Saturday, September 11, 2010

WORSHIP OF LORD SIVA IN TAMIL

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil.
வட மொழியில் தான் இறைவனை வணங்க வேண்டும் என்று தமிழராய்ப் பிறந்த நாம் நினைக்கவே கூடாது.  தமிழை நமக்குத் தந்தவன் ஈசன்.  சங்கம் வைத்து தமிழ் ஆய்ந்தவன் அவன்.  எனவே தமிலேலேயே வழிபடுவோம்.  உங்கள் வசதிக்காக மனம் உருகி வேண்டிட கீழ்க்கண்ட தொகுப்பைக் கொடுக்கிறேன்.
செந்நிறமுடைய பவள மலை போன்ற ஒளியுடைய திருமேனியனே!
என்னை அடிமையாக உடையவனே!
, கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆல கால விடத்தை உண்டவனே!
நட்சத்திரம் போல, தலையில் தலைமாலையை யும்,
 பாம்பாகிய ஆபரணத்தையும் அணிந்த வீரனே!
பிறையாகிய தோணி சேர்தற்கிடமாகிய, கொன்றை மாலையை யுடையவனே
மாணிக்கமே! எம் பெருமானே! உடையவனே!
மேலான வேதமாகிய உண்மை நூலினைச் சொன்னவனே!
சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே!
நீங்காத அடியார்க்கு முன் நிற்பவனே!
அவர்க்கு ஆதரவாகப் பின் நிற்பவனும், இவ்வெல்லாமும் ஆனவனே! தலைவனே!  சிறியேனுக்கு இன்ப விளக்கமாய்த் திகழ்பவனே!
பிறைச்சந்திரன்,  கங்கையாகிய பெரிய நீர் நிலையில் மூழ்கி மறைந்து கொள்ளும் சடையையுடைய தலைவனே!
உமை பாகனே! என் இன்ப நெறியே! சிவபெருமானே!
வெள்ளிய சந்திரனது ஒரு கலையைத் தலையில் அணிந்தவனே!
கருணைக்கு இருப்பிடமானவனே!
கயிலாயம் என்கிற மலைக்குத் தலைவனே!
மலை மகளாகிய உமாதேவிக்கு மணாளனே!
என் வாழ்வுக்கு மூலமே!
வினையேனது, மனத்துக்குத் துணையே!
என்னுடைய வாழ்வுக்குக் காரணமானவனே!
எனக்கு இளைத்த காலத்தில் நிதியாய் இருப்பவனே
பரந்து எரிகின்ற நெருப்பை ஒத்தவனே!
சுடு காட்டின் அரசனே!
தொண்டர்க்கு அமுதமே!
அணுகுதற்கு அரிய வனே!
தனியேனது, தனிமையை நீக்குகின்ற தனித்துணையே!
 திருமகள் வணங்கிப் பொருந்திய அழகிய திருப்பாதங்களையுடைய, பாம் பணிந்த பெருமானே!
அரசனே! மணம் பொருந்திய முடியினையுடை யவனே!
நிறைந்த மலர்களையுடைய கயிலையில் வாழ் கின்ற மிகமேலானவனே!
எம் தந்தையே!
மேலாகிய அடியார்களுக்கு அல்லாது ஏனை யோர்க்குப் பற்றுதற்கு அருமையானவனே!
ஒளி விளங்கும் பெரிய மாணிக்கமே!
 கடலின் கண் அருமையாய் உண்டாகிய நஞ்சை அமுதாக்கிய நீலகண்டப் பெருமானே!
விடுதற்கு அருமையானவனே!
இளமையுடைய தலைவனே!
மிக்க குளிர்ச்சியுள்ள நீரும், ஆகாயமும், காற்றும், நிலமும், தீயுமாக நிற்கின்ற வித்தை யுடையவனே!
வெண்மை நிறமுடையவனே! கருமை நிற முடையவனே! பசுமை நிறமுடையவனே! செம்மேனியுடையவனே!
அழகிய படத்தையுடைய பாம்பாகிய அரைக் கச்சினை அணிந் தவனே!
பெரிய அடிகளையுடைய வலி அமைந்த யானையை வென்ற வனே!
இளமையை உடைய தலைவனே!
பொன்போல மின்னுகின்ற, கொன்றை மாலை அணிந்த, செந்தாமரை மலர் போன்ற திருமேனியை உடைய அப்பனே!
ஒப்பற்றவனே! என் சுற்றத் தொடர்பை அறுத்தவனே!
என்னைக் குற்றத்தினின்றும் நீக்கியவனே!
வெற்றி வில்லாகிய மேருவையுடைய எந்தையே!
 கடலில் எழுந்த விடத்தை அமுதமாக உண்டவனே! அருட்கடலே!
என்னை ஆளாக உடையவனே! என் வேதியனே!
பெரிய கங்கையாகிய பெருகுகின்ற நீரையுடைய பள்ளத்துள், எதிர்த்து நிற்றலையுடைய சிறிய தோணியின், தோற்றம் போல வெண்மை நிறமும் குளிர்ச்சியும் பொருந்திய பிறைச்சந்திரன் தவழ்கின்ற சடையினையுடைய, பரமாகாயத்திலுள்ள, செழுமை யாகிய மாணிக்கமே!
கொடிய இயமன் ஒடுங்கும்படி, அவன் மேல் பொருந்திய மணம் நிறைந்த தாமரை மலர்களையொத்த உன் திருவடிகளாகிய அவற்றையே அழுத்தி அறிந்தவர்கள் பெறுகின்ற மிக மேலான பதவியாய் உள்ளவனே!
 அடியவராயினர், பின்பு உன்னை விட்டு நீங்காத பெருமையுடையவனே!
மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண், துளையினையுடைய அழகிய யானையின் தோலையுடையானே!
என் வாழ்க்கைக்குக் காரணமான முதற் பொருளே!
எனக்குப் பற்றுக்கோடாய் உள்ளவனே!
ஒளிப்பிழம்பாய் உள்ளவனே!
திருவெண்ணீற்றை நிறையப் பூசி ஒளி மிளிரும் வெண்மை நிறம் உடையவனே! மெய்யடி யார்க்குப் பக்கத்தில் இருப்பவனே!
அடியாரல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே! அறிதற்கரியதாகிய பொருளாய் இருப்பவனே!
பெண்ணாய் இருப்பவனே! பழமையானவனே! ஆணாய் இருப்பவனே! அலித் தன்மையாய் இருப்பவனே!
என் அப்பனே!
 தேனினையும், பாலினையும், கருப்பஞ்சாற்றையும், அமுதத்தினையும் நிகர்த்து உடம்பையும் உடம்பில் இருக்கும் எலும்பையும் உருகச் செய் கின்ற ஒளியுடையோனே!
தேவர்களும் அணுகக் கூடாத மேலிடத்து இருப் பவனே!
நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
ஆகாயமே! பூமியே! நெருப்பு, காற்று என்பவைகளோடு நீரும் ஆனவனே!
இளமை நலமுடையோனே!
திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
கொடிய யானையாகிய மலையினை உரித்து வஞ்சிக் கொடி போன்ற உமையம்மையை அஞ்சுவித்தவனே!
எனது கொடிய வினையாகிய காட்டினை அழியும்படி உனது நிலைபெற்ற அருளாகிய, நெருப்பை இட்டு எரிக்கின்ற வீரனே!
மிகுதியாக நஞ்சை அமுதமாக உண்டவனே!
நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
பிறவியாகிய நோயிற் சிக்கி முடங்கிக் கிடந்தவர்க்கு மருந்தாய் இருப்பவனே!
உண்மை அன்பர் விழுங்கும் அருட்கனியே!
அழகிய சோலை சூழ்ந்த, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
இருளாய் இருப்பவனே! ஒளியாய் இருப்பவனே!
இம்மை மறுமை களாகி இருந்தவனே!
உண்மைப் பொருளானவனே!
தனியனாகிய எனக்குச் சரண் புகும் இடமே!
உன் புகழை நிந்திப்பவர்கட்கு அச்சத் துக்கும் காரணமாய் இருப்பவனே!
உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய், உனக்கு நீயே நிகராவாய்,
நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
எனக்குத் தாயை ஒப்பாய், தந்தையை ஒப்பாய்.
எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருளேயாவாய்
உண்மையான ஒளிகட்கெல்லாம், ஒளியைத் தந்த பொலிவாகிய திருவடியையுடைய திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
எனக்கு எளிதில் கிடைத்த எனக்குத் தந்தையும், தலைவனும் ஆகியவனே!
என்னை அடிமையாகவுடைய என் ஞானத் தந்தையே!
விரும்புகின்ற அடியாருடைய உள்ளத்தில் நிலைத்து இருப்பவனே!
நிலை பெற்றிருக்கின்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
 பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே!
பகைவர் அஞ்சும்படி கொல்லும் தன்மையுடைய வேற்போரில் வல்லவனாகிய திருவுத்தரகோச மங்கைக்குத் தலை வனே!
கொடிய தன்மையுடையேன் பருகுதற்குரிய பெரிய அமுதக் கடலே! பெருந்தன்மையனே!
தீவினையேனது மனத்தின்கண் சுரக்கின்ற தேனே!
 திரு வெண்ணீறு பூசப்பட்டு ஒளியைச் செய்கின்ற பொன்போலும் திரு மேனியையுடைய பெருந்தன்மையனே!
பூஞ்சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
பகைத்து முப் புரங்களை வலிமை நிலைத்த உறுதியான வில்லினால் அழித்தவனே!
பெருமை அமைந்த மூன்று உலகங்களுக்கும், ஒப் பற்ற முதல்வனே!
நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
போர்க்குரிய நுனியோடு கூடிய மூன்று இலை வடிவின தாகிய சூலத்தை, வலப்பக்கத்தில் தாங்கி விளங்குபவனே!
பகைவர் அஞ்சும்படி ஒலிக்கின்ற, கிண்கிணி மாலை அணிந்த காளையையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
நஞ்சுண்ட கண்டத்தில் கருமையையுடையவனே!
செம்மேனி யனே! மங்கலப் பொருளானவனே!
சிறியேனது பிறவியை நீக்கு வோனே!
என் மாணிக்கமே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
மலரை அணிந்த, திருமுடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே
வெண்மையாகிய ஓர் இளம் பிறையானது விளங்கு கின்ற, நீண்ட சடை முடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
தெளிகின்ற பொன்னையும், மின்னலையும் ஒத்த செழுமையாகிய சோதியே!
புகழால் திகழும் திருவாரூரில் வீற்றிருப்பவனே!
உமாதேவியின் பாகனே! என்னைப் பாதுகாப்பவனே!
இடபவாகனனே!
 வலிமையுடைய, புலியின்தோலாகிய ஆடையை உடுத்தவனே!
நிலைபெற்ற திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே!
சடையையுடையவனே! எம்பெருமானே!

நமக்கு வேண்டியதை இவ்வாறு வேண்டலாம்.

எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.
வளர்ந்து கொண் டிருக்கிற, உனது கருணைக் கரத்தில் வளைத்துப் பிடிக்கவும் விலகி, இவ்வுலக வாழ்விலே புரளுகின்ற என்னை விட்டுவிடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
வழியில் மறித்து நின்று, உன் அருளாகிய அரிய அமுதத்தை நீ உண்பிக்க, மறுத்தேன். அடியேனை விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
நான் உன் திருவருளின் பெருமையை அறியாமல் அதனை வேண்டாவென்று மறுத்தேன்; நீ அதற்காக அடியேனை வெறுத்து விட்டு விடுவாயோ? இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
மேலோர், சிறிய நாய் போல்வாரது குற்றத்தை மன்னிப்பார்கள் அல்லரோ? நீ என்னுடைய வினை அனைத் தையும் அழித்து, என்னை ஆண்டு கொண்டு அருள வேண்டும்.நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும். பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி ஆண் டருளி, என் சிறுமையை மறைத்துக் கொண்ட உண்மைப் பொருளே! என்னை விட்டுவிடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
ஐம்புல ஆசைகளும் உன் திருவடியை நீங்குகின்ற அச்ச மும், தீவினையுடையேனை இரண்டு பக்கத்திலும், இழுக்கின்றன. ஆதலின் என் குற்றங்களை உன் பேரருளானது நீக்குகின்ற விதம் எவ்வாறு என்று மனம் புழுங்குகின்ற என்னை விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
இருபுறமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் உள்ளிடத்தே அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னை விட்டு நீங்கின என்னை, தலைவிரி கோலம் உடைய சடையோனே!ஐம்பொறிகள் பகைத்து என்னை வஞ்சித்தலால் நான் உனது வீரக் கழலணிந்த தாமரை மலரை ஒத்த திருவடியை நீங்கினேன்; அத்தகைய என்னை அங்ஙனமே விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
நீ, என்னை அடிமை கொள்ளவும்; நான் ஐம்புலன்களின் ஆசை கொண்டு, அதனால் உன்னை விடும் தன்மையனாயினேன்; அத்தகைய என்னை விட்டுவிடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
நீர்ப் பெருக்கின் நடுவில் இருந்தே ஒருவன் நீர் பருகாது தாகத்தால் நா உலர்ந்து போனாற்போல, உன்னருள் பெற்றிருந்தே, துன்பத்தினின்றும் இப்பொழுதும் நீங்குவதற்கு ஆற்றல் இல்லாது இருக்கின்ற என்னை விட்டுவிடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
வஞ்சகச் செய லுடையேனாகிய எனக்கு இதுகாறும் கண்டறியாத பேரின்பத்தைத் தந்தருள்க.
மகிழ்வோடு கூடிய மனத்தோடு, உன் திருவடியைக் காணப் பெற்றும், நீ என்னோடு கலந்து அருள் செய்யுமாறு உலகப் பற்றிலிருந் தும் வெளிவாராத என்னை, விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
``அப்பா! பயப்படாதே!`` என்று சொல்லுவாரில்லாமல் நின்று இளைத்துத் திரிந்தேன்; ஆகையால் என்னை விட்டுவிடு வாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
அடியேனை ஆண்டு கொள்வாய்; விற்றுக் கொள்வாய்; ஒற்றி வைப்பாய்; என்ற இவை போன்ற செயல்களில் என்னை உனக்கு உரியவனாகக் கொள்வதல்லது, புதிய அடியே னாகிய என்னை விட்டுவிடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
கொழு கொம்பில்லாத கொடியைப்போலச் சுழன்றேன்; இவ்வாறு வருந்துகின்ற என்னை விட்டுவிடுவாயோ?யானையினது கொடிய சண்டையில் அகப் பட்ட சிறு புதர் போல ஐம்புலன்களால் அலைக்கப்பட்ட என்னை விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
உன்னை விட்டு விலகியதனால் வரும் துன்பத்தை அனுபவித்து, அடியேன் இவ்வுலகம் இத் தன்மையது என்பதை மிகவும் தெளிவாக அறிந்து நின்றேன். எனக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டு, குற்றத்தையே பெருகச் செய்து, அன்பைச் சுருங்கச் செய்கின்ற, பயனற்ற அடியேனை விட்டுவிடுவாயோ? விட்டு விட்டாலோ, அடியேனைத் தாங்குவோர், வேறு ஒருவரும் இல்லை. அதனால் நான் அழிவேன். எனவே  நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
உண்மையானவை இருக்க, பொய்யாயினவற்றையே செய்கிற, மயக்கத்தையும் ஆரவாரத்தையும் உடைய தூயவன் அல்லாதவனாகிய என்னை விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
எறும்புகட்கு இடையே அகப்பட்ட, நாங்கூழ் புழு அரிப்புண்டு வருந்தினாற்போல, புலன் களிடையே அரிப்புண்டு அரித்துத் தின்னப்பட்டு வருந்திய தனி யேனை விட்டு விடுவாயோ? இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.
உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத் திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?இல்லை இல்லை நீங்கள் தான் என்னைக் காத்தருள வேண்டும்.


இறைவனிடம் இன்னும் வேண்டுவோம்.
இன்று விநாயகருக்கும் பிறந்த நாள் - மகாகவி பாரதியாருக்கும் பிறந்த நாள்.  எனவே இருவரையும் போற்றுவோம்.   பாரதியாரின் கவிதைகளில் சில வரிகளை  வாசிப்போம்.

 வையந் தனையும் வெளியினையும் வானத் தையுமுன் படைத்தவனே! ஐயா, நான்முகப் பிரமா, யானை முகனே,
வாணிதனைக் கையா லணைத்துக் காப்பவனே,
கமலா சனத்துக் கற்பகமே. 3
அகவல் கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க! வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன்
 எனது இதயத்து  ஒளிவோன்
 சந்திர மவுலித் தலைவன் மைந்தன் கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்; குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் துச்சமென் றெண்ணித் துயரிலாது இங்கு நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றேங்கலாம்;
அச்சந் தீரும்; அமுதம் விளையும்; வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்; அமரத் தன்மையு ம்எய்தவும் இங்குநாம் பெறலாம்; இஃது உணர்வீரே .
 காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி நூலைப் பலபலவாகச் சமைத்து நொடிப்பொழு(தும்) வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன் கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.
 எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி,
மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே.
கடமை யாவன தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல் ,
பிறர் நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய், நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்,
தஞ்சமெனக் கொண்டு தளரா தெந்நாளுமவன் கஞ்ச மலர்த் தாள் பணிந்தக்கால்' நூறு வய தெல்லாந்தர நீ கடவாயே -- கவிமணி
பிற நாட்டிருப்போர்  பெயர் பல கூறி, அல்லா யெஹோவா எனத்தொழு தன்புறும் தேவருந் தானாய், திருமகள், பாரதி, உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய், உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல் --
இந்நான்கே யிப் பூமியில் எல்லோர்க்கும்  கடமை யெனப்படும்;
பயனிதில் நான்காம், அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே தன்னை யாளுஞ் சமர்த்து எனக்கு  அருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்,
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்;
அசையா நெஞ்சம் அருள்வாய்;
உயிரெலாம் இன்புற் றிருக்க வேண்டி
நின்னிருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா, வாழ்வேன் களித்தே. பார்ப்பாய்
 களியுற்று நின்று கடவுளே யிங்குப் பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்

 ஒளிபெற்றுக் கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித் தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து.

விநாயக தேவா, வேத நாயகா.’
நவமா மணிகள் புனைந்தமுடி நாதா,
கருணா லயனே, தத் துவமா கியதோர்ப்  பிரணவமே, அஞ்சேல் என்று சொல்லுதியே.
 பொன்னா லுனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே, எனைநீ வாழ்வித் திடுவாய்.
வீணே யுழலுதல் வேண்டா, சக்தி குமாரன் சரண்புகழ் வாயே.
 புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை
 நிழலினும் வெயிலினும்
 தழலினும் புனலினும்
அபாயந் அகற்றி 
மண்ணினும் காற்றினும் வானினு
எனக்குய பகைமை யொன் றின்றி வாழ
 முப்பொழு தேத்திப் பணிவது முறையே
 முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே,
இறையேனும் வாடாய் இனிமேல் --
கறையுண்ட கண்டன் மகன்
வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை. 17
 சுடரே போற்றி, கணத் தேவர்  துரையே போற்றி,
எனக்கென்றும் இடரே யின்றிக் காத்திடுவாய்,
 இறைவி இறையவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும் பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும் தேவ தேவா,
சிவனே, கண்ணா, வேலா, சாத்தா, விநாயகா, மாடா, இருளா,
சூரியா, இந்துவே, சக்தியே, வாணீ, காளீ, மாமக ளோயோ,
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது யாதுமாய் விளங்கும்
இயற்கைத் தெய்வமே, வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன்,
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.
 ‘பாவம் வேண்டேன், பல்சுவை வேண்டினேன்;
இழிவு வேண்டேன், இன்பம் வேண்டினேன்’ என்றும், ‘
 கொலையினை வேண்டேன், தலைமையை வேண்டினேன்;
களவு வேண்டேன், காதல்-வேண்டினேன்.’ .
 மேன்மைப் படுவாய் மனமே கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே,
பயத்தால் ஏதும் பயனில்லை, யான்முன் உரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடிமுறை சொல்வேன், ஆன்மாவான கணபதியின் அருளுண்டு
அச்சம் இல்லையே.
 அச்ச மில்லை, அமுங்குத லில்லை, நடுங்குத லில்லை,
நாணுத லில்லை, பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினும்  இடர்ப்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்;
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்;
யாருக்கும்  அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்,
எப்பொழுதும் அஞ்சோம்;
வான முண்டு, மாரியுண்டு,
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் தீயும் மண்ணும்
திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே; தஞ்ச முண்டு, சொன்னேன், செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.
 நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்;-உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
 விதியே வாழி, விநாயகா வாழி,
பதியே வாழி, பரமா வாழி,
நீக்கும் தெய்வமே, போற்றி! புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
வாழி! வெற்றி வாழி, வீரம் வாழி! பக்தி வாழி,
அடியேன் பிறப்புக்கு அஞ்சி நடுங்குகின்றேன்.
ஐம் புலன்களும், திகைக்கச் செய்ய, திகைப்பை அடைந்து, இவ்விடத்தில் ஒரு பொய் வழியிலே, உன்னை விட்டு விலகித் திரிகின்ற என்னை விட்டு விடுவாயோ?
\கடைகின்ற மத்துப் பொருந்தினவுடன் சுழல்கின்ற தயிர்போல,
ஐந்து மலங்களாலும் அலைவுற்று வருந்து வேன். என்னை விட்டு விடுவாயோ?
புலன்களாகிய நெருப்புப் பற்ற மத்துப் பொருந்திய குளிர்ந்த தயிரைப் போலக் கலங்கி, வேருறுவேனை விட்டு விடுவாயோ?
வலி பொருந்திய யானையைப் போன்ற ஐம்புல ஆசைக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னை விட்டு விடுவாயோ?
உன் கருணையாகிய தேனைப் பருகிக் களிப்படைந்து, மனம் போனவாறு செய்து, செருக்கித் திரி கின்ற என்னை விட்டு விடுவாயோ?
உனது, மணம் அமைந்த தாமரை மலர் போன்ற திருவடியை முன்னே கொடுத்து அருளினாற் போல கொடுத்தருளி, உன் திருத்தொண்டினைச் செய்ய அழைப்பித்து என்னை ஏற்றுக் கொண்டு வீடுபேற்றுக்கு இடையூறாய் உள்ள களிப் பினைக் களைவாயாக.
ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று நீ எதிர்ப்படுவது எக்காலம்?
மலைகள் ஒன்று சேர்ந்து தாக்கினாற்போல, கொடிய வினைப் பயன்கள் வந்து தாக்குகின்றன. அறிவில்லாத சிறியேனது குற்றத் திற்குத் தீர்வாக, அஞ்சற்க என்று நீ அருள் செய்தல் அல்லாது விட்டு விடுவாயோ?
கடைப்பட்டவனாகிய நான் உன்னை இகழ்ந்து பேசினாலும், வாழ்த்தினாலும், எனது குற்றத்தின் பொருட்டே மனம் வாடி, துக்கப்படுவேன்; அவ்வாறுள்ள என்னை விட்டுவிடுவாயோ?
துன்பங்களுக்கு ஆதாரமாகிய உடம்பென்னும் திண்ணிய வலையிற் கிடப்பதைத் தினை அளவு நேரங்கூடப் பொறுக்கமாட்டேன். ஒப்பற்ற துணையாகிய நீ இருக்க, செருக்கடைந்து, தலையாலே நடந்த வினையைத் துணையாகவுடைய என்னை விட்டுவிடுவாயோ?

No comments:

Post a Comment