think in tamil. speak tamil. teach tamil. worship in tamil.
இரட்டை கோபுர தாக்குதல் பகுதிக்கு அருகில் மசூதி-சர்ச்சை:
அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் 13 மாடி இஸ்லாமிய கலாச்சார நிலையம் மற்றும் மசூதி கட்டப்படப்போவது குறித்த சர்ச்சைகள் அமேரிக்காவில் சூடு பிடித்துள்ளது. இவற்றை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டே உள்ளன. ஒரு மத போதகர் குரானை எரிப்பதகக் கூறி எரியும் தீயில் என்னை ஊற்றி உள்ளார். ஒரு நிறுவனம் மசூதி கட்டப்போகும் இடத்தை விலைக்குக் கேட்கிறார் ஒருவர். இந்த மசூதிக்கு ஒரு பெயர் சூட்டி உள்ளார்களாம் பாலாஜி என்பவர் தமிழ் ஹிந்து தளத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.
"இந்த புதிய மசூதிக்கு “கார்டோபா மசூதி” என்று நாமகரணம் செய்யப் பட்டுள்ளது. “கார்டோபா” என்பதன் பெயரின் வரலாற்றை பார்த்தாக வேண்டும். கார்டோபா என்னும் பழமையான நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. இங்கு கி.பி.600களில் ஒரு கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டது. ஆனால் கி.பி.700களில் முஸ்லீம் மன்னர்களால் ஸ்பெயினின் இந்த பகுதி பிடிக்கப் பட்டவுடன் இந்த சர்ச், மசூதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 1200களில் கிறிஸ்தவ அரசரால் இந்த பிராந்தியம் பிடிக்கப்பட்டவுடன் மீண்டும் சர்ச்சாக மாற்றப்பட்டது. இந்த பெயரின் முக்கியத்துவத்தை வாத பிரதிவாதங்களுடன் நோக்கலாம்.
புதிய மசூதியை ஆதரிப்பவர்களின் வாதம்:
ஸ்பெயினின் இந்த கார்டோபா பகுதி கி.பி. 700களில் முஸ்லீம் அரசர்களின் கைக்கு வந்தும் கூட, கிறிஸ்தவ மற்றும் யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுடன் வாழ அனுமதி அளிக்க பட்டது. இன்றைய மதச்சார்பற்ற கொள்கைகளை அன்றே முஸ்லீம் மன்னர்கள் அந்த பிராந்தியத்தில் நடத்தி காட்டினார்கள். இங்கு இன்னொரு விஷயத்தையும் கூறியாக வேண்டும். அமேரிக்க அதிபர் ஒபாமா எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதில் முஸ்லீம்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று புகழும்போது குறிப்பாக இந்த கார்டோபா பிராந்திய அரசாங்கத்தை சிலாகித்து பேசினார்.
பி..பி.சி வானொலியில் ஒரு ஆவணத்தொகுப்பை (Documentary) ஒலிபரப்பினார்கள். அதில் பேசிய வரலாற்று அறிஞர்கள் ஒபாமா ஸ்பெயினின் கார்டோபா இஸ்லாமிய அரசாங்கத்தை “மதச்சார்பற்ற அரசாங்கம்” என்று கூறியது தவறுதான் என்றார்கள்." இப்படி பல தகவல்கள் இந்த மசூதி கட்டுமானப் பணி குறித்து. செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் இருந்த வர்த்தக மையக் கட்டிடத்தை விமானம் கொண்டு இடித்து தரை மட்டம் ஆக்கிய நினைவு நாள். ஒரே பரபரப்பாக இருக்கிறது. தொடர்வேன்.
No comments:
Post a Comment