Tuesday, October 12, 2010

THIRUVANNAMALAI - NINAIKKA MUKTHI TARUM THALAM

PRAISE YOUR MOTHER TONGUE - SPEAK IN MOTHER TONGUE - PRAY IN MOTHER TONGUE

சில ஊரிலே பிறந்தால் முக்தி - சில ஊரிலே வாழ்ந்தால் முக்தி - சில ஊரிலே இறந்தால் முக்தி.   ஆனால் நினைத்தாலே முக்தி தரக்கூடிய இடம் ஒன்று உண்டு.  அது தான் திருவண்ணாமலை.  நினைக்க மட்டும் நேரம் ஒதுக்குங்கள்.  இருக்கும் இடத்திலேயே இறைவனை நினையுங்கள் - திருவண்ணாமலையை நினையுங்கள்.அருணையின் கருணை என்று ஒரு கட்டுரையை சுவாமி ரமணானந்த சரஸ்வதி அவர்கள் எழுதி இருந்தார்.  மிக அருமையான கட்டுரையாக இருந்தது.  அதில் இருந்து சில பகுதிகளை நான் உங்களுக்கு இன்று தர விரும்புகிறேன்.
என்று அருணாசல நவமணி மாலை என்னும் பாடலிலே ஒரு வரி.  அதன் பொருள்: இயல்பில் பரமேஸ்வரனும் அவர் சக்தி அம்பிகையும் சலனமற்றவர்களே. ஆனால் தில்லையாகிய சிதம்பரத்தில் சலனமற்ற அம்பிகை (சக்தி) முன் ஈசன் நடராஜனாக நடனம் செய்கிறான். திருவண்ணாமலையிலோ பரமேஸ்வரன் சலனமற்று அருணகிரி வடிவில் இருக்க, சக்தியாகிய அம்பிகை ஈசனுள் ஒடுங்கி ஒன்றுபட்டு செயலற்று இருப்பதால், ஈசன் அருணையில் ஞான சொரூபியாய் ஒளியுடன் ஓங்கி நிற்கின்றான்.
இதிலிருந்து நாம் அறிய வேண்டிய தத்துவம் என்ன?
 நம் உள்ளமாகிய இதய குகையிலிருந்து வெளிப்படும் மனம், புத்தி, பிராணன் இவ்வனைத்தின் செயல்பாடுகளுக்கும் முளை வித்தாக உள்ள ஆணவம் (அகந்தை) இவை அனைத்தும் சேர்த்து ‘மனம்’ என்று சொல்லப்படும் சக்தி செயலற்று ஒடுங்கி இதயத்தில் ஒன்றுபட்டால் நம்முள் ஈசன் பரம ஞான உணர்வு ஒளியாக மேலோங்கி நிற்கும்.

யோசனை மூன்றாம் இத்தல வாசர்க்கு
ஆசறு தீக்கையாதி இன்றியும் என்
பாசமில் சாயுச்சியம் பயக்கும்மே
ஈசனாம் எந்தன் ஆணையினானே

இரமணரின் பொன்னான வாக்கு இது.
இதன் பொருள்: ஆணவமாகிய அகந்தையை ஒழிப்பதற்கு எந்த வித பாரம்பரிய முறைப்படியான மந்திர உபதேசங்கள் பெறாவிடினும், அருணாசலத்தை மையமாகக் கொண்ட சுமார் நாற்பத்தைந்து கி.மீ.-க்குள் உள்ள பிரதேசத்தில் தங்கி வசிப்பவர்கள், சர்வேஸ்வரனாகிய என்னுடைய கட்டளையினால் சிவ சாயுச்சிய பதவியை நிச்சயம் அடைவார்கள்.

இவ்வளவு சிறப்பு மிகுந்த அருணாச்சலத்திற்கு முடிந்தால் ஒரு தடவை போய் வாருங்கள்.  மலைவலம் வந்தால் அந்த அனுபவமே தனி.  மிக இனிமையாக இருக்கும்.  எட்டு திசைகளில் எட்டு லிங்கங்கள்.   இந்திரா லிங்கம் முதல் ஈசான லிங்கம் வரை.  முன்பெல்லாம் மலைவலம் வருவது கடினமாக இருக்கும்.  இப்போது அனைத்து வசதிகளும் உள்ளன.  மலை வளத்தின் போது பல அழகிய கோவில்கள்.  அதில் சிறப்பானது அடிஅண்ணாமலையில் உள்ள திருக்கோவில்.   இந்த இடத்தில இருந்து தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடியதாகக் கூறுகிறார்கள்.  அவருக்கும் ஒரு சிறு கோவில் இங்கு உள்ளது.  மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் இந்த மலைவலம்.  ஒரு முறை போய் வாருங்களேன். 

No comments:

Post a Comment