எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
இன்றைய காலகட்டத்தில் சில ஆயிரம் பணத்தைக் காட்டினால் சட்டத்தை மீறக் கூடிய பணியாளர்கள் உள்ளார்கள். ஆனால் உலகமே நமக்குக் கிடைத்தாலும் வழிதவறி நடக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார் ஒரு கவிஞர். இதோ அந்த விவேகசிந்தாமணிப் பாடல்.
தான் கெடினும் தக்கார்க்கு கேடு எண்ணற்க - தன் உடம்பின்
ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க - வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.
தான் கெடுவதான நிலை ஏற்பட்டாலும் தக்கவர்கள் - நல்லவர்கள் கெட்டுப்போகும்படியான செயல்களைச் சிந்திக்கக் கூடாது. செய்யக் கூடாது என்று கூடச் சொல்லவில்லை. சிந்திக்கக் கூடாது என்றே தடை விதிக்கிறார். நாம் மடிவதாகவே இருந்தாலும் கெட்டவர்கள் கொடுக்கும் உணவை நாம் உண்ணக் கூடாது. கைத்து என்றால் கையில் உள்ளது. கெட்டவர்கள் கையால் கொடுக்கும் உணவை நாம் உண்ணக் கூடாது. உலகமே கிடைப்பதானாலும் பொய் கலந்த வார்த்தைகளை விளையாட்டாகவும் சொல்லக்கூடாது.
No comments:
Post a Comment