எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
குருவி இனத்திலே தூக்கணாங்குருவி என்று ஒரு பிரிவு. அருமையாகக் கூடு கட்டும் அது. ஆனால் கூட்டின் அருமைபெருமை தெரியாதவர்களுக்கு அது அறிவுரை கூற முற்பட்டால் அதன் கூடே பிய்ந்துவிடும். பகவத்கீதை மற்றும் பல சிறந்த நூல்களைப் படிக்கும் போது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இதைக் கூறக்கூடாத என எடுத்த எடுப்பிலேயே கூறுவார்கள். காரணம் நல்லவற்றை அற்பர்களுக்குக் கூறினால் கூறியவர்களுக்கு அதனால் துன்பமே ஏற்படும். இராமர் பாலத்தைக் கட்டினார். இலங்கைக்குச் சென்றார். இராவணனை வென்றார் என்று அற்பர்களிடம் சொன்னால் அவர் என்ன பொறியாளரா பாலம் கட்டுவதற்கு என்று எள்ளல் வார்த்தைகளைப் பேசும் அதிமேதாவிகளும் உண்டு இக்காலத்தில். இதையெல்லாம் கருத்தில் கொண்டு விவேகசிந்தாமணியில் அற்புதமான ஒரு பாடல் உள்ளது.
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தான் ஒரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரதாகுமே.
மிகத் தெளிவாக இப்பாடல் ஓர் உதாரண்த்தைக் காட்டி ஞானத்தையும், கல்வியையும், சிறப்பான நூல்நயத்தையும் அற்பர்களுக்கு - ஈனர்களுக்கு உரைக்கக் கூடாது என நமக்குத் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment