முன்னோர் வழிபாட்டுக்கான நாள் மகாளய அமாவாசை என்பதால் என் நண்பர் ஒருவர் சென்னையில் ஏதாவது முன்னோர் வழிபாட்டுக்கான கோயில் உள்ளதா எனறு கேட்டார். உள்ளது. ஆம். நான் 2000 ஆம் ஆண்டு சென்னையில் இருந்த போது அகத்தியர் விஜயம் என்ற நூலைப் படித்த போது கோயம்பேடு என்னும் இடத்தில ரேவதி திரை அரங்கம் எதிர்புறம் உள்ள தெருவில் இரண்டு கோவில்கள் உள்ளதாகப் படித்து சென்றேன். ஒன்று குருங்காலீஸ்வரர் கோயில் மற்றொன்று பெருமாள் கோயில். ஒன்று சிவன் கோயில். ஒன்று திருமால் கோயில். லவ குசர்கள் ஸ்தாபித்த கோயில்கள் எனறு வரலாறு சொல்கிறது. தந்தையுடனும் சித்தப்பாகளுடனும் சண்டை இட்டதனால் பிதுர் சாபம் வரும் எனறு கருதி ஒரு லிங்கத்தை வைத்து வழிபட்டதாக வரலாறு. இது குறித்து புகைப்படங்களையும் செய்தியையும் கீழ்க்கண்ட தளங்களில் பார்க்கலாம்.
http://chennaionline.com/hotelsandtours/placesofworship/april09/10lava-kusa-temple-koyambedu.aspx
நாளை பாப்போம்.
No comments:
Post a Comment