ஒருவன் நன்மதிப்பை எப்படி எல்லாம் பெறலாம்? மூன்று வழிகளைச் சொல்கிறார் குமரகுருபரர் தனது “நீதிநெறி விளக்கத்தில்”.
· மற்றவர்களுடைய பெருமைகளை மறைக்க முயலக் கூடாது
· மற்றவர்கள் குறையை வெளியே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது
· எல்லோரிடத்திலும் பணிவாக இருக்க வேண்டும்
பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாதே நோற்பது ஒன்று உண்டு – பிறர்பிறர்
சீர் எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்
பெருஞ்சுட்டு என்றால் பெருமதிப்பு
நோற்பது என்றால் கடைப்பிடிக்க வேண்டியது
புறங்காத்து என்றால் வெளியில் பரவாமல் தடுத்து
No comments:
Post a Comment