தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு.
தமிழ் இலக்கியத்திலே புகழ் பெற்ற இலக்கியங்களைப் படிக்கும் வைப்பு நமக்கு எளிதில் கிடைத்து விடுகிறது. ஆனால் சில பாடல் வகைகளைப் பற்றி நமக்குத் தெரிய வருவது இல்லை. அப்படிப்பட்ட பாடல் வகைகளிலே சதகம் என்பது ஒருவகை. அருமையான அறிவுரைகளை வழங்கும் நூறு பாடல்களைக் கொண்டது. இதில் நாம் குமரேசர் சதகம் என்று ஒரு பிரிவைப் பார்ப்போம்.
பூ மேவு புல்லைப் பொருந்து குமரேசர் மேல்
தேமேவிய சதகம் செப்பவே கோமேவிக்
காக்கும் சரவணத்தான் கம்பம் ஐந்து கரக்
காக்கும் சரவணத்தான் காப்பு.
புல்வயல் என்னும் ஊரில் இருக்கும் குமரேசர் மேல் இனிமை பொருந்திய சதகம் பட கண்டனும் கணபதியும் காப்பாக இருப்பார்கள் என்பது இப்பாடலின் கருத்து. தேமேவிய என்றால் இனிமையான என்று பொருள்.
சரவணம் என்றால் நாணல் என்று பொருள். குளிர்ந்த நாணலின் மீது நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த முருகன் இருக்கிறன். ஆறு உருவத்தையும் ஒன்றாக உமை அம்மை இணைத்தால் ஸ்கந்தன் என்றும் தமிழில் கந்தன் என்றும் அழைக்கிறோம்.
பூமிக்கு ஆறுதலாய் வந்து சரவணப் பொய்கைதனில் விளையாடியும்
புனிதற்கு மந்திர உபதேச மொழி சொல்லியும்
வேதனைச் சிறையில் வைத்தும்
தேமிக்க அரி அர ப்ரம்மாதிகட்கும் செகுக்க முடியா அசுரனைத்
தேகம் கிழித்து வடிவேலினால் இருகூறு செய்து அமரர் சிறை தவிர்த்தும்
நேமிக்கும் அன்பர் இடர் உற்ற சமயம் தனில் நினைக்குமுன் வந்து உதவியும்
நிதமும் மெயத்துணையாய் விளங்கலால்
உலகில் உனை நிகரான தெய்வம் உண்டோ
மாமிக்க தேன் பருகு பூங்கடம்பு அணியும் மணி மார்பனே வள்ளி கணவா
மயில் ஏறி விளையாடு குகனே
புல் வயல் நீடு மலைமேவு குமரேசனே
அடுத்து பழமொழியில் வரும் ஒரு பாடலைப்
பார்ப்போமா
1 அரிதவித்(து) ஆசின்(று) உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்(து)
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது.
முக்குற்றங்களையும் அருமையாகக் கெடுத்தலான், குற்றமின்றி, முற்ற அறிந்த கடவுளின் திருவடிகளையே, அகன்ற கடலால் சுற்றப்பட்ட அகன்ற இடத்தினையுடைய பெரிய இவ்வுலகில், உரிமைப் பொருளைப் போலக் கருதி, அறிந்தவர்களது உயர்வே, பேருடம்பினையுடைய ஆவியைப் போன்று பெரியது.
கடவுளின் திருவடிகளைஉரிமையாக வணங்கினார்களது உயர்வே மிகச் சிறந்தது.
முக்குற்றங்கள் : - காமம், வெகுளி, மயக்கம்,
குற்றமற உணர்தலாவது - ஐயந்திரிபின்றி அறிதல்.
2 கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்
வினாமுந் துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை.
நற்குணம் உடைய பெண்ணே!, நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது அப்பொருள் வலியிழத்தலால், வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும்இல்லை.)
கல்லாதான் கண்ட நுண்பொருள்விளங்குதல் இல்லை.
சதகத்தில் ஒரு பட்டும் பழமொழியில் ஒரு பாட்டும் பார்த்தோம். நாளை மீண்டும் தொடர்வேன்.
No comments:
Post a Comment