தமிழிலேயே சிந்தியுங்கள் - தமிழ் தெரிந்தவர்களுடன் தமிழிலேயே உரையாடுங்கள் - தமிழ் தெரிந்தவர்களுக்கு தமிழிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள் - தாய்மொழியைப் போற்றுங்கள்
சரி குழந்தைகளுக்கு அமெரிக்காவில் எப்படி முன்னுரிமை தரப்படுகிறது என்று பார்ப்போம்/ நமது ஊர்களில் குழந்தைகள் பள்ளிகூடத்திற்கு தானியங்கி மூன்று சக்கர வண்டியில் அனுப்புவோம். அவர்களைப் பொதி ஏற்றுவது போல் ஏற்றிக்கொண்டு பள்ளிப்பைகளை குப்பை போல வீசி அழைத்துச் செல்வார்கள். இங்கே பள்ளி வாகனங்கள் செல்ல குறிப்பிட்ட சாலைகள் உள்ளன. இந்த வாகனங்களுக்கு என நிறுத்தங்கள் உள்ளன. சாலையைக் கடக்க வெள்ளைக் கோடுகள் உள்ளன. அந்த மாதிரி இடங்களில் தான் இந்த ஊர்தியை நிறுத்துகிறார்கள். மஞ்சள் வண்ணத்தில் இந்த ஊர்திகள் உள்ளன. இவை நின்றவுடன் இடதுபுறம் stop என்று ஒரு பதாகையை நேட்டுகின்றன. உடனே பினனால் வரும் வண்டிகளும் எதிர்புறம் வரும் வண்டிகளும் நிறுத்தி விடுகிறார்கள். குழந்தைகள் சாலையைக் கடந்து வண்டியில் ஏற இப்படி பாதுகாப்பு செய்து கொடுக்கிறார்கள். பினனால் வருவோரும் எதிர்புறம் வருவோரும் நிறுத்தாமல் போனால் அபராதம் விதிக்கப் படுமாம். எனவே சட்டத்திற்கு அஞ்சி வாகனங்களை நிறுத்துகிறார்கள். அதே போல மகிழுந்துகளில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்காகத் தனி இருக்கைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பட்டி போட்டு கட்டி அழைத்துச் செல்ல வேண்டும். சுற்றுலா மற்றும் வணிக வளாகங்களுக்குச் செல்லும்போது குழந்தகைளை அழைத்துச் செல்ல எல்லோரும் ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வருகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் நகரும் படிகளில் சென்றால் இவ்வாறு வருபவர்களுக்காக மின்தூக்கிகள் உள்ளன. அதிலே குழந்தைகளை தள்ளுவண்டியில் சுகமாக அழைத்துச் செல்ல முடிகிறது. அனேகமாக எல்லா சிறார்களுக்கும் இடுப்பிலே டைபர் என்று அழைக்கப்படுகிற இடைச் சிற்றாடை ஒன்றை அணிவித்தே அழைத்து வருகிறார்கள். எனவே குழந்தைகள் கண்ட இடங்களிலே சிறுநீர் கழித்து விடுவார்களோ மலம் கழித்து விடுவார்களோ என்ற அச்சம் இல்லை. சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகத் - தூய்மையாக வைத்துக் கொள்ள முடிகிறது. எல்லா வணிக வளாகங்களிலும் ஆண்களுக்கு என பெண்களுக்கு என தனி கழிப்பறைகள் வைத்து இருக்கிறார்கள். இவற்றை RESTROOM என்று அழைக்கிறார்கள். நன்றாகப் பராமரிக்கப் படுகின்றன. கை கழுவ சுடுநீர் கூட கிடைக்கிறது. கையை உலர்த்திக்கொள்ள சூடான கற்று வரும் பொறிகளும் அங்கு நிறுவப்பட்டு உள்ளன. இப்படி எல்லா இடங்களிலும் சுற்றுபுரதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதிலே இங்குள்ள மக்கள் மிகவும் அக்கறையாக இருக்கிறார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால் நமது நாட்டில் இருக்கும் போது சுற்றுபுரதைப் பற்றி கவலை கொலதவர்கள் கூட இங்கு வந்து இந்த சூழ்நிலையைப் பார்த்து தங்களைக் கட்டுபடுத்திக்கொண்டு மாற்றிக்கொள்கிறார்கள். எங்கே நடந்து போகும் போது எதிரே வருபவர்கள் ஆணாலும் சரி பெண்ணாலும் சரி hai how are you? என்று நம்மைக் கேட்கிறார்கள். நல்ல பழக்கம். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இப்படி எராளமாக உள்ளது.
No comments:
Post a Comment