Wednesday, September 1, 2010

language seniority of TAMIL

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு


தமிழ் ஒரு தொன்மையான மொழி.  மறுப்பதற்கு இல்லை.  செம்மொழி தான்.  மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதைச் செம்மொழி என்று புகன்றிட நாம் குறைந்த கால அளவைச் சொல்ல வேண்டியது இல்லை.
ஸ்ரீமத பாகவதம் என்பது வட மொழியான சம்ஸ்கிருத மொழியில் தொன்மையான நூல்.  வால்மீகியின் இராமாயணமும் வேதவியாசரின் மகாபாரதமும் அந்த மொழியின் தொன்மையான இலக்கியங்கள்.  இவை எவ்வளவு பழமையானவை - தொன்மையானவை என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்?   வடமொழி அறிஞர்கள் சொல்ல வேண்டும்.
சரி.  அந்த நூல்களிலே திராவிட நாட்டைப் பற்றி - தமிழகத்தைப் பற்றி கூறப்படவில்லையா?  உள்ளது.
திருமால் - விஷ்ணு - என்று கூறப்படும் இறைவனின் அவதாரங்களைப் பற்றிக் கூறும் போது முதல் அவதாரமாகக் குறிப்பிடுவது மீன் அவதாரம்.  பின்னர் சில அவதாரங்களுக்குப் பின் இராமர் அவதாரம் மற்றும் கிருஷ்ணர் அவதாரம்.  இதிலே எல்லாம் தமிழகம் பற்றி செய்தி இல்லையா?  இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.  வட மொழி அறிஞர்கள் சொல்ல வேண்டும்.
மச்ச அவதாரம் எடுத்தபோது திராவிட நாட்டில் - பாண்டியன் தலைநகரான மதுரையில் கிருதமால நதியில் அவதாரம் உருவனாதகச் சொல்கிறார்கள்.
அப்போது பாண்டிய நாட்டில் என்ன மொழி இருந்தது?   எப்போதுமே பாண்டியன் என்றால் தமிழ் தான்.  சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவன் அல்லவா பாண்டியன்.
சரி, இராம அவதாரத்திலே இராமேஸ்வரத்தில் பூசை நடத்துகிறாரே - பாலம் காட்டுகிறாரே - திருப்புல்லாணியில் படுத்து இருந்ததாகச் சொல்கிறார்களே -  இவை எல்லாம் எந்த நாட்டிலே உள்ளன - இருந்தன?  பாண்டிய நாட்டிலே தானே?  இராமர் போர் நடத்தி இராவணனைத் தோற்கடிக்க முடியாமல் தடுமாறும் போது ஆதித்ய ஹிருதயம் என்ற அருமையான தோத்திரதைக் கூறி அதன் மூலம் வெற்றி பெருகிறாரே - அந்த ஆதித்ய ஹிருதயத்தை வழங்கியவர் யார்?  அகத்தியர் தானே?  நமது தமிழ் முனி - பொதிகை முனி தானே?
பாரத யுத்தம் நடக்கும் போது தமிழகத்திலிருந்து இரு தரப்பினருக்கும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று கூறப்படுகிறதே?  அப்போது இங்கிருந்த மொழி என்ன?  தமிழாகத் தானே இருக்க முடியும்.
இப்படியெல்லாம் வாதிட்டால் நம் மொழி மிகப் பழமையான மொழி - தொன்மையான மொழி என்று எளிதாகச் சொல்லி விடலாம்.
ஆனால் மொழிக்கும் சமயத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தாமல் இருக்க முயற்சி செய்து நம்மை அறிவாளிகள் - பகுத்தறிவு உடையவர்கள் என்று கூறிக் கொள்கிறோம்.  பகுத்து அறிந்தால் - மேலே கூறியவாறு கேள்விகள் எழுப்பி வடமொழி வல்லுனர்களை வைத்தே நமது மொழியில் தொன்மையை நாம் நிரூபிக்க முடியும்.  தமிழ் மொழியில் உள்ள பதிவுகளை ஏற்காதவர்கள் - நம்பாதவர்கள் - வடமொழி வல்லுனர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள்.  நமக்கு வேண்டியது நமது மொழி மிகத் தொன்மையானது என்பதை நிரூபிப்பது மட்டுமே.  இதிலே சமயத்தைப் புறம் தள்ள நினைத்தால் நாம் தள்ளப்படுவோம்.
இன்று ஒரு செய்தியை நான் படித்து பார்த்தேன்.  மகிழ்ச்சி அடைந்தேன்.  அதை நான் விளக்குவதை விட அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.  படியுங்கள்.  பயன் அடையுங்கள்.
அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு.

திருக்குறளை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின்
குறளுக்கு அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம்
அளிக்கும் புதுக்குறளை தமிழக அரசு அங்கீகரிக்குமா இதைப்பற்றிய
சிறப்பு பதிவு.
அறம் ,பொருள் ,இன்பம் என மூன்று பால்களிலும் மனிதன் எப்படி
வாழவேண்டும் என்று அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி
திருக்குறளை நமக்காக தந்த திருவள்ளுவரின் பாதங்களை வணங்கி
தொடங்குகிறோம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு இதுவரை
200 -க்கும் மேற்ப்பட்ட விளக்க உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன
ஆனால் வெண்பா / மரபு இலக்கணத்தின் படி மிக எளிமையாக
அனைவருக்கும் புரியும் வண்ணம் புதிய குறள் வடிவமாகவே
விளக்க உரை அளித்துள்ளார் நண்பர் துரை என்பவர்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வசித்து வரும் இவர் ஆங்கில
வழியில் படித்து பொறியியல் வல்லுனரான பின்பு தமிழ் மேல்
கொண்ட அளவு கடந்த பற்றால் கடந்த 5 மாதம் தன் பணிகளுக்கு
இடையிலும் முழுமுயற்சியாக புதுக்குறள் 1330 -ஐயும் எழுதி
முடித்துள்ளார். கடந்த 2000 வருடங்களாக இதுவரை எவருமே
குறள் வடிவமாக விளக்கஉரை கொடுத்ததில்லை இதுவே
முதல்முயற்சி என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது தமிழக முதல்வரிடம் இந்தப் படைப்பினை கொண்டு
சேர்க்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவர்
செய்திருக்கும் இந்த புது முயற்சிக்கு தமிழர்கள் அனைவரின்
சார்பாக அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுவோம்.
இவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவருடைய
படைப்புகளை நம் தமிழக அரசு அங்கீகரிக்குமா என்பதை
பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். நண்பர் துரை அவர்களின் அலைபேசி எண் : + 91 9443337783 + 91 9443337783
இமெயில் முகவரி : durai.kural@gmail.com
தமிழுக்காக இவர் செய்திருக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி
பெற்று புதிய விளக்க குறள் அனைத்து மக்களையும் சென்றடைய
வேண்டும் என்பதே தமிழர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
அந்த கட்டுரையில் சில குரல்களும் இருந்தன.  என்னால் தர இயலவில்லை.  காரணம் நான் கணிப் பொறி இயலிலோ அல்லது வலைத்தள இயலிலோ வல்லவன் இல்லை.
தொண்டினைத் தொடர்வேன்.

No comments:

Post a Comment