எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
தாய்ச் சொல்லைத் தட்டாதே என்று பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள். வாலிப மிடுக்கில் இதையெல்லாம் யார் கேட்கிறார்கள். தாய் சொல்லைக் கேட்காதவர்களை இழிந்த பிறவிகள் என்று கூறுகிறார் ஒரு கவிஞர். விவேக சிந்தாமணியில் வரும் இப்பாடலைப் பார்ப்போம்.
நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின் நற்றமிழை எழுத எழுத்தாணி ஆமோ
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரிய விளக்கு ஏற்றிவைத்தால் வீடதாமோ?
தாய் வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்றிடினும் உலுத்தகுணம் தவிரமாட்டான்
ஈவாரை ஈயஒட்டான் இவனும் ஈயான் எழுபிறப்பினும் கடையாம் இவன் பிறப்பே
தாய்ச் சொல்லைக் கேட்காதவனை மூர்க்கன் என்கிறார் கவிஞர். தாய்ச் சொல்லைக் கேட்காதவன் தனது அற்ப கணத்தை என்றும் விட மாட்டான் என்றும் பிறருக்கு ஈவதைத் தடுப்பான் என்றும் தானும் ஈயமாட்டான் என்றும் கூறும் கவிஞர் இவனுடைய பிறப்பை எழுபிறப்பிலும் ஈனமான கடைப்பிறப்பாக இருக்கும் என எச்சரிக்கிறார்.
No comments:
Post a Comment