தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
வெள்ளிக் கிழமையன்று புறப்பட்டு வாஷிங்டன் நகருக்குச் செல்ல நாங்கள் முடிவெடுத்தோம். வாஷிங்டன் நகருக்குச் செல்ல நாங்கள் இருந்த ஊரிலிருந்து கனெக்டிகட் மாநிலம், நியூயார்க் மாநிலம், நியூஜெர்சி மாநிலம்இ பென்சில்வேனியா மாநிலம்இ டெல்வேல் மாநிலம் கடந்து மேரிலாந்து மாநிலத்துக்குச் செல்ல வேண்டும். நீண்ட பயணம் என்பதால் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள DEVON என்ற இடத்தில் உள்ள என் மகனின் நண்பரான இளவரசன் என்பவரின் இல்லத்தில் தங்கிச் செல்ல முடிவெடுத்தோம்.
இளவரசன் ஏர்ல் என்னும் புயல் கிழக்குக் கடற்கரையோரங்களைத் தாக்குவதால் வேகமான காற்று வீசுவதாகவும் ஒரு நாள் தங்கிச் செல்லும்படியும் அறிவுரை கூறினார். உண்மை தான். வெளியே பலமான காற்று வீசிக் கொண்டிருந்தது. ஏற்கனவே வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். தனியார் சிறு விமானங்களையும்இ படகுகளையும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தும்படியும், பறந்து செல்லும் வாய்ப்புடைய பொருட்களைக் கடற்கரையோரத்திலும் அருகில் உள்ள நகரங்களிலும் வெளியிடங்களில் வைக்கக்கூடாது என்றும் வீட்டின் கதவுகளை கெட்டியாக மூடவேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார்கள். எனவே நாங்கள் தங்கிச் செல்வதென முடிவெடுத்தோம். நாங்கள் சென்ற 95 என்னும் எண்ணுடைய விரைவுச்சாலை கிழக்குக் கடற்கரையோரம் அமைந்திருந்த ஒரு சாலையாகும். எனவே பலமான காற்று வீசிக்கொண்டிருப்பதாக அந்தச் சாலையில் வந்த நண்பர்கள் கூறினார்கள்.
அருகிலுள்ள இடங்களைப் பார்க்க முடிவெடுத்தோம். அருகில் 1777-78 களில் போர் வீரர்கள் தங்கி இருந்த இடம் ஒன்று இருப்பதாகக் கூறினார்கள். அது தான் Valley Forge National Historical Park என்று அழைக்கப்படுகிறது. அது பற்றிய குறிப்பு:
Site of Continental Army encampment in 1777-1778. Troops endured a brutal winter here. Cold, hunger and shortages of clothing and other equipment contributed to the deaths of more than 2,000 men
Quotes:
The snow lies thick on Valley Forge / The ice on Delaware / But the poor dead soldiers of King George / They neither know nor care
-- The American Rebellion
Rudyard Kipling
இது ஒரு மலைப் பகுதி. இங்கு 1777-78இல் படைகள் தங்கியிருந்ததாகவும் குளிரினால் பலர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் நினைவாக நினைவுத்தூண் மற்றும் வளைவுகள் உள்ளன. அவர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் - மரத்தினாலும் மண்ணினாலும் அமைக்கப்பட்டவை - காட்சிக்கு உள்ளன. அருமையான நடைபாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். நடந்து வரலாம். கூட்டம் கூட்டமாக மான்கள் நடக்கின்றன. பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது. குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறது. மலைப்பாங்கான இடம். மேடும் பள்ளமுமாக உள்ளது. ஆனால் நெடுகிலும் நடக்க அருமையான பாதையை அமைத்து நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள். நுழைவுக் கட்டணம் இல்லை.
பின்னர் அங்கிருந்து ஆப்பிள் - செர்ரி - பிளம்ஸ் என்னும் கனிகள் விளையும் ஒரு மாபெரும் பண்ணைக்குச் சென்றோம். உள்ளே செல்லக் கட்டணம் இல்லை. நாமே கனிகளைப் பறிக்கலாம். கொண்டு செல்ல வேண்டும் என்றால் எடை போட்டு கட்டணத்தைக் கட்ட வேண்டும். மிகக் குறைந்த விலை. பண்ணையில் ஆங்காங்கே பழங்கள் சிதறிக் கிடந்தன. எங்களுக்கு வேண்டியதைப் பறித்துத் தின்றோம். தேவையான அளவு கூடையில் அள்ளி வந்தோம். அற்புதமான காட்சி. இங்கு பண்ணைகள் அமைத்து பராமரிப்பதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். பழங்களை அறுவடை செய்ய ஏற்பாடுகள், கொண்டு செல்ல வாகனங்கள், வாகனங்களைப் பராமரிக்க தொழிற்சாலைகள், பழங்களை விற்க கடை, இயற்கை உரங்களைத் தயாரிக்க வசதி, கால்நடைப் பராமரிப்பு, தொழிலாளர்கள் தங்க இல்லங்கள் என அழகாக உள்ளன. ஆப்பிள் மரமாக இல்லை. நெடிய செடியாக உள்ளது. அது சாயாமல் இருக்க இரும்புக் குழாய்களை நட்டு செடியை இணைத்திருக்கிறார்கள். கொத்துகொத்தாக பல இன ஆப்பிள்கள் உள்ளன. வெள்ளை வண்ணத்தில் - மஞ்சள் வண்ணத்தில் - சிவப்பு வண்ணத்தில் என பல வண்ணங்களில் ஆப்பிள்கள் இருந்தன. இது தவிர பீச், செர்ரி, ப்ளம்ஸ் பழ வகைகளும் விளைந்து கொண்டிருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பண்ணைகள் விரிந்தன. கண்கொள்ளாக் காட்சி.
பின்னர் நாங்கள் வாஷிங்டன் நகரை நோக்கிப் புறப்பட்டோம்.
வாசிங்டன், டி. சி. (Washington, D.C.) என்று தான் சொல்ல வேண்டுமாம். என் என்றால் வாஷிங்டன் என்று ஒரு மாநிலமே இருக்கிறது. இந்த இடத்தின் முழுப்பெயர் வாசிங்டன், கொலம்பியா மாவட்டம் (Washington, District of Columbia) ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப் பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது. டி.சி என்பது District Of Columbia (DC - டிசி) என்பதனை குறிக்கும். ஜார்ஜ் வாசிங்டன் அவர்களே இந்நகருக்கான நிலத்தை தேர்வு செய்தார்.
வாசிங்டன் டி.சி பொட்டாமக் நதியின் கரையில் அமைந்துள்ளது. வர்ஜீனியா & மேரிலாந்து மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட நிலங்களை கொண்டு இந்நகரம் அமைக்கப்பட்டது. எனினும் 1847 ல் பொட்டாமக் நதிக்கு தென்புறம் உள்ள வெர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வெர்ஜீனியா மீளப்பெற்றுக்கொண்டது. அவை ஆர்லிங்டன் கவுண்டி & அலெக்சாண்டரியா நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வாசிங்டன் டி.சி மெரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. மேற்கில் வெர்ஜீனியா & கிழக்கு, தெற்கு, வடக்கில் மெரிலாந்து மாநிலம் எல்லையாக உள்ளது.
உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்க நாடுகளின் அமைப்பு (OAS) போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தலைமையிடங்கள் இங்கு உள்ளன.
1899 ஆம் ஆண்டு 12மாடிகள் கொண்ட கெய்ரோ குடியிறுப்பு வளாகம் கட்டப்பட்ட பின் நகரின் எந்த கட்டடமும் காங்கிரசு கூடும் கேபிடல் கட்டடத்தை விட உயரமாக இருக்கக்கூடாது என்று சட்டமியற்றப்பட்டது. 1910-ல் இந்த சட்டம் கட்டடங்களின் உயரம் அடுத்துள்ள தெருக்களின் அகலத்தைவிட 20 அடி கூடுதலாக இருக்கலாம் என மாற்றப்பட்டது. [40]இதனால் இன்றும் வாசிங்டன் நினைவகமே உயரமானதாக உள்ளது. இந்த உயர கட்டுப்பாடில் இருந்து தப்பிக்க உயரமான கட்டடங்கள் விர்ஜீனியாவில் ரோசலின் பகுதியில் கட்டப்படுகின்றன.
வாசிங்டன் டிசி சமமற்ற நான்கு பாகங்களாக (கால்வட்டம்) பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.இந்த கால்வட்டத்தின் எல்லைகள் அமெரிக்க கேபிடல் கட்டடத்தை அச்சாக கொண்டு தொடங்குகின்றன [41] . அனைத்து சாலைகளும் கால்வட்டத்தின் சுருக்க குறியீட்டை கொண்டுள்ளதால் அவற்றின் இருப்பிடத்தை தெளிவாக அறியலாம். நகரின் பெரும்பகுதி தெருக்கள் கம்பிவலை ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு-மேற்கு தெருக்கள் எழுத்துக்களாலும் (எகா: ஐ தெரு வகி), வடக்கு-தெற்கு தெருக்கள் எண்களாலும் (எகா: 4வது தெரு தெமே) குறிப்பிடப்படுகின்றன. போக்குவரத்து வட்டங்களில் இருந்து தொடங்கும் நிழற்சாலைகளுக்கு மாநிலங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 50மாநிலங்கள், போர்ட்ட ரிகோ பெயர்களும் நிழற்சாலைகளில் இடம்பெற்றுள்ளன.பென்சில்வேனியா நிழற்சாலை வெள்ளை மாளிகை, அமெரிக்க கேபிடல், கே தெரு போன்றவற்றை இணைக்கிறது. கே தெருவில் பல ஆதரவு திரட்டும் குழுக்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. வாசிங்டனில் 174வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. அவற்றில் 59 மாசேசூசெட்டசு நிழற்சாலையில் உள்ளன.
தேசிய மால் என்பது நகரின் மையத்தில் அமைந்த பரந்த திறந்த வெளி பூங்காவாகும். மாலின் மையத்தில் வாசிங்டன் நினைவகம் அமைந்துள்ளது. மேலும் இதில் லிங்கன் நினைவகம், தேசிய இரண்டாம் உலகப்போர் நினைவகம், கொரிய போர் வீரர்கள் நினைவகம், வியட்னாம் வீரர்கள் நினைவகம், ஆல்பரட் ஐன்சுட்டின் நினைவகம் ஆகியவை அமைந்துள்ளன[62]. தேசிய பெட்டகத்தில் அமெரிக்க வரவாற்றை சார்ந்த ஆயிரக்கனக்கான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. விடுதலை சாற்றுதல், ஐக்கிய மாநிலங்கள் அரசியலமைப்பு, தனி நபர் உரிமை போன்ற பல புகழ்பெற்ற ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன[63].
மாலுக்கு தென் புறத்தில் டைடல் பேசின் அமைந்துள்ளது. டைடல் பேசினின் கரையை ஒட்டி யப்பான் நாடு அன்பளிப்பாக வழங்கிய செர்ரி மரங்கள் நடப்பட்டுள்ளன. பிராங்களின் ரூசுவெல்ட் நினைவகம், ஜெப்பர்சன் நினைவகம், கொலம்பியா மாவட்ட போர் நினைவகம் ஆகியவை டைடல் பேசினை சுற்றி அமைந்துள்ளன[64].
சுமித்சோனியன் நிறுவனம் கல்வி சார் நிறுவனமாக காங்கிரசால் 1849 தோற்றுவிக்கப்பட்டது. இது இந்நகரின் பெரும்பாலான அரசாங்க அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் நிர்வகிக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இந்நிறுவனத்துக்கு பகுதியளவு நிதியுதவி அளிப்பதால் இதன் அருங்காட்சியகங்கள் நுழைவு கட்டணம் இல்லாமல் பார்வையாளர்களை அனுமதிக்கின்றன. தேசிய மாலை சுற்றி அமைந்துள்ள சுமித்சோனியன் அருங்காட்சியகங்கள்:- தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்; ஆப்பிரிக்க கலைகளுக்கான தேசிய அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க இந்தியன் அருங்காட்சியகம்; சாக்லர் பிரீர் காட்சியகம் கிரோசிமா அருங்காட்சியகம்; சிற்ப தோட்டம்; கலை மற்றும் தொழிலக கட்டடம்; தில்லான் ரிப்ளே மையம்; சுமித்சோனியனின் தலைமையகமாக செயல்படும் அரண்மனை என்றழைக்கப்படும் சுமித்சோனியன் நிறுவன கட்டடம்[66]
அமெரிக்க இந்தியர் அருங்காட்சியகம்
முன்பு தேசிய அமெரிக்க கலை அருங்காட்சியகம் என அறியப்பட்ட சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. , டோனல்ட் டபள்யு ரேநால்ட் மையம் வாசிங்டனின் சீனாடவுனுக்கு அருகில் அமைந்துள்ளது[67]. ரேநால்ட் மையம் பழைய காப்புரிமை அலுவலக கட்டடம் என்றும் அறியப்படுகிறது[68] . ரென்விக் காட்சியகம் சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகத்தின் பகுதியாக இருந்தபோதிலும் இது வெள்ளை மாளிகையை ஒட்டிய தனி கட்டடத்தில் இயங்கி வருகிறது. மற்ற சுமித்சோனியன் அருங்காட்சியகம் மற்றும் காட்சியகங்கள்: தென்கிழக்கு வாசிங்டனிலுள்ள அனகோச்டியா சமூக அருங்காட்சியகம், ; யூனியன் ஸ்டேசனிலுள்ள தேசிய அஞ்சலக அருங்காட்சியகம்; வுட்லி பார்க்கிலுள்ள தேசிய மிருக்காட்சி சாலை. தேசிய கலை காட்சியகத்தின் கிழக்கு கட்டடத்தில் நவீன கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய கலை காட்சியகத்தின் கிழக்கு கட்டடம்
தேசிய கலை காட்சியகம் காப்பிடலுக்கு அருகிலுள்ள தேசிய மாலில் அமைந்துள்ளது, ஆனால் இது சுமித்சோனியன் நிறுவனத்துக்கு உட்பட்டதல்ல. இது அமெரிக்க ஐக்கிய அரசாங்கங்கத்துக்கு உரியது, அதனால் இதற்கும் நுழைவு கட்டணம் இல்லை. இக்காட்சியகத்தின் மேற்கு கட்டடத்தில் 19ம் நூற்றாண்டை சார்ந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன [69]. சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை தேசிய கலை காட்சியகம் என பலர் தவறாக கருதுகிறார்கள். தேசிய கலை காட்சியகம் சுமித்சோனியன் நிருவாகத்தின் கீழ் வருவததில்லை ஆனால் மற்ற இரண்டும் சுமித்சோனியன் நிறுவனத்தை சார்ந்தவை. ஜூடிசியர் சொகயர் அருகில் பழைய ஓய்வூதிய கட்டடத்தில் தேசிய கட்டட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. காங்கிரசால் இது தனியார் நிறுவனமாக பட்டயம் அளிக்கப்பட்டுள்ளது.
பல தனியார் கலை அருங்காட்சியகங்களும் இங்கு உள்ளன.தேசிய பெண்களின் கலை அருங்காட்சியகம்; கோர்கோரன் கலை காட்சியகம் இதுவே வாசிங்டன் பெரிய தனியார்அருங்காட்சியகம் ஆகும். டூபான்ட் சர்க்கலில் உள்ள பிலிப்பசு கலெக்சன், இது ஐக்கிய மாநிலங்களில் அமைந்த முதல் நவீன கலை அருங்காட்சியகம் ஆகும். வாசிங்டனில் மேலும் பல தனியார் அருங்காட்சியகங்கள் உள்ளன அவை நியுசியம், பன்னாட்டு வேவு அருங்காட்சியகம், தேசிய புவி சமூக அருங்காட்சியகம் மற்றும் மரியன் கோச்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம். ஐக்கிய மாநிலங்கள் ஹோலோகோஸ்ட் நினைவு அருங்காட்சியகம் தேசிய மாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ஹோலோகோஸ்ட் தொடர்பான காட்சிகள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன [70].
வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் மிக அருமையாக உள்ளது. விமானம் துவக்க முதல் எப்படி இருந்தது - இப்போது எப்படி உள்ளது என்பதை நிஜ விமானங்கள் வைத்தே விளக்குகிறார்கள். ஏவு கணைகள் பற்றிய தகவல், விண்வெளியில் செலுத்தப்படும் எராளமான காலங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. ஆங்காங்கு நாமே கணிப்பொறி மூலம் தெரிந்துகொள்ள வசதிகள் உள்ளன. திரைப்படக் கட்சிகளாகவும் கட்டுகிறார்கள். மிக அருமையாக உள்ளது.
இது போலவே இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மிக அருமையாக உள்ளது. விளக்க படங்களுடன் அமர்ந்து நேரில் மனித வரலாற்றை அரேயந்து கொல்ல - பல வகையான விலங்குகளின் வரலாற்றை அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு. கருத்துக் களஞ்சியங்களாக உள்ளன இந்த காட்சியகங்கள். சென்னையிலும் இப்படி ஒரு அருங்காட்சியகம் எழும்பூரில் உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட வசதிகள் இல்லை. கட்டணம் இல்லாமல் - வசதிகளுடன் இங்கே காட்சியகம். சென்னையில் கட்டணம் வசூலித்தும் போதிய விளக்கங்கள் இல்லை. இங்கே பாமரனும் அழகாக தெரிந்து கொள்ள முடிகிறது. எல்லா இடத்திலும் ஒலி-ஒளிக் காட்சிகளாக உள்ளது.
பல காட்சியகங்களைப் பார்த்தோம். பின்னர் மீண்டும் ஊர் திரும்பினோம். திரும்பும் வழியில் நியூ ஜெர்சி மாநிலத்தில் edisson என்ற இடத்தில இந்தியக் கடைகள் உள்ளது என்று சொன்னார்கள். போய்ப் பார்த்தோம். வியாபாரம் நன்றாக கோடி கட்டிப் பறக்கிறது. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் நடத்துமிடத்தில் உள்ளது போன்ற வசதிகள் எதுவும் இல்லை. காசு கறப்பதில் மட்டுமே குறியாக உள்ளார்கள். சரவணபவன் உணவு விடுதியும் இருந்தது. உணவு அருந்தினோம். அமெரிக்காவிற்கு வந்து வியாபாரம் செய்யும் இந்தியர்கள் இன்னும் அதிக வசதிகளை அமெரிக்கர்கள் போல் செய்து தர முயல வேண்டும்.
No comments:
Post a Comment