அறிவின் ஊற்று பொங்கட்டும்.
இன்பம் நமக்குள் இருக்கிறது.
எதிர்பார்க்காதே பிறரிடத்தில்
இன்பம் நமக்குள் இருக்கிறது.
எதிர்பார்க்காதே பிறரிடத்தில்
வாழும் தமிழே பைந்தமிழாம்
வளர்த்த தமிழே பழந்தமிழாம்
நாளும் பேசி நன்கெழுதி
நமது தாயைக் காத்திடுவோம்
வளர்த்த தமிழே பழந்தமிழாம்
நாளும் பேசி நன்கெழுதி
நமது தாயைக் காத்திடுவோம்
ஒன்று பட்டால் வாழ்வுயரும்
உதவி செய்தால் உதவிவரும்
நன்று செய்தால் நன்றிவரும்
உதவி செய்தால் உதவிவரும்
நன்று செய்தால் நன்றிவரும்
உடன்பிறப்புகளே,
இன்று நான் kaumaram.com எனறு ஒரு தளத்தில் சுற்றி விட்டு வந்தேன். அற்புதம். மிக அற்புதம். கந்தனைப் பற்றி - கடம்பனைப் பற்றி - முருகனைப் பற்றி தெரிந்து கொள்ள அருமையான தளம். முருகன் தொடர்பான அனைத்து இலக்கியப் படைப்புகளையும் பதிந்து வைத்து இருக்கிறார்கள். சுலோகங்கள் உள்ளன. முருகனைப் பற்றி பல கட்டுரைகள் உள்ளன. ஓடும் காட்சியுடன் கூடிய பாடல்கள் உள்ளன. பாடல்கள், பேச்சுகள் எல்லாம் குறுந்தகடு மூலம் கேட்கும் வசதி உள்ளது. முருகனின் பல வித படங்கள் உள்ளன. தனிப்பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் - முருகனைப் பற்றியவை - பல பாடகர்கள், பாடகிகள் பாடியவை ஒலி வடிவத்திலும் உள்ளது. அவற்றைப் படித்துப் பார்க்கவும் வசதிகள் செய்து கொடுத்து உள்ளார்கள். மிக உபயோகமாக இருந்தது. நேரம் சென்றதே தெரியவில்லை. பயணம் ஆறு மணி நேரம் தொடர்ந்தது. அவ்வளவு சுவையாக இருந்தது. உதாரணமாக திரு சௌந்தரராஜன் அவர்கள் பாடிய இனிய - களத்தை வென்று நிற்கும் பாடல். படிக்க நினைத்தேன். பாடத்தான் முடிந்தது. அவ்வளவு வசதியாக திரும்பப் பட வேண்டிய இடங்களில் அதற்குரிய எங்களைக் கொடுத்து பாட வைத்து விட்டார்கள்.
முருகா ... முருகா ...
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற சொல்லுக்கு முருகா)
சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)
கனிக்காக மனம் நொந்த முருகா (2)
முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா
(அழகென்ற ... )
ஆண்டியாய் நின்றவேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா (2)
பழம் நீ அப்பனே முருகா (2)
ஞானப் பழம் உன்னை அல்லாது பழமேது முருகா
(அழகென்ற ... )
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற ... )
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா (2)
சக்தி உமை பாலனே முருகா (2)
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
(அழகென்ற ... )
ப்ரணவப் பொருள்கண்ட திரு முருகா
பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா (2)
அரகரா ஷண்முகா முருகா (2)
என்றே பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா
(அழகென்ற ... )
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா (2)
கண்கண்ட தெய்வமே முருகா (2)
எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா
(அழகென்ற ... )
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
(அழகென்ற ... )
முருகா ... முருகா ... முருகா ... .
மிக அழகாக வடிவமைத்து உள்ளார்கள் இந்த தளத்தை. விருப்பம் போல நாம் பயணம் செய்ய முடிகிறது. உலா வந்து பாருங்கள்.
சரி நான் படித்து இரசித்த சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதோ அவை:
No comments:
Post a Comment