Sunday, September 19, 2010

ARUNNACHALA ATCHARA NAMAVAZHI

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your mothertongue

அறிவின் ஊற்று பொங்கட்டும்.
இன்பம் நமக்குள் இருக்கிறது.
எதிர்பார்க்காதே பிறரித்தில்.
வாழும் தமிழே பைந்தமிழாம்
வளர்த்த தமிழே பழந்தமிழாம்
நாளும் பேசி நன்கெழுதி
நமது தாயைக் காத்திடுவோம்
ஒன்று பட்டால் வாழ்வுயரும்
உதவி செய்தால் உதவிவரும்
நன்று செய்தால் நன்றிவரும்

இன்று தமிழ் ஹிந்து வலைத் தளத்தில் உலவிய போது அருணாச்சல மந்திர மகத்துவம் பற்றி ஒரு கட்டுரை இருந்தது.  படித்தேன்.  மிக நன்றாக இருந்தது.    அதை படித்த போது "இன்னும் சில ஆன்மிக நினைவுகள்" என்னும் எஸ்.இராமன் அவர்களின் கட்டுரைத் தொடரைப் படிக்க நேர்ந்தது.  மிக அருமையான தொகுப்பு.  இவற்றை எல்லாம் படித்த போது தான் "அருணாச்சல அட்சர நாமாவழி" என்னும் தொகுப்பைக்  காண முடிந்தது.  படித்தேன்.  சுவைத்தேன்.  உங்களுக்கும் தருகிறேன்.  படித்து மகிழுங்கள்.  அவருடைய கட்டுரைத் தொகுதி முழுவதையும்.படித்தால் உங்களுக்குப் பல தகவல்கள் கிடைக்கும்.
அருணாசல அக்ஷர நாமாவளி
– “ரமணா” –
 ஓம்  ஸ்ரீ  குருப்யோ நமஹ
அருணாசலமே சிவனின் நாமம்,
 
அருணகிரியே சிவனின் ரூபம்அண்ணாமலையே அருணாசலனாம்
                                      (
அருணாசலமே சிவனின் நாமம்)
ஆனந்த வெள்ளத்தை யார்க்கும் அளிக்கும் (அ)
இன்ப துன்பங்களில் என்றுமே நிற்கும் (அ)
ஈகையறியா உள்ளத்தைத் திருத்தும் (அ)
உள்ள பொருளாய் என்றும் விளங்கும் (அ)
ஊமையாக என்னை மௌனத்தில் சேர்க்கும் (அ)
எப்பக்கம் நோக்கினும் அப்பக்கம் உள்ள (அ)
ஏது யாது என கேட்போர்க்கு விளங்கா (அ)
ஐம்புலன் அளிப்போன் ஐம்புலன் அழிப்போன் (அ)
ஒருவனானாலும் உலகாய் நிறைவோன் (அ)
ஓங்காரம் தெரிய ஆங்காரம் அழிப்போன் (அ)
ஔடதம் என்றே மலையாய் நிற்போன் (அ)
கண்ணுக்குக் கண்ணாய் காண்போர்க்குத் தெரிவோன் (அ)
காம மோக மத மாச்சர்யம் ஒழிபபோன் (அ)
கிரியென இங்கு காண்போர்க்கு ரூபம் (அ)
கீழோ மேலோ எங்குமே உள்ளோன் (அ)
குற்றம் ஏதும் இங்கு காண்போர்க்கும் உள்ளோன் (அ)
கூற்றுவனுக் கிங்கு காரியமில்லை  (அ)
கெட்டாலும் உய்விக்க எங்களுக் கருள்வோய் (அ)
கேடும் உந்தனின் வீடு காட்டவே (அ)
கைகாட்டியே எங்கள் கரை காட்டும் அருளே (அ)
கொடுப்பதும் எடுப்பதும் உந்தன் செயலே (அ)
கோளாறு வந்திடின் கோள்களை மாற்றும் (அ)
கௌபீனம் தரித்த யோகியாய் உள்ளோன் (அ)
சராசரங்கள் அனைத்திலும் உள்ளோன் (அ)
சாகாமல் சாவதை நொடியினில் உணர்த்தும் (அ)
சித்தர் என்றாலும் முக்தி அளிக்கும் (அ)
சீரும் சிறப்பும் உன்னருள் அன்றோ (அ)
சுற்றும் எந்தனின் சுற்றம் அறுக்கும் (அ)
சூடும் உந்தனின் சுபாவம் அன்றோ (அ)
செய்யும் செயலில் செய்கையும் நீயே (அ)
சேவடி உந்தன் நிழல் படச் செய்வாய் (அ)
சைகை காட்டியே என்னை அழைப்பாய் (அ)
சொல்லின் உயிராய் பொருளாய் விளங்கும் (அ)
சோராது மாறாது உன்னை நினைக்க (அ)
சௌந்தர்யம் மூப்பும் என்றும் அணுகா (அ)
ஞமலியும் நீயும் ஒன்றாய் உதிக்கும் (அ)
ஞாயிறு என்னும் மங்கா ஒளியே (அ)
ஞிமிறால் அன்று நீ குடையப்பட்டாயே (அ)
தனது எனது என்போர்க்குக் கனவாம் (அ)
தானே தான் என்னும் தனதியல் காட்டும் (அ)
திமிரும் உந்தன் அறிவின் குறையால் (அ)
தீயென நின்று எம் தீமை அழிக்கும் (அ)
துயரையும் தந்து துடைத்திடும் அருளே (அ)
தூணோ துரும்போ எங்கும் உள்ளோனே (அ)
தெரியவும் தெளியவும் அறிவைக் கொடுப்பாய் (அ)
தேடியும் கிடைக்காது ஓடோடி வருவோன் (அ)
தையலைத் தன்னிட பாகத்தில் கொண்டோன் (அ)
தொலையா நிற்கு மகந்தையின் மூலம் (அ)
தோஷத்தை நீக்கிச் சந்தோஷத்தை நல்கும் (அ)
நன்னெறி உன்நெறி என்று உணர்த்தும் (அ)
நாடுங்கால் நானுண்டு நாடியபின் நீ (அ)
நிறை என என்னை நீக்கிடுவாயோ (அ)
நீள் நெடுச் சுடராம் உன்னை உணர்வோம் (அ)
நுதல் கண்ணால் எந்தன் நினைவை எரிப்பாய் (அ)
நூல் வழியே காண நூதனப் பொருளோ (அ)
நெருங்க நெருங்க நீ நானானாய் (அ)
நேர் வழியே சென்று நானார் காட்ட (அ)
நைந்த உளத்திற்கு உரனிடுவாயோ (அ)
நொடிக்கு நொடி உன் நாமத்தை எண்ண (அ)
நோக்குவாருக்குன் நோக்கத்தைக் காட்டு (அ)
பற்றற்று இருப்போரும் பற்றுவார் உன்னை (அ)
பாவங்கள் பாசங்கள் யாவையும் அறுப்போய் (அ)
பித்தன் சித்தன் என்று பந்நூலும் கூறும் (அ)
பீலியும் நீலியும் சூலியும் கொண்டோய் (அ)
புத்தம் புதியதாய் காண ஒன்றுண்டோ (அ)
பூபாரம் தாங்க என் பாரத்தைக் கொண்டோய் (அ)
பெயரிட என்ன உருவம்தான் உண்டோ (அ)
பேச்சிலும் மூச்சிலும் உன்னைக் காணவோ (அ)
பைந்தளிர் மேனியும் நீயின்றி என்னாம் (அ)
பொன்னார் மேனியனோ கன்னங் கருப்பனோ (அ)
போரிட்டு வெல்வாயோ மௌனமாய்க் கொள்வாயோ (அ)
பௌதிகமாம் உடல் பற்றறச் செய்வாயோ (அ)
மலையாய் மருந்தாம் நிலையாய் இருந்தாய் (அ)
மாலையும் காலையும் நின்னை நினைப்போர்க் (அ)
மின்னலாம் எண்ணங்கள் மின்னாது மறைய (அ)
மீளாது என்னை நீ மீட்டுச் செல்வாயோ (அ)
முன்வினை என்வினை என்று பாராதே (அ)
மூச்சற நிற்கும் முன் வினையெல்லாம் அறுப்பாய் (அ)
மெய்யிது மெய்யன்று மெய்யாலும் காட்டுவாய் (அ)
மேலென்றும் கீழென்றும் காண முடியா (அ)
மையத்தில் நீ உள்ள உண்மையைக் காட்டு (அ)
மொட்டாக நான் உள்ளேன் மலராகத்தான் செய்வாய் (அ)
மோதாமல் தள்ளாமல் மலரச் செய்வாயோ (அ)
மௌனத்தில் நீ என்னை மறவாதிருப்பாய் (அ)
யமனின் கயிறும் விழுமுன்னே வாராய் (அ)
யாரென்று காட்டவே நீ என்னைக் கொள்வாய் (அ)
யோகமும் உன்னாக ஆகும் வழிதான் (அ)
யௌவன குருவாய் சனகாதி சீடர்க்கு (அ)
ரமணன் என்று நீ இறங்கி வந்தாயோ (அ)
ராட்டினமாம் வாழ்க்கை சுற்றத்தை நிறுத்தாய் (அ)
லட்சியமே என்று என்னை ஆட்கொள்வாய் (அ)
லாபம் பாராது நீ என்னைக் கொள்வாயோ (அ)
லீலா வினோதங்கள் புரிவாயோ என்னிலும் (அ)
வந்தாலும் சென்றாலும் இருந்தாலும் ஒன்றோ (அ)
வாடிய பூவாய் நான் வாடாதிருக்க (அ)
வினையும் அறுக உன் விழியால் உறுக (அ)
வீடுண்டு நின்னருள் விழிநோக்கால் என்றும் (அ)
வெளியென்று சொன்னாலும் உள்ளத்தில் உறைவாய் (அ)
வேறேதும் வேண்டாமே வேறொன்றறியோனே (அ)
வைதேனும் கொள்வாயே வையாமல் தள்ளாதே (அ)
அகத்துறும் ஆனந்த வெள்ளத்தில் போவாயோ (அ)
கண்டத்திலே வைத்தென் விஷத்தை எடுப்பாயோ (அ)
சந்தத்திலே உந்தன் சப்தத்தைக் கேட்பேனோ (அ)
தண்டமிழ்ப் பாவில் உன் தளிர் நடை காண்பேனோ (அ)
நடப்பதெல்லாம் உன் நடையன்றி வேறேது (அ)
பவ நோயை தீர்க்கும் மருத்துவரன்றோ (அ)
மருத்துவர் மற்றும் மருந்தாய் இருப்பாய் (அ)

மாலையும் காலையும் நின்னை நினைப்போர்க்கு
மலையாம் மருந்தாய் நிலையாய் இருந்தாய்
மீளாது என்னை நீ மீட்டுச் செல்வாயோ
மின்னலாம் எண்ணங்கள் மின்னாது மறைய
மூச்சற நிற்கும் முன் வினையெல்லாம் அறுப்பாய்
முன் வினை என் வினை என்று பாராதே
மெய்யிது மெய்யன்று மெய்யாலும் காட்டுவாய்
மேலென்றும் கீழென்றும் காண முடியா
மையத்தில் நீ உள்ள உண்மையைக் காட்டு
மோதாமல் தள்ளாமல் மலரச் செய்வாயோ
மொட்டாக நான் உள்ளேன் மலராகத்தான் செய்வாய்
மௌனத்தில் நீ என்னை மறவாதிருப்பாய்
மலையாம் மருந்தாய் நிலையாய் இருந்தாய்

லையாம் மருந்தாய் நிலையாய் இருந்தாய்
மாலையும் காலையும் நின்னை நினைப்போர்க்கு
மின்னலாம் எண்ணங்கள் மின்னாது மறைய
மீளாது என்னை நீ மீட்டுச் செல்வாயோ
முன் வினை என் வினை என்று பாராதே
மூச்சற நிற்கும் முன் வினையெல்லாம் அறுப்பாய்
மெய்யிது மெய்யன்று மெய்யாலும் காட்டுவாய்
மேலென்றும் கீழென்றும் காண முடியா
மையத்தில் நீ உள்ள உண்மையைக் காட்டு
மொட்டாக நான் உள்ளேன் மலராகத்தான் செய்வாய்
மோதாமல் தள்ளாமல் மலரச் செய்வாயோ
மௌனத்தில் நீ என்னை மறவாதிருப்பாய் 

இதைப் படித்து முடித்த பிறகு திருஅருட்பாவைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.  படித்தேனா?  அடுத்த பதிவில் படித்து மகிழுங்கள். 

நன்றி, மீண்டும் வருக!


No comments:

Post a Comment