இன்று நான் வலைதளங்களில் உலா வந்த போது புகை பிடிப்பதைப் பற்றி மிக எளிமையாக குறள் வடிவத்தில் கவிதைகளைப் படித்தேன். உங்களுடன் பகிர்ந்து கொல்ல விரும்புகிறேன். உள்ளத்திலே உரைக்கும் வண்ணம் அந்தப் பதிவு உள்ளது. பொதுவாகவே புகை என்பது சுற்றுபுறத்தை மாசு படுத்துகிறது. ஆனால் வெண்குழல் வைத்து பெருமைக்காக ஊதி பலர் தங்கள் உடல் நலனை பாழாக்கிக் கொள்கிறார்கள்.
காற்றிற்கும் மாசாகும்; கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!
.சிலர் சொல்லுவார்கள். நான் உயர்ந்த வகை வெண்குழல் உபயோகிக்கிறேன் அதனால் தீங்கு ILLAI என்று பெருமைப்படுவார்கள். அவர்களுக்கு ஆப்பு வைப்பது போல் ஒரு எச்சரிக்கை.
பஞ்சுண் டெனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு; சாவாய் நலிந்து!
நஞ்சுண்டு; சாவாய் நலிந்து!
இன்றைய இளைஞர்கள் புகைப்பதிலே இன்பம் ஏன் தோழா என்று நண்பர்களிடம் சொல்லுகிறார்கள். அவர்களைப்பார்த்து
வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!
நம்புகையில் வீழும் நலம்!
என்று அருமையாக எடுத்துரைக்கிறார் அந்தப் பதிவில். புகை பிடிக்கும் பழக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த
நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காணல்
தகையில்லை; வேண்டும் தடை!
தகையில்லை; வேண்டும் தடை!
என்று கூறுகிறார்.
. தாய் மொழியாம் தமிழைப் புறம் தள்ளி அவதூறு பேசி ஆங்கிலக் கல்வியே உயர்ந்தது என்று பேசும் எத்தர்களைப் பார்த்து ஒரு பதிவில்
மாற்று மொழிகளைப் படியுங்கள். ஆனால் தமிழில் புலமை பெறுங்கள். தமிழின் உயர்வைப் புரிந்து கொள்ளுங்கள். பிழைப்புக்காக மற்ற மொழியைப் படிப்பதில் தவறு இல்லை. ஆங்கிலேயன் நம்மிடம் திணித்த கல்வி முறையை அரசு மாற்ற வேண்டும். ஆங்கிலேய ஆட்சிக்கு முன் தமிழகத்தில் படித்தவர்கள் இல்லையா? அறிவாளிகள் இல்லையா? உலகத்திற்கே ஒரு போது மறையை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை என்ன ஆங்கிலக் கல்வி பயின்றவரா. இல்லை. எனவே தமிழ் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். மொழி அழிந்தால் இனம் அழியும். இதை இளைஞர்கள் அறிய வேண்டும்.
No comments:
Post a Comment