நமக்கு இந்த பிறப்பினைத் தந்த ஈசனை நாம் போற்ற வேண்டும். அதுவும் நமது தாய்மொழியில் போற்ற வேண்டும். அப்படி ஒரு போற்றுதலை இன்று பார்த்து படித்து இரசிப்போமா?
வலைத் தளத்தில் http://www.kamakoti.org/tamil/ எனறு ஒரு தளம் உள்ளது. காஞ்சியில் உள்ள மடத்தினரால் பேணப்படும் தளம் இது. இதிலே அழகிய தமிழில் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முழுவதையும் நாம் படித்து மகிழ முடியும். எழுதும் மிகப் பெரிய எழுத்தாக உள்ளது. யாரும் எளிதில் படித்து மகிழலாம்.
இது தவிர சைவ நூல்கள் பலவும் அருமையாக இந்த தளத்தில் உள்ளன. நான் இன்று படித்து மகிழ்ந்தேன். நீங்களும் படித்துப் பலன் பெறுங்களேன்.
சிவபெருமான் குறித்து ஒரு தமிழ் பாடலை இன்று நாம் பார்ப்போம். இது அபிராமி பாட்டர் இயற்றியது.
சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும்
தும்பிகள் இடைஇடை நுழையும்
தும்பைமா லிகையும்
வம்புவார் சடையும் துண்டவெண் பிறையு(ம்)
முந் நூலும் நடநபங் கயமும்
கிரணகங் கணமும் நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும்
நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர் நமனையும் காணவல் லவரோ?
கொடிபல தொடுத்த நெடிய
மா மணிப்பொற்கோபுரம் பாரிடம் தொடுத்துக்
கொழுந்துவிட்(டு) எழுந்து
வான்நில(வு) எறிப்பக் கொண்டல்வந்(து) உலவியே நிலவும்
கடிமலர்த் தடமும் சுருதித் திடமும் கன்னிமா மாடமும் சூழ்ந்து
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்த தற்பரனே! 1
பாரிடம் என்றால் பூதகணம். கடவை என்றால் திருக்கடவூர்.
இப்படித் தமிழில் அழகான பாடல்கள் இருக்க
வடமொழியிலே இறைவன் புகழை
பொருள் தெரியாமல் தப்பும் தவறுமாகக் கூற வேண்டாமே.
No comments:
Post a Comment