் செல்ல அஞ்சி செல்வது போல் வெளியேறி ஒரு கற்பனைக் கதையுடன் திரும்ப வந்து தன்னை இழந்தபின் தருமர் என்னைப் பணயம் வைத்தாரா? அல்லது என்னைப் பணயம் வைத்தபின் தன்னை இழந்தாரா? என்று திரௌபதி கேட்டதாகக் கூறுகிறான்.
'என்னைத் தோற்று, மனு நெறி கூர் இசையோன்
               தன்னைத் தோற்றனனோ?
தன்னைத் தோற்று, தனது மனத் தளர்வால்,
               என்னைத் தோற்றனனோ?
முன்னைத் தோற்ற தோற்ற பொருள் முற்றும் கவரும்
               முறை அன்றி,
பின்னைத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ? நினைக்கப்
               பெறாது'
என்று மொழிந்ததாக வில்லியார் பாடலைத் தருகிறார்.  துரியோதனன் உடனே துச்சாதனனை அழைத்து நீ போய் அழைத்து வா என்று கட்டளை இடுகிறார்.  திரௌபதியோ காந்தாரியின் அரண்மனையில்.   தயங்கினாலும் ஒருவழியாகச் செல்கிறான் துச்சாதனன்.  காந்தாரியும் துச்சாதனன் பின் அஞ்சாது போகும்படி அறிவுரை கூறுகிறாள்.  ஆனால் துச்சாதனன் துரௌபதியின் கூந்தலைப் பிடித்து இழுத்து அழைத்து வருகிறான்.  அவையோர் மௌனம் சாதிக்கிறார்கள்.  கிளர்ந்து எழுகிறார்கள் இந்தக் காட்சியைக் கண்டு வீமனும் தம்பிகளும்.  தருமர் அவர்களது சினத்தைத் தணிவிக்கிறார். "ஆம்போது, ஆகும்; அது அன்றி, ஆய பொருள்கள்,                 அம் முறையே,  போம்போது, அனைத்தும் போம்; முன்னம் பொறுத்தீர்;                இன்னம் பொறும்''   என்றார்.  பெரிய தத்துவ வார்த்தைகள் இவை.  போக வேண்டிய நேரம் வந்தால் போகும்.  வரவேண்டிய நேரம் வந்தால் வரும்.  இவ்வளவு நாள் பொறுத்தது போல் பொறுங்கள் என்று சினத்தைக் குறைக்கிறார்.  ஆகூழினால் நல்லது நடந்தால் போகூழ் வரும் போது இருந்த இடம் தெரியாமல் எல்லாம் அழிந்துவிடும்.  ஆகுஊழ் போகுஊழ் என்று பிரித்தால் ஊழின் வ-மை நமக்குப் புரியும்.  திரௌபதி வீடுமனைப் பார்த்து நியாயம் கேட்கிறாள்.  தருமர் தோற்றபின் என்னை பணயம் எப்படி வைக்க முடியும் என்று வினவுகிறாள்.  வீடுமனுக்கு நடக்கப் போவது என்ன என்பது தெரியும்.  எனவே இதையெல்லாம் இந்த மன்னவர்களிடம் கேள் என்று கூறுகிறார்.  பின்னர் திரௌபதி அவையோரை நோக்கி நீதி வேண்டி முறையிடுகிறாள்.  அவையோர் ஓவியம் போல் அசைவற்று உள்ளனர்.  இப்போது நூற்றுவரில் ஒருவன் பெயர் விகர்ணன் எழுந்து நியாயம் பேசுகிறான்.  இராவணனுக்கு ஒரு விபீடணன் போல் நூற்றுவரில் இவன் ஒரு நியாயவாதி.  எனவே வில்-யார் இவனை வாய்மைக் கடவுள் என்று விதந்து போற்றுகிறார். "விகருணனாம் வாய்மைக் கடவுள  வாள்வேந்தீர், பொல்லா நெறியி லனைவீரும் போகா வண்ணம் புகலணிரோ.'' என்றான்.  உடனே கன்னன் விகருணனைக் கடிந்து "சிறுவனாகிய உனக்கு நீதி பற்றி என்ன தெரியும்.  நாட்டு நடப்பு பற்றி என்ன தெரியும்.  உன்னை யாராவது நியாயம் சொல்லு''என்று கேட்டார்களா என்று கடிந்து கொள்கிறான்.  துரியோதனன் துரௌபதியின் துகிலைக் களையுமாறு கட்டளையிடுகிறான்.  தம்பி துச்சாதனன் இந்த வேலையை தலைமேல் கொண்டு உடனே செயல்படுகிறான்.  உடனே செய்வது ஒன்றும் அறியாது துரௌபதி கண்ணனைத் துதிக்கிறாள். 'கோவிந்தா!' என்று உளம் உருகித் திரௌபதி கதற,  கண்ணன் அருள் செய்தல்  ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம் புனல் சோர,     அளகம் சோர,  வேறான துகில் தகைந்த கை சோர, மெய் சோர, வேறு                   ஓர் சொல்லும்  கூறாமல், 'கோவிந்தா! கோவிந்தா!' என்று அரற்றி,                   குளிர்ந்து நாவில்  ஊறாத அமிழ்து ஊற, உடல் புளகித்து, உள்ளம்                   எலாம் உருகினாளே.  அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க                   அமரர் போற்றும்  திருமலர்ச் செஞ் சேவடியோன் திருச் செவியில் இவள் மொழி சென்று இசைத்த காலை,  மரு மலர் மென்குழல் மானின் மனம் நடுங்கா வகை, மனத்தே வந்து தோன்றி,  கரிய முகில் அனையானும், பிறர் எவர்க்கும் தெரியாமல்,    கருணை செய்தான் '.  கோவிந்தா என்று அழைத்த குரலுக்கு உடனே வந்தான் கோவிந்தன்.  கருணை மழையைப் பொழிந்தான் கார்முகில் வண்ணன்.  துச்சாதனன் கை ஓய்ந்தது.  வீடுமன் மற்றும் விதுரர் உடனே கண்ணீர் சோர கற்பின் தெய்வம் துரௌபதியைப் போற்றி மகிழ்ந்தனர்.  சினத்தில் வீமன் நூற்றுவரைப் போருக்கு அழைக்கிறான்.  துரியோதன் களைத்து நிற்கும் துச்சாதனனை நோக்கி திரௌபதியைத் தன் மடி மீது அமர்த்தும்படி ஆணையிடுகிறான்.  இதைக் கேட்டவுடன் கற்பின் நாயகி திரௌபதி ஒரு சாபம் தருகிறாள்.  எந்த மடியில் என்னை இருக்கவைக்கச் சொன்னானோ அந்த தொடை வழியே தான் துரியோதனன் உயிர் பிரியும் என சாபமிடுகிறாள்  'புன் தொழிலோன் யான் இருக்கக் காட்டிய தன் தொடை                   வழியே புள வாய் குத்தச்  சென்றிடுக, ஆர் உயிர்!'  என்கிறார் வில்லியார்.  இனி வெற்றி முரசு கொட்டும் வரை தலை முடியமாட்டேன் என்று சபதம் இடுகிறாள் பாஞ்சா-. கையினால் நீர் இனி அருந்த மாட்டேன் என்று சபதமிடுகிறான் வீமன்.  கதையால் அடித்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய நீரையே இனி குடிப்பேன் என்கிறான். கன்னன் உயிரை மாய்ப்பேன் என்று சூளுரைக்கிறான் விசயன். சகுனிதனை மாய்ப்பேன் என்கிறான் நகுலன்.  இப்படி ஆளுக்காள் கொதித்து சூளுரைக்கிறார்கள்.  திருதராட்டிரனுக்கு அச்சம் வந்து விடுகிறது.  விதுரன் கூறியது போல் விபரீதத்தை விருந்திட்டு அழைத்த கதையாகி விட்டதே என்று நினைக்கிறார்.  உடனே திரௌபதியை நோக்கி பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று கூறி பாண்டவரின் கோபத்தை அகற்ற அவர்கள் சூதில் இழந்த பொருட்களை மீண்டும் கொடுத்து ஊருக்குச் செல்ல விடை தருகிறார்.  தன் திட்டம் பாழாவதைக் கண்டு பொறுக்காத சகுனி சூதில் இழந்ததை இப்படி மீண்டும் பெறுவது அறமாகாதே என்று அறத்தைத் துணைக்கு அழைக்கிறான்.  துச்சாதனனும் ஒத்து ஊதுகிறான்.  இப்போது அறம் சிரிக்கிறது.  இப்படி இவர்கள் பேசியவுடம் இரண்டு மனம் கொண்ட திருதராட்டிரன் வீடுமன் மற்றும் விதுரனைக் கலந்து ஆலோசிக்கிறான்.  துரோணர் தன் பங்குக்கு தனது நீதியைச் சொல்கிறார்.  முதலில் உன் உரிமையை நீ பெற்றுக் கொள்.  அது தான் முறை என்கிறார்.  நீங்கள் ஐவரும் துரௌபதியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்து பின்னர் ஓர் ஆண்டு தலைமறைவாக இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் நீங்கள் இழந்த அரசும் வாழ்வும் வழங்கப்படும் என்று துரோணர் கூறினார்.  அதை பிதாமகரான வீடுமனும் விதுரனும் ஒப்புக்கொண்டனர்.  முத-ல் உரிமை பெற சூதாடுவது என முடிவெடுக்கப்பட்டது.
சூர்யா: மீண்டும் சூதாட்டமா?  இவ்வளவு நடந்தும் புத்தி வரவில்லையா இவர்களுக்கு?
தாத்தா: ஆமாம்.  அனைத்து மன்னவரும் காண தருமர் மறுசூது ஆடுகிறார்.  துரௌபதியும் இதற்கு உடன்படுகிறாள்.  இப்போது தருமர் தன் புண்ணியத்தை ஒட்டமாக வைத்து கவறு ஆடுகிறார்.  தருமம் என்றாவது தோற்குமா?  புண்ணியம் வெல்கிறது.  இம்முறை சகுனி தோற்கிறான்.  நடக்கப் போகும் போரின் முடிவைச் சொல்கிறது இந்த மறுசூதாட்டம்.  வாய்மை வெல்லும் என்பதை நமக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறது.  இதன்பின் தருமர் தன் தம்பிகளுடனும் திரௌபதியுடன் காட்டிற்குச் செல்கிறார்.  இன்பம் வந்தபோதும் துன்பம் வந்தபோதும் கலக்கமடையவில்லை தருமன்.  மகிழ்ச்சியோடு தான் செல்கிறார்.   "நாட்டிடை எல்லை, பொன்-தாள் நறு மலர் சிவக்க ஏகி,
காட்டிடை புகுந்த போதும், கலக்கம் அற்று, உவகை கூர்ந்தான்-
கூட்டிடை இன்பத் துன்பக் கொழும் பயன் துய்த்து, மாறி,
வீட்டிடை புகுதும்போது, மெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.'' என்பார் விலலியார். இதே பகுதியை பாரதியார் அவர்களின் பாஞ்சாலி சபதத்தில் படிக்க வேண்டும்.  வீமன் வெகுண்டு பேசுவதைப் படித்தாலே நமக்கு வீரம் வந்து விடும்.  மிக அருமையான பாடல்கள் அவை.  நேரம் கிடைக்கும் போது உனக்கு அவற்றை நான் தனியாகக் கூறுகிறேன். சரியா?
மீதக் கதையை நாளை பார்ப்போமா?