எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடையரேனும் இலர்.
என்னும் திருகுறள் அறிவுடையார் தான் எல்லாம் உடையவர் என்னும் கருத்தை வலியுறுத்திக் கூறுகிறது. அறிவில்லாதவர் அளவற்ற செல்வம் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதாவரே. அதுமட்டுமல்ல கல்வி தான் அழியாத செல்வம் எனக் கூறி பிற செல்வங்கள் என்றாவது ஒரு நாள் அழிந்தே போகும் என்றும் கூறுகிறார். எனவே கல்விச் செல்வம் மிக இன்றியமையாதது ஆகும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை.
(மாடு என்றால் செல்வம்)
இப்படி அறிவுச் செல்வத்தைப் போற்றி விவேகசிந்தாமணியில் ஒரு பாடலைக் கண்டேன். இதோ அந்தப் பாடல்
வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் குறையாது கொடிய தீய
கள்ளத்தார் எவராலும் களவாட முடியாது கல்வி என்னும்
உள்ளத்தே பொருள் இருக்க உலகெங்கும் பொருள் தேடி உழல்வது என்னே?
கசடறக் கற்றவை உள்ளத்தில் பசுமரத்து ஆணி போல பதிந்து விட்ல் அது வெள்ளத்தால் அழியாது – வெந்தழலால் வேகாது – வேந்தரோ கள்வரோ அதைக் கொள்ள முடியாது. இப்படி அழிவற்ற கல்வி என்னும் பெருமை மிக்க செல்வம் இருக்க உலகோர் அழியக் கூடிய வேறு செல்வங்களைத் தேடி அலைவது ஏனோ?
No comments:
Post a Comment