Saturday, August 20, 2011

விவேகசிந்தாமணி

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு


யார்யாருடைய வாழ்வு நிலைகுலைந்து போகும் என்பதை விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் மிக அழகாக விளக்குகிறது.  மிக எளிமையான பாடல்.

மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருவிலான் கொண்ட ஞானம்
ஆப்பிலாச் சகடு போல அழியுமென்று உரைக்கலாமே

மூத்தவர்களின் துணை இல்லாமல் ஒரு குமரி வாழ்ந்தால்
போர்க்களம் காணாத ஓர் அரசனின் வீரம்
கட்டுக்காவல் இல்லாமல் விளைந்த நிலம்
கரையில்லாமல் ஓர் ஏரி இருந்தால்
கட்டுப்பாடு இல்லாதவன் வாழும் வாழ்க்கை
குருவில்லாமல் நாமே கற்றுக் கொள்ளும் கல்வி
இவையெல்லாம் ஆப்பு இல்லாத சக்கரம் அதாவது கடையாணி இல்லாத வண்டி போல கவிழ்ந்து விடும் - நிலைகுலைந்து விடும்.  
எளிமையான பாடலில் அருமையான கருத்துகள்.

No comments:

Post a Comment