நான் இன்று என் பேத்தியைப் பள்ளிக்கு நடந்து அழைத்துச் சென்றேன். சாலை கடக்கும் இடங்களில் ZEEBRA CROSSING - PEDESTRIAN CROSSING உள்ள இடங்களில் எல்லாம் ஒரு சாரணர் நின்றிருந்தார். குழந்தைகள் அந்த இடத்தில கடந்து செல்ல வந்தால் அவர் STOP என்று சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட ஒரு பதகையைக் கையில் ஏந்தி சாலையில் போக்குவரத்தைக் கட்டுபடுதுகிறார். இது ஒரு தன்னார்வப் பணியாக உள்ளது. ZEEBRA CROSSING - PEDESTRIAN CROSSING உள்ள பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள் இப்பணியை மேற்கொள்ளுகிறார்கள். கடுமையான பணி பெய்தாலும் மழை பெய்தாலும் இவர்கள் வருவார்களாம். இவர்கள் வரமுடியாவிட்டால் பள்ளிக்கும் காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டுமாம். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமாம். இதற்கு இவர்களுக்கு ஊதியம் கிடையாது ஆனால் வரிச்சலுகை உண்டாம். இதனால் குழந்தைகள் ஆபத்து இல்லாமல் சாலைகளைக் கடக்க முடிகிறது. இப்பணி காலையிலும் மாலையிலும் பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் நடைபெறுகிறது. காவல்துறையும் பள்ளிகளும் இதில் மிகக் கவனமாக இருக்கின்றன. ஒருவேளை மாற்றுப்பணியில் ஆட்களை அமர்த்த முடியாவிட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்களம். இது சிறார் பள்ளிகளுக்கு என உள்ள நடைமுறை என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். பள்ளிக்குச் சென்றால் வாசலில் இரண்டு ஆசிரியர்கள் நின்று குழந்தைகளை பத்திரமாக உள்ளே அனுப்பும் பணியில் ஈடுபட்டு நிற்கிறார்கள். பள்ளிப் பேருந்துகள் கூட குழந்தைகளை இறக்கி விடும்போது நடைமேடையில் பெற்றோர் வரும்வரை காத்திருந்து பின்னரே வாகனத்தை நகர்த்துகிறார்கள். அதுவரை பேருந்துலிருந்து அழைப்பு ஓசை வருகிறது.
இதே போல குழந்தைகளுக்கு ஒவ்வாமை இருந்தால் ஆசிரியர் குறித்துக் கொள்கிறார். அப்படிப்பட்ட பொருள்களை பிற குழந்தைகளும் உபயோகிப்பதைத் தடை செய்கிறார். பள்ளி வாகனங்களிலும் அதில் வரும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை இருந்தால் அது பற்றிய குறிப்பு இருக்குமாம். அந்த வாகனத்தில் வருபவர்கள் அந்த பொருளை உபயோகம் செய்யகூடாது.
நமது ஊரில் நாம் எப்படி இருக்கிறோம்? - பொதி மூட்டைகளைப் போல வண்டியில் அடுக்கி அனுப்புகிறோம் - மூன்று சக்கர தானியங்கியில் ஓட்டுனருக்கு இரு புறத்திலும் தொங்கியபடி குழந்தைகள் அமர்ந்து செல்கிறார்கள். குழந்தைகள் சாலையை எளிதில் கடந்து செல்ல முடியுமா? இப்படிப்பட்ட நாகரிகத்தை நாம் கற்று பின்பற்றலாமே? தேவை இல்லாதவற்றை உணவு, உடை, திரைப்படம் போன்றவற்றில் எல்லாம் அமெரிக்காவைப் பார் என்று சொல்கிறோம். இப்படிப்பட்ட விஷயத்தில் பின்பற்றலாமே!
No comments:
Post a Comment