think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your mothertongue
தாய்மொழியில் சிந்தியுங்கள் - தாய்மொழி தெரிந்தவருடன் தாய்மொழியிலேயே பேசுங்கள் - தாய்மொழியிலேயே இறைவழிபாடு நடத்துங்கள் - தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள் -நமது முன்னோர்களை நினைவு கூறுங்கள்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
நண்பர்களே நான் வலைத் தளங்கள் எவ்வாறு எல்லாம் உபயோகமாக உள்ளன என்பதை என் முன் பதிவில் கூறி உள்ளேன்.
அமெரிக்காவில் என் மகன் மகிழுந்தில் போகும் பொது GPS என்னும் கருவி எப்படி நமது பாதையைக் கணக்கிட்டு வழி நடத்துகிறது என்று விளக்கி உள்ளேன். இது எல்லாம் எப்படி சாத்தியம் என்று நான் சிந்திந்துக் கொண்டிருந்தேன். வானில் ஏவப்பட்ட நவீன கோள்களின் உதவியுடன் இந்தப் பணி எளிதாக நடக்கிறது என்று என் மகன் கூறினான். இது குறித்து கட்டுரைகள் படித்து இருக்கிறேன். ஆனால் புரிந்து கொள்ள இதுவரை முயற்சி செய்தது இல்லை. என் மகன் உடனே கூகுள் என்னும் தேடு போறியச் சொடுக்கி அதில் MAP என உள்ள இடத்தில சொடுக்கினான். தேடு பொறியில் வரைபடம் குறித்த சன்னல் திறந்தது. அதிலே அவனுடைய முகவரியைத் தட்டினான். என்ன ஆச்சரியம். நான் அமர்ந்து இருந்த வீடு - எதிர் வீடு = பூங்கா என கச்சிதமாகத் தெரிந்தது. எங்கள் வீட்டிற்கு எதிரே ஒரு உயர்நிலைப் பள்ளி - அதில் தினமும் நடக்கும் சிவப்பு வண்ணத்தில் இருந்த ஓடுபாதை எல்லாம் தெரிந்தது. உடனே நான் மதுரையில் உள்ள என் வீட்டின் முகவரியைத் தட்டினேன் - அஞ்சல் குறியீட்டுடன். ஆச்சரியம். கொடிக்குளம் பகுதி தெரிந்தது. என் வீட்டிற்கு அருகில் உள்ள மகாத்மா பள்ளியைத் தேடினேன். தெரியவில்லை. மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் தெரிந்தது. மீனாக்ஷி மருத்துவ மனை தெரிந்தது. அழகர்கோயில் சாலை - மேலூர் சாலை - சிவகங்கை சாலை எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. என்ன வித்தியாசம். அமெரிக்காவில் இன்றைய தேதி வரை உள்ள தகவல்களை கொடுக்கிறார்கள். நமது வரைபடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த வரைபடம் தெரிகிறது. அப்டேட் செய்யவில்லை. நம் அரசு இப்பணியைத் தொடருமா. கனவில் மிதக்கிறேன். தொடர்வேன்...
No comments:
Post a Comment