Tuesday, May 31, 2011

HAMPI - YANTHROTHTHARAGA HANUMAR TEMPLE_யந்த்ரோத்தாரக அனுமான்

யந்த்ரோத்தாரக அனுமான்

விருபாட்சிநாதர் ஆலயத்திலிருந்து கடைவீதி வழியாக நடந்து துங்கபத்திரா நதிக்கரை ஓரம் உள்ள மலைப்பகுதியை அடைந்து சின்ன சின்ன மலைகளின் மீது நடந்து குகை போன்ற அமைப்புகளைக் கடந்தால் நாம் சக்ர தீர்த்தம் என்னும் துங்கபத்திரா நதிக்கரைக்கு வந்து விடுகிறோம்.  மிக அழகிய காட்சிகள்.  பரந்து விரிந்து பாயும் துங்கபத்திரா நதி.  பரிசலில் செல்லும் உள்ளூர் மக்கள்.  எதிர்கரையில் தொலைவில் நமக்குத் தெரிவது அஞ்சனாத்ரி மலை.  ஆங்காங்கே மண்டபங்கள்.  மலை உச்சிகளில் கோவில்கள்.  கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிறந்திருந்த இந்த மதம் எப்படியெல்லாம் செழித்திருந்தது என்பது இங்கிருந்து பார்த்தாலே தெரியும்.  அவ்வளவும் சுல்த்தான் பேரரசர்கள் அழித்திருக்கிறார்கள்.  சின்னாபின்னப்படுத்தி உள்ளார்கள்.  இந்த கரையில் நின்று துங்கபத்திரா நதியையும் எதிரில் தெரியும் குன்றுகள் மண்டபங்கள் கோவில்கள் சுழன்று ஓடும் நதிநீர்ப் பிரவாகம் இவைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரியாது.  இந்த இடத்தில் தான் சுக்கிரீவன் இராமபிரானிடம் சீதாதேவியின் நகைகளைக் காட்டியதாகத் தெரிவித்தார் வழிகாட்டி.  வியாசராசர் இந்த சக்கர தீர்த்தத்தில் குளித்துக் கொண்டிருந்த போது தான் இங்கு ஒரு கோவில் எழுப்பும்படி அனுமான் கூறினாராம்.  பக்தியுடன் இந்த சக்கரதீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டோம்.  பின்னர் இராமர் கோவிலை அடைந்து பரந்தாமனைத் தொழுதோம்.  அங்கிருந்து சில படிகள் ஏறினால் நாம் அனுமன் சன்னதியை அடையலாம்.  வியாசராசர் இந்த சிலாவடிவத்தை வடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டதாக கோவில் அர்ச்சகர் தெரிவித்தார்.  கரிக்கட்டையால் அனுமன் படம் வரைந்தவுடன் ஓவியம் காணாமல் போய்விடுமாம்.  பின்னர் ஒரு அனுமாரின் வாலை இன்னொரு அனுமன் பிடித்துக் கொண்டிருப்பது போன்று அமைத்து அதன்  நடுவில் முக்கோணங்கள் அமைத்து யந்திரம் படைத்து அதன் நடுவில் அனுமனை வடித்து அங்கு பிரதிட்டை செய்துள்ளதாகத் தெரிவித்தார்கள்.  மிகவும் சக்திவாய்ந்த அனுமன் என்றும் வேண்டியதைத் தருவார் என்றும் கூறினார் அர்ச்சகர்.  நாங்கள் எல்லோரும் அந்த கோவிலில் அமர்ந்து அவர் கூறிய வரலாற்றைக் கேட்டோம்.  பிறகு தீப ஒளியில் அனுமாரைக் காட்டி அனுமன் துதியை எங்களைக் கூற வைத்தார் அந்த வயதான பூசாரி.  பின்னர் அங்கிருந்து நாங்கள் எங்கள் வேன் எண் 5ஐத் தேடி வந்து அமர்ந்தோம்.  அங்கிருந்து விசயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரின் பிற பகுதிகளைப் பார்க்கக் கிளம்பினோம்.


விருபாட்சி கோயில் முன்பு

அனுமார் கோயில் செல்லும் வழி

அனுமார் கோயில் செல்லும் வழியில் பிற கோவில்கள்




உக்ர நரசிம்ஹர்   கோயில் முன்பு

உக்ர நரசிம்ஹர்   கோயில் முன்பு

உக்ர நரசிம்ஹர்   கோயில் முன்பு

படாவி லிங்கம்

படாவி லிங்க சன்னதி முன்பு


உக்ர நரசிம்ஹர் கோயில் முன்பு

விஜய நகர சாம்ராஜ்ய மதில் சுவர்

சக்ர தீர்த்தம் முன்பு

சக்ர தீர்த்த padithurai

துங்கப்ற நதிகரையில் ஆங்காங்கே  கோயில்கள் மண்டபங்கள்


சகர தீர்த்த பகுதியில் சூரிய நாராயணர் கோயில்

யந்த்ரோத்தாரக அனுமார் கோயில் சன்னதி

யந்த்ரோத்தாரக அனுமார் கோயில் சன்னதி

அனுமார் கோயில் முன்பு

அனுமார் கோயில் கல் கொடிமரம்




தொடரும்

No comments:

Post a Comment