think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your mothertongue
தாய்மொழியில் சிந்தியுங்கள் - தாய்மொழி தெரிந்தவருடன் தாய்மொழியிலேயே பேசுங்கள் - தாய்மொழியிலேயே இறைவழிபாடு நடத்துங்கள் - தமிழ் மொழியிலேயே மின்னஞ்சல் அனுப்புங்கள் -நமது முன்னோர்களை நினைவு கூறுங்கள்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
WIKIPEDIA என்று ஒரு அருமையான தகவல் களஞ்சியம் இருக்கிறது. இதிலே போய் நமக்கு வேண்டிய தலைப்பைத் தட்டினால் அது பற்றிய தகவல் கிடைக்கிறது. வேறு எங்கெங்கு அது குறித்த தகவல் கிடைக்கும் என்பதையும் தெரிவிக்கிறது. அருமையான தொகுப்பு. எது த்டினாலும் கிடைக்கிறது. இதை ஒரு மின் நூலாகத் தொகுத்து கை அடக்க IPOD போல விற்கிறார்கள். அறுபது டாலர் என்று சொன்னார்கள். உலகமே நமது கையில். கணிப்பொறி கூட தேவை இல்லை. இந்த சாதனத்தில் தேடினால் உடனே கிடைத்து விடும். புதிதாகத் தகவல் வந்தாலும் அதில் ஏற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இதே போல சிறந்த அகராதியையும் இருபது டாலருக்கு விற்கிறார்கள். பணம் தான் வேண்டும். தகவல் சுரங்கம் நமது பையில்.
இவ்வளவு தகவல் ஆங்கிலத்தில் இருக்கிறதே - தமிழில் இருக்காத என்று நினைத்து விக்கிபீடியா\தமிழ் என்று தட்டினேன். தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழில் தங்கச் சுரங்கம். அதில் நமது பங்களிப்பு என்ன. தலைப்பு வரியாக பல தகவல்கள். இதிலே ஆர்வத்துடன் பங்கேற்பவர்கள் ஈழத்துத் தமிழர்கள் தான். ஈழத் தமிழ் பரவலாகத் தென்படுகிறது. என் நாமும் இந்த ஒப்பற்ற பணியில் நம்மை ஈடுபத்திக் கொள்ளகூடாது. தேடினேன் அதில் உள்ள பல தலைப்புகளை. எராளமான தகவல். தமிழைப் பற்றியே நமக்கு எதுவும் தெரியாமல் தமிழ் வாழ்க என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. அதில் நாம் எல்லோரும் பங்கெடுக்கலாம். ஒரு குழுவாகச் செயல் படுங்கள். தினசரி சில தலைவர்கள் பெயரை = இலக்கியங்களின் பெயரை - உலகத்திற்குத் தெரியாமல் உள்ள பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரைத் தேடுங்கள். இல்லையா? உங்களுக்குத் தெரிந்திருந்தால் - அதற்கான நூல்கள் உங்களிடம் இருந்தால் - தகவலை நீங்களே கொடுக்கலாம். தமிழில் தட்டச்சு செய்ய சில மென்பொருட்கள் தேவை. அவை என்ன என்று அவர்களே கூறுகிறார்கள். அதை அந்த தலத்தில் இருந்த படியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அப்படித் தான் நான் NHM என்று ஒரு தமிழ் தட்டச்சுத் துணையை தரவிறக்கினேன். ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் உடனே வருகிறது. ஆச்சரியம் என்ன என்றால் இது வரை வலைத் தளங்களின் பெயர் ஆங்கிலத்திலும் இல்லாமல் தமிழிலும் இல்லாமல் கட்டம் கட்டமாக வந்தது. இப்போது எல்லாம் தமிழில் தெரிகிறது. வியந்து போனேன். என்னை நானே தட்டிக் கொண்டேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள். கடினம் இல்லை. பல வலைத் தளம் தொடர்பான சொற்களை தெரிந்து கொள்ள முடிந்தது. இதனால் தான் குழுவாக கூடுங்கள் இப்பணிக்காக என்று கூறுகிறேன்.
தமிழ் இணையப் பணிக்காக பல ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள். இதை நான் ஒரு தளத்தில் படித்தேன். ரவி என்னும் நண்பர் தொகுத்து தந்திருக்கிறார். இவர் தமிழக அரசின் உதவியுடன் தமிழ் விக்கிபீடியா பணிக்கு வேலை செய்யப் போவதாகத் தெரிகிறது. நண்பர் ரவி அவர்களின் தொகுப்பை உங்கள் வசதிக்காக நான் தருகிறேன். முகுந்த், மாகிர். கோபி, ஜெகத்=இனியன், மயூரன், காசி, சுரதா, உமர் தம்பி, சிந்தா நதி, நாகராஜன், இராமகிருட்டிணன், சுந்தர், ஆகியோர் அளித்துள்ள பங்களிப்பை விரிவாக BLOG.RAVIDREAMS.நெட் என்ற வலைத்தளத்தில் படித்தேன். அருள்கூர்ந்து அனைவரும் படிக்கவும். பலவகை எழுத்துகள் உருவான வரலாறே இதில் தெரிகிறது. கடுமையான உழைப்பும் தெரிகிறது. அருள் கூர்ந்து நீங்களும் படியுங்கள். தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எங்கே உள்ளது என்பது படிக்க வைப்பு கிடைக்கும். தொடரும்....
No comments:
Post a Comment