Sunday, August 29, 2010

naal - kizhamai - palangal patri siru kurippu

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your மொதெர்தொந்குஎ

காரிய வெற்றிக்குப் பலன் கண்டு பிடிப்பது எப்படி?

ஒரு காரியத்துக்குச் செல்கின்றபோது அந்த காரியம் வெற்றி பெறுமா பெறாதா என மனக் குழப்பம் பலருக்கு வரும். ஓரை சாத்திரம் பார்த்துச் சென்றாலும் பலன் தருவதில்லை. ஆனால் பலருக்கு இந்த முறை வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

செல்லும் தேதியின் கூட்டு எண்ணை கண்டு பிடிக்கவும்

உதாரணமாக நீங்கள் செல்லும் தேதி 19/5/2000 என வைத்துக் கொள்வோம். இதன் கூட்டு எண் 17 - ஒற்றைப்படை ஆக்கினால் 8

அடுத்து உங்கள் பிறந்த தேதியை எழுதி கூட்டு எண்ணைக் கண்டு பிடிக்கவும்

உதாரணமாக பிறந்த தேதி 29/4/1980 என வைத்துக் கொண்டால் கூட்டு எண் 33 என வருகிறது. அதை ஒற்றைப்படை ஆக்கினால் 6 ஆகும்

இரண்டு ஒற்றைப்படை எண்களைக் கூட்டினால் 8 + 6 = 14. ஒற்றைப்படை ஆக்கினால் 5

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண் பட்டியலில் 5 எங்கே வருகிறது எனப் பார்க்க வேண்டும். அங்கிருந்து 5 எண்ணைக் கடக்க வேண்டும். அங்கு என்ன எண் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு உண்டான பலன் தான் உங்களுக்கு.

8

2

11

4

3

6

5

9

12

7

1

10

இதில் 5 இலிருந்து 5 எண்ணைக் கடந்தால் 1 வருகிறது . 1க்கு என்ன பலன் வருகிறது என்று பார்க்க வேண்டும். அது தான் நடக்கும்.

1.ஆதாயத்திற்கே மோசம் தரும் நாள்

2.வேதனை தந்து பின் பலன் தரும்

3.மிகுந்த சந்தேகத்தைக் கொடுக்கும்

4.ஆதாயம் கட்டாயம் வரும்

5.கலகம் பிறந்து காரியமே நடக்காது

6.விசாரிப்பதோடு காரியம் முடிந்து விடும்

7.சென்ற காரியத்தில் அனைத்திலும் வெற்றி

8,எதிர்பார்த்தது போல் முடியும். ஆனால் ஏதாவது ஒன்றை இழக்கச் செய்யும்

9.சென்ற இடத்தில் நம் உதவியை எதிர்பார்ப்பர்

10.எதிர்பார்க்கும் நிலையில் செல்லவோ, நடக்கவோ செய்யாது

11.லாபம் தரும் திடீர் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்

12.உடல்நலக் குறைவு இருந்தாலும் செல்ல நேரிட்டால் பலன் தரும்

அதிர்ஷ்ட எண் என்ன?

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அதிர்ஷ்ட எண் உண்டு. அதை அறிந்து நாம் பணி செய்தால் பலன் நன்றாக இருக்கும். எப்படி இதை அறிந்து கொள்வது?

இன்றைய தேதியின் கூட்டு எண்ணைக் கண்டு பிடித்து ஒற்றைப்படை ஆக்க வேண்டும்

உதாரணமாக இன்றைய தேதி 22.7.2003 என வைத்துக் கொள்வோம்

இதன் கூட்டு எண் 16 - ஒற்றைப்படை ஆக்கினால் 7

பிறந்த தேதி விதி எண் கண்டு பிடிக்க பிறந்த தேதியைக் கூட்டி ஒற்றைப்படை ஆக்க வேண்டும்

பிறந்த தேதி 29.4.1980 என வைத்துக் கொள்வோம். கூட்டு எண் 33 ஒற்றைப்படை ஆக்கினால் 6

பிறந்த தேதியின் எண்ணை ஒற்றைப்படை ஆக்க வேண்டும் - 29 ஐக் கூட்டினால் 11 - ஒற்றைப்படை ஆக்கினால் 2

மூன்றையும் எடுத்து எழுதினால் 762

இப்பொழுது கீழே உள்ள அட்டவணையைப் பார்க்க வேண்டும்

165

293

321

449

557

628

735

824

916

762 வந்திருப்பதால் 7வரிசைக்கு முன் உள்ள 6 வரிசையில் உள்ள 628ஐ எடுத்து எழுதி கழிக்க வேண்டும்

762 - 628 = 134

134ஐ ஒற்றைப்படை ஆக்கினால் 8. இது தான் அன்றைய நாளின் அதிருஷ்ட எண் ஆகும்.

இறைவனை துதிக்கும் தோத்திரம்

மண் சக்தியை நான் வணங்குகிறேன்

நீர் சக்தியை நான் வணங்குகிறேன்

அக்கினி சக்தியை நான் வணங்குகிறேன்

காற்றுச் சக்தியை நான் வணங்குகிறேன்

ஆகாய சக்தியை நான் வணங்குகிறேன்

ஐந்து இயற்கை சக்திகளையும் ஒன்று சேர நான் மீண்டும் வணங்குகிறேன்

இயற்கை சக்திகள் எனக்கு செய்த நன்மைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்

இனியும் தொடர்ந்து நன்மைகள் செய்ய வேண்டுகிறேன்

என் உயிருக்கும் உடலுக்கும் காரணகர்த்தாவாகிய என் தந்தையையும் என் தாயையும் நான் வணங்குகிறேன்.

என்னை வளர்த்து ஆளாக்கிய என் வளர்ப்புத் தந்தையையும் தாயையும் நான் வணங்குகிறேன்

தென்புலத்தவர்களாகிவிட்ட என் அனைத்து உறவினர்களையும் நான் வணங்குகிறேன்.

எனக்கு அறிவூட்டிய குருக்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். அவர்கள் எனக்கு செய்த நன்மைக்கு நன்றி. இனியும் நன்மை செய்திடும்படி வேண்டி வணங்குகிறேன்

இவர்கள் அனைவரும் தொடர்ந்து எனக்கு நன்மைகள் செய்திட வேண்டுகிறேன்.

என் உடல் உறுப்புகள் அனைத்தையும் நான் வணங்குகிறேன். அவைகள் நான் நன்கு செயல்பட உதவியதற்கு நன்றி கூறுகிறேன். இனியும் நன்கு செயல்பட உதவிடும்படி வேண்டுகிறேன்

நான் நல்லவன். என் குடும்பத்தினர் நல்லவர். எனக்கோ என் குடும்பத்தாருக்கோ எந்தவித குறைகளும் இல்லை. எங்களுக்கு எங்கும் எதிலும் வெற்றியே கிடைத்து வந்திருக்கிறது. இந்த வெற்றிகள் தொடர வேண்டும் என்று வணங்கி கேட்கிறோம். எல்லா செல்வங்களையும் பெற்று இறை உணர்வுடன் நாங்கள் வாழ அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறோம்.

சித்திரை - மேழம்

வைகாசி - விடை

ஆனி - ஆடவை

ஆடி - கடகம்

ஆவணி - மடங்கல்

புரட்டாசி - கன்னி

ஐப்பசி - துலா

கார்த்திகை - நளி

மார்கழி - சிலை

தை - சுறவம்

மாசி - கும்பம்

பங்குனி - மீனம்

சித்திரையும் வைகாசியும் இளவேனில்

ஆனியும் ஆடியும் முதுவேனில்

ஆவணியும் புரட்டாசியும் கார்

ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்

மார்கழியும் தையும் முன்பனி

மாசி பங்குனி பின்பனி

தாய் தந்தை இறந்தால் 1 வருடம்

மனைவி இறந்தால் 6 மாதம்

சகோதரன் இறந்தால் 3 மாதம்

மகன், மகள் இறந்தால் 3 மாதம்

பங்காளி இறந்தால் 1மாதம்

இவை சுபகாரியங்களை ஒத்தி வைக்கும் காலங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சாதகம்

குறித்திடும் சாதகம் என்பது அவரவர் தம் வினையின்

குணங்கள் அறிந்து அயன் விதித்த கொள்கை உளது அன்றோ

மறித்தும்அவர் அவர் தமக்கு வரும் பாவகத்தின்

வகை அறிந்து பெரியோர்கள் வழுத்திய சொல் அதனைப்

பிறித்து அறிந்து சுபம் வரும் என்று உளம் மகிழ்ச்சிப் பொங்க

பின் அசுபம் வரில் அதற்கு பிரிது என்கொல் என்று

நெறிதரும் சாத்திரத்தின் விதி சாந்தி செய்தே

நிறைந்து சுபம் பெறுவதற்கே நிகழ்த்தினார் சாதகமே

-சாதக அலங்காரப்பாடல்

ஒரு நாள் என்பது ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தது. ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது60 நாழியாகும்

1 நாழிகை என்பது 24 நிமிடம்

2 இரண்டரை நாழிகை 1 மணி

30 நாழிகை 1 பகல்

30 நாழிகை 1 இரவு

செனன நாழிகையை விநாடியாக்க

நாழிகையை அறுபதால் பெருக்கி மீதிஇருந்தால் கூட்டி விநாடிகளாக்க வேண்டும்

சிம்மம் முதல் மகரம் வரையுள்ள ஆறு இராசிகளும் உயிர் என்றும்

கும்பம் முதல் கடகம் வரை உள்ள ஆறு இராசிகளும் உடல் என்றும் உரைப்பர்

சிம்மம் முதல் மகரம் வரை உள்ள ஆறு இராசிகளும் சந்திரனுடையது என்றும்

கும்பம் முதல் கடகம் வரை உள்ள ஆறு இராசிகளும் சூரியனுடையது என்றும் கூறுவர்.

பிறப்பு

ஒரு ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரௌணிதமும் இரண்டறக் கலந்து - அப்பெண்ணின் கர்ப்பப் பைக்குள் பிரவேசிக்கும் சமயத்தில், அக்கலவையில் சிக்கிய சினை முட்டை கர்ப்பப் பையை அடைந்து, அதில் தங்கி, கருவாக மாறி, அக்கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி அடைந்து, இறுதியில் சிசுவாகிறது. இதையே பிறப்புஎன்று நாம் சொல்கிறோம்.

கரு தரிக்கும் முதல் மாதத்தில் சுக்கிலம்-சுரோணிதம் ஆகிய இரண்டும் இரண்டறக் கலக்கும் வகையில் - சுக்கிரன் அதிபதி ஆகிறார்

இரண்டாம் மாதம் கருபிண்டம், சிக்கென்று இளகி இருக்க அங்காரகன் அதிபதி ஆகிறார்

மூன்றாம்மாதம் அங்குரம், கை, கால் வளர்ச்சியடைய, குரு அதிபதி ஆகிறார்

நான்காம் மாதம் எலும்பும் நரம்பும் உண்டாக சூரியன் அதிபதி ஆகிறார்

ஐந்தாம் மாதம் தோல் மூலம் உடலமைப்பை ஏற்படுத்த உடல்காரகனான சந்திரன் அதிபதி ஆகிறார்

ஆறாம் மாதம் அங்கம், ரோமம், நகம், விரல் உண்டாகச் சனி அதிபதி ஆகிறார்

ஏழாம் மாதம் ஜீவன், பிராணன் உண்டாக, புதன் அதிபதி ஆகிறார்

எட்டாம் மாதம் லக்கினாதிபதியாக எந்தக் கிரகம் அமையுமோ அவர் அதிபதி ஆகிறார்

ஒன்பதாம் மாதம் உடல் பூரணமாக வலுவடைய உடல்காரகனாகிய சந்திரனே அதிபதி ஆகிறார்

பத்தாம் மாதம் சிசுவின் சிரசு திரும்பி பிறக்கும் நேரம் - சூரியனே அதிபதி ஆகிறார்.

நட்சத்திரங்கள் 27

1. அசுவினி

2. பரணி

3. கார்த்திகை

4. ரோகிணி

5. மிருகசீரிடம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்தரட்டாதி

27. ரேவதி

இவற்றில் மேல்நோக்கு,கீழ்நோக்கு, சமநோக்கு நட்சத்திரங்கள் எவை என்பதை நாம் இப்போதுபார்ப்போம்

மேல்நோக்கு (ஊர்த்துவமுக) நட்சத்திரங்கள்

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி - 9 நட்சத்திரங்கள்

கீழ்நோக்கு (அதோமுக) நட்சத்திரங்கள்

பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி - 9 நட்சத்திரங்கள்

சமநோக்கு (திரியக்முக) நட்சத்திரங்கள்

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி - 9 நட்சத்திரங்கள்

நட்சத்திர பாதம்

ஒரு ராசிக்கு ஒரு கிரகம் அதிபதி ஆகும். ஒரு ராசிக்கு ஒரு கிரகம் அதிபதி என்றாலும் கூட ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. ஒரு ராசியில் ஒன்பது கிரகங்களுக்கும் பங்கு உண்டு என்பதால் ஒரு ராசியானது ஒன்பது பாகமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாகம் என்பதே பாதம் என வழங்கப்படுகிறது. கால் பாகமே பாதம். நான்கு கால்களைக் கூட்டினால் ஒன்று. பத என்கிற வடமொழிச் சொல்வே நாளடைவில் பாதம் என வழங்கப்பட்டது. பத என்றால் கால் அல்லது பாகம் என்று பொருள்படும்.

காலற்ற,உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் காலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும்.

ஏனெனில், இந்த 9 நட்சத்திரங்களின் ஒரு பாதமோ அல்லது இரண்டு பாதமோ ஒரு ராசியிலும், மீதி அடுத்த ராசியிலும் இருக்கும். அதனால் தான் இந்த நட்சத்திரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

காலற்ற, உடலற்ற, தலையற்ற நட்சத்திரங்களில் சுபகாரியங்கள் எதுவும் செய்தல் கூடாது என்று சோதிட சாத்திரம் கூறுகிறது.

ஒரு நட்சத்திரத்தின் முதல் பாதம் கால்

இரண்டு மற்றும் மூன்றாம் பாதங்கள் உடல்

நான்காம் பாதம் தலை

உதாரணமாகப் பார்த்தால் கார்த்திகை நட்சத்திரத்தின் கால் பகுதியான முதல் பாதம் மேஷ ராசியில் உள்ளது. ஆனால் உடல், தலை பகுதிகளான 2,3,4 ஆகிய பாதங்கள் ரிஷப ராசியில் உள்ளன. கால் பகுதி மட்டும் வெட்டப்பட்டு மேஷ ராசியில் உள்ளதால் காலற்ற நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இது போலவே உத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தின் கால்கள் வெட்டப்பட்டுள்ளன என்பது அறியத்தக்கது.

தலை மட்டும் வெட்டப்பட்டு நிற்கும் நட்சத்திரங்கள் தலையற்ற நட்சத்திரங்கள் எனப்படும். உதாரணமாகப் பார்த்தால் புனர்பூசம் நட்சத்திரத்தின் தலைப் பகுதியான 4வது பாதம் கடக ராசியில் உள்ளது. ஆனால் உடல் மற்றும் கால் பகுதிகளான 1,2,3 பாதங்கள் மிதுன ராசியில் உள்ளன. தலைப்பகுதி வெட்டப்பட்டதால் இது தலையற்ற நட்சத்திரம் எனப்படுகிறது. இது போலவே விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தின் தலை வெட்டப்பட்டு உள்ளது. அவையும் தலையற்ற நட்சத்திரங்களே.

உடலின் நடுப்பகுதி வெட்டப்பட்டு நிற்கும் நட்சத்திரங்கள் உடலற்ற நட்சத்திரங்கள் எனப்படும். உதாரணமாக மிருகசீரிட நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் 1,2 பாதங்கள் ரிஷப ராசியிலும் 3,4 பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளன. உடல்பகுதி மற்றும் வெட்டப்பட்டு இரண்டு துண்டானதால் இது உடலற்ற நட்சத்திரம் எனப்படும். சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களின் உடல் பகுதி வெட்டப்பட்டுள்ளது.

இராமபிரான் புனர்பூசம் 4ஆம் பாதத்தில் பிறந்தால். எனவே 4ஆம் பாதம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான பண்டிகைகள், கோவில் விசேடங்கள்,பௌர்ணமி, அமாவாசை முதலியன ஒரு நட்சத்திரத்தின் 4வது பாதத்தின் நிலையை அனுசரித்தே நிர்ணம் செய்யப்படுகிறது.

தலையற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி)பிறந்தவர்கள் - காலற்ற நட்சத்திரங்களில் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்) பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இந்த ஆறு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இதே நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

இதேபோல உடலற்ற நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் இதே நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

யுகங்கள்

சதுர்யுகம் என்றால் நான்கு.

கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயும், கலியுகம்

மனிதர்களுடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்

மனிதர்களுடைய 360 வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு வருடமாகும்

கிரேதாயுகம் - 4800 தேவ வருடங்களைக் கொண்டது. 4800 ஜ் 360 = 17,28,000 மனித வருடங்கள் கொண்டது கிரேதாயுகமாகும். முதல் யுகமான கிரேதாயுகம் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை நவமி திதியில் தொடங்கியது. இந்த யுகத்தில் தான் அரிச்சந்திரன், நளச்சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த யுகத்தில் வாழ்ந்தவருக்கு வயது ஒரு இலட்சம். அதுவரை அவர்களுக்கு மரணம் வராது. நோய்நொடி இல்லை. மருத்துவர்கள் இல்லை. விதவைகள் கிடையாது. மனிதனின் உயரம் 5 பனைமர உயரம் ஆகும். முள்மரங்கள் கிடையாது. கனி கொடுக்கும் மரங்களே இருந்தன. பகை இல்லை. அவமதித்தல், துன்பம் செய்தல், நன்றி மறத்தல், நீதிநெறி தவறுதல், பிறர் பொருளை அவமதித்தல் கிடையாது.

திரேதாயுகம்

3600 தேவ வருடங்கள் கொண்டது. 12,96,000 மனித வருடங்களைக் கொண்டது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியில் திரேதாயுகம் தொடங்கியது. இது அட்சய திருதியை எனப்படும். இந்த தினத்தில் தான் பரசுராமர் பிறந்தார். திரேதா யுகத்தில் தான் ராமர் பிறந்தார். கால் பங்கு மக்கள் பாவம் செய்யத் தொடங்கினர். நோய்கள் ஏற்படத் தொடங்கின. துக்கம் பரவியது. புண்ணியம் குறைந்தது. கால்பங்கு பாபம் அதிகரித்தது. சிற்றின்பம் அதிகரித்தது. ஆயுள் 50,000 வருடங்கள் ஆயிற்று. மனிதனின் உயரம் 2 பனை மரம் உயரமாகக் குறைந்தது.

துவாபர யுகம் 2400 தேவ வருடங்களைக் கொண்டது. 8,64,000 மனித வருடங்களைக் கொண்டது. கண்ணன் அவதரித்தது இந்த யுகத்தில். மகாபாரத யுத்தம் நடந்தது இந்த யுகத்தில். கண்ணன் துவாரகையில் 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்து ஒரு வேடனால் மரணமடைந்தார். அவர் மறைந்தவுடன் கலி புருடன் இந்தப் பூமியில் பிரவேசித்தான்.

கலியுகம் 1200 தேவ வருடங்களைக் கொண்டது. 4,32,000 மனித ஆண்டுகளைக் கொண்டது. ஆவணி மாதம் தேய்பிறை திரயோதசி திதியில் கலிபுருடன் தோன்றினான். தற்போது நடப்பது கலியுகம் 5107. இன்னும் 4,20,893 ஆண்டுகள் செல்ல வேண்டும். இந்த யுகத்தில் அதர்மம் விருத்தியாகும். தர்மம் அழியும். மனிதர்கள் உயரம் குறைந்து கொண்டே வரும். பெண்கள் 5 அல்லது 6 வயதுகளில் கூட கர்ப்பவதி ஆவார்கள். கலியுக முடிவில் மனிதனின் உயரம் சாண் அளவுக்கே இருக்கும். மழை குறைந்து மக்கள் மாண்டு போவர். பின்னர் மீண்டும் கிரேதாயுகம் ஆரம்பமாகும்.

கிரேதாயுகத்தில் 12 ஆண்டு காலம் தர்மம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அதை திரேதா யுகத்தில் 6 மாதம் தர்மம் செய்தால் கிடைக்கும். துவாபர யுகத்தில் ஒரு மாதத்தில் அந்தப் பலன் கிடைக்கும். கலியுகத்தில் ஒரு நாள் அந்த மாதிரி தர்மம் செய்தால் அந்தப் பலன் கிடைத்துவிடும். இறைவனின் நாமத்தை உச்சரிப்பவர்களை கலி புருடன் அணுகமாட்டான்.

திதிகள்

No comments:

Post a Comment