எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
ஓர் அரசு எப்படி வரி வாங்க வேண்டும் – அரசனின் தகுதி என்ன என்பனவற்றை குமரகுருபரர் தனது நீதி நெறி விளக்கத்தில் மிக அழகாக விளக்கி உள்ளார்.
வரியை எப்படி வசூலிக்க வேண்டும் என்று கூறும் போது – மக்கள் விருப்பத்தோடு கொடுக்கும் வகையில் வரிவிதிப்பு செய்து வசூலித்தால் நன்றாக வசூலாகி கருவூலத்தில் பணம் விரைவில் சேரும் என்கிறார் குமரகுருபரர். மக்களை வருத்தி வரி வாங்கதல் கன்றை உடைய பசுவிடம் வருத்திப் பால் கறப்பதைப் போன்றது என்று விளக்குகிறார்.
குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால் கொளலும் மாண்பே – குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.
(
இறை என்றால் வரி, கற்றா என்றால் கன்று)
No comments:
Post a Comment