Thursday, September 16, 2010

proverbs and pazhamozhi naanooru

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil.
அறிவின் ஊற்று பொங்கட்டும்.
இன்பம் நமக்குள் இருக்கிறது.
எதிர்பார்க்காதே பிறரிடத்தில்
வாழும் தமிழே பைந்தமிழாம்
வளர்த்த தமிழே பழந்தமிழாம்
நாளும் பேசி நன்கெழுதி
நமது தாயைக் காத்திடுவோம்
ஒன்று பட்டால் வாழ்வுயரும்
உதவி செய்தால் உதவிவரும்
நன்று செய்தால் நன்றிவரும்
இன்று நான் alaigal.com  எனறு ஒரு தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  பல நல்ல விஷயங்கள் இருந்தன.  அவற்றிலிந்து பழமொழிகள் குறித்த சில பழமொழிகளைக் கண்டேன். படியுங்கள் - மகிழுங்கள்.

01. இன்று உனக்காக மற்றவரைப்பற்றி பொய் கூறுபவன் நாளை உன்னைப்பற்றியும் பொய் கூறுவான் மறந்துவிடாதே.

02.
அவசரப்படாதே பூரணத்துவத்தை மெதுவான அளவில்தான் அடைய முடியும், அதற்கு காலம் என்ற கை உதவ வேண்டும்.

03.
கண்டிப்பிற்குப் பின்னால் இனிமையாக இருக்கும் ஒரு தந்தை, இனிமைக்குப் பின்னால் கண்டிப்பாக இருக்கும் ஒரு தாய் இவர்களின் சேர்க்கைதான் சிறந்தது.

04.
பியானோ வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் பியானோ வித்துவானாக ஆக முடியாது. அதுபோல பிள்ளைகளை பெற்றிருப்பதால் மட்டும் பெற்றோர் ஆக முடியாது.

05.
நீ குழந்தைகளை வளர்க்கும் போதுதான் உன் பெற்றோரின் அருமையை உணர்கிறாய்.

06.
பல செயல்களை செய்து ஒரு நல்ல பெயரைப் பெறுகிறோம், அதுபோல ஒரு தீமையைச் செய்து அனைத்து நல்ல பெயர்களையும் இழக்கிறோம்.

 16 நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக்
கண்கண்ட குற்றம் உளவெனினும் - காய்ந்தீயார்
பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்? யாருளரோ
தங்கன்று சாக்கறப் பார்.
பண்ணினது இயல்பைக் கொண்ட இனிமையான சொற்களையும் மூங்கில்போன்ற தோள்களையும் உடையாய்!,  நண்பு செய்து தம்மால் நிலை நிறுத்தப்பட்டவர்களை,  தாம் கண்கூடாகக் கண்ட குற்றம் அவர் மாட்டு இருக்கின்றன என்றறிந்தாலும்,  அறிவுடையோர் கோபிக்கமாட்டார்கள்,  தம்முடைய கன்றிற்குப் பால் விடாமல் அஃது இறக்கும்படி பசுவினைக் கறப்பவர் யாருமிலர் (அதுபோல). (
 அறிவுடையோர் தம் நட்டார் குற்றம் செய்யினும் அதுகருதிச்சினத்தல் இலர்.  அறிவுடையார் தாம் கன்று சாவுமாறு பால்கறவார், அதுபோலவே, தம் நட்டாரது குற்றங்காரணமாக அவரைச் சினவார் அறிவுடையோர். நட்புச்செய்த பின்னர் தாம் அவர் என்னும் வேறுபாடின்மையால், அவரைக் கோபித்தல் தம்மைக் கோபித்தலை யொக்கும் என்பது கருதிச்சினவார் என்பதாம்.
. 'யாருளரோ தங்கன்று சாக் கறப்பார்' என்பது பழமொழி. 
மீண்டும் தொடர்வோமா?


No comments:

Post a Comment