சங்கே முழங்கு - எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
இக்காலத்தில் பணம் செலவழித்து சுவரொட்டிகள் அச்சடித்து – மாநாடுகள் நடத்தித் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் அரசியல்வாதிகள் மலிந்துவிட்டார்கள். பழங்காலத்திலும் இப்படி இருந்திருப்பார்கள் போலும். எனவே தான் குமரகுருபரர் தமது “நீதிநெறி விளக்கம்” அக்காலத்திலேயே தற்புகழ்ச்சியைப் பற்றி அருமையான பாடலை நமக்குத் தந்து உள்ளார். தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் எரியும் நெருப்பை நீர் விட்டு அணைப்பது போல உள்ளது என்றும் இன்பத்தை விரும்பினால் துன்பம் வரும் எனவும் எனவே இன்பத்தை விரும்பக் கூடாது எனவும் எடுத்துக் கூறி உள்ளார்.
தன்னை வியப்பிப்ன் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை அன்றே வியப்பாவது? இன்பம்
நயவாமை அன்றே நலம்?
நீரைக் கொட்டினால் நெருப்பு வளருமா? அணைந்து விடும். அதுபோல தன்னைத் தான் போற்றிக் கொள்ளுதல் புகழை குறைத்து விடும். தன்னைத் தான் புகழாமல் இருந்தால் அது ஒருவனது மதிப்பை வளர்க்கும். இன்பத்தை விரும்பாமை தான் இன்பத்தைத் தரும்.
No comments:
Post a Comment