இன்று தளங்களைப் பார்வை இடுகையில் "கற்க நிற்க" KARKANIRKA.WORDPRESS.COM
என்னும் தளத்திற்குச் சென்றேன். இந்த தளத்தை நமக்கு தந்து இருப்பவர் திருவாளர் பழனியப்பன். அவரைப் பற்றி அவரது மொழியிலேயே கூற வேண்டும்.
ஆம். அவர் ஒரு தொலை தொடர்பு பொறியாளர். இலக்கியவாதி அல்ல. தமிழ் இலக்கியம் படித்தவர் அல்ல. ஆனால் பொன்னியின் செல்வன் மற்றும் சில கட்டுரைகளைப் பார்த்து தமிழ் ஆர்வம் பொங்கி இருக்கிறது. தொடர்ந்து தமிழ் படிக்க நேரமும் கிடைத்து இருக்கிறது அல்லது சிரமப்பட்டு ஒதுக்கி இருக்கிறார். இது தான் இங்கே பாராட்டப்படவேண்டிய விடயம். நான் கல்லூரியில் தமிழைப் படித்தும் இவர் போன்று ஆர்வம் வரவில்லையே என்று வெட்கப்படுகிறேன். ஆனால் இவரது தளத்தைப் பார்த்த பிறகு தான் நான் இந்த வலைப்பூவைத் துவக்கினேன் என்று சொன்னால் மிகையாகாது. எனவே இந்தப் பொறியாளருக்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். வலைத் தளங்களைத் தொடர்ந்து தேடித் படித்து வருகிறேன். என் வயது 60. ஆனால் இப்போது தான் கல்லூரியில் படிப்பது போல் உள்ளது. உண்மையில் இப்போது தான் கற்கிறேன். கல்லூரியில் படித்தது தேர்வில் தேற. உண்மையை ஒப்புக்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. இவர் தமிழில் அன்பு பற்றி உள்ள பல வார்த்தைகளை - பூக்கள் பற்றி உள்ள பல வார்த்தைகளை - பறவைகள் பற்றி உள்ள பல சொற்களை - பெண்கள் பற்றி உள்ள சொற்களை - இப்படி பல அருமையான தொகுப்புகள் இவர் தளத்தில் உள்ளது. தமிழன் என்று சொல்லிக்கொண்டு - "தமிழ் வாழ்க" என்று சொல்லிக்கொண்டு திரிவதை விட இவர் போல பல நல்ல தொகுப்புகளைக் கொடுத்து இளைய தலைமுறையினர் ஏற்றம் பெற்றிட அனைவரும் உதவ வேண்டும். சரி - பழமொழிகளைத் - தொகுக்கப்பட்டது அவரால் - கீழே தருகிறேன். படித்து மகிழுங்கள்.
‘பழமொழி’
பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது .
Blossoms open and die, your mouth opens and destroys you.
Explanation:
Blossoms fade away after opening fully , when the mouth opens , it blurts out things that should not be said, and brings misery.
எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்.
Whatever you are able to secure from a burning house is a gain.
Explanation:
This proverb is typically aimed at people who typically take advantage of some thing that’s not theirs. A typical example would be the middlemen who loot things which are donated for the disaster victims.
காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?
Will a wild cat observe the fast of Sivaratri ?
Explanation:
There is no special occasion for wicked people to strike.
உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
Why should he give a measure of pepper and drink the pepperbroth in secret ?
Explanation:
A cup of black pepper is huge quantity of pepper which is enough to prepare a feast and even after supplying so much pepper u get only pepper water to drink , means after all the hardwork you have done you have not been recogonized. This can be typically said when one person does all the work to organize an event and some one else takes credit for it.
சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
The artful cat ate tamarind when there was fish.
Explanation:
The cat in the house ate tamarind when there was fish so that the owner would leave the fish exposed without suspicion. This proverb is typically used for people who have some thing in the mind but pretend to do something else.
Translated by Rev. Herman Jensen (Taken from ‘A classified collection of Tamil Proverbs’).
14 தாம்நட் டொழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா
யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும்
கானட்டு நாறுங் கதுப்பினாய்! தீற்றாதோ
நாய்நட்டால் நல்ல முயல்.
நறு நாற்றத்தால் பிறவற்றை வென்று இயற்கை மணம் வீசுகின்ற கூந்தலை உடையாய்!,
நாயோடு நட்புச் செய்தால், சிறந்த உணவாகிய முயல் தசையை உண்பிக்கச் செய்யாதோ? (உண்ணச்செய்யும் அதுபோல), செல்வத்தால் மிகுந்த தாம், நண்பு பூண்டு ஒழுகுவதற்கு, (நம்மைஒப்ப) இவரும் செல்வத்தால் தகுதியுடையவரா என்றாராய்தல் வேண்டா, வறுமையால் மிக்கவர் நட்பேயானாலும், கொளல் வேண்டும் -அவர் நட்பைப் பெறவேண்டும்.
செல்வந்தர் வறுமையுடையாரோடும் நட்புச் செய்தல்வேண்டும்.
( நட்புக்கொள்வதற்குச் செல்வமுடையவரா இல்லாதவரா என்று ஆராய வேண்டுவதில்லை குணம், செயல், குடி முதலியன ஆராய்தல் வேண்டும். அங்ஙனம் ஆராயாது நட்டால் மிக்க துன்பத்தினை அடைய நேரிடும். 'நாடாது நட்டலிற் கேடில்லை' என்றும், 'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை, தான்சாந் துயரம் தரும்' என்றும் கூறப்பட்டிருத்தலின் குணம், செயல், குடி முதலிய ஆராய்தல் வேண்டும். நாயும் தன்னோடு நட்புப்பூண்டார்க்குச் சிறந்த உணவினை அளித்தல்போல;' வறுமைஉடையவராயினும் அவரோடு நட்பில் சிறந்த பயனைப்பெறலாம் என்பது. கான் - நறு நாற்றம்; 'கானாறுங் குழல்சரியக் கற்பூரவல்லி தலைகவிழ்ந்து நிற்ப' என்பது காண்க. 'தீற்றாதோ நாய் நட்டால் நல்ல முயல்' என்பது பழமொழி.
நாளை தொடர்வோமா!
No comments:
Post a Comment