கற்க கசடற கற்று அவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்பார் திருவள்ளுவர். இது குறித்து குமரகுருபரர் என்ன கூறுகிறார்? பார்ப்போம்.
கற்றபின் அது போன்று நடவாதவனை என்றாவது ஒரு நாள் – ஒருவன் உறுதியாகக் கேட்பான். “ஏனப்பா, இவ்வளவு படித்திருக்கிறாயா? இது கூடத் தெரியாதா? படித்துப் பட்டம் பெற்ற நீ இப்படி நடக்கக் கூடாது” என ஒருவன் கேட்கும் நிலை வரும்.
கற்றுப் பிறருக்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்க உண்டோர் வலியுடைமை- சொற்ற நீர்
நில்லாதது என்னென்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலர்.
(வாய்ப்படூஉம் – வாயிலிருந்து வெளிப்படும், சொற்ற என்றால் சொன்ன)
இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் கூறும் நீங்கள் அவ்வாறு நடக்கவில்லையே என்று கற்றவர் நாணும்படி வெளிப்படையாகவே குறிப்பாகவே யாராவது என்றாவது சொல்லத்தான் செய்வார்கள். எனவே பிறருக்கு உரைப்பது – உபதேசம் செய்வது மிகவும் எளிதான செயல். அதை யாரும் செய்யலாம். அப்படி நடந்து காட்ட வேண்டும். அது தான் கற்றவனுக்கு அழகு.
No comments:
Post a Comment