இன்று நான் சில தளங்களில் உலா வந்தேன். பூராவும் ஆன்மீக தளங்கள்.
அதிலே ஒன்று தான்
இந்த தளத்திலே பல தலைப்புகளிலே கட்டுரைகள் உள்ளன. நமக்கு வேண்டிய தலைப்புகளைச் சொடுக்கினால் அருமையான கட்டுரைகள் வருகின்றன. ஜோதிடம் பற்றி இணைய வகுப்பே இதில் உள்ளது என்பது ஒரு சிறப்பம்சம். தலைப்புகளைப் பார்த்து வேண்டிய துறையில் சென்று பயனடையலாம்.
- அனுபவம் (113)
- ஆன்மீகம் (107)
- ஜோதிடம் (38)
- ஆன்மீக தொடர் (31)
- ஆன்மிகம் (23)
- நகைச்சுவை (23)
- யோகம் (23)
- பழைய பஞ்சாங்கம் (21)
- ஸ்ரீசக்ர புரி (16)
- வேதகால வாழ்க்கை (15)
- காசி சுவாசி (14)
- கேள்விபதில் (13)
- கலாச்சாரம் (12)
- கவிதை (12)
- விழா (12)
- இறைவன் (10)
- ஜோதிட ஆய்வு (10)
- வேதத்தின் கண் (10)
- ஜோதிட கல்வி (9)
- பதிவர் வட்டம் (9)
- கர்மா (8)
- கலாச்சார சீரழிவு (8)
- புனைவு (8)
- குரு (7)
- சந்திப்பு (7)
- தவறான நபர்கள் (7)
- திருமந்திரம் (7)
- யோகிகள் (7)
- அக்னிஹோத்ரம் (6)
- சாஸ்திரம் (6)
- சுப்பாண்டி (6)
- ஏதோ ஒரு நவீனத்துவம் (5)
- கிருஷ்ணமூர்த்தி முறை (5)
- ஞானம் (5)
- நோயற்ற வாழ்வு (5)
- பரிகாரம் (5)
- கதைகள் (4)
- கால்பந்து (4)
- சினிமா (4)
- பங்கு சந்தை (4)
- பேச்சு (4)
- மந்திரம் (4)
- மொக்கச்சுவை (4)
- அகோரிகள் (3)
- கிரகம் (3)
- செய்தி (3)
- ஜென் (3)
- ஜோதிட கேள்விபதில் (3)
- தோஷம் (3)
- பிரார்த்தனை (3)
- புராணம் (3)
- போலி ஜோதிடர் (3)
- யந்திரம் (3)
- ருத்ராஷம் (3)
- ஆருடம் (2)
- இசை (2)
- இயற்கை பேரழிவு (2)
- கடிதம் (2)
- கிரகணம் (2)
- கே.பி முறை (2)
- கோவி கண்ணன் (2)
- சக்தி (2)
- சந்திராயன் (2)
- சேவை (2)
- தந்த்ரா (2)
- தியானம் (2)
- நாடி ஜோதிடம் (2)
- நிகழ்வுகள் (2)
- நியுமரலாஜி (2)
- பிரார்த்தனைகள் (2)
- ப்ராண சக்தி (2)
- விரதம் (2)
- ஆஸ்கார் (1)
- இந்திரன் (1)
- இறைவன (1)
- உபநிஷத் (1)
- எதிர்வினை (1)
- கோடை வெப்பம் (1)
- சத்சங்கம் (1)
- சமாதி (1)
- சாம்பு மாமா (1)
- சிங்கப்பூர் (1)
- சிறுகதை போட்டி (1)
- சுபவரம் (1)
- சுற்றுலா (1)
- செய்வினை (1)
- ஜின்ஜினகாலஜி (1)
- ஜோதிட கண்காட்சி (1)
- டில்லி (1)
- தாய் மரம் (1)
- திருமண பொருத்தம் (1)
- தீட்சை (1)
- தொடர்பதிவு கண்டனம் (1)
- பின்நவீனத்துவம் (1)
- பெயர் (1)
- பேய் எழுத்து (1)
- போதை பழக்கம் (1)
- ப்ராப்தம் (1)
- மரம் நடுதல் (1)
- மின்சாரம் (1)
- மொழி (1)
- வாழ்த்து (1)
- விருது (1)
- வேளண்மை (1)
இதற்கு அடுத்த படியாக நான் பார்த்து இரசித்த தள
http://gurugeethai.blogspot.com/
ம்இந்த தளத்திலேயும் பல விதமான ஆன்மிகக் கருத்துகள் உள்ளன. இவை எல்லாம் ஒரே நிறுவனத்தால் நடத்தப் படுபவை போல உள்ளது. பிற தளங்களுக்கும் செல்ல இவர்களே வழிகாட்டுகிறார்கள். இதிலேயும் பல தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.
- அனுபவம் (3)
- ஆன்மிகம் (9)
- ஆன்மீகம் (12)
- உபதேசம் (24)
- கர்மா (2)
- கீழ்படிதல் (3)
- குரு (32)
- குருவை தேடி (5)
- சித்தர் (1)
- சிற்றின்பம் (1)
- சிஷ்யன் (9)
- ஞானி (6)
- தியானம் (1)
- துறவி (2)
- துறவு (4)
- நாம ஜபம் (1)
- பரபிரம்மம் (3)
- பிரம்ம ஞானம் (1)
- பிரம்மா ஞானம் (4)
- பூர்ணிமா (1)
- பேரின்பம் (2)
- மந்திர ஜபம் (3)
- மனம் (3)
- முக்தி (1)
- ரசவாதம் (2)
- வியாசர் (1)
- விழிப்புணர்வு (3)
- வேதாந்தம்
படித்து இன்புறுங்கள். பிராப்தம் பற்றி அழகான கட்டுரை - பொருள் பொதிந்த கட்டுரை இருந்தது. பிராப்தம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது இது. அதிலிருந்து ரமணரின் பாடலைக் கொடுக்கிறேன். படியுங்கள்.
"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று"
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று"
உடம்பைப் பற்றியும் உயிரைப் பற்றியும் சில திருமூலர் பாடல்கள் படியுங்கள்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.
எங்கேயோ திரைப்படங்களில் கேட்ட பாடல்கள் எல்லாம் இதிலிருந்து தான் வந்தன போலும்.
சரி. மொழி பற்றி வருவோம். மொழியை நாம்
இந்த தளத்தில் தமிழ் மொழியை எப்படி வளர்க்க வேண்டும் எனறு அழகாக எழுதி உள்ளார் ஆசிரியர். அது நம் மொழிக்கும் பொருந்தும். அவரது கருத்தைப் படியுங்கள்.
உங்கள் பேச்சில் தமிழ் மிக மிகக் குறைந்து இருந்தால் அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீர்களா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும் தமிழை விலக்குகிறீர்களா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும் என்று எண்ணுகிறீர்களா?
சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீங்கள் தமிழ் பேசத் தவித்திருக்கிறீர்களா? அலுவல் தவிர்த்து மற்றோரோடு நீங்கள் பேசும் உரையாடல்களில் எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில் உங்களால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும் போது ஆங்கிலம் ஊடுறுவினால் அதைப் பட்டிக் காட்டுத் தனம் என்று எண்ணாமல், நாகரிகம் என்று எண்ணுகிறீர்களா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியும் என்று அறிவீர்களோ? உங்கள் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி இருக்கிறதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி இருக்கிறதா? உங்களுக்குத் தெரியாத தமிழ்ச் சொற்களைப் பயிலும் போது உடனே தமிழ்-தமிழ் அகரமுதலியைத் தேடுகிறீர்களா?
சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச்சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்ளுவதே என்று கேட்டிருக்கிறீர்களா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை என்றால் மறந்துவிடும் என்று அறிவீர்களா? தமிழ் வட்டாரத்திற்கு வட்டாரம் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இந்தத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெல்லாம் செய்கிறோம் என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாமல், மேலும் சில கடமைகள் நமக்கு உண்டு என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்
மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்? பிறக்கும் போது இருக்கும் பின் புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறொரு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ?
தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உங்களோடு இந்தப் பழக்கம் நின்று போகவா நீங்கள் இதைக் கற்றுக் கொண்டீர்கள்? இல்லையே? வாழையடி வாழையாய் இந்த மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உங்களுக்கு மற்றவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்? அப்படியானால், இந்தத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீங்கள் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தீர்கள்? குழந்தையாய் இருந்த போது கற்றுக் கொண்ட "நிலா!நிலா! ஓடி வா" வையும், "கைவீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? ஆத்திச் சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றில் இருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இந்தக் கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீர்களா? கொஞ்சம் மு.வ., கொஞ்சம் திரு.வி.க. படித்திருக்கிறீர்களா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, லா.ச.ரா, செயகாந்தன் படித்திருக்கிறீர்களா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீர்களா?
புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?
தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர்கள். இந்தக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீங்கள் ஒத்துழைத்தால். செய்வீர்களா
ம்இப்படி பல கேள்விகளை அடுக்கி உள்ளார். நான் ஊமை ஆனேன். நம் மொழிக்கு நாம் செய்தது என்ன? ஒன்றும் இல்லை. இருப்பதை மேய்ந்து இருக்கிறேன். பிற்கால சந்ததிக்கு எனறு புதிதாக மொழியில் என்ன செய்தேன்? ஒன்றும் இல்லை. வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன்.
இந்த தளத்தில் பல வடமொழி சொற்களுக்கும் ஆங்கில மொழிச் சொற்களுக்கும் அருமையான தமிழ் சொல்லைக் கொடுத்து இருக்கிறார். சொல் ஆராய்ச்சியே உள்ளது. நாம் தொலைத்து விட்ட சொற்கள் - பிற மொழியில் எடுத்தாண்டு இன்றும் உயிரோடு உலாவும் சொற்களை அழகாக அடையாளம் காட்டுகிறார்.
ஒரு மோகன்லால் திரைப்படம். அழுத்தம் திருத்தமான ஒலிப்போடு மோகன்லால் மலையாளம் பேசும் பாணி என்னை எப்பொழுதுமே கவர்ந்தது உண்டு.
ஒரு இடத்தில் "ஞங்களைத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்" என்ற வாசகம் கேட்டு எங்கோ நெஞ்சுள் மணி ஒலிக்கத் தொடங்கியது; இப்படி ஒரு வினை தமிழில் ஏன் இல்லாது போனது? எப்போது தொலைத்தோம்? மனம் வேறொரு பக்கம் யோசிக்கத் தொடங்கியது. நாம் தொலைத்ததை மலையாளமாவது காப்பாற்றி வைத்திருக்கிறதே என்று நிறைவு கொண்டேன்.
நான் தோற்றேன்; தோற்கிறேன்; தோற்பேன் இப்படித் தமிழில் உண்டு. ஆனால் பிறவினை என்று வரும்போது நம்மை அறியாமல் பெயர்ச் சொல்லோடு துணை வினை போட்டு ஏன் சுற்றி வளைக்கிறோம்? அவனை நான் தோற்கச் செய்தேன் என்று சுற்றி வளைத்து ஏன் சொல்கிறோம்? இல்லாவிட்டால் தோற்க வைத்தேன் என்று சொல்லுகிறோம் இல்லையா? மலையாளத்தில் உள்ளது போல் தோற்பித்தேன் என்று எளிதாகச் சொல்லலாமே? என்ன ஆயிற்று நமக்கு? பகரம் வேண்டாம் என்றால் வகரம் இட்டுச் சொல்லலாமே! தோல்வித்தேன் என்று கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறோம்? செய்தேன்/செய்வித்தேன், படித்தேன்/ படிப்பித்தேன் என்று வரும் போது தோற்றேன்/தோற்பித்தேன் என்பது ஏன் வழக்கில்லாமற் போயிற்று?
ஒரு இடத்தில் "ஞங்களைத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்" என்ற வாசகம் கேட்டு எங்கோ நெஞ்சுள் மணி ஒலிக்கத் தொடங்கியது; இப்படி ஒரு வினை தமிழில் ஏன் இல்லாது போனது? எப்போது தொலைத்தோம்? மனம் வேறொரு பக்கம் யோசிக்கத் தொடங்கியது. நாம் தொலைத்ததை மலையாளமாவது காப்பாற்றி வைத்திருக்கிறதே என்று நிறைவு கொண்டேன்.
நான் தோற்றேன்; தோற்கிறேன்; தோற்பேன் இப்படித் தமிழில் உண்டு. ஆனால் பிறவினை என்று வரும்போது நம்மை அறியாமல் பெயர்ச் சொல்லோடு துணை வினை போட்டு ஏன் சுற்றி வளைக்கிறோம்? அவனை நான் தோற்கச் செய்தேன் என்று சுற்றி வளைத்து ஏன் சொல்கிறோம்? இல்லாவிட்டால் தோற்க வைத்தேன் என்று சொல்லுகிறோம் இல்லையா? மலையாளத்தில் உள்ளது போல் தோற்பித்தேன் என்று எளிதாகச் சொல்லலாமே? என்ன ஆயிற்று நமக்கு? பகரம் வேண்டாம் என்றால் வகரம் இட்டுச் சொல்லலாமே! தோல்வித்தேன் என்று கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறோம்? செய்தேன்/செய்வித்தேன், படித்தேன்/ படிப்பித்தேன் என்று வரும் போது தோற்றேன்/தோற்பித்தேன் என்பது ஏன் வழக்கில்லாமற் போயிற்று?
தமிழுக்கு மிக நெருங்கியது மலையாளம், அடுத்தது கன்னடம். கொஞ்சம் தள்ளித் தெலுங்கு. இந்த மூன்று மொழிகளில் இருந்து, தமிழ் வளருவதற்காக, நாம் மீட்கவேண்டிய மொழி மரபுகள், புழக்கங்கள் மிகப் பல என்றே தோன்றுகிறது.
அவர் சொல்வது எல்லாம் உண்மை. அதை உணர வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நம் மொழியில் ஊடகங்கள் நடத்தி நம் மொழியை எப்படிக் கொள்கிறார்கள் என்பதை அவர் சொல்லும் போது கூசினேன். நாமும் அதை எல்லாம் படித்து அங்கீகாரம் வழங்குகிறோமே? சில வார இதழ்களில் வந்துள்ள விளம்பரங்களைக் காட்டுகிறார் அவர். படியுங்கள்.
“எனக்குத் தெரியாத தமிழா?” என்ற பெருமிதத்தில் எத்தனை கணக்கற்ற மொழிப் பிழைகளைச்செய்கிறோம்? இதைத்தானே நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்போம்? அவர்கள் இன்னும் கூடிய பிழைகளைச் செய்வார்கள். கொஞ்சங் கொஞ்சமாய் மூன்று நான்கு தலைமுறைகளில் தமிழ்நடை முற்றிலும் குலைந்து, எல்லாம் ஆங்கிலத்தில் வந்துசேரும். ஆங்கிலமும் சரியாய்த் தெரியாமல், தமிழையும் தொலைத்துப் தமிழ் இளையர் தடுமாறுவதை கண்முன்னே காண மிக வருத்தமாய் இருக்கிறது.’ இந்த வருத்தம் எல்லாத் தமிழர் மனதிலும் வரவேண்டும்.