Tuesday, September 7, 2010

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your mothertongue
</library/l4340/html/l4340id1.htm> </library/l4340/html/l4340id1.htm> 88 </library/l4340/html/l4340sno.htm> </library/l4340/html/l4340sno.htm>






கவியரசு கண்ணதாசன் அவர்கள் சாந்தம் என்னும் குணம் எவ்வளவு வுயர்ந்தது என்பதை தனது இயேசு காவியம் என்ற காவியத்திலே மழைப் பொழிவு என்னும் தலைப்பில் இயேசு பெருமான் கூறுவது போல கூறி நமக்கு சாந்தத்தின் பண்புகளை விளக்குகிறார்.  பாருங்கள் - படியுங்கள் - மகிழுங்கள்.
கற்க கசடற
கற்று அவை கற்ற பின்
நிற்க
அதற்குத் தக.

சாந்தம் உடையோர் பேறுபெற் றோரெனத் தத்துவமும் சொன்னார் - இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக் குரியது தலைவர்கள் அவரென்றார்!
ஏந்தும் கோபம் பழிவாங் கும்குணம் எத்தனை எத்தனையோ -
இங்கே இடறி விழுந்தால் கொடுமை நடத்தும் வித்தகர் எத்தனையோ!
மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது சாந்தம் தானென்றார் -
அது மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும் மகத்துவம் பாரென்றார்!
நீதியின் பாலே தாகங்கொண் டோரே பேறுபெற் றோரென்றார் -
அவர் நிறைவே பெற்று முறையாய் வாழ்பவர்
அறமே தலையென்றார்!
சாதிக ளாலும் பேதங்க ளாலும் தள்ளாடும் உலகம் -
அது தர்மம் ஒன்றை நம்பிய பிறகே அடங்கிவிடும் கலகம்!
ஓதும் பொருளா தாரம் தனிலும் உன்னத அறம்வேண்டும் -
புவி உயர்வும் தாழ்வும் இல்லா தான வாழ்வினைப் பெறவேண்டும்!

பின்னர் எளிமை என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறும் பங்கே தனி.

எளிய மனத்தோர் பேறுபெற் றோரென எடுத்ததும் அவர்சொன்னார் -
இதில் எளிமை என்பது பற்றில் லாமை இறைவனை நம்புவதே!
வளமிகு செல்வம் மனையாள் சொந்தம் வரவினை எண்ணாது -
ஒரு வஞ்சமில் லாத நெஞ்சத் துடனே பிறர்பழி சொல்லாது
விளம்பிய வேதம் வகுத்தது போலே வாழ்பவர் இவராவார் -
அந்த விண்ணர செல்லாம் இவருக் குரியது அடைபவர் இவராவார்!

துயரம் உறுவோர் பேறுபெற் றோரெனத் தூயமகன் சொன்னார் -
அந்தத் துயரம் அடைவோர் ஆறுதல் பெறுவர் துன்பங்களை எண்ணார்!
அயராச் சுகமும் மதுவும் கீதமும் ஆயிரம் இன்பங்கள் -
அதை அடைவது தானே பெருமையென் றெண்ணும் மானிட உள்ளங்கள்!
வயிறே பெரிதாய் வாழ்ந்திடும் வாழ்வில் ஓடிடும் எண்ணங்கள் -
இது வாழ்வல்ல  என்பது இயேசுவின் வார்த்தை கூறிடும் சின்னங்கள்!

இரக்கத்தைப் பற்றிக் கூறும் போது
இரக்கம் உடையோர் பேறுபெற் றோரென இயேசுபிரான் சொன்னார் -
அவர் இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர்
இதுதான் பரிசென்றார்! சுரக்கும்
வட்டி பணத்தில் பற்று தொழிலில் பெருங்கொள்ளை -
யார் தொழில் செய்தாலும் கூலி தராது செய்வது பெருந்தொல்லை
இறக்கும் மனிதன் தண்ணீர் கேட்டால் ஊற்றுவதும் இல்லை -
இங்கு எல்லாம் இருந்தும் மனிதர்கள் நெஞ்சில் இரக்கம் தானில்லை!
தூயமனத் தோர் பேறுபெற் றோரெனத் தூயமகன் சொன்னார் -
அவர் தோன்றும் கடவுளை நேரில் காண்பார் சொர்க்கம் வருமென்றார்!
காயும் உடலை வாட்டி யெடுப்பது காமம் களவுகளே -
ஒரு காலம் மயக்கும் இன்பங்கள் எல்லாம் மறுநாள் கவலைகளே!
வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் -
அவர் தூய மனத்தில் வாழ நினைத்தால் எல்லாம் சோலைவனம்!

பாலைவனத்தையும் சொலைவனதையும் மிக அழகாக எளிதில் விளங்கும் வண்ணம் சொல்லி விட்டார் கவிஞர்.  பின்னர் விண்ணக அரசை எளிதில் பெறுவது எங்கனம் என்பதைக் கூறும் போது,

அமைதி கொடுப்போர் பேறுபெற் றோரென அன்புமகன் சொன்னார் -
இங்கு ஆண்டவன் பெற்ற பிள்ளைகள் எல்லாம் அவர்கள் தானென்றார்!
தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும் சண்டை சச்சரவு -
தினம் தன்னா டென்றும் பிறர்நா டென்றும் பேசும் பொய்யுறவு!
இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு -
தினம் இவை இல்லாது அமைதிகள் செய்தால் இதயம் மலையளவு!
நீதிக் காகத் துன்பம் உறுவோர் பேறுபெற் றோரென்றார் -
அவர் நேரே அடைவர் விண்ணர சென்றே நிச்சயமாய்ச் சொன்னார்!
மோதும் கொடுமை கண்ணில் கண்டும் மூச்சுவிடா திருந்து -
சுய மோகம் தீர்த்து வாழ்வார் சிலபேர் சுயநலமே நிறைந்து!
வேதனை தீர்க்கத் தம்மை வருத்தும் ஞானிகள்தாம் எவரோ -
அந்த விண்ணக அரசை என்றும் அடைந்து வாழ்பவர்கள் அவரே!

"சொல்லுவது மட்டுமல
உபதேசங்கள் சொல்பவனும் நடப்பதுதான்
உயர்நியாயங்கள் நல்லவற்றைப் பிறர்கேட்கச் சொல்லி விட்டு
நான்மட்டும் மறந்துவிட்டால் நியாய மென்ன?
எல்லோர்க்கும் கிடைப்பதில்லை மோட்ச லோகம்
இயம்புவதைக் கடைப்பிடிப்பான் நேரே செல்வான் சொல்லுகிறேன் கேளுங்கள்! அதன்பின் நானும் சொன்னபடி வாழுகிறேன்" என்றார் இயேசு!

நல்லவற்றை நாம் கற்பதால் மட்டும் பயனில்லை.  அதன்படி நடக்கவும் வேண்டும்.
உபதேசத்தை ஊராருக்கு சொன்னால் மட்டும் போதாது அதை நாம் கடைபிடுதுக் காண்பிக்கவேண்டும்.  சொல்வதைச் செய். என்கிறார் இயேசு பிரான்.














No comments:

Post a Comment