துறவி என்பவன் அனைத்தையும் துறப்பவன் அல்ல.
பொறுப்புகளை பார்த்து ஓடுபவன் துறவியாக இருக்க முடியாது. உலகத்தில் உள்ள அனைத்துக்கும் நானே பொறுப்பு என நினைக்க வேண்டும்.
எனது எனது என கூறாமல் , உலகம் அனைத்தும் நமது நமது என கூறுபவன் துறவி.
காவி உடையும் , கமண்டலமும் ஒருவனை துறவியாக்க முடியாது "நான்" என்ற அகத்தை துறந்தவனே துறவியாவான்
இன்றைய வலைதள உலாவிலே ஒரு தளம் பார்த்தேன். அது ஆங்கிலச் சொற்களை நமக்கு கற்றுக் கொடுப்பதில் அக்கறை காட்டியது. நம் தாய் மொழியைக் கற்றுத் தேறவேண்டும். அது நம் மொழிக்கு நாம் செய்யும் கடமை. அதைப் போல பிற மொழிகளையும் கற்க வேண்டும். அதுவும் கசடறக் கற்க வேண்டும். அப்படி ஆங்கிலச் சொற்களைக் கற்க - வாக்கியங்களில் பயன் படுத்த - பொருள் தெரிந்து கொள்ள - எதிர்ச்சொல் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவி செய்கிறது. தினசரி ஒரு வார்த்தை - அதுவும் கசடறக் கற்க - மூலச் சொல் என்ன - பொருள் என்ன எனறு தெளிவாகச் சொல்கிறது இந்த தளம். தளத்தின் பெயர்
Pantomime
Etymology: From Latin pantomimus ”mime, dancer,”.Meaning:
- The use of gestures only, without words, to tell something.
- A performance in which a story is told with expressive facial and bodily movement.
- A traditional British Christmas entertainment for children, usually based on nursery tales and featuring stock characters in costume who sing, dance, and perform skits.
- Communication by means of gesture and facial expression.
- The art or technique of conveying emotions, actions, feelings, etc., by gestures without speech.
- Some tourists make themselves understood abroad by pantomime.
- Charlie Chaplin turned pantomime into an art form.
- As the characters unite to try to perform a pantomime, the action becomes manic.
- I have been forced to watch this pantomime, whilst I gather my forces.
- He has recently written a pantomime for the local players.
- It’s a family show with all the magic of a traditional pantomime.
- Music hall actor well known for his pantomime dame roles.
Antonyms: Speech, speak.
Dole
Etymology: From Old English dal “sharing, giving out,” shortened from gedal “portion,”.Meaning:
- A portion or allotment of money, food, etc., esp. as given at regular intervals by a charity or for maintenance.
- A dealing out or distributing, esp. in charity.
- A form of payment to the unemployed instituted by the British government in 1918.
- Any similar payment by a government to an unemployed person.
- Archaic . one’s fate or destiny.
- To distribute in charity.
- To give out sparingly or in small quantities.
- On the dole, receiving payment from the government, as relief.
- The last of the water was doled out to the thirsty crew.
- They couldn’t afford any luxuries while living on the dole.
- We dole money out to help support ourselves, really.
- Defense procurement can not be a short term palliative to the dole queue.
- My father, being self employed, had no dole to fall back on, no assistance from the state at all.
- If the worst happens, any pharmacy will dole out pills to hurry you back to health.
- All of us were only a month away from the dole when the group finished.
Antonyms: Disallow, keep, retain, withhold, stealing, forfeit, loss.
entreat
Etymology: From Anglo-Norman entreter : en-, causative; treter, to treat.
Meaning:
- To make an earnest request of.
- To ask for earnestly; petition for.
- Archaic. To deal with; treat.
- To make an earnest request or petition.
- To ask (a person) earnestly; beseech; implore; beg: to entreat the judge for mercy.
- To ask earnestly for (something): He entreated help in his work.
Usage of Entreat :
- If it starts to rain, the children will entreat their mother nonstop about being able to go out to jump in the puddles.
- Wherefore, having laid down his life for the Lord, he maketh earnest entreaty in behalf of our souls.
- There is nothing in Calvinism, properly understood, to inhibit such entreaty.
- Even the alliance asked for was at first refused, and was only renewed in 590 after urgent entreaties.
Synonyms: Pray, importune, sue, solicit.
Antonyms: Answer, command, demand.
என்னங்க எப்போ பார்த்தாலும் மொழி, இறைவன் இப்படியே போய் கொண்டிருக்கிறது உங்கள் தள உலா. சரி சரி. உங்கள் வசதிக்காக சமையல் தளத்திற்குச் செல்வோம் இன்று.
சுவைக்கச் சுவைக்க
சுவைக்கச் சுவைக்கச் சிறந்த சமையல் குறிப்புகள். சுவைத்துப் பாருங்களேன்
- முருங்கைக் கீரை அடை
- நெல்லிக்காய் ஜாமூன்
- பீர்க்கங்காய் துவையல்
- கோதுமை ரவை கதம்பம்
- முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா
- குடைமிளகாய் இறால்
- "எறால் வாங்கீட்டு வந்திருக்கேன். என்ன செய்றதுன்னு தெரியலை" என்று கூடத் தங்கியிருக்கும் அலுவலக நண்பன் சொன்னப்போ, "சரி நாஞ் செய்றேன்"ன்னு சொல்லீட்டேன். எறால் நமக்கென்ன புதுசா? எவ்வளவு பாத்திருக்க மாட்டோம். நம்மூர்ல ஓடு உரிக்காமக் கெடைக்கும். அதையும் பதமா மண்டையப் பிச்சி ஓட்ட உரிச்சிருக்கோமே. அவ்வளவு எக்ஸ்பர்ட்டு. அப்படியிருக்குறப்போ நெதர்லாந்துல நல்ல தண்டித்தண்டி எறாலக் கெடச்சா சும்மா விடுவோமா?
பெரிய வெங்காயத்த எடுத்து நீளமா நறுக்கிக்கனும். பொடிப்பொடியா நறுக்கீறக்கூடாது. அப்புறம் நஞ்சு போயிரும். அடுத்தது தக்காளீன்னுதான நெனச்சீங்க. அதுதான் இல்ல. எறால்ல தக்காளி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும். ஆனா கொழகொழன்னு வெஞ்சனமா ஆயிரும். அதுக்கு மாத்தாத்தான் கொடமெளகா. நம்மூர்ல பச்சையா இருக்கும். இங்க செவப்பு மஞ்சளுன்னு கெடைக்குது. எதுவும் போடலாம். மலையாளத்துல எறாலுக்குச் செம்மீன்னு பேரு. அதுனால நான் செவப்புக் கொடமெளகாய எடுத்துக்கிட்டேன். நல்லா சின்னச் சின்னதா நறுக்கிக்கிறனும். வேற என்ன? வேற ஒன்னுமில்ல. அவ்வளவுதான்.
எறாலக் கழுவி எடுத்துக்கிருங்க. சட்டியக் காயவெச்சு எண்ணய ஊத்துங்க. அடுத்து என்ன செய்யனும்? கடுகு உளுந்தம் பருப்புதான? ஆனா போடக்கூடாது. கத்திரிக்கா வதக்கலா செய்யப் போறோம்! இது எறால். அதுனால எண்ண காஞ்சதும் வெங்காயத்தையும் கொடமெளகாயையும் ஒன்னாப் போட்டுறனும். போட்டு ரெண்டு கிண்டு கிண்டி வதக்கனும்.
எளம் வதக்கலா இருக்குறப்பவே எறாலையும் கூடப் போட்டுறனும். இதுல பாருங்க மஞ்சப்பொடியெல்லாம் போடக் கூடாது. ஏன்னா...என்னென்ன சேத்துருக்கமோ அதது அந்தந்த நெறத்துல அப்படியே தெரியனும். அங்கதான் இருக்கு சூக்குமம். வெங்காயம் கொடமெளகாயோட எறாலையுஞ் சேத்துப் பெரட்டனும். சொட்டுச் சொட்டாக் கூடத் தண்ணி ஊத்தக் கூடாது.
இதுல இன்னொன்னையும் கவனிக்கனும். அடுப்பு மெதம்ம்ம எரியனும். தபதபன்னு எரியவிட்டா எறா சுறாவாயிரும். மெதமா எரியும் போது மூனையும் லேசாப் பெரட்டிக்கனும். அது கூட வேண்டிய அளவுக்கு மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போட்டுப் பெரட்டனும்.
எறாலுக்குன்னு ஒரு சுவையிருக்கு. மணமிருக்கு. மசாலாப்பொடிகள எக்கச்சக்கமா கலந்துட்டா அது தெரியாது. மசால நெறையத் திங்கனும்னா எறா எதுக்கு? ரெண்டு உருளைக் கெழங்கப் போட்டாப் போதாது. ஆலு லபக்தாஸ் ஆயிரலாம்ல. ஆகையால மசாலாக்களைக் கொறச்சிக்கோங்க. மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போதும். ரொம்பவும் விரும்புனீங்கன்னா லேசா கரம் மசாலா போட்டுக்கோங்க. என்னையக் கேட்டா அதுவும் வேண்டாம்பேன்.
ஆக...வெங்காயம்+கொடமெளகா, எறால், மெளகாப் பொடி, உப்பு...அப்படி வரிசையாப் போட்டு பெரட்டீருக்கோம். மெதமான நெருப்பு. இப்ப தானா தண்ணி ஊறும். எறால்லயும் மெளகாய்லயும் இருக்குற தண்ணி தானா வெளிய வரும். அந்தத் தண்ணீல எறா வேகனும். அப்ப ஒரு மணம் கெளம்பும் பாருங்க. ஆகா!
வங்காளத்துல அந்தக்காலத்துல எறாலுங்குறது ஏழைபாழைக சாப்புடுறதாம். விருந்துல எறா வெச்சா அவங்க வசதி கொறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கிறலாமாம். ஆனா இன்னைக்கு எறா வெல எகிறிப் போயி...நெலம தலைகீழ். எறா விருந்து வெச்சா...அவங்க வசதி நெறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.
சரி. நம்ம எறாவுக்கு வருவோம். எறா வெந்திருச்சுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது? நல்ல நீளமா இருக்குற எறாக்கள் வடைவடையாச் சுருண்டுக்கிரும். அப்படி நல்லாச் சுருண்டு தண்ணியெல்லாம் வத்துனப்புறமா அடுப்ப அணைச்சிற வேண்டியதுதான். ஒருவேளை வேகுறப்போ தண்ணி விடலைன்னா கொஞ்சமாச் சேத்து வேக விடுங்க. நல்லா வடைவடையாச் சுருண்டதும் தண்ணி வத்தப் பெரட்டீட்டு எறக்கீருங்க. கடைசி வரைக்கும் தீ மெதமாத்தான் இருக்கனும்.
இந்த எறாவ சோத்துல பெணஞ்சுக்கலாம். இட்டிலி தோசை சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். பூரிக்கும் பெரமாதமா இருக்கும். எப்படியிருக்கும்னு தெரிய வேண்டாமா? அதுக்காகத்தான படம் போட்டிருக்கேன் கீழ.
சுவையுடன்,கோ.இராகவன் - தளத்தின் பெயர் http://nilaachoru.blogspot.com/
· செய்முறை:-
1) வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2) தேங்காய், வெங்காயம், சீரகம், ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3) குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,வெந்தயம், போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் கீறியது போட்டு வதக்கவும்.
4) புளி கரைசல், அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
5) அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், போட்டு கிளறவும். பிறகு அதோடு சுத்தம் செய்த வாழைப்பூவையும் போட்டு கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வந்தவுடன்,எடுத்து பரிமாற வேண்டியதுதான். வாழைப்பூ குழம்பு தயார்.
1) வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2) தேங்காய், வெங்காயம், சீரகம், ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3) குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,வெந்தயம், போட்டு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் கீறியது போட்டு வதக்கவும்.
4) புளி கரைசல், அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
5) அதோடு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், போட்டு கிளறவும். பிறகு அதோடு சுத்தம் செய்த வாழைப்பூவையும் போட்டு கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வந்தவுடன்,எடுத்து பரிமாற வேண்டியதுதான். வாழைப்பூ குழம்பு தயார்.
· தளத்தின் பெயர்
No comments:
Post a Comment