Wednesday, August 25, 2010
americavil amarnath
கடந்த ஜூன் 25 ஆம் திகதி நான் சென்னை விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் ஜான் எப் கென்னடி விமான நிலையம் நோக்கி செல்ல விமான நிலையம் வந்தேன். சென்னை விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. எனவே உடன் வந்தவர்கள் வந்த வேகத்திலேய என்னைப் பிரிய நேர்ந்தது. முதன் முதலாக விமானப் பயணம். அதுவும் துணைவியுடன். இனம் புரியாத திகைப்பு என்னிடம் குடி கொண்டிருந்தது. இருந்தாலும் ஒரு தள்ளு வண்டியில் என் பெட்டியை வைத்துக் கொண்டு எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே நுழைந்தவுடன் ஒருவர் என்னைக் கூப்பிட்டு ஐயா பெட்டி தூக்கிப் போடும் பொது பிரிய வாய்ப்பு உள்ளது எனவே இந்த பாலிதீன் நெகிழித் தாளை சுற்றினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். சரி இது வழக்கம் போல என்று நினைத்து சுற்றபபா என்றேன். உடனே ஒரு பொறியில் என் பெட்டியை வைத்தான். நெகிழித் தாழ் சுற்றப்பட்டது. உடனே ஐயா 200 ரூபாய் கொடுங்கள் என்றன். ஏனப்பா என்றேன். இதற்கு கட்டணம் எனறான். இதை முதலில் சொல்லி இருக்க வேண்டும் அல்லவா என்று கேட்டேன். நீங்களும் முதலில் எவ்வளவு என்று கேட்டிருந்தால் நானும் சொல்லி இருப்பேன் என்று பதில் வந்தது. சரி தாளை எழுத்து என்று கூறிக் கொண்டே மற்ற பெட்டிகளுக்கு நெகிழிச் சுற்று இல்லாமல் கிளம்பினேன். உள்ளே நுழைந்தவுடன் ஒரு இடத்தில வரிசையில் நிற்கச் சொன்னார்கள். நின்றேன். என் உடமைகளை சோதித்தார்கள். என் பெட்டியை ஒரு சோதனைக் கருவியில் அனுப்பினார்கள். மறுபுறம் சென்று என் உடமைகளைப் பெற்றுகொண்டேன். பிறகு ஜெட் airlines வைத்திருந்த இடத்திற்குச் சென்று என்னிடம் இருந்த மின் பயணச் சீட்டைக் காண்பித்தேன். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். என்னிடம் இருந்த பெட்டிகளை வங்கி எடை போட்டார்கள். அதிலே பல வண்ண அட்டைகளை ஒட்டினார்கள். என்னிடம் புதிய பயணச் சீட்டு ஒன்று கொடுத்தார்கள். என் கையில் கொண்டு போகும் கைபைக்காக ஒரு சீட்டு கொடுத்தார்கள். அது போக ஒரு தலைக் கொடுத்து இதைப் பூர்த்தி செய்து சுங்கத் துறை ஏற்பாடு செய்திருக்கும் பிரிவிற்குப் போகச் சொன்னார்கள். படிவங்களைப் பூர்த்தி செய்தேன். சோதனை முடிந்தது. உள்ளே கூடத்தில் போய் அமர்ந்தோம். எங்கள் விமானப் பயணத்திற்கு அழைப்பு வரும் என்பதால் மின்னணுப் பலகையைப் பார்த்து கொண்டே அமர்ந்தோம். அழைப்பு வந்தது. மீண்டும் சோதனை செய்தார்கள். உள்ளே போகச் சொன்னார்கள். உள்ளே போனேன். சிறிது நேரத்தில் நான் கட்டடத்தில் இருந்து நேரடியாக விமானத்திற்குள் சென்று விட்டேன். நான் திரைப் படங்களில் வருவது போல் ஏணியில் ஏறி எல்லோருக்கும் கைஅசைத்து போக வேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால் நேரே விமானத்திற்குள்ளேயே சென்று விட்டேன். புதுமையான அனுபவம். நேரம் கடந்தது. அறிவிப்பு வந்தது. பட்டையைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள். கட்டிகொண்டோம். இருக்கைக்கு முன்னால் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று இருந்தது. அதில் தான் அறிவிப்புகள் வந்தன. அதிலே சில திரைப்படங்களைப் பார்க்கும் வசதியும் இருந்தது. அருமையான அனுபவம். அருந்த தேநீர் கொடுத்தார்கள். விமானம் கிளம்பியது. சென்னை மாநகரம் புள்ளியாக மாறியது. நான் உயர உயரப் போனேன். பயணம் மிக நன்றாக இருந்தது. பல மணி நேரம் கழித்து புருச்செல் என்று ஒரு நகரம் வருவதாகவும் எல்லோரும் இங்கே இறங்கி பின்னர் வேறு விமானத்தில் நியூயார்க் போக வேண்டும் என்றும் கூறினார்கள். மனதில் இனம் புரியாத உணர்வு மீண்டும் வந்தது. ஆனால் அந்த நகரத்தில் இருந்த விமான நிலையத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிக வியப்பாக இருந்தது. அளவற்ற அன்பு. சிறந்த வழிகாட்டுதல்கள். கண்டிப்பான சோதனைகள். தூய சுற்றுச் சூழல். அருமையான இருக்கைகள். தூய்மையான கழிப்பிட வசதிகள். வியந்தேன். எங்கள் ஊரை எண்ணி வருந்தினேன். எங்கேயும் கட்டணம் என்று பிடுங்கவில்லை. ஆனால் மிகத் தூய்மையாக பராமரிக்கப் பட்டன மக்களும் பொறுப்போடு நடந்து கொண்டார்கள். நாம் மதுரையில் இறங்கி கழிப்பிடங்களைத் தேடினால் உள்ளே போக 3 ரூபாய் வேண்டும் என்பார்கள். உள்ளே நுழைந்தால் மிக அருவருப்பாக இருக்கும். ஏன் இந்த பொறுப்புணர்வு இல்லாத நிலை? மக்களிடம் குறையா? நிர்வாகிகளிடம் குறைய? சட்டத்தை அமுல் செய்வதில் சிக்கல? நடைமுரைப்படுதுவதில்லையா? இப்படி ஏராளமான சிந்தனைகள். நான் மதுரை மாநகராட்சியில் ஆணையாளரின் உதவியாளராக பணி பார்த்தால் மிகவும் வெட்கப்பட்டு வேதனைப் பட்டேன். இப்படியெல்லாம் நமது மதுரை மாநகர மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். கழிப்பிடங்களை ஏலம் விட்டு ஏலதரரின் பிடியில் பயணிகளைத் தவிக்க விடுகிறோமே என்று சிந்தித்தேன். மீண்டும் மின்னணுப் பலகையில் நியூயார்க் பயணிகளுக்கு அழைப்பு வந்தது. மீண்டும் விமானத்தில் ஏறினேன். பயண முடிவில் நியூயார்க் நகர் நெருங்கிக் கொண்டிருந்தது. கடுமையான வெயில். கடலும் சாலைகளும் அங்கங்கே கட்டிடங்களும் தெரிந்தன. பின்னர் கட்சிகள் விரிந்தன. பரபரப்பான சாலைகள். பழங்கள். உயர்ந்த கட்டிடங்கள். கண்ணைக் கவரும் கட்சிகள். பிருமாண்டமான பிரமிப்பாக இருந்தது. இதோ நியூயார்க் வந்து விட்டது. பட்டைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள். விமான நிலையம் ப்ருச்செல்ஸ் ஆனாலும் சரி நியூயார்க் ஆனாலும் சரி அருமையான பராமரிப்பு. நியூயார்க் நகர விமான நிலையத்தில் இறங்கினோம். இங்கேயும் சுங்கப் பிரிவுச் சோதனை இருந்தது. கடவுச் சீட்டில் இதனை நாட்கள் அமெரிக்க நாட்டில் தங்கி இருக்கலாம் என்று குறித்தார்கள். எனக்கு 5 மாத அவகாசமும் என் துணைவிக்கு ஒரு மாத அவகாசமும் கொடுத்து இருந்தார்கள். நான் கவனிக்கவில்லை. வேகமாக வரிசையை விட்டு வெளியே வந்தேன். பெட்டிகளைத் தேடினேன். இருந்தன. ஒரு அமெரிக்கர் என்னை நெருங்கி எனக்கு பாத்து டாலர் கொடுங்கள் பெட்டிகளை வெளியே கொண்டு வந்து தருகிறேன் என்று கூறினார். தள்ளு வண்டியை வாடகைக்கு எடுத்தாலும் ஒரு வண்டிக்கு ஐந்து ரூபாய். இரண்டு வண்டிக்கு பத்து ரூபாய் ஆகும். எனவே.சரி என்றேன். வெளியே வந்தேன். என் மகன், மருமகள். பேரன்(ஒரு மாதம் வயது ) பேத்தி ஆகியோர் காத்திருந்தார்கள். ஒருவழியாக அமெரிக்கா வந்து விட்டேன். மீண்டும் தொடர்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment