Wednesday, August 25, 2010
visit to america from madurai
நான் மதுரை மாநகரிலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று என்னுடைய இளநிலைப் பட்டதை மதுரை தியாகராஜர் கலைக் கல்லூரியில் பெற்றேன். தியாகராஜர் கலைக் கல்லூரி என்றவுடன் புல்லரிக்கிறது. ஆம் எனக்கு தமிழ் உணர்வை ஊட்டிய கல்லூரி அது. 1968-69 இல் நான் புகு முக வகுப்பு படிக்க நுழைந்தவுடன் ஆசிரியர் தமிழில் தான் வருகையைக் கூற வேண்டும் என்றார். உள்ளேன் ஐயா என்றேன். அங்கு தொடங்கியது எனது தமிழ் ஆர்வம். கல்லூரி நடந்தது சில நாட்கள். வேலை நிறுத்தம் என்ற பெயரில் பல நாட்கள் விடுமுறை. சிதம்பரம் செட்டியார் என்பவர் முதல்வர். தமிழில் ஏற்பட்ட கடலால் தமிழை நன்றாகப் படித்தேன். கடிதம் எழுதும் போதெல்லாம் தூய தமிழைப் பயன்படுத்தினேன். என் தந்தைக்கும் மாமாவுக்கும் புரியவில்லை. டேய் ஒழுங்காகத் தமிழில் எழுது. நீ எழுதுவது ஒன்றும் புரிய வில்லை என்றார்கள். ஆனாலும் தொடர்ந்தேன். நான் படிக்கும் பொது தான் அண்ணன் காளிமுத்து, காமராஜ், சேடபட்டி முத்தையா போன்றோர் அந்த கல்லூரியில் படித்தனர். தமிழண்ணல், சங்கரநாராயணன், கதிர் மகாதேவன். சுந்தரம், சுப. அண்ணாமலை என்று அறிஞர்கள் பலர் இருந்தார்கள். தமிழ் உணர்வை எங்களுக்கு ஊட்டினார்கள். புகுமுக வகுப்பிலே ஆங்கிலத்தில் B plus ஆனால் தமிழில் A plus. கணிதம், பௌதிகம், ரசாயனம் வில் போன்றவற்றில் நிறைய மதிப்பெண்கள் வாங்கினேன். எனக்கு கணக்குப் பாடம் என்றால் வேம்பாகக் கசந்தது. ஆனாலும் அதிலும் நிறைய மதிப்பெண்கள் வாங்கினேன். எனக்கு ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல். காரணம் அப்பொழுது அந்த பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு நிறைய மரியாதையை இருந்தது. தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment