Thursday, August 26, 2010

pitru pooja ennum munnor vahipadu

பித்ரு பூஜை என்றால் என்ன?  யார் அதைச் செய்ய வேண்டும் என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை.  தகப்பனார் இருக்கும் வரையில் நமக்கு கவலை இல்லை.  அவர் பித்ரு பூஜையை செய்து விடுவார்.  பித்ரு என்றால் யார்?  நமது முன்னோர்கள்.  தகப்பனார் இறந்த பிறகு அந்தப் பொறுப்பினை மகன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.  முன்னோர்களுக்கு சிரத்தையுடன் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.  அப்படி செய்தால் தான் அவர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள்.  நம் குலம் தழைக்கும்.   எதிரிகள் தொல்லை தரமாட்டார்கள்.  வியாதிகள் அண்டாது.  எல்லா வளங்களும் நமக்குக் கிடைக்கும்.  நம் குடும்பம் சிறப்பான நிலையை அடையும்.
சரி தந்தைக்கு இதிலே அக்கறை இல்லை.  என்ன செய்வது?  அப்படிப்பட்ட நேரத்தில் மகனோ மனைவியோ இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  முன்னோரை நினைவு கூற ஆண்மகன், பெண்மகள் என்ற பேதம் கிடையாது என்று புதிய சரித்திரத்தை நாம் உருவாக்க வேண்டும். 
சரி.  முன்னோரை வட மொழியிலே புரோஹிதரை வைத்துத் தான் நாம் வழிபட வேண்டுமா?  என் முன்னோருக்கு வட மொழி தெரியாது.  அவர்களுக்குத் தெரிந்த மொழியிலே தான் அவர்களை நாம் அழைக்க வேண்டும்.  அது தானே முறை?  எனவே ஒவ்வொருவரும் தாய் மொழியிலேயே முன்னோர்களை வணங்க வேண்டும் என நாம் சரித்திரம் படைக்க வேண்டும்.  அல்லது அவருக்கு தெரிந்த மொழியிலாவது வணங்க வேண்டும்.  நம்மைப் பொறுத்தவரை தமிழ் மொழியே சரியான இணைப்பு மொழி.   நம் முன்னோர்களும் மகிழ்வு அடைவார்கள்.
சரி எப்போது இந்த வழிபாட்டினை நாம் செய்ய வேண்டும்?  இந்த வழிபடு மூலமே நாம் அவர்களைத் திருப்திப் படுத்த முடியும்.  தர்ப்பணம் என்று வட மொழியிலே சொல்வார்கள்.  இதன் பொருள் திருப்திப் படுத்துதல்.  என் முன்னோரை என் மொழியில் தானே திருப்தி படுத்த முடியும்.  எனவே தமிழிலேயே நாம் வழிபாடு செய்வோம்.  அதுவே நல்லது. 
இந்த கடமையை சிரத்தையோடு மன நிறைவோடு நாம் செய்ய வேண்டும்.  அவசர அவசரமாக வழிபாட்டினை நடத்தக் கூடாது.  நல்ல எண்ணத்தோடு செய்ய வேண்டும்.
தென் புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
என்று திருவள்ளுவரும் நமக்கு விளக்குகிறார்.  இதிலே தென்புலத்தார் என்று கூறி இருப்பது நமது முன்னோர்களையே.  எனவே நாம் நமது முன்னோர்களை அவர்கள் இறந்த நாளன்று நினைவு கூற வேண்டும்.  கிருத்துவத்திலே கூட எல்லோரும் கல்லறைத் திருநாள் என்று ஒருநாளைக் குறித்து அன்றைக்கு நினைவு கூர்கிறார்கள். Day of the Dead (Spanish: Día de los Muertos), is a holiday celebrated in Latin America and by Latin Americans living in the United States and Canada. The holiday focuses on gatherings of family and friends to pray for and remember friends and family members who have died.
ஏன் நண்பர்களே நாமும் நமது முன்னோர்களை நமது மொழியில் நாம் எங்கே வாழ்ந்தாலும் நினைவு கூறக் கூடாது?  thodarven

No comments:

Post a Comment