Thursday, August 26, 2010
americavil salaigal
விமான நிலையத்திற்கு என் மகன் சந்திரநாத் ஒரு பெரிய மகிழுந்துடன் வந்திருந்தான். அதில் பெட்டிகளை ஏற்றியவுடன் நாங்கள் புறப்படத் தயாரானோம். இந்த மகிழுந்தில் ஓட்டுனர் இடது புறம் அமர்கிறார். நான் வலது புறம் உட்கார்ந்தேன். அமர்ந்தவுடன் பட்டியை மாட்டிக் கொள்ளுங்கள் அப்பா என்று கூறினான் என் மகன். ஆம் சட்டப்படி பட்டி அணியாமல் ஓட்டுநரோ முன் இருக்கையில் அமர்பவரோ ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளோ மகிழுந்தில் செல்லக்கூடாது என்பது விதியாம். சட்டத்திற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள் இங்கே. காரணம் சட்டத்தை அமல் படுத்துவதில் காவலர்கள் மிக சிரத்தையாக உள்ளார்கள். வண்டியில் ஒரு கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அது ஒரு மின்னணு வழிகாட்டி என்று என் மகன் சொன்னான். இடது புறம் திரும்பு வலது புறம் திரும்பு சாலைப் பிரிவுகள் வந்தால் எந்தப் பிரிவில் செல்ல வேண்டும் என்றெல்லாம் அந்த கருவி கட்டளை இட்டுக்கொண்டே வந்தது. இந்த நாட்டில் நமக்குப் பாதை தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கருவியில் போகும் முகவரியைக் கொடுத்தல் அது முறையாக வழிகாட்டி நாம் சேரவேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நம் ஊரில் இந்த வசதி எப்பொழுது வருமோ தெரியவில்லை. சாலைகள் அகலமாக இருந்தன. மெதுவாகச் செல்லும் வாகனங்களுக்கு ஒரு பிரிவு, வேகமாகச் செல்பவர்களுக்கு ஒரு பிரிவு, இடது புறம் திரும்ப வேண்டி இருந்தால் அதற்கு ஒரு பிரிவு, வலது புறம் திரும்ப வேண்டி இருந்தால் அதற்கு ஒரு பிரிவு என்றெல்லாம் இருந்தது. இந்த விஷயம் வழிகாட்டும் கருவிக்குத் துல்லியமாகத் தெரிகிறது. நாம் பாதை மாறிச் சென்றாலும் மீண்டும் போக வேண்டிய பாதைக்கு மற்று வழியில் நம்மை அழைத்துச் செல்கிறது. வானிலிருந்து நமது வண்டி எப்படி எல்லாம் போகிறது என்பதை அந்தக் கருவி வான் வெளியில் உள்ள செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கிறது. இங்கே விரைவுச் சாலையில் ஒருபுறம் தான் போக முடிகிறது. எதிர்திசையில் செல்லும் வாகனங்கள் செல்ல தனி சாலை வசதி உள்ளது. குறுக்கே திரும்பி எதிர்புறம் நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் செல்ல முடியாது. ஊர்கள் வரும் பொது அறிவிப்பு பதாகைகள் வருகின்றன. வலதுபுறம் திரும்பி பிரிவுச் சாலையில் பயணித்து அருகில் உள்ள பலத்தில் ஏறி நாம் செல்ல வேண்டிய ஊருக்குப் போகவேண்டி வருகிறது. சிறிய ஊர் என்றால் இரண்டு exit உள்ளது - பெரிய ஊர் என்றால் எட்டுக்கும் மேற்பட்ட exit கள் உள்ளன. எவ்வளவு வேகமாகச் சென்றாலும் எதிர்வரும் வாகனத்தோடு நாம் மோத முடியாத அளவுக்கு சாலை அமைப்பு உள்ளது. சாலையில் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று பதாகைகள் அங்காங்கே உள்ளன. காவல்துறையினர் அங்காங்கே ஒரு கருவியுடன் நிற்கிறார்கள். அந்த கருவி கொண்டு பார்த்தல் நமது வண்டி எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பது தெரியுமாம். உடனே வழிமறித்து ஓலை கொடுப்பார்களாம். அவ்வாறு ஓலை வாங்கினால் அடுத்த முறை காப்பீட்டுத் தொகை செலுத்தும் பொழுது கூட கட்ட வேண்டுமாம். எனவே தான் விழிப்போடு வாகனங்களை ஓட்டுகிறார்கள். வேகக் கட்டுப்பாட்டை மிகவும் மதிக்கிறார்கள். ஓட்டுனர் ஒய்வு எடுக்க நினைத்தால் எத்தனை மைல் தொலைவில் இடங்கள் உள்ளன என்று அங்காங்கே பதாகைகள் வருகின்றன. ஒய்வு எடுக்கும் இடத்தில வாகனங்கள் நிறுத்த இனம் வரியாக மகிழுந்துகளுக்கு தனி இடம், சரக்குந்துகளுக்குத் தனி இடம் என ஒதுக்கப் பட்டு உள்ளது. மாற்றுத் திறந்ழிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. எல்லோரும் வாகனங்களை குறிப்பிட்ட இடங்களில் குறிக்கப்பட்ட கோடுகளுக்கு இடையில் சரியான முறையில் நிறுத்துகிறார்கள். ஒய்வு எடுக்க வேண்டிய இடத்தில அருமையான கழிப்பறைகள் (இலவசம் தான்-கட்டணம் எதுவும் கிடைத்து - ஆனால் மிகத் தூய்மையான முறையில் பராமரிக்கப் படுகின்றன) உணவகங்கள் (கொள்ளை அடிப்பவை அல்ல), கனிவான முறையில் நடந்து கொள்கிறார்கள். நாற்பது மைல்களுக்கு உட்பட்டே இப்படி ஒய்வுசாலைகள் வருகின்றன. எனவே பிரயாணக் களைப்பு இல்லை. கருவி வழிகாட்ட ஒருவழியாக நாங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். தொடர்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment