யார் யாருக்கு யார் தெய்வம் பேர்ன்றவர் என்று குமரகுருபரர் தமது நீதிநெறி விளக்கத்தில் அருமையாக விளக்குவார்.
குலமகட்குத் தெய்வம் கொழுநனே – மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் – அறவோர்க்கு
அடிகளே தெய்வம், அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை.
எளிமையான தமிழ். பொருள் சொல்லத் தேவையில்லை. மனைவிக்குக் கணவன் தெய்வம். புதல்வர்க்கும் புதல்விக்கும் பெற்றோரே தெய்வம். அறவோருக்கு ஆசானே தெய்வம். மற்ற எல்லோருக்கும் அரசனே தெய்வம்.
இதையொட்டித் தான் மாதா, பிதா, குரு தெய்வம் என்ற பழமொழி உள்ளது போலும்.
No comments:
Post a Comment