Monday, May 30, 2011

நவபிருந்தாவன் Navabirundhavan - jeevasamadhi of nine acharyars


நலம் தரும் நவபிருந்தாவனம்

கடந்த மாதம் என் நண்பர் கோவை இராமநாதபுரம் பகுதியில் இரகுமான்சேட் காலனிப் பகுதியில் உள்ள திரு.கணேசன் அவர்களுடன் நான் காலையில் நடைப்பயிற்சிக்காகச்  சென்று கொண்டிருந்தேன்.  அப்போது அவர் நவபிருந்தாவனம் என்னும் திருத்தலத்திற்குச் சென்று வந்ததாகவும் துங்கபத்திரா நதியின் நடுவில் உள்ள அந்த சீவசமாதிக்குச்  சென்ற போது இறைஉணர்வு மிகஅதிகமாக மேலிட்டதாகக் கூறி அந்த இடம் குறித்த ஒரு நூலை என்னிடம் கொடுத்தார்.  நூலின் தலைப்பு நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்’.  இந்த அருமையான நூலை எழுதியவர் அம்மன் சத்தியநாதன் என்னும் வித்தகர்.  மிக அருமையான நூல்.  படங்களுடன் மிக அருமையாகப் பல தகவல்களைத் தந்துள்ளார் அந்த நூலில்.  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு அம்மன் பதிப்பகத்தின் வெளியீடு.  படித்த உடனேயே அந்த திருத்தலத்திற்குச்  செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் இருந்தது அவரது கைவண்ணம்.  பல நாட்களாக எனக்கு இருந்த பல ஐயங்களைத் தீர்த்து வைத்தது இந்த அருமையான நூல்.  படித்த உடனேயே என் நண்பர் திரு.கணேசனைத் தொடர்பு கொண்டு நவபிருந்தாவனம் செல்ல வேண்டும் என்னும் என் ஆவலை வெளியிட்டேன்.  அவர் தன்னுடைய இரு சக்கர வண்டியில் உடனே வந்தார்.  என்னை ஸ்ரீ இராகவேந்திரர் சேவா டிரஸ்ட் என்னும் இடத்திற்கு அழைத்துப் போனார். (தொலைபேசி எண் ௦0422 2245454).  அந்த அலுவலகமே ஒரு கோவில் போல இருந்தது.  பல தெய்வங்களின் படங்கள்.  நெய் தீபங்கள் எல்லா இறைப் படங்கள் முன்னும் மிளிர்ந்தன.  அலுவலகத்தில் இருந்த எழுத்தரிடம் நவபிருந்தாவனம் செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்தினைத் தெரிவித்தேன்.  உடனே அவர் மே 10ஆம் தேதி செல்லவிருப்பதாகக் கூறினார்.  உடனே என் பெயரையும் என் துணைவியின் பெயரையும் பதிந்தேன்.  மே 10ஆம் தேதி காலை 8 மணி அளிவில் குர்லா விரைவுவண்டியில் பெங்களூரு நோக்கி பயணித்தோம்.  பெங்களூரிலிருந்து இரவு ஹோஸ்பேட் செல்லும் விரைவு வண்டியில் பயணித்து 11ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஹோஸ்பேட் அடைந்தோம்.  அங்கிருந்து வேன் மூலம் ஹம்பி நோக்கிப் பயணித்தோம்.  நாங்கள் மொத்தம் 90 பேர் சென்றிருந்தோம்.  அனைவருக்கும் தலையில் அணிய ஒரு ஆரஞ்சு வண்ண தொப்பி அடையாளத்திற்காகக் கொடுக்கப்பட்டது.  வண்டி ஓட்டுநர்களுக்கும் ஆரஞ்சு வண்ண தொப்பியும் பனியனும் கொடுத்தார்கள்.  பயணிகள் எளிதில் ஓட்டுநர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன.   மொத்தம் 9 வான்கள் மற்றும் ஒரு மகிழுந்து.  எங்களுக்கு வேன் எண் 5 ஒதுக்கப்பட்டது.  எங்களுடன் அந்த வேனில் சேலத்தைச் சேர்ந்த நண்பர் நெடுஞ்செழியன் மற்றும் குடும்பத்தினர், கோவையைச் சேர்ந்த பேராசிரியர் கருணாநிதி மற்றும் அவர் மக்கள் மற்றும் இயற்கை மருத்துவர் மற்றும் புகைப்பட வல்லுநர் கோவையைச் சேர்ந்த திரு.இரமேஷ் அவர்கள் வந்தனர்.  சிறிது நேரத்தில் துங்கபத்திரா நதிக்கரையை அடைந்தோம்.  அருமையான படித்துரை.  அசத்தலான குளியல்.  காலைச் சிற்றுண்டி.  முடிந்ததும் அங்கிருந்த விருபாட்சர் கோவிலை நோக்கி நடந்தோம்.
விருபாட்சர் கோவில் மண்டபத்தின் நெற்றிப் பகுதியில் அழகிய வேலைப்பாடு

துங்கபத்திரா நதியின் படித்துரை

ஹம்பியில் துங்கபத்திரா நதிக்கரை

ஹம்பியில் துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள விருபாட்சர் கோவில் கோபுரம்
தொடரும்.
தொடரும்....












No comments:

Post a Comment