அமரிக்க மக்கள் எல்லாம் FALL வருகிறது என்று கூறிக்கொண்டு பரபரப்பாக இருக்கிறார்கள். விளம்பரங்கள் FALL எப்படி கொண்டாடுவது FALL எப்போது துவங்குகிறது FALL இன் பொது எங்கெங்கு போவது இப்படிதான் எங்கும் பேச்சாக இருக்கிறது. SEPTEMBER, OCTOBER, NOVEMBER FALL SEASON என்று சொன்னார்கள். எனக்குப் புரியவில்லை. SUMMER, WINTER, AUTUMN என்று கேள்விபட்டிருக்கிறோம். இது என்ன FALL? சரி இருக்கவே இருக்கிறது விக்கிபீடியா என்று கருதி தமிழில் தட்டினேன். ஒரு தகவலும் இல்லை. தேடுவது மிகச் சிரமமாக இருந்தது. பருவகாலம் என்று தட்டினால் அது ஒரு திரைப்படத்திப் பற்றிக் கூறியது. கோடை என்று தட்டினேன். ஒன்றும் இல்லை. வசந்தம் என்று தட்டினேன். ஒன்றும் இல்லை. காலநிலை என்று தட்டினேன். ஒரு விபரமும் இல்லை. பின்னர் ஆங்கிலத்தில் உள்ள விகிபெடியாவில் போய் FALL என்று தட்டினேன். அது கீழ்க்கண்ட தகவலைத் தந்தது
Autumn
Wikipedia, the free encyclopedia
Autumn (also known as fall in American English) is one of the
four temperate seasons. Autumn marks the transition from
summer into winter, usually in March (Southern Hemisphere) or
September (Northern Hemisphere) when the arrival of night
becomes noticeably earlier.
The equinoxes might be expected to be in the middle of their
respective seasons, but temperature lag (caused by the thermal
latency of the ground and sea) means that seasons appear later
than dates calculated from a purely astronomical perspective.
The actual lag varies with region, so some cultures regard the
autumnal equinox as "mid-autumn" whilst others with a longer
lag treat it as the start of autumn.[1] Meteorologists (and most of
the temperate countries in the southern hemisphere)[2] use a
definition based on months, with autumn being September,
October and November in the northern hemisphere,[3] and
March, April and May in the southern hemisphere.
Autumn starts on or around 8 August and ends on about 7
November in traditional East Asian solar term. In Ireland, the
autumn months according to the national meteorological
service, Met Éireann, are September, October and November.[4]
However, according to the Irish Calendar which is based on
ancient Celtic traditions, autumn lasts throughout the months of
August, September, and October, or possibly a few days later,
depending on tradition. In Australia, autumn officially begins on
1 March and ends 31 May.[5] The vast diversity of the ecological
zones of the South American, African and Australian continents
renders the rigid European, North Asian and North American
seasonal calendar an imposed cultural concept rather than
relevant to climactic conditions. The seasonal cycles as named
and described by the cu peoples of Australia differ substantially
from one another according to their local geographical and
ecological environment and are intricately dependent on local
environmental events and resources.
சரி நாம் இல்லை உதிர்காலம் என்று கூறுகிறோம் அல்லவே? அதைத் தான் இவர்கள் FALL என்று கூறுகிறார்கள். இங்குள்ள ஒரு விசேடம் என்ன என்றால் இங்கே உள்ள மரங்களின் இலைகள் உதிர்வதற்கு முன்பு பல வண்ணங்களாக மாறுகின்றன. இது குறித்த அழகிய படங்கள் விக்கிபீடியாவில் உள்ளது. தயவு செய்து ஆங்கில விக்கிபீடியாவைப் பார்க்கவும். சரி தமிழில் காலநிலை பற்றி எதுவுமே தெரியவில்லையே என்று ஏங்கினேன்.
பருவ காலம் என்னும் தலைப்பில் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து சில தகவல்கள் கிடைத்தது. உங்கள் தகவலுக்காகத் தருகிறேன். படித்து மகிழுங்கள்.
"பருவகாலம் என்பது காலநிலை, சூழியல் மற்றும் பகலின் மணித்தியாலங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தால் குறிப்பிடப்படுகின்ற வருடத்தின் பிரிவு ஆகும்.சூரியனைச் சுற்றிவரும் பூமியின் வருடந்திரா சுழற்சி மற்றும் சுழற்சியின் சமதளத்திற்கு தொடர்புடைய பூமி அச்சின் சாய்வு ஆகியவற்றினால் பருவகாலம் ஏற்படுகிறது. மிதமான தட்பவெப்பமுள்ள துருவப் பிரதேசங்களில் பூமியின் மேற்பரப்பை எட்டும் சூரிய ஒளியின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றம், விலங்குகள் செயலற்றிருத்தல் அல்லது இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைவது மற்றும் தாவரங்கள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றால் பருவங்கள் குறிப்பிடப்படுகின்றன.
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனை எதிர்கொள்வதால் நேரடியான அதிக சூரிய ஒளியில் படுகிறது. இதே நிலைதான் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் ஏற்படுகிறது. இது சூரியமண்டல நிலைமாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் கோடை மாதங்களின்போது வானத்தில் சூரியன் உயரமான இடத்தில் இருப்பதற்கு காரணமாகும் பூமி அச்சின் சரிவு ஆகும். இருப்பினும் பருவகால தாமதத்தால் ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தெற்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும் இருக்கின்றன.
மிதமான வெப்பநிலை மற்றும் துணைத்துருவப் பிரதேசங்களிலான நான்கு காலண்டர் அடிப்படையிலான பருவகாலங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன: இளவேனிற்காலம் , கோடைகாலம் , இலையுதிர்காலம் , குளிர்காலம் .
சில வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பிரதேசங்களில் மழைக்காலம் (அல்லது, ஈர, அல்லது பருவமழைக்காலம்) பருவம் அதற்கெதிரான உலர் பருவகாலம் என்று பேசுவது பொதுவானதாகும், ஏனென்றால் மழைப்பொழிவானது சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் அதிவிரைவாக மாறக்கூடியதாக இருக்கிறது. உதாரணத்திற்கு வடக்கு அரைக்கோளத்தில் அமைந்திருந்தாலும் நிகரகுவாவில் உலர் பருவகாலம் கோடை (அக்டோபரிலிருந்து மே வரை) என்று அழைக்கப்படுகிறது என்பதுடன் மழைக்காலம் குளிர்காலம் என்று என்று அழைக்கப்படுகிறது.
மற்ற வெப்பமண்டலப் பகுதிகளில் வெப்பம், மழை மற்றும் குளிர்ச்சிப் பருவங்கள் என்ற மூன்றுவழி பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் சில பகுதிகளில், சிறப்பு பருவகாலங்கள் சூறாவளி பருவகாலம், சுழற்காற்று பருவகாலம் அல்லது காட்டுத்தீ பருவகாலம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் அடிப்படையில் தளர்வாக வரையறுக்கப்படுகின்றன.
சீன பருவகாலங்கள் சூரியமண்டல காலவரை எனப்படும் 24 காலகட்டத்தின் அடிப்படையில் பாரம்பரியமாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதுடன் இது சூரியச் சலனத் திருப்பம் மற்றும் வின்மீன் சலனத்திருப்பத்தின் மத்தியப் புள்ளியில் தொடங்குகிறது.
புரிகிறதா? இல்லை என்றால் ஒரு ஜோதிடப் புத்தகத்தைப் பார்த்து கீழே சில தகவல்களை பருவ காலங்கள் குறித்து கொடுத்துள்ளேன். பார்க்கவும்.
நமது நாட்டில் காலங்கள் எப்படி பிரிக்கப் பட்டுள்ளன?
பொழுது பெரும்பொழுது - சிறுபொழுது எனப் பிரிக்கப்பட்டுள்ளது
பெரும்பொழுது என்பவை
கார்காலம் - ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன் பனிக்காலம் - மார்கழி, தை
பின் பனிக்காலம் - மாசி, பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி, ஆடி
சிறுபொழுது என்பவை
காலை - உதயத்தி-ருந்து காலை 10.00 மணி வரை
நண்பகல் - காலை 10 முதல் மதியம் 2 வரை
ஏற்பாடு - மதியம் 2 முதல் மாலை 6 வரை
மாலை - 6 மணி முதல் இரவு 10 வரை
யாமம் - இரவு 10 முதல் இரவு 2 வரை
வைகறை - இரவு 2 முதல் காலை 6 மணி வரை
இதே போல ஒரு வலைத்தளத்தில் - தமிழில் தான் - பார்க்கும் பொது எங்களக் குறிப்பிட தமிழில் கோடி வரை தான் உள்ளது எனவும் ஆனால் அமரிக்காவில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் எனவும் அதற்கு மேலும் உள்ளது எனவும் தெரிவித்து இருந்தார். தமிழில் உள்ள எங்கள் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை போலும். ஒன்றை முன்னுற்று இருபது பங்காகப் போட்டு வாய்ப்பாடு வைத்து கற்றவர்கள் நம் முன்னோர்கள். என் தந்தை பல முறை என்னிடம் இப்படிப்பட்ட வைப்படுகளை ஒப்புவித்துக் காட்டி உள்ளார். நமக்கு CALCULATOR என்னும் கையடக்க கணக்கன் இல்லை என்றால் எதுவுமே தெரியாதே! உலகத்திற்கு பூஜ்யத்தை அறிமுகப்படுத்தி பூஜ்ஜியத்தில் ஒரு ராஜ்ஜியம் உள்ளது என்பதைக் கூறிய நம்மிடம கோடிக்கு மேல் எண்கள் இல்லை. இதோ அட்டவணை. (விக்கிபீடியா உபயம் தான்)
எண் குறிகள்
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000௦௦௦
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
• ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் அளவு சொல்
1/320 320 ல் ஒரு பங்கு முந்திரி
1/160 160 ல் ஒரு பங்கு அரைக்காணி
3/320 320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/80 80 ல் ஒரு பங்கு காணி
1/64 64 ல் ஒரு பங்கு கால் வீசம்
1/40 40 ல் ஒரு பங்கு அரைமா
1/32 32 ல் ஒரு பங்கு அரை வீசம்
3/80 80 ல் மூன்று பங்கு முக்காணி
3/64 64 ல் மூன்று பங்கு முக்கால் வீசம்
1/20 20 ஒரு பங்கு ஒருமா
1/16 16 ல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
1/10 10 ல் ஒரு பங்கு இருமா
1/8 8 ல் ஒரு பங்கு அரைக்கால்
3/20 20 ல் மூன்று பங்கு மூன்றுமா
3/16 16 ல் மூன்று பங்கு மூன்று வீசம்
1/5 ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
1/4 நான்கில் ஒரு பங்கு கால்
1/2 இரண்டில் ஒரு பங்கு அரை
3/4 நான்கில் மூன்று பங்கு முக்கால்
1 ஒன்று ஒன்று
• எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து (தசம்)
100 நூறு (சதம்)
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்(பிரயுதம்)
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 மத்தியம்(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)
இப்படி தமிழில் தங்கமும் பிளாட்டினமும் புதைந்து கிடக்கிறது. இது போன்ற பல விஷயங்களை - ஆங்கிலத்தில் உள்ள விகிபெடியவில் உள்ளது போல் அதிகத் தகவல்கள் சேர்க்க வேண்டும். எல்லோரும் முயற்சி செய்தலும் - நமது தமிழ்நாடு அரசு - தகவல் தோழில் நுட்பத் துறை - உருவாக்கி பல நல்ல இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை அமர்த்தி அழகு பார்க்கும் - தமிழ்நாடு அரசு இதில் முயற்சிகளை மேற்கொண்டு ஆட்களை அமர்த்தி தமிழ் விக்கிபீடியாவில் அவ்வளவு தகவல்களும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். மதிப்பிற்குரிய DAVIDAR - IRAI ANBU - இன்னும் இப்படிப்பட்ட சிறந்த கடமை உணர்வு மிக்க எண்ணற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் மனம் வைக்க வேண்டும். விரைவில் நடக்கும்.
நாளை நமதே!