எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
விவேக சிந்தாமணி என்னும் அருமையான நூலை நான் படிக்க நேர்ந்தது. எளிய தமிழ். எண்ணற்ற கருத்துகள். அது பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நன்மை நல்காதவை எவை எவை என்பதை பற்றி மிக அழகாக விளக்குகிறார். எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அனுபவித்து எழுதியிருக்கிறார். தந்தைக்கு அல்லது தாயாருக்கு ஒரு ஆபத்து வரும்போது உதவ முன்வராத பிள்ளை - பசியோடு இருக்கும் போது உண்ண உதவாத உணவுப் பொருள் - கடுமையான தாகம் இருக்கும் போது அதைத் தீர்க்க உதவாத தண்ணீர் - துணையென குடும்பத்தில் நுழையும் மனைவி வீட்டில் உள்ள பற்றாக்குறையைப் பற்றிக் கவலைப்படாமல் தாராளமாகச் செலவு செய்தால் அப்படிப்பட்ட மனைவி - கோபத்தை அடக்கிக் கொள்ளாமல் உடனுக்குடன் கொதிக்கும் மன்னவன் - குருவின் ஆணையை மீறும் மாணவன் - பாபத்தைப் போக்கோத தீர்த்தம், நதி, கடல் ஆகியவை - இவையெல்லாம் பயனற்றவை என்கிறது இந்த விவேக சிந்தாமணிப் பாடல். நீங்களும் படித்து இன்புறுங்கள்.
ஆபத்துக்கு உதவாப் பிள்ளை - அரும்பசிக்கு உதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர் - தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் - குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயன்இலை ஏழும் தானே
No comments:
Post a Comment