தமிழிலே வழிபாடு என்பது மிகத் தொன்மையானது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு உயர்வு கொடுத்து தமிழில் எதுவும் இல்லாதது போல் சிலர் பேசுகிறார்கள். THEVARAM.ORG IL பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும் என்று ஒரு வலைதளத்தைத் தேடித் படித்தேன். மிக அருமையாக இருந்தது. அவர்கள் பன்னிருதிருமுறையை பாடல், பொருள், விளக்க உரை, இசை வடிவத்தில் கேட்கும் வசதி எல்லாம் செய்து கொடுத்து இருக்கிறார்கள். அருமையான முயற்சி. இலக்கியத்தையும் சுவைத்து இறை உணர்வையும் ஊட்டும் ஒரு அருமையான வலைத்தளம் இது. இதிலே செந்தமிழில் இறைவனை எப்படி பாடி உள்ளார்கள் என்று ஒரு கட்டுரை. உங்கள் பார்வைக்காகத் தருகிறேன். படித்து மகிழுங்கள்.
திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம்
உலகமொழிகளில் பக்திமொழி என்று பாராட்டத்தக்க பாடல்கள் அமைந்த மொழி தமிழே என அறிஞர்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். அருளிச் செயல்களில் அமைந்துள்ள தமிழ்த்திறம் முதன்மைக் காரணமாக அமைந்தது. இறைவனே தமிழ்ப் பாடலைக் கேட்டு இரங்கி அன்பர் வழிபாட்டினை ஏற்றருள் புரிகிறான் என்ற கருத்தினைத் திருமுறைப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமுறையாசிரியர்கள் இறையருள் பெற்றவர்கள் தமிழின் செம்மை நலமும், இசைப் பண்புகளும் உணர்ந்து தெளிந்தவர்கள். அதனால்தான் அருளாளர்கள் பலரும் தமிழை அடைகொடுத்துப் போற்றி் பாடியுள்ளனர். அத்திருமுறைகளில் செந்தமிழ் முழக்கம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
திருஞானசம்பந்தரின் செந்தமிழ்:
திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய மூவருள்ளும் முதன்மையானவர். மறையவர் மரபில் தோன்றி முதல் மூன்று திருமுறைகள் பாடிய ஞானசம்பந்தர் தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று மிகுந்த பெருமிதத்துடன் கூறுகிறார்.
`ஞானத்துயர் சம்பந்தன்
நலங்கொள் தமிழ்' (14)
`எந்தையடி வந்தணுரு
சந்தமொடு செந்தமிழ்' (326)
`பாரின்மலி கின்ற புகழ்நின்ற
தமிழ்ஞான சம்பந்தன்
உரைசெய் சீரின்மலி செந்தமிழ்கள்' (333)
`முத்தமிழ் விரகனே
நானுரைத்த செந்தமிழ் பத்துமே' (373)
பல இடங்களில் செந்தமிழ்ச் சிறப்புகளை விளக்கியுள்ளார்.
அப்பரின் செந்தமிழ்:
தேவார மூவரில் இரண்டாமவர் திருநாவுக்கரசர் நான்காம், ஐந்தாம் மற்றம் ஆறாம் திருமுறைகளைப் பாடியருளியவர் தமிழில் பரமன் புகழைப் பாடுதலே தன் பணியாகப் பொறித்துள்ளார். உருக்கம் மிக்க ஒண்தமிழ்ப் பாடல்கள் அப்பர் அருளிச் செயல்கள் திருக்கடைக்காப்புப் பாடுதல் இவர் வழக்கமன்று. நமச்சிவாயத் திருப்பதிகத்திற்கு மட்டும் இவர் பயன் கூறியிருப்பினும் தன் பெயரைச் சுட்டவில்லை. ஒரு பாடலில் செந்தமிழ் (91) என்ற சொல்லாட்சி காணப்படுகிறது.
`தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' (1)
`முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்' (23)
`ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' (23)
எனவரும் திருத்தொண்டகப் படற்பகுதிகள் புலப்படுத்துகின்றன. ஆரூராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் காணப்பெறும் தமிழ் பற்றிய தனிச்சிறப்பினைக் காணலாம்.
சுந்தரர் செந்தமிழ்:
திருஞானசம்பந்தருக்கு அடுத்த நிலையில் மிகுதியான பண்களைப் பயின்றவர் சுந்தரர் தமிழிசையின் மாண்பினை உணர்ந்தவர்.
`பண்ணார் இன் தமிழாய்ப் பரவிய பரஞ்சுடரே' (24)
`பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்' (29)
என்ற சிவனடி போற்றுகிறார் சுந்தரர்.
`நாளும் இன்னிசையில் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை' (62)
இப்பாடலில் `தமிழ்' என்ற சொல் வெறும் மொழியை மட்டும் சுட்டாது. தமிழ்க்கலை, நெறி, பண்பாடு அனைத்தையும் சுட்டுவதாய் அமைந்துள்ளது.
இப்பகுதியில் நற்றமிழ், தண்தமிழ், அருந்தமிழ், ஒண்தமிழ், செந்தமிழ், வண்தமிழ், இன்தமிழ் முதலிய அமுதச் சொற்களினால் அன்னைத் தமிழின் அருமை பெருமைகளைச் சுந்தரர் கூறுகிறார்.
திருவாசகத் தமிழ்:
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் எட்டாம் திருமுறைகளில் ஒன்று சங்கம் வைத்துத் தமிழாராய்ந்த மதுரை மாநகரைத் தலைநகரமாகக் கொண்ட வழியின் நட்பினை.
தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை (8-10)
உளங்குளிரச் செய்யும் உயரியல்பால் தண்தமிழ் என்றும் நம் மொழியைத் திருமுறையாசிரியர்கள் உணர்ந்து பாராட்டினார்கள்.
`உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ'
என்ற பாடலில் மணிவாசகப்பெருமான் சங்கத் தமிழின் மாண்பினை விளக்கியுள்ளார்.
திருவிசைப்பாவில் செந்தமிழ்:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அருளிய பக்தி நலங்கனிந்த பதிகங்களைத் தமிழின் மேல்வரம்பாகக் கொண்ட சுந்தரரைப் போலவே திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவராகிய சேந்தனாரும் கொண்டுள்ளார். பாசுரங்களையும் பழுத்த செந்தமிழ் மலர் என்று தாம் பாடிய திருவீழிமிழலைத் திருவிசைப்பாவில் இவர் போற்றியுள்ளார்.
`பூந்துருத்திக் காடன் தமிழ்மாலை பத்தும்' (4-2)
`ஆரா இன்சொல் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை' (5-1)
`அமுதவாலி சொன்ன தமிழ்மாலைப்
பால்நேர் பாடல்பத்தும்' (7-3)
தமிழைப் போற்றும் பாங்கில் தேவார மரபினைத் திருவிசைப்பா அடியொற்றிச் சென்றுள்ள உண்மையினை மேற்கோள் பகுதிகள் உறுதிப்படுத்துகின்றன.
திருமந்திரத்தில் தமிழ்:
திருமூலர் தமிழ், வடமொழி உள்ளிட்ட பதினெட்டு மொழிகளில் புலமை படைத்தவர். இம் மொழிகள் யாவும் நாவல நாடாகிய இந்தியாவிலும், ஈழம் தென்கிழக்காசியத் தீவுகள், சீனம் முதலிய நாடுகளிலும் பேசப்படுகின்றன.
மொழிப்பொதுமை பேணிய திருமூலர் இம்மொழிகளில் சிறப்பாக வியந்து கூறப்பெறும் தமிழ் வடமொழி ஆகிய இருபெரும் மொழிகளையும் உமையம்மைக்கு ஈசனே புகட்டியதாகத் திருமூலர் சுட்டியுள்ளார்.
`ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே' (65)
`தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே' (66)
மெய்ப்பொருள் நூலினைத் தமிழ்ச் சாத்திரம் (87) என்று திருமூலர் குறித்தனர். திருமந்திரம் முதல் தமிழ் ஆகமம் என்பதைச் சேக்கிழார் சுட்டினார்.
இறைவனைத் தமிழால் வழிபடுவதைப் பெரிதும் விரும்பியுள்ளார் திருமூலர். எனவே,
`செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு' (1089)
`தமிழ் மண்டலம் ஐந்தும் தழுவிய ஞானம்' (1646)
திருமூலரின் மொழிக்கொள்கை பரந்த பார்வை கொண்டது என்பது தமிழ்மொழியினைப் பெரிதும் போற்றியதால் தெரிகின்றது.
தொல்காப்பியர் காலம் முதலே நல்ல தமிழைச் செந்தமிழ் என்று சொல்லும் மரபு காணப்படுகிறது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்ற சொல்லதிகார நூற்பா எண்ணத்தக்கது. தொல்காப்பியப் பாயிரத்தில் `செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு, முந்து நூல் கண்டு' என்று பனம்பாரனார் செவ்விய தமிழின் சிறப்பினைக் குறித்தனர்.
தமிழில் முதன் முதலில் பதிகம் பாடிய சிறப்புக்குரியவர் காரைக்காலம்மையார். இவர் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில்
`செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்' (11)
தொல்காப்பியர் காலம் முதலே நல்ல தமிழைச் செந்தமிழ் என்று சொல்லும் மரபு காணப்படுகிறது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' எனற் சொல்லதிகார நூற்பா எண்ணத்தக்கது. தொல்காப்பியப் பாயிரத்தில் `செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு, முந்து நூல் கண்டு' என்று பனம்பாரனார் செவ்விய தமிழின் சிறப்பினைக் குறித்தனர்.
சுந்தரர் செந்தமிழ்த் திறத்தையும் நம்பியாண்டார் நம்பி உணர்ந்து மகிழ்ந்தவர். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடிய செந்தமிழ்ப் பாசுரங்களில் திளைத்து இன்புற்ற சுந்தரர் அருளிய தண்டமிழ்ப் பதிகங்களின் மாண்பினைச் செந்தமிழ் பாடி (33-32) என்ற தொடரில் குறித்துள்ளார்.
பெரியபுராணத்தில் தமிழ்:
நம்பியாண்டார் நம்பியை் போலவே சேக்கிழார் திருஞானசம்பந்தரைத் தமிழாகரர் என்றும் போற்றியுள்ளார்.
`அருந்தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன்' (1256)
`ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழாம்' (1-5) - என்ற சேக்கிழார் பாடுகின்றார். மேலும் பல பாடல்களில் அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ், இன்தமிழ், நற்றதமிழ், வண்தமிழ் என்றெல்லாம் பாடிப் பரப்புகிறார். குலோத்தங்கச் சோழனின் தலைமை அமைச்சராக விளங்கிய அரசியல் பணிபுரிந்தவரும், பின்னர் அரசியலைத் துறந்து ஆன்மிக நெறியில் ஈடுபாடு கொண்டு தொண்டர் வரலாற்றைப் பக்தி நனிசொட்டச் சொட்டப் பாடித் `தொண்டர்சீர் பரவுவார்' எனப் போற்றப்பெற்ற சேக்கிழார் செந்தமிழ்ச் சீர்பரவுவார் என்று பாராட்டைப் பெற்றவர். திருமுறையாசிரியர்களின் இறைநெறி சார்ந்த செந்தமிழ்ப் பற்றும் பிறமொழிகளை ஒப்பமதிக்கும் பண்பும் புலனாகிறது.
உலகநோக்கே தமிழ்நோக்கு, தமிழின் தலையாய இலக்கியங்கள் பலவும் திருமுறையின் உலகப் பார்வையை மேலும் சிறப்பித்துக் கூறுகின்றன.
தமிழ்மொழியே சிறப்பானது என்பது திருமுறையாளர்கள் கருத்தாகம். தாய்மொழியைக் காக்கும் பெரும் பொறுப்பினை ஏற்றுத் திருமுறையில் செந்தமிழ் முழக்கம் இருப்பதை நன்கு உணரலாம்
நேற்று நான் சிவபுரானதைச் செய்யுள் வடிவிலே கொடுத்து இருந்தேன். ஒரு நண்பர் உரையாக இருந்தால் படிக்க வசதியாக இருக்கும் என்றார். எனவே உரையைத் தருகிறேன். படித்து இன்புறுங்கள்.
திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க!
திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க!
இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க!
திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க!
ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க!
ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க!
மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக!
பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக!
தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக!
கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக!
கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக!

ஈசனது திருவடிக்கு வணக்கம்.
எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம்.
ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்.
சிவ பிரானது திருவடிக்கு வணக்கம்.
அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்.
நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்.
சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம்.
தெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம்.
நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெரு மானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவ னுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினைமுழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்.

வானமாகி நிறைந்தும் மண்ணாகி நிறைந்தும் மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே!
உன்னுடைய மிக்க சிறப்பை, கொடிய வினையை உடையவனாகிய யான், புகழுகின்ற விதம் சிறிதும் அறி கிலேன்.
புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும் பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், பூதகணங்களாகியும், வலிய அசுரராகி யும், முனிவராகியும், தேவராகியும் இயங்குகின்ற இந்த நிலையியற் பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள் களுள்ளே எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன். எம் பெருமானே! இப்பொழுது உண்மையாகவே, உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு பெற்றேன்.

நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடபவாகனனே!
மறைகள், ஐயனே என்று துதிக்க உயர்ந்து ஆழ்ந்து பரந்த நுண் பொருளானவனே!
வெம்மை யானவனே! தண்ணியனே!
ஆன்மாவாய் நின்ற விமலனே!
நிலையாத பொருள்கள் யாவும் என்னை விட்டு ஒழிய,
குருவாய் எழுந்தருளி மெய்யுணர்வு வடிவமாய், விளங்குகின்ற உண்மை ஒளியே!
எவ் வகை யான அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே!
அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே! தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே!
எல்லா உலகங்களையும் படைப்பாய்; நிலை பெறுத்துவாய்; ஒடுக்குவாய்; அருள் செய்வாய்; அடியேனைப் பிறவியிற் செலுத்துவாய்; உன் தொண்டில் புகப் பண்ணுவாய்;
பூவின் மணம் போல நுட்பமாய் இருப்பவனே!
தொலைவில் இருப்பவனே! அண்மையில் இருப்பவனே!
சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே! சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று, எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!

ஐந்து நிறங்களை உடையவனே!
தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே!
எம் பெருமானே!
வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால் உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே மாசற்றவனே! உன்பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய், மனம் கசிந்து உருகுகின்ற நன்மையில்லாத சிறியேனுக்குக் கருணைபுரிந்து பூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினும் மேலாகிய அருள் வடிவான உண்மைப் பொருளே!

களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே! அளவிலாப் பேரொளியனே! தேனே! அரிய அமுதே! சிவபுரத்தை யுடையானே! பாசமாகிய தொடர்பையறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய அருளைச் செய்து என் மனத்தில் உள்ள வஞ்சம் அழிய, பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே! தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே!
ஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியை யுடையானே!
என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிராய் நின்றவனே! சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே! அன்பர் பொருட்டு அவைகளை உடையவனே!
அன்பர்களிடத்து அன்புடைவனே! கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினால் அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை யுடையவனே! நிறைந்த இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே! முதல்வனே!
முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே!
என்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே!
மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே!
ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத இயற்கையில் நுட்பமாகிய அறிவே!
போதலும் வருதலும் நிற்றலும் இல்லாத புண்ணியனே!
எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே!
காண்பதற்கரிய பெரிய ஒளியே!
மகாநதி போன்ற இன்பப் பெருக்கே!
அப்பனே! மேலோனே!
நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும் சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும் மாறுபடுதலையுடைய உலகத்தில் வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவாய் விளங்கும் தெளிவானவனே!
தெளிவின் தெளிவே!
என் மனத்துள் ஊற்றுப் போன்ற பருகுதற்குப் பொருந்திய அமிர்தமே! தலைவனே!

வெவ்வேறு விகாரங்களையுடைய ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப்பெற்று ஆற்றேன் ஆயினேன்.
எம் ஐயனே! சிவனே! ஓ என்று முறையிட்டு வணங்கித் திருப்புகழை ஓதியிருந்து அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப் பிறவியையடையாமல், வஞ்சகத்தை யுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே!
நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே!
தில்லையுள் நடிப்பவனே! தென்பாண்டி நாட்டையுடையவனே!
துன்பப் பிறப்பை அறுப்பவனே!
ஓவென்று முறையிட்டுத் துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்க, சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்.

No comments:
Post a Comment