நேற்று நான் வலைத் தளங்களிலே உலா வருகையில் நகைசுவைக்காக உள்ள சில தளங்களைப் பார்க்க நேரிட்டது. படித்துப் பார்த்தேன். அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்பதற்காகவே இந்தப் பதிவு.
நான் சிறுவனாக இருந்த போது "குமுதம்" வார இதழில் பாக்கியம் ராமசாமி என்பவர் எழுதும் அப்புசாமி - சீதாபாட்டி நகைச் சுவைப் பகுதிகளை மிகவும் ரசித்துப் படிப்பேன். காலச் சக்கரம் சுழன்றது. படிக்கும் பழக்கம் குறைந்தது. வானொலி கேட்பது, பின்னர் தொலைக்காட்சி பார்ப்பது என பழக்கம் மாறி விட்டது. இப்போது வலைத் தளங்களில் உலா வருவது ஒரு நல்ல பழக்கமாக இருக்கிறது. இப்படி சுற்றி வரும்போது தான் www.appusami.com என்னும் வலைத் தளத்தைக் காண முடிந்தது. சொடுக்கி உள்ளே சென்றேன். மிக அருமையான தளம். அப்புசாமி அவர்களையும் சீதாப்பாட்டி அவர்களையும் தரிசிக்க முடிந்தது. பழைய தரத்தில் நகைச்சுவைப் படிக்க முடிந்தது. இந்த தளத்தில் பல பேருடைய பங்களிப்பு இருக்கிறது. வாய் விட்டு சிரிக்க முடிந்தது. வீட்டிலும் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டேன். எல்லோரும் சிரித்து இரசித்தார்கள். இந்த தளத்தைப் படித்ததினால் மேலும் சில தளங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது http://venu-vikatakavi.blogspot.com http://www.vaarppu.com GIRIJAMANAALAN-HUMOUR BLOGSPOT.COM
போன்ற தளங்கள். அருமையான தளங்கள். தயவு செய்து நீங்களும் உலா வாருங்கள். படித்து மகிழுங்கள். பரபரப்பான வாழ்வில் நகைச்சுவை மிகவும் அவசியம். அதை இந்த தளங்கள் நமக்குத் தருகின்றன.
அதே போல தற்செயலாக
என்னும் தளத்தைப் பார்க்க நேர்ந்தது. அருமையான தளம். நாம் நேரில் சுற்றுலா சென்றால் கூட இவ்வளவு விரிவாகப் பார்க்க முடியுமா என்பது சந்தேகம். நானும் வடநாட்டுத் தளங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். ஆனால் இவர் தொகுக்கும் விதம் - தரமான புகைப்படங்கள் - எடுத்து வைக்கும் கருத்துகள் எல்லாம் மிகச் செவ்வனே உள்ளன. அற்புதமான ஒரு தளம். பணம் செலவழித்து சுற்றுலா செல்ல முடியாதவர்கள் இந்த தளத்தின் மூலம் ஒரு சிறந்த சுற்றுலாவை அனுபவிக்க முடியும். அவ்வளவு தகவல்கள். நாம் செல்ல வேண்டும் எனறு நினைத்தாலும் இதைப் படித்து விட்டுச் சென்றால் இன்னும் சிறப்பாக நாம் சுற்றுலாத் தளங்களைக் கண்டு இரசிக்க முடியும்.
பின்னர் தமிழ் ஹிந்துவில் வெளி வந்துள்ள பித்ரு காரியம் பற்றிய ஒரு அபூர்வமான கட்டுரையை மீண்டும் அமர்ந்து படித்தேன். முதலில் படித்ததை விட சில சொற்களில் கூடுதல் பொருள் இருப்பதை உணர்ந்தேன். இதன் aasiriyar
ஜெயஸ்ரீ சாரநாதன்
இவர் இது தவிர தனியாக தளம் வைத்து இருக்கிறார். பல அற்புதமான தகவல்கள் - நமது சமயத்தைப் பற்றி - வான வெளி பற்றி - இதிகாசங்களைப் பற்றி - சாதகங்களைப் பற்றி - ஆதரங்களுடன் எழுதுகிறார். அவசியம் படித்து இளைய தலைமுறையினர் பயன் பெறவேண்டும். பகுத்தறிவு என்பதன் பொருள் என்ன என்பது தெரிய வேண்டுமானால் இவருடைய தளத்திற்குப் போய் கட்டுரைகளைப் படித்தே ஆக வேண்டும்.
அவருடைய வாக்கிலேயே முன்னோர் கடன் பற்றி உங்களுக்குத் தருகிறேன். "பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.
இவையெல்லாம் பிறந்தபிறகு - அதாவது வாழும் காலத்தில் நடப்பது.
ஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?
தாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?
அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.
இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.
உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.
இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.
உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.
நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்."
இவற்றைப் பற்றி தனிப் பதிவிலே வருகிறேன்.
No comments:
Post a Comment