எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
சரி இன்றைய விண்மணி சிந்தனையுடன் நாம் இன்றைய தகவல் பகிர்வுகளைத் தொடர்வோம்.
உலகில் நாம் பிறந்ததே மகிழ்சியான ஒன்று தான் வாழும்
காலம் வரை யாருக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்து
விட்டு செல்வோம்.
சில பொது அறிவுக் கேள்விகளைப் பார்ப்போமா?
1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
சோவியத் ரஷ்யாவின் ஒப்பற்ற தலைவர் - சிற்பி என்றெல்லாம் கருதப்படும் லெனின் அவர்களின் சிலை தான் உலகில் அதிகமாக நிறுவப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இந்தியாவில் முனைவர் அம்பேத்கர் அவர்களுக்குத் தான் அதிக சிலைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
கரையான் தான் அந்த உயிரினம்.
லில்லி பூக்களை உடைய நாடு எது ?
லில்லி பூக்கள் கனடா NATTIL தான் அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.
8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
முகரி ராகம் தான் சோகத்தைக் குறிக்கும் ராகம் ஆகும்.
"சம்பூர்ண இராமாயணம்" என்னும் திரைப்படத்தில் இலங்கேஸ்வரன்
இராவணன் பாடும் பாடலில் கூட பல இரகங்களைப் பற்றி தகவல்
கொடுக்கப்பட்டுள்ளது.
நதிகள் இல்லாத நாடு எது ?
சவுதி அரேபியா என்று சொல்லுகிறார்கள்.
சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
மீதேன் வாயு கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.
தினசரி பொது அறிவு நூலிலிருந்து சில கேள்விகளையாவது இளைஞர்கள்
படிக்க வேண்டும். ஒரு நாள் சரித்திரம் பற்றி படித்தால் ஒரு நாள்
விளையாட்டுத் துறையைப் பற்றி படிக்க வேண்டும். பல தலைப்புகளில்
படித்தால் தான் போட்டித் தேர்வுகளுக்கு நாம் நல்ல முறையில் தயார் செய்து கொள்ள முடியும்
சில நாட்களாக அமெரிக்கப் பத்திரிகைகளில் GROUND ZERO என்று அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. என்ன என்று விகிபீடியாவைப் புரட்டிப் பார்த்தேன்.
The term ground zero (sometimes also known as surface
zero[1] as distinguished
from zero point[2]) may be used to
describe the point on the Earth's surface where an explosion occurs. In the case
of an explosion above the ground, ground zero refers to the point on the
ground directly below an explosion (see hypocenter).
The term has often been associated with nuclear explosions and other large bombs, but is also used in relation to earthquakes, epidemics and other disasters to mark the point of the most severe damage
or destruction. The term is often re-used for disasters that have a geographic
or conceptual epicenter
குண்டு வைத்து தகர்பட்டு மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்ட ஒரு கட்டிடத்தைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. அது வெடிகுண்டால் நிகழலாம், பூகம்பத்தால் நிகழலாம் - மற்றும் ஏதாவது ஒரு பேரழிவின் காரணமாகக் கூட நிகழலாம். சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் நகரில் விமானம் மோதி தரைமட்டம் ஆக்கப்பட்ட நகரத்தின் மிக உயர்ந்த இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதே - அந்த இடத்தைத் தான் அமெரிக்காவில் இப்போது அப்படி அழைக்கிறார்கள். இப்போது அந்த இடத்தில மீண்டும் கட்டுமான வேலை நடந்து கொண்டு இருக்கிறது. தேனீக்கள் போல மக்கள் இரும்புப் பாலங்களைப் பற்றவைத்து புதிய கட்டிட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. அந்தக் கட்டிடத்தின் எதிரில் உள்ள ஒரு சிறு பூங்காவில் அமர்ந்து நான் அந்த பிரமிப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த கட்டிடத்திற்கு மிக அருகமையில் இசுலாமியர்கள் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்ட முயற்சி செய்கிறார்கள். கட்டக் கூடாது என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் நினைக்கிறார்கள். கட்ட வேண்டும் என்று இசுலாமியர்கள் துடிக்கிறார்கள். இரு தரப்பினரும் கடந்த வாரம் ஊர்வலங்கள் நடத்தி இருக்கிறார்கள். இதை ஒட்டியே GROUND ZERO என்ற வாசகம் செய்திகளில் அடிபட்டது.இதுமட்டும் அல்ல ஒபாமா கிருத்துவரா அல்லது இசுலாமியரா என்றெல்லாம் கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டிருந்தன ஊடகங்கள். இறுதியில் அவர் அமெரிக்கக் கிருத்துவர் என்று கூறினார்கள். ஜனநாயகத்தில் எவ்வளவு சுதந்திரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது பாருங்கள். தொடர்வேன்...
No comments:
Post a Comment